Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

லைக்காவின் பயணம் – சுப்பர் ஸ்டாரும் சொத்திகளும் கசிப்புத் தேசியமும்

பிரேம். சனத், சுபாஸ்(இடமிருந்து)
பிரேம். சனத், சுபாஸ்(இடமிருந்து)

லைக்கா நிறுவனத்தின் குழுவினர் கொழும்பில் கைது செய்யப்பட்டதாக வெளியான கட்டுக்கதையை புலம்பெயர் ஊடகங்கள் அவிழ்த்துவிட்டு அம்பலமான சம்பவம் தெரிந்ததே. லைக்காவைத் தேசிய விரர்களாக முயன்றதன் பின்னால் உள்ள அசிங்கம் இப்போது வெளியாகியுள்ளது. உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களும் சண்டே டைம்ஸ் இல் வெளியான பத்தி ஒன்றும் இதன் பின்னணியைத் தெளிவுபடுத்துகின்றது.

அலிபாபாவின் திருடர்களின் எண்ணிக்கையில் ஒன்பது நபர்கள் குறைவான லைக்காவின் குழு ஒன்று மாலைதீவில் விடுமுறையக் களிப்பதற்காகச் சென்றுள்ளது. கத்தியில் கொத்திய பணத்தைக் கொண்டாட மாலைதீவின் என்ற Four Seasons நட்சத்திர விடுதியில் குடியும் கும்மாளமுமாக நடத்தப்பட பார்ட்டியில் முறுக்கேறிய நரம்புகளோடு லைக்காவும் 31 சீடர்களும் மாலைதீவு விமாமத்தை வந்தடைந்ததனர். விடுதியில் ஆகக் குறைந்த விலையில் உள்ள அறையின் ஒரு இரவிற்கான விலை $1600 என்பது தேசிய அசிங்கங்களுக்காக தரப்படும் தகவல்.

மாலை தீவிலிருந்து கொழும்பு சென்று கொழும்பிலிருந்து லண்டனுக்குப் பயணம் செய்வதே லைக்காவின் திட்டம். அதன்படி கொழும்பிற்கு வந்தடைந்த லைக்கா குழு கட்டுனாயக்க விமான நிலையத்தில் கடை விரித்தது.கொழும்பிலிருந்து லண்டன் புறப்படுவதற்காக கட்டுனாயக்க விமான நிலையத்தில் தரித்திருந்த குழுவிற்கான விமானப் பயண நேரம் மதியம் 1 மணி.

சிறீலங்கன் ஏர்லைன்ஸ் இன் பிரதான பங்காளிகளான 31 லைக்கா பேர்வளிகளும் சிறீலங்கன் ஏர்லைன்ஸ் இலேயே பயணம் செய்வதற்கான ஒழுங்குகளை மேற்கொண்டனர். அந்த விமாங்களில் 31 பேருக்கு Business Class இல்லாத காரணத்தால் கத்தி பசிபிக் விமானம் ஒன்றை சிறீ லங்கன் ஏர்லைன்ஸ் ஒழுங்கு செய்து கொடுத்தது.

அங்கு வர்த்தக தங்குமிடத்திலேயே -Business Class Lounge- லைக்காவின் பணம் உள்ளே ஊற்றிய ஐந்து நட்சத்திர கசிப்பு வேலை செய்ய ஆரம்பிக்க விமான நிலையம் மீன் மார்க்கட்டாகக் காட்சியளித்தது என்று கண்டவர்கள் கருத்து வெளியிட்டனர்.

உள்ளிருந்த ஐந்து நட்சத்திரக் கசிப்போடு விமானத்தினுள் நுளைந்த லைக்காவும் 31 உம் விமானத்தினுள் தமது தர்பாரை ஆரம்பித்தனர். விமானப் பணிப்பெண்கள் கழுகுகளிடம் அகப்பட்ட கோழிக்குஞ்கள் போலத் திண்டாடினர்.
நிலைமையை அவதானித்த விமானத்தின் கப்டன் அவர்களில் பெட்டிபடுக்கைகளோடு விமனத்தை விட்டு இறங்குமாறு பணித்தார்.

மாலைதீவில் பார்டி நடத்திவிட்டு கொழும்பு ஊடாக லண்டன் திரும்பிய பார்ட்டியில் முன்னை நாள் இலங்கை கிரிக்கட் அணியின் தலைவரும் இன்றைய கிரிகட் தெரிவுச்சபையின் தலைவருமான சனத் ஜெயசூரிய M.P மற்றும் சிறிலங்கன் ஏர்லைன்சின் சந்தைப்படுத்த முகாமையாளரான அரைத் தமிழர் ஜே.பி.ஜெயசீலன் ஆகியோர் அடங்கியிருந்தனர். ராஜபக்ச குடும்பத்தின் அல்லக்கையான சனத் ஜெயசூரியாவையும், தனது முதலாளிகளில் ஒருவரான ஜே.பி.ஜெயசீலனையும் சேர்த்தே விமானத்தை விட்டு வெளியேறுமாறு காப்டன் பணித்தார்.

உலகின் பணக்காரக் கும்பலொன்று பயணிக்கும் விமானத்தில், அந்த விமானத்தின் பயணச்சீட்டுப் பங்களார்களையே விமானத்தை விட்டு வெளியேற்றுவதா என்று 31 பேரும் கப்டனை எதிர்க்க ஆரம்பித்தனர். தொலைபேசி அழைப்புக்கள் பறந்தன. ராஜபக்ச குடும்பம், சிறிலங்கன் ஏர்லைன்ஸ் என்று யார் சொல்லியும் கேட்க மறுத்த கப்டன், இவர்கள் பயணம் செய்தால் ஏனைய பயணிகளுக்கு ஆபத்து என்று உறுதியாகக் கூறினார். லைக்காவையும் 31 பெருமக்களையும் விமானத்தில் அனுமதிப்பது சட்டத்திற்கு முரணானது என வாதிட்டார்.

பணத்திற்கு இணைய ஊடகங்கள், தேசிய சீமான்களை வாங்கியது போன்று பைலட் கப்டனை வாங்க முடியவில்லை. அப்போது தான் விலைபோகாத மனிதர்களும் வாழ்கிறார்கள் என்று லைக்காவும் 31 உம் புரிந்துகொண்டிருக்க வேண்டும். இக்கும்பலை இறக்குவதற்காக விமானம் 2மணி நேரம் தாமதமாகும் என்ற அறிவிப்பையும் கப்டன் பயணிகளுக்கு விடுத்திருந்தார்.

இறுதியில் லைக்கா குழு விமானத்தை விட்டு இறங்கி துண்டைக்காணோம் துணியை காணோம் என்று பெட்டி படுக்கைகளையும் தூக்கிக்கொண்டு ஒட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது. சிறீ லங்கன் ஏர்லைன்சின் முக்கிய புள்ளியும் சேர்த்தே கப்டன் கடாசியிருக்கிறார்.

1 மணிக்குப் புறப்பட வேண்டிய விமனம் 2 மணித்தியாலமும் 20 நிமிடமும் தாமதமாக 3:20 இற்கே கொழும்பிலிருந்து லண்டன் நோக்கிப் புறப்பட்டது.

தனது முதலாளிகள் ஒருவரையும், ராஜபக்சவிற்கு நெருக்கமான இலங்கை அரச அடியாள் ஒருவரையும் எந்த அழுத்தங்களுக்கும் ஈடுகொடுக்காமல் ஏனைய லைக்காக்களோடு சேர்த்து விமானத்தை விட்டு வெளியேற்றிய கப்டன் செந்தூர்செல்வன் தமிழர். இங்கு பணத்திற்கு விலைபோகாத செந்தூர்செல்வனே சுப்பர் ஸ்டார். கத்தி படத்தின் வேர்ஷனை உண்மையிலேயே நிகழ்த்திக்காட்டியவர்.

விமான நிலையத்தினுள் இறக்கப்பட்ட லைக்கா குழுவிலிருந்த ஆங்கில வெள்ளைக் கூலி ஒன்று மறுகணமே தமக்கு மீண்டு செல்ல விமானம் வேண்டும் என்று அடம்பிடிக்க லைக்காவிற்கு ஐந்து நட்சத்திர விடுதி ஒழுங்குபடுத்திக் கொடுக்கப்பட்டது. அங்கிருந்தே கசிப்பு அசிங்கத்தைத் தேசிய அசிங்கமாக்கும் வேலை ஆரம்பமானது.

ஒரு மணி நேரத்திற்கு உள்ளாகவே லைக்கா நடத்தும் ஆதவன் தொலைக்காட்சி மற்றும் லைக்காவின் பணம் வழங்கும் பட்டியலிலுள்ள ஊடகங்கள் லைக்கா உரிமையாளஎ சுபாஸ்கரன் இலங்கையில் கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என்ற குண்டைத் தூக்கிப் போட்டு மக்களை மந்தைகளாக்கின.

உடனடியாகவே செய்தியை உள்வாங்கிக்கொண்ட சீமானும் விசில்களும் முக நூலில் சுபாஸையும் லைக்காவையும் தேசியத் தலைவகளாக்கும் முயற்சியில் இறங்கின.

பணத்திற்காக தமிழ்ப் பேசும் மக்களின் கண்ணீரையும் அவலங்களையும் குருதியையும் விலைபேசும் இக் கும்பல்களை என்னென்பது? தம்மைச் சுற்றி மாபியா வியாபாரப் பேரரசைத் தேசியத்தின் பேரால் உருவாக்கிக்கொள்ளும் இச் சமூகவிரோதக் கும்பல்கள், எதற்கெடுத்தாலும், பிரபாகரன், புலிகள், மக்களுக்காக மரணித்த போராளிகள் போன்ற அனைத்தையும் பயன்படுத்திக்கொள்கின்றனர்.

மக்களை உணர்ச்சி வசப்படுத்தி அதன் ஆழத்தில் பணத்தைச் சுருட்டிக்கொள்வதே இந்த ஊடக மாபியாக்களின் அடிப்படை நோக்கம். இவர்களின் பண வெறிக்கு ஒடுக்கப்பட்ட தமிழ்த் தேசிய இனம் பலியிடப்படுகிறது. இதுவரை கால தியாகங்களும் இழப்புக்களும் பயன்பட்டுப் போகின்றன.

இவர்களைப் புறக்கணிப்பதும் மக்கள் சார்ந்த உண்மையை உலகிற்குச் சொல்வதும் இன்று ஒவ்வொருவரதும் கடமை. இலங்கை அரச பாசிஸ்டுக்கள் மட்டுமல்ல, தேசியத்தின் பேரால் பிழைப்பு நடத்தும் பண வெறியர்களும் அவர்களின் வலையமைப்புக்களும் கூட தமிழ்ப் பேசும் மக்கள் மீதான இனச்சுத்திகரிப்பிற்குத் துணை போகின்றன.

தொடர்புடைய பதிவுகள்:

லைக்கா உரிமையளர் இலங்கையில் கைது!: ஊடகங்களின் தமிழ்த் தேசிய அசிங்கம்
பிரபாகரனின் பெயரால் லைக்காவிற்கு நன்றி தெரிவிக்கும் சீமான்
ராஜபக்ச வடைசுட்ட கதையும் லைக்காவும் உணர்வாளர்களும்: அருவன்
லைக்காவின் ஞானம் அறக்கட்டளையின் பின்னணியில்
லைக்கா : குருதிபடிந்த கரங்கள்
இனக்கொலைக்கு பூஜை நடத்திய பௌத்த பிக்குவிற்கு பணம் வழங்கிய லைக்கா
லிபாரா, லைக்காவின் கைகளுக்கு மாறும் தமிழ்த் தேசிய ஊடக வியாபாரம்
லைக்கா லிபாரா போன்ற நிறுவனங்களின் துணையுடன் பண்பாட்டுச் சிதைப்பு
சேரன் நடிக்கும் பிரிவோம் சந்திப்போம்
பொதுநலவாய மாநாடு ஆரம்பம் : இனக்கொலைக்கான ஏகபோக அங்கீகாரம்
இனக்கொலையாளிகளுடன் லைக்கா குழுமம் : ‘தமிழ்த் தேசியவாதிகள்’ தலைமறைவு
வியாபாரி! : விஜி.
‘ஒரு’ பேப்பர் மீது தாக்குதல் : அருவருப்பான வியாபார வெறி
Tory donor Lycamobile linked to Sri Lankan President’s family businesses
லைக்கா, ஐங்கரன் குழுமங்கள் இலங்கை அரச விமனப்படை விமானத்தில்
http://www.eelamdaily.com/news/11847/57/.aspx
http://www.huffingtonpost.co.uk/2013/11/18/sri-lanka-david-cameron_n_4296542.html
http://www.dailynews.lk/local/cameron-tories-funded-big-diaspora
Exit mobile version