அதிகார வர்கத்தின் பொருளாதார நலன்கள் வரலாறு முழுவதும் பல ஆயிரக்கணக்கில் மனித உயிர்களைப் பலிகொண்டிருக்கின்றன. மத்திய கிழக்கில், ஆபிரிக்காவில், ஆசியாவில் என்று எங்கெல்லாம் தமது அதிகார நலன்களுக்காக அப்பாவிகளைக் கொன்று போட வேண்டுமோ அங்கில்லாம் மனிதக் கொலைகளை அரங்கேற்றிக் கொண்டிருக்கின்றன.
அதிகார வர்க்கத்தைச் சார்ந்த கருத்தியல் என்பது புலிகள் போன்ற போராட்டக் குழுக்களின் அரசியலாக வடிவமைக்கப்பட்டிருந்தது என்பது ஒரு புறம், மறுபுறத்தில் அதுவே இன்னுமொரு வடிவத்தில் உலக மக்களின் சிந்தனை முறையிலும் ஆதிக்கம் செலுத்துகின்றது என்பது துரதிர்ஷ்ட வசமானது. இது தான் மக்களை அழிக்கும் பாசிசமாக வளர்ச்சி பெறுகிறது. இவ்வாறு வளர்ச்சி பெற்ற பாசிசம் என்பது தான் தமிழ் பேசும் மக்களின் சிறீ லங்கா அரசிற்கு எதிரான நியாயமான போராட்டத்தையும் சீர் குலைத்துச் சிதைத்து விட்டிருக்கிறது.
அதிகாரம் சார்ந்த இந்தச் சிந்தனை முறை தகர்த்தெறியப்பட வேண்டும். உலகம் முழுவதும் அதிகார வர்க்கத்தால் ஒடுக்கப்படும் மக்களே பெரும்பான்மை. இந்தப் பெரும்பான்மை ஆளும் வர்க்கத்தின் சிந்தாந்தங்களால் சிதைக்கப்படுகின்றது. இவ்வாறான சித்தாந்தங்கள் ஒடுக்கப்படுகின்ற மக்களின் பெரும்பான்மையைச் சிதைத்து அதன் ஒருபகுதியை அதிகாரத்திற்குச் சார்பானதாக மாற்றிவிடுகிறது.
ஆ
மகிந்த ராஜபக்சவின் குடும்ப ஆட்சி மட்டும் தான் தமிழ் பேசும் மக்கள் அழிக்கப்படுவதற்குக் காரணமல்ல. வன்னியில் கொன்று போடப்பட்ட அப்பவி மக்கள் மக்களின் பிணங்களின் மீது அரசியல் நடத்த முனையும் அத்தனை சிங்களப் பௌத்தப் பேரின வாதிகளும்தான் காரணம். மக்கள் அழிக்கப்பட்டாலும் புலிகள் அழிந்துபோனதைப் பெருமையாகப் பேசும் எதிர்க்கட்சித் தலைவர் ரனில் விக்ரமசின்க, இலங்கை அர்சின் வெற்றியில் தானும் பங்கு கேட்கிறார். மக்கள் கொத்துக் கொத்தாக அழிக்கப்படும் போது மூச்சுகூட விடாமல் இலங்கைத் தேசியம் பேசிய ஜே.வீ.பி யினருக்கு இப்போது மட்டும் திடீரென தமிழ் பேசும் மக்கள் மீது
ஆசியாவின் ஒரு மூலையில் மக்கள் சாரிசாரியாகக் கொல்லப்பட்ட பின்னர், கால் மில்லியன் மக்களை திறந்த வெளிச் சிறைச் சாலைகளில் அடைத்து வைத்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும் சர்வதேச அதிகாரவர்க்கம் தம்மை நிர்வாணமாக மக்கள் மத்தியில் அடையாளம் காட்டியிருக்கிறது.
இலங்கை, இந்திய, அமரிக்கா போன்ற சர்வதேச அதிகார வர்க்கத்தோடு மட்டும் தான் நாம் இன்னமும் நம்மை அடயாளப்படுத்திக் கொள்ளப் போகிறோமா இல்லை உலகெங்கும் அதிகார வர்க்கத்தை எதிர்த்து நிற்கும் ஒடுக்கப்பட்ட மக்கள் பகுதியினரோடு எம்மை அடயாளப்படுத்திக் கொள்ளப்போகிறோமா என்பது தான் இங்கு தொக்கி நிற்கும் பிரதாக கேள்வி.
அதிகாரவர்க்கத்தை நம்பியிருந்த புலிகளை அவ்வர்க்கம் கைகழுவி விட்டு, மனிதப் படுகொலைகளை வேடிக்கை
காரணமின்றி வலிந்து சிறைவைக்கப்பட்டிருக்கும் கால் மில்லியன் மக்களை விடுவிக்க வேண்டுமென்று எந்தச் சர்வதேச அமைப்புக்களும் கோரிக்கை விடவில்லை. ஐக்கிய நாடுகள் சபை, சர்வதேச மன்னிப்புச் சபை போன்ற அமைப்புக்களெல்லாம் சிறை முகாம்களில் மனித உரிமை குறித்தும், அவற்றின் வசதிகள் குறித்தும் அவ்வப்போது அறிக்கை வெளியிட்டபடி அவ்வப்போது தமது இருப்பைப் பறைசாற்றிக்கொள்கின்றன.
இவர்களெல்லாம் இலங்கை அரசிற்கு மறைமுக அங்கீகாரம் மட்டும்தான் வழங்குகின்றனர். நீங்கள் மக்களைக் காரணமின்றிச் சிறை வைத்திருக்கலாம் ஆனால் மனித உரிமை மீறல்களின்றிப் பார்த்துக் கொள்ளுங்கள் என்கின்றனர். அறுபது வருட காலமாக திட்டமிட்டு நடத்தப்படும் இனச்சுத்திகரிப்பை “மனி உரிமைக்கு” மதிப்பளித்துத் தொடரச்சொல்கின்றனர்.
இவை அனைத்திற்கும் மத்தியில் சில Save Tamils ஏற்பாடு செய்யப்பட்ட திஸ்சநாயகத்தின் கைதிற்கு எதிரான கண்டனக்கூட்டம் அதிகாரம் சாராமல் நடைபெற்ற நிகழ்விற்கு ஒரு நல்ல முன்னுதாரணம்.
இலங்கையிலும் புலம் பெயர் நாடுகளில் புலிகள் களின் அதிகாரம் சார்ந்த சிந்தனை முறையே இன்னமும் ஆதிக்கம் செலுத்துகிறது.
புலிசார் வானொலியொன்று ஆப்கானிஸ்தானிலும், ஈராக்கிலும் மக்களைச் சாரிசாரியாகக் கொன்றொழிக்கும் ஒபாமாவின் ஆதரவை கோரி நிற்கும் அதே வேளை ஒபாமா அரசு புலிகளுக்கு ஆதரவு வழங்கக் கூடாது என எச்சரிக்கை விடுத்திருக்கிறது.
இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான முரண்பாட்டின் வெளிப்பாடாகத் தான் இந்திய அரசு இலங்கைக்கு ஆதரவு வழங்குகிறது என்றும் இதற்கு மாறாக இந்திய அரசிற்கு தமிழர்கள் ஆதரவு வழங்க வேண்டுமென்று அதிகார வர்க்கச் சிந்தனை முறைகுட்பட்ட இன்னொரு பகுதியினர் கோருகின்றனர்.
காஷ்மீரிலும், மேற்கு வங்கத்திலும், இன்னும் இந்தியா முழுவதும் எந்த மனிதப்பெறுமானக்களுக்கும் மதிப்பளிகாது மனிதப்படுகொலை நிகழ்த்தும் இந்திய அதிகாரம் உலக முதலாளித்துவத்தோடு தன்னை இணைத்துக் கொள்வதற்காக இலங்கையில் மட்டுமல்ல தனது சொந்த எல்லைக்குள்ளேயே மக்களைக் கொன்று குவிக்கிறது என்பதை உணர மறுக்கிறார்கள் இவர்கள்.
உலகம் முழுவதையும் தனது பொருளாதார ஆகிரமிப்பிற்குள் உட்படுத்துக் நோக்கோடு இரத்தம் தோய்ந்த வரலாற்றை இன்றுவரை எழுதிவைத்திருக்கும் பிரித்தானிய வாக்குக் கட்சிகளோடு இலங்கைப் பிரச்சனை பற்றி மணிக்கணக்கில் விலையுயர்ந்த உணவு விடுதிகளுள் பேச்சு நடத்தும் பிரித்தானிய
பாலிஸ்தீனய மக்களின் விடுதலைக்காகவும், ஈராக்கிய, ஆப்கானிஸ்தானிய ஆக்கிரமிப்புக்களுகெதிராகவும் இவர்கள் நடத்திய வீரம்மிக்க எதிர்ப்பியக்கங்கள் பல தடவைகள் பிரித்தானிய அதிகாரத்தை அதிரவைத்திருக்கின்றன.
இலங்கை இனப்படுகொலை குறித்து பிரச்சார அடிப்படையில் கூட இவர்கள் அணுகப்படவில்லை. மாறாக, மக்களின் எதிரிகளோடும், அதிகாரத்தோடும் கைகோர்த்துக் கொள்ள முனையும் புலிகளின் தோற்றுப்போன அதிகாரம் சார் சிந்தனை முறை இன்று மறுபடி மறுபடி தமிழ் பேசும் மக்களின் அரசியலாக முன்னிறுத்தப்படுகின்றது.
ஒடுக்கப்படுகின்ற, இனப்படுகொலைக்கும், இனச்சுத்திகரிப்பிற்கும் முகம்கொடுக்கும் தமிழ் பேசும் மக்கள் அதிகாரத்தின் பக்கமல்ல, ஒடுக்கப்படுகின்ற ஏனைய மக்களின் பக்கத்தில் தான் என்ற செய்தி சொல்லப்பட வேண்டும்.
நமது சிந்தனை முறை மாற்றத்திற்கு உள்ளாக்கப்படவேண்டும். இந்தியாவிலும், இல்ங்கையிலும், உலகம் முழுவதும் பெரும்பான்மையான ஒடுக்கப்படும் மக்களை எமது பலத்திற்கு ஆதரவு சக்திகளாக இணைத்துக்கொள்வதன் ஊடாகவே தமிழ் பேசும் மக்களின் போராட்டத்திற்க்குப் புதிய உயிர்ப்பை வழங்க முடியும்.