Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மூன்றாம் உலக யுத்ததை திட்டமிட வேல்சில் ஒன்றுகூடும் அரச பயங்கரவாதிகள்

natosummitஅமெரிக்க அரசு தலமையிலான ஏகாதிபத்திய நாடுகளும் அதன் இணை நாடுகளும் இன்றும் (04.09.2014) நாளையும் வேல்சில் நேட்டோ உச்சி மாநாட்டை நடத்துகின்றன. மத்திய கிழக்கில் அமெரிக்காவின் தலையீட்டை அதிகரிக்கவும் ரஷ்யாவிற்கு எதிரான யுத்தத்தைத் தீவிரப்படுத்தவும் இந்த மாநாடு பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஐந்து பிரதான நோக்கங்களை முன்வைத்து மாநாடு நடத்தப்படுகின்றது. 1. உக்ரையின் பிரச்சனை 2. ஆப்கானிஸ்தானின் எதிர்காலம் 3. புதிய அபாயங்கள் 4. இராணுவ ஒத்துழைப்பு 5. உறுப்பு நாடுகளிடையே ஒத்துழைப்பை வலுப்படுத்தல்.

நேட்டோ நாடுகளின் உள்ளகப் பொருளாதாரம் சரிந்து விழுந்துகொண்டிருக்கின்றது. யுத்தங்களைத் திட்டமிட்டு நடத்துவதைத் தவிர தனது அழிவைப் பின்போடுவதற்கு வேறு வழியற்ற நிலைக்கு அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும் தள்ளப்பட்டுள்ளன. பலஸ்தீனம், சிரியா, ஈராக், உக்ரையின் என்று யுத்ததைக் கட்டவிழ்த்துவிட்டு சாரி சாரியாக மக்களைக் கொன்றுகுவிக்கும் அமெரிக்க அரசின் ஆதரவிலேயே இலங்கையில் இனப்படுகொலை நடத்தப்பட்டது. புலிகளும் மக்களும் அமெரிக்ககக் கப்பல் வந்து காப்பாற்றும் என நம்பவைக்கப்பட்டுக் கொலைசெய்யப்பட்டனர்.

லட்சம் மக்களைச் சாட்சியின்றிக் கொன்றுபோட்ட இலங்கைப் பேரிவனாத அரச பயங்கரவாதத்தின் பின்புலத்தில் அமெரிக்க அரசும் நேட்டோ நாடுகளும் செயற்பட்டன. இந்த தசாப்பத்தின் மிகப்பெரும் அழிவின் பின்னர் அதன் பின்புலத்தில் செயற்பட்ட ஐந்தம் படைப் புலம்பெயர் அமைப்புக்களும் அமெரிக்காவின் அடியாள்படையான இலங்கை அரசும் பலம்பெற்றன. கோத்தாபயவின் தனியார் இராணுவம் உட்பட இலங்கை இராணுவப் பயங்கரவாதிகள் தெற்காசியா முழுவதும் பரவ ஆரம்பித்தனர்.

நேட்டோ நாடுகளின் உச்சி மானாட்டில் 4000 இராணுவத்தைக்கொண்ட அதிரடிப்படை ஒன்றை பயிற்றுவித்து போருக்குத் தயாராக வைத்திருப்பது தொடர்பான ஒப்புதலை உச்சி மாநாடு வழங்கும் என எதிர்வுகூறப்படுகின்றது.

உலகம் முழுவதையும் இராணுவ மயப்படுத்தும் நேட்டோ பயங்கரவாதிகளின் திட்டத்தின் ஒரு பகுதியே இந்த இராணுவம். ஐரோப்பாவின் எல்லையில் உக்ரையின் ஊடாக ரஷ்யாவோடு யுத்ததை ஆரம்பிப்பதற்கு இந்த புதிய இராணுவம் பயன்படும் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மத்திய கிழக்கு ஏற்கனவே யுத்தகளமாக இரத்த வெள்ளத்தில் மிதக்கிறது. ஐரோப்பாவின் எல்ல்லையில் யுத்தம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது கிழக்கு ஐரோப்பா முழுவதும் விரிவடையும். ஆபிரிக்க நாடுகள் யுத்த முனைப்பை அமெரிக்கா ஏற்கனவே ஆரம்பித்துவிட்டது, தென்சூடான், நைஜீரியா எதியோப்பியா என யுத்தப் புற்று நோய் விரிவடைய ஆரம்பித்துள்ளது.

தெற்காசியாவில் பாகிஸ்தான் யுத்தத்தின் கோரங்களை அனுபவித்து வருகிறது. இலங்கையை மையமாகக்கொண்டு தெற்காசியாவை இராணுவ மயப்படுத்த அமெரிக்கா திட்டமிடுவது தெளிவாகத் தெரிகின்றது. ராஜபக்ச அரசும் அமெரிக்க அரசும் நடத்தும் நாடகத்தின் இறுதியில் இலங்கையில் அமெரிக்க இராணுவத்தளம் தோற்றுவித்தாலும் வியப்படைவதற்கில்லை.
உக்ரையின் சதிப்புரட்சியின் ஊடாக ஆட்சிக்கொண்டுவரப்பட்ட உக்ரேனிய ஜனாதிபதி பெட்ரோ பொறொஷென்கோவும் உச்சி மாநாட்டிற்கு அழைக்கப்பட்டிருக்கிறார். நிறவெறி நாசிகளைக் கொண்ட உக்ரேனின் சட்டவிரோத பாசிச அரசை ‘ஜனநாயகத்தின் காவலர்கள்’ அழைத்துள்ளமை ரஷ்யா மீதான யுத்ததைத் தீவிரப்படுத்தவே.

சமாதானத்தை விரும்பும் மக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்படும் மூன்றாவது உலக யுத்ததிற்கு எதிராக உலகம் முழுவதும் ஜனநாயக அமைப்புக்கள் ஒன்றிணைந்து பலம் பெற ஆரம்பித்துள்ளன. யுத்தத்தைத் தூண்டும் ஐரோப்பிய அமெரிக்கக் குற்றவாளிகளின் அடியாட்களான தமிழ்த் தலைமைகளை நிராகரிப்பதும் புதிய மக்கள் சார்ந்த தலைமையைத் தோற்றுவிப்பதும் காலத்தின் தேவை.

Exit mobile version