Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மீண்டும் 1982 – இராஜபக்சவின் அதிகரித்து வரும் சர்வாதிகாரப்போக்கு: Rohini Hensman

 ஏப்ரல் 3ம் திகதி வெளிவந்த ‘த எகொனமிஸ்ட்’  ஆங்கில  சஞ்சிகையில் வெளிவந்த கட்டுரை இது. இக் கட்டுரைக்காக இச் சஞ்சிகை இலங்கையில் தடை செய்யப்பட்டடுள்ளது. இக் கட்டுரையை தமிழில்: தங்கம்.

தற்போதைய மகிந்த இராஜபக்சவினுடைய தேர்தலுக்கும் சுமார் மூன்று தசாப்தங்களுக்குமுன்பு  ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவினது ஆட்சிக்கும் இடை யில் பலத்த ஒத்தன்மைகள் காணப்படுகின்றன.
 
 கடந்த ஆண்டு, இலங்கையில் சம்பவங்கள் மிக விரைவாக நடந்து முடிந்து விட்டன யுத்த முடிவில், பத்து மாதங்களுக்குள் சிங்கள மக்கள் ஒற்றுமையானவர்களாகவும் மற்றும் மகத்தான வெற்றிப் பெற்றவர்களாகவும் காணப்பட்டார்கள். இராணுவப்  படைத்தளபதி  சரத் பொன்சேகா பெரும்பாலான சந்தர்ப்பங்களில் ஜனாதிபதி மகிந்த இராஜபக்ச மற்றும் அவரது சகோதரரான பாதுகாப்பு அமைச்சர் ஹோத்தபயவுடன் தோன்றினார். இப்போது பொன்சேகா, அண்மையில் ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியைத் தழுவிக் கொண்ட பின், இராணுவ பொலிசாரால் இழிவு படுத்தப்பட்ட முறையில் கைது செய்யப்பட்டார், பின், இவர் சிறையில் அடைக்கப்பட்டார், சுவர்களில் இவரது தேர்தல் சுவரொட்டிகள் கிழித்து அகற்றப்பட்டன, இராஜபக்சவிற்கு எதிரான ஊர்வலங்களில் கலந்து கொண்டவர்கள் அரச குண்டர்களால் தாக்கப்பட்டனர். என்ன நடந்தது?

ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக பொன்சேகா பதிவு செய்வதற்கு முன், ஜனாதிபதி தேர்தலில் 70 இலிருந்து 80 வீதமான பெரும்பான்மை வாக்குகளை இராஜபக்ச பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. எதிர் கட்சியான ஐக்கிய தேசியகட்சியின் தலைவரான இரணில் விக்ரமசிங்க 2005 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலைப் போல சுமார் ஐந்து மில்லியன் வாக்குகளை பெறலாம் என வாதிடுபவர்கள் அப்போதிருந்த நிலைமையும் தற்போதைய நிலைமையிலும் ஏற்பட்டுள்ள கனதியான மாற்றங்களை கவனிக்கத் தவறியுள்ளார்கள். 2002 இல் கைசாத்திடப்பட்ட, எல்லா சமூகங்களுக்கும் நன்மை வழங்கிய யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் விக்ரமசிங்க “சமாதானத்தில் பங்கு” கொண்டவர். இவர் நாட்டின் பெரும் பகுதியை தமிழ் ஈழவிடுதலைப்புலிகளுக்கு வழங்க தயாராக இருந்தவராகவும் காணப்பட்டார். ஆனால் யுத்தநிறுத்த முறிவின் பின் வெறுக்கப்பட்ட எல்ரிரிஈயிற்கு எதிராகப் போராடி நாட்டை வெற்றிப்பாதைக்கு கொண்டு சென்றவர் இராஜபக்ச, நன்றிகடன்பட்ட மக்கள் இவருக்கு  பெருமளவு வாக்களிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

யுத்தத்தில் ஏற்பட்ட வெற்றியே சிங்கள மக்கள் ஜனாதிபதி ஆதரித்தமைக்கான பிரதான காரணமாகக் கொள்ளலாம்.எல்லோராலும் புரிந்து கொள்ளக்கூடியதும் ஆறுதலானதுமாகும், இனிமேல் பேரூந்துகள்,இரயில்கள், கடைகள் மற்றும் சந்தைகளில் குண்டுகள் வெடிக்காது, பல ஆயிரக்கணக்கான இளவயதினர் களமுனைக்கு  அனுப்ப வேண்டியதில்லை, அவர்கள் மரணத்தை தழுவிக் கொள்ளவோ அல்லது அங்கவீனர்களாக வீடு திரும்ப வேண்டிய தில்லை, பொன்சேகா பற்றி பாதகமான கருத்துக்கள் நிலவிவந்தன. இவருடைய எதிர்தரப்பினர் இவர் ஒரு அரசியல் முன் அநுபவமற்றவர், இதனை ஈடு செய்யக்கூடிய வசீகரமுடையவருமல்ல, சிறந்த பேச்சாளியுமல்ல, இவருடைய இழிவுபடுத்தும் வகையிலான மொழியானது சிங்களமக்கள் பலரை விலகவும் வைத்துள்ளது, பராம்பரியவாதிகள், இவர் தனது முன்னைய தலைவருக்கு எதிராகப் போட்டியிடுவது ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கவில்லை.

இவருக்கு  ஒரு பல்வேறு கொள்கையுடைய கட்சிகள், முன்பு எதிரிகளாக இருந்தவர்கள் பின்னணியில் இருந்தும் கூட இது உதவவில்லை. தமிழர்கள், இவரை ஒரு சிங்கள சோவனிஸ்ட்டாகவே அறிந்திருந்தார்கள்,அத்துடன் யுத்ததின் முடிவில் மக்களின் கொலைகளுக்கு இவரும் பங்குதாரர்.
இவ்வாறான நிலைமைகளின் கீழ் 4.2 மில்லியன் வாக்குகள் பொன்சேகாவிற்கு வழங்கப்பட்டிருந்தது மிகவும் அதிசயமானது தேர்தல் சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடைபெற்றிருந்தால்  இதைவிட அதிகளவு வாக்குகள் கிடைத்திருக்கலாம். பெப்பிரவரி 15 ஆம் திகதி பதிவு செய்யப்பட்ட மனுவின்படி, தேர்தல் பிரச்சாரத்தின் போது பொன்சேகாவின் ஆதரவாளர்கள் மீது வன்முறை பிரயோகிக்கப்பட்டதாகவும்,( கொலையுட்பட), அதிகளவு அரச சொத்துக்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் மற்றும் அரச ஊழியர்கள் இராஜபக்சவிற்காக பணியில் ஈடுபட வைக்கப்பட்டதாகவும், அதேவேளை பொன்சேகாவிற்காக விளம்பரங்களைச் செய்யவோ, மற்றும் வாக்குகளை பெறுவதற்கான வழிகளில் அரச சொத்துகளை பயன்படுத்த அனுமதிக்காததுடன் இவருக்கு வானொலி மற்றும் தொலைக்காட்சி போன்ற மக்கள் தொடர்பு ஊடகங்களில் ஒலிபரப்புவதற்கான அனுமதியும் மறுக்கப்பட்டதாக விபரிக்கப்பட்டுள்ளது.

பொன்சேகா ரிஎன்ஏயுடன், தான் அதிகாரத்திற்கு வந்தால் நாட்டை பிரிப்பதாக ஒப்பந்தம் செய்துள்ளார் என்ற பொய்யான குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டதுடன், இவர் நிர்வாகத்தை நடாத்துவதற்கு பொருத்தமானவரல்ல எனவும் கூறப்பட்டது. இவைகள் யாவும் பொன்சேகாவிற்கான வாக்குகளை குறைத்திருக்க வேண்டும், இவைகள் மட்டுமல்லாது இவரை அடொல்வ் கிற்லர் மற்றும் இடி அமீனுடன் ஒப்பிட்ட நடத்திய தேர்தல் பிரச்சாரங்கள் சிங்கள் மக்கள் சிலரை அச்சம் கொள்ளம் செய்துள்ளது.

பிழையான செயற்பாடுகள் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் எதிர்தரப்பிலிருந்து மட்டும் வரவில்லை, சுதந்திரம் மற்றும் நியாயமான தேர்தலுக்கான  அமைப்பு CAFFE  இதனை ஊர்ஜிதப்படுத்தியுள்ளது,இடம் பெயர்ந்த மக்களில் பலரின் தமது வாக்குரிமையைப் பயன்டுத்தும் உரிமையை இழந்துள்ள வேளையில் இறந்தவர்கள் மற்றும் நாட்டை விட்டு வெளியேறியவர்களும் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருந்தனர் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. மற்றும்  வாக்குமையங்களில் வாக்குகளை எண்ணும் போது எதிர்தரப்பினர் இருக்க அனுமதிக்கப்படவில்லை ஆனால்  சம்பந்தமில்லாதவர்களஅ உள்ளே வருவதற்கு அனுமதிக்கப்பட்டிருந்தனர்.தேர்தல் முடிவுகள் ஒவ்வொரு எண்ணும் மையங்களிலிருந்து வழமையாக வெளியிடப்படுவது போல வெளியிடப்படாமல் முடிவுகள் மையப்படுத்தப்பட்ட பின்பே வெளியிடப்பட்டன.ஒவ்வொரு வாக்குமையங்களிலும் எண்ணப்பட்ட முடிவுகளின் காபன் கொப்பிகளைபரிசோதிப்பதற்கு வழங்கும் படி  CaFFE அமைப்பு கேட்ட போது இக்கோரிக்கை மறுக்கப்பட்டது. இது மோசடி நடந்திருக்கலாம் என்ற சந்தேகத்திற்கு இடமளிக்கிறது.

இராஜபக்சவின் தேர்தல் வெற்றி எதிர்பார்த்தை விட ஒரு ‘சரிவு‘ அல்லது‘ எதிரோலி‘ யை ஒத்ததாக இருந்ததாக அறிக்கைகள் விபரிக்கின்றன. பொன்சேகாவிற்கு சிறுபான்மையினர் அதிகமான பகுதிகளில் கிடைத்த வாக்குகளின் விகிதமானது பெரும்பான்மையினரின் பிரதேசங்களில் கிடைத்த வாக்குகளை விட அதிகமாகும். இது பொன்சேகாவிற்கு பெரும்பாலான வாக்குகள் சிங்களவர்களிடமிருந்து கிடைத்திருக்கலாம் என்பதை நிராகரிப்பதுடன், இது இராஜபக்சவின் வெற்றி ஒரு ‘தேசியரீதியிலான’ தன்மை கொண்டது என்பதையும் நிராகரிக்கிறது.

அதிகரித்து வரும் சர்வாதிகாரம்

பல தமிழர்கள் ஏன் வாக்களிக்காது ஒதுங்கி இருந்தார்கள் என்பதை புரிந்து கொள்ளக் கூடியதாகவுள்ளது. யுத்தத்தின் இறுதி மாதங்களில் தமிழ் மக்கள் நரகத்தை அநுபவித்தார்கள்.ஆனால் பலர் ஏன் இராணுவ தளபதியான பொன்சேகாவிற்கு வாக்களித்தனர் என்பதைப் புரிந்து கொள்வது அவ்வளவு இலகுவானதல்ல. ஆனால் சிலவேளை யுத்தத்தில் தப்பியவர்கள் அநுபவித்த வார்த்தைகளில் விபரிக்க முடியாத துன்பங்களுக்கு இராஜபக்சவே காரணம் என மக்கள் ஏற்றுக் கொண்டதாக இருக்கலாம். உதாரணமாக முகாம்களில் 280 000 பொதுமக்கள் சிறைவைக்கப்பட்டிருந்தனர். இதற்கு காரணமாக இவர்கள் எல்ரிரிஈ அங்கத்தவர்களா இல்லையா என்பதை ஆராய்வதற்காக வைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த மக்கள் எவ்வாறு விசாரணைக்குட் படுத்தப்படுகிறார்கள் என்றோ, எவ்வாறு விபரங்கள் சேகரிக்கப்படுகின்றன என்பதையோ, இந்த புலம் பெயர்ந்த மக்கள்  நடத்தப்படுகிறார்கள் என்பதை கண்காணிக்க ஐநா,சர்வதேச செஞ்சிலுவைச் சங்கமோ அனுமதிப்படவில்லை. அரசாங்கத்தின் இந்த தீர்மானம் தொடர்பாக சர்வதேச மற்றும் உள்ளூரில் ஏற்படுத்தப்பட்ட அழுத்தங்களால் எதுவும் செய்ய முடியாமல் போனது. பொன்சேகா தேர்தல் ”கைகலப்பில்” கலந்து கொள்ளுமுன்  வாக்குறுதிகள் இவரது தேர்தல் விஞ்ஞாபனத்தில் வழங்கப்பட்டிருந்தாலும், மற்றும் ரிஎன்ஏயிற்கு வாக்குறுதியை கையொப்பமிட்ட கடித்த்தில் வழங்கியிருந்தாலும் கூட  இவை மிக்குறைவானவையே. தமிழர்கள் இராஜபக்சவிடமிருந்து எதிர்பார்த்த்தைவிட குறைவானவையே. இந்த நிலையில் பொன்சேகாவின் மீது போர்கால குற்றங்கள்  தொடர்பாக நீதிமன்றத்தில் விளக்கமளிப்பதானது யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதலை வழங்கலாம்.

இராஜபக்சவின் அரசாங்கம் தொடர்ந்து  ஜனநாயக உரிமைகளை முறையாக அழித்துக் கொண்டு வருவது சிங்கள மக்களின் முன்னேறிய பிரிவினரிடையே கவலையைத் தோற்றுவிக்கும் விடயமாகும். இரு தன்மைகள் குறிப்பாக முதன்மைப்படுத்தப்பட்டன: t மிகப் பல கடத்தல்கள், முரட்டுத்தனமான தாக்குதல்கள் ; ஊடகவியலாளர்களின் கைதுகளும் கொலைகள் மற்றும்  சட்டபூர்வமான சபை முன்னைய நிர்வாகத்தினால் பிரதான பதவிகளுக்கு உரிய தகுதிகளையுடையவர்களை நியமிப்பதை உறுதிப்படுத்தவும் மற்றும் அரசியல் ரீதியான அசமத்துவமற்ற நிலையை தவிர்ப்பதற்காகவும் ஏற்படுத்தப்பட்டதாகும். இச்சபைகள் மாற்றம் பெற்றுள்ளன. பயங்கரவாத்தில் இருந்து பாதுகாத்தல் சட்டம்(PTA) மற்றும் அவசரகால சட்டவிதிகளும் அரசினுடைய சட்டமீறல்களுக்கு தண்டனைகளிலிருந்து விலக்குகளை வழங்குகிறது. யுத்ததிற்குப்பின் இவைகள் எதுவும் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை. இது இராஜபக்சவின் ஆட்சியின் பிரதான தன்மையை தெளிவாகக் காட்டுகிறது.

இது ஜனாதிபதி இராஜபக்சவினுடைய ஆட்சி முறையில் முக்கியமானவை என்பது தெளிவாக தெரிகின்றது. இவ்வாறான நிலைமைகளினால் ஏற்பட்ட விரக்தி நிலையானது சிங்கள மக்களால் பொதுவாக இராஜபக்சவின் சகோதர்களை “இராட்சதர்கள்” ஆகவும் மற்றும் வேறொருவர் பொன்சேகாவிற்கு வாக்களிப்பது தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போது “சட்டியிலிருந்து அடுப்புக்குள் பாய்வது போலத்தான்” எனக்குறிப்பிட்டார். சிறந்த பேச்சுவன்மையுள்ள அநுரா குணசேகரா உரையானது Transcurrents இணையத்தளத்தில்  பெப்பிரவரி 8 ஆம் திகதி இராஜபக்சவின் தனக்கு எதிராக வாக்களித்தவர்கள் மீதான “நாட்டிற்கு துரோகமிழைத்துவிட்டார்கள்”  என்ற குற்றசாட்டுத் தொடர்பாக தெரிவித்த கருத்தை இங்கு சுருக்காது மேற்கோளா குறிப்பிடுவது பயனுள்ளதாகும் :

தற்போது நான் நாட்டின் 4.17 மில்லியன் நாட்டின் பிரஜைகளுடன், எனது வாக்களிக்கும் தனிப்பட்ட தெரிவானது எனது நாட்டிற்கு துரோகமிழைப்பது என்பதை நான் ஏற்றுக் கொள்ளும்படி கட்டாயப்படுத்தப்பட்டுள்ளேன். நாட்டின் பிரஜை என்ற வகையில் நான் இந்த வாக்குமூலத்தை முக்கியமாக கவனமாகவும் பயத்துடன் பார்க்க வேண்டும்,  எனது பார்வையில் இது பாசிசத்தை அண்மித்த எச்சரிக்கை மிகுந்த எதிரொலியுடையதாக தெரிகிறது. அடிப்படை உரிமைகள் மறுக்கப்படல் ஜனநாயக உரிமைகள் மீதான அடக்குமுறை மற்றும் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்ட இந்நிலையில் நான் நன்கு அறியப்படாத மற்றும் திடமாக கூறமுடியா ஒருவரான பொன்சேகாவிற்கு வாக்களிக்க முடிவு செய்வதையும் அதனால் ஏற்படும் ஆபத்தையும் எதிர் நோக்க முடிவு செய்தேன். இது மாற்றத்தை கொண்டு வரலாம், சட்டங்கள் செல்லுபடியாக ஒரு சமூக நிலையிலிருந்து, கொள்ளையில் ஈடுபடும் பராளுமன்றப்பிரதிநிதிகள் சட்டரீதியான தடைகளில்லாமல் சாதாரண பிரஜை போல தண்டிக்கப்படலாம், அரச மற்றும் தனியார் ஊழல் குறைக்கப்படலாம் அல்லது இல்லாதொழிக்கப்படலாம். சீரழிந்து போன நிலைமை தொடராமல் இருக்கலாம், ஊடகவியலாளர்களின்  மாற்றுக்கருத்தை தெரிவிக்கும் ஊடகவியலாளர்கள் தமது நடவடிக்கையை ஆயுத தாக்குதல் அபாயமின்றி, கடத்தப்படலாம் உயிரிழக்க நேரிடலாம் என்ற அச்சமின்றி தொடரலாம் எனவும்,  கூட்டுச்சேரா செய்தி ஒலிப்பரப்பாளர்கள் கசப்பான உண்மைகளை ஒலிப்பரப்பாளர்கள் பூடப்படலாம் என்ற பயமின்றி இயங்கலாம், மற்றும் பொறுப்பற்ற முறையில் பொது நிதியை  அரசியல் ரீதியான அதிகாரத்தை மேம்படுத்துவதை நிறுத்தப்படலாம் என நம்பினேன்.

இந்த நாட்டின் சிறுபான்மை மக்கள், உயிரழிப்புக்களை எதிர் கொண்டுள்ளனர், தமது வாழ்வாதரங்களை, வதிவிடங்களை, கல்வி மற்றும் பொதுவான விடய.ங்களில் கலந்து கொள்ளும் வாய்ப்புக்களை  இழந்துள்ளார்கள், இவர்களுக்கு குறைந்தது பெரும்பான்மை இனத்தைப் போல பங்கு பற்றுவதற்கான சமமான வாய்ப்புக்களையாவது வழங்கும், என்ற நம்பிக்கையில் தான், இங்கு குறிப்பிட்ட எல்லா விடயங்களும் கவனத்தில் கொள்ளப்படாவிட்டாலும் சிலவிடயங்களையாவது  பொன்சேகாவிற்கு வாக்களித்த மக்கள் கருத்திற் கொண்டிருப்பார்கள் என நான் உண்மையிலேயே நம்புகிறேன்.

இராஜபக்சவின் தேர்தல் வெற்றியானது திட்டமிடப்பட்டு வெற்றியாகவும் மற்றும் எதிர்பார்க்கப்பட்டதுமானது சிங்கள மக்களின் இவருக்கான ஆதரவானது யுத்தத்தின் பின் நிகழ்த்தப்பட்ட பிரச்சாரத்தின் விளைவாகும் என்பதை வெளிப்படுத்துகிறது. இது இலங்கை சமூகத்தில் இனப்பிரிவு என கூறப்படும் பிளவை விடவும் மிகவும் ஆழமான பிளவுகள் இருக்கின்றன என்பதை வெளிப்படுத்தியுள்ளது அதாவது இது சர்வாதிகார அரசில் வாழலாம் அல்லது நன்மைகளைப் பெறலாம் என்ற ஒரு பிரிவினர் மற்றும் ஜனநாயகத்தை கோருவோர் எனும் இன்னொரு பிரிவு. இந்த இரண்டாவது குறிப்பிட்டவர்கள் சிங்கள மற்றும் சிறுபான்மையின மக்களும் பொன்சேகா ஒரு நம்பிக்கைக்குரிய வேட்பாளராக இருப்பார் உணராத காரணத்தால் இவர்கள் யாருக்குமே வாக்களிக்கவில்லை, இப் பகுதியினரே பெரும்பான்மை என்ற முடிவுக்கு நாம் வரலாம்

இராஜபக்ச அல்லது ஜெயவர்தனா?

தேர்தலின் முடிந்தவுடன்,  பொன்சேகா ஒரு எதிர்தர்ப்பின் கூட்டத்தின் போது இராணுவ பொலிசாரால் இழுத்து வரப்பட்டு இராணுவ நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு மற்றும் மரண தண்டனை வழங்கப்படலாம் எனும் அச்சுறுத்தல் காணப்படுகிறது. குற்றச்சாட்டுக்கள் தெளிவற்றவையாகவும் மற்றும் மாற்றம் செய்யப்பட்டவையாகவும் இருக்கின்றன. இவர் இராணுவ சதி ஒன்றைத் திட்டமிடுகிறார் என அடிக்கடி கூறப்பட்டு வந்தது, பொதுவாக சிந்திக்கும் திறன் கொண்ட எவரும்  இவ்வாறாயின் இவர் ஏன் இராணுவத்தை விட்டு விலகி, தேர்தலில் போட்டியிடுகிறார் என கேட்கலாம். நூற்றுக்கணக்கான இவரது ஆதரவாளர்கள், சாதாரண மற்றும் இராணுவத்தினர் இருபகுதியினரும் பழிவாங்கப்பட்டார்கள். பொன்சேகாவை விடுதலை செய்யக் கோரி ஊர்வலம் சென்றவர்கள்  அரச குண்டர்களால் தாக்கப்பட்டார்கள் மற்றும் பொலிசாரும் இவர்களுக்கு சார்பாக நடந்து கொண்டது. பொன்சேகாவின் வழக்கறிஞருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது.

இங்கு நாம் இவ்வாறான ஒன்றை முன்பு அநுபவித்துள்ளோமே எனும் உணர்வு மேலோங்கி நிற்கிறது.  1982 இன் ஜனாதிபதி தேர்தலிக்கு முன், ஜே.ஆர். ஜெயவர்தன ஊடக சுதந்திரத்திற்கு வாய்பூட்டைப் போட்டும் மற்றும் அரச நிதி மூலங்களை தனது பிரச்சாரத்திற்காகப் பயன்படுத்தினார்.  அவர் பதவிக்கு வந்த சில வாரங்களில், தொழிற்சங்கவாதிகள் வஞ்சிக்கப்பட்டு மற்றும் கடுமையாகத் தாக்கப்பட்டார்கள். பயங்கரவாத தடைச்சட்டம் மற்றும் அவசரகால சட்டவிதிமுறைகள் என்பன சட்ட ரீதியான நடைமுறைகளை பின்தள்ளியதுடன் அரசின் குற்றங்களுக்கு தண்டனையிலிருந்து தப்புவிக்கும் வாய்ப்பையும் வழங்கியது. தேர்தலிற்குப் பின்  பிரபல்யமான எதிர்கட்சி அரசியல்வாதியான விஜய் குமாரத்துங்க ( முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் துணைவர்) தயாரிக்கப்பட்ட குற்றசாட்டுக்களின் பேரில் பாதுகாப்பு காவலில் வைக்கப்பட்டார். ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு வாக்கெடுப்பு பாராளுமன்றத்தை இரத்துச் செய்யக் கோரியது.  அரச ஆதரவுடன் காடையர்கள் ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் மீது தாக்குதல் நிகழ்த்தியும் பாதிக்கப்பட்டவர்கள் பொலிசாரால் கைது செய்யப்பட்டார்கள்.

அரசுக்கு எதிரானவர்களும் மற்றும் சட்டத்தரணிகளும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குரல் கொடுக்க முன் வந்த போது இவர்கள் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டும், கொலை செய்யப்பட்டுமுள்ளார்கள். ஜெயவர்த்தனாவின் ஜனநாயக விரோதங்களைத் தொடர்ந்து இவருக்கு  பின் அதிகாரத்திற்கு வந்தவர்களும்  தொடர்ந்தனர், இரணசிங்க பிரேமதாசாவின் ஆட்சியில் சிங்கள மக்கள் மத்தியில் ஒரு எழுச்சியைத் தோற்றுவித்தது. இதில் சுமார் 60.000 மக்கள் கொல்லப்பட்டனர். வரலாறு மீண்டும் மீண்டும்?

இந்ததடவை மக்கள் வாக்கெடுப்பிற்கான சாத்தியக்கூறுகளில்லை. ஆனால் பாரளுமன்றத் தேர்தலில் இராஜபக்சவின் அரசியல் கூட்டிற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைக்க வேண்டும் என்பதற்காக எதிர்தரப்புக்கள் மீது வன்முறையுடன் கூடிய அடக்குமுறை பிரயோகிக்கப்படுகிறது. பொன்சேகாவின் கைதும் இராணு நீதிமன்றத்தில் தொடர்பான அச்சுறுத்தலும் இவ்வாறான தந்திரோபாயத்தின் ஒரு பகுதியாகும்.

 இவ்வேளையில், இலங்கையின் தொலைத் தொடர்புகள் ஒழுங்கு படுத்தும் ஆணைக்குழு குகூலின் தேடும் இயந்திரத்தின் செய்திகள் மற்றும் இணைய தளங்களை தடை செய்வதற்கான உதவி கோரி சீன இராணுவப்புலனாய்வு நிபுணர்களை அணுகியுள்ளனர்.  இது எதனைக் காட்டுகின்றது எனில் கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கான சுதந்திரம் மற்றும்  விடயங்களை அறிந்து கொள்வதற்கான உரிமைகளை கட்டுப்படுத்துவதை காட்டுகிறது. இவ்வாறான அடக்குமுறை தொடர்ந்து அதிகரிக்கும் பட்சத்தில்  இன்னுமொரு இரத்தகளரி ஏற்படலாம்.  முதன்மையான யுத்தவீர்களே கங்காரு நீதிமன்றத்திற்கு இழுக்கப்படும் போது யாருக்குமே பாதுகாப்பு இல்லை மக்கள் புரிந்து கொண்டுள்ளனர். இதனாலேயே தலைபெளத்தசமயக்குருமார்கள் மற்றும் பலரும் பொன்சேகாவை விடுவிக்க அல்லது குறைந்த பட்சம் பொதுமக்களுக்கான நீதிமன்றத்தில் ஒரு நியாயமான வழக்கை நடத்தும் படி கோரியுள்ளனர்.

இலங்கையில் ஒரு பாசிசத்திற்கு எதிரான அமைப்பின் ஆரம்பத்தைக் காணக் கூடியதாக இருக்கிறது, ஆனால் ஒற்றுமையும் மற்றும் கொள்கை பற்றுள்ள தலைமைத்துவமும் தேவைப்படுகிறது. ஜெயவர்த்தன மற்றும் பிரேமதாசாவின் அரசாங்கத்தின் போது தமிழ் மற்றும் சிங்கள மக்கள் மீதான கொடுமைகளில் விக்கிரசிங்கவிற்கும் பங்குண்டு என கூறப்பட்டுகிறது. விக்ரமசிங்கவிற்கு பதிலாக வேறொருவர்  நியமிக்கப்பட்டாலன்றி யுஎன்பி உயர்ந்த அறநெறிகளையுடைய கட்சியாக கொள்ள முடியாது.ஆனால் இவருக்காக பதிலாக யார் நியமிக்கப்படலாம் என யாருக்கும் தெரியாது. ஜேவிபி யானது தனது கடந்த கால சர்வாதிகாரப்போக்கையும் மற்றும் தமிழ்மக்களின் உணர்வுகளுக்கு எதிரான தன்மையையும் விமர்சனத்திற்குட் படுத்த வேண்டும், ரின்ஏ ஏற்கனவே தம்மை எல்ரிரிஈயின் தமிழ் ஈழக்கோரிக்கையிலிருந்து விலகி கொண்டவர்கள், எல்ரிரிஈயின் தன்னாதிக்கப்போக்கையும், இதனது சிங்கள மற்றும் முல்ஸீம் மக்களின் கொலைகளையும் மற்றும் வடக்கில் முஸ்ஸீம் மக்களுக்கு  எதிராக நிகழ்த்தப்பட்ட இனச்சுத்திகரிப்பையும் கண்டனம் செய்ய வேண்டும்.  எல்லாவற்றிற்கும் மேலாக உண்மையான இடதுசாரிகள் சுதந்திரமானதும் மற்றும் கோட்டுப்பாட்டு ரீதியிலான ஒரு போராட்டத்தை பாசிச அரசாக மாறிக் கொண்டிருக்கும் அரசுக்கு எதிராகவும் மற்றும் சகலவிதமான  வேறுபாடுகளுக்கு எதிராகவும், தொழிற்சங்க போராட்டம் உள்ளடங்கலாக, முன்னேறிய கருத்துடையவர்கள்  படிப்படியாக இல்லாதொழிக்கப்படுகிறார்கள் மற்றும்  விமர்சிப்பவர்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்படுகிறது. இப்போதுள்ள நிலைமையில் இவர்கள்  ஜனநாயகம் மற்றும் நீதிமிக்கசமூகத்திற்கான அறநெறி வழிகாட்டி ஒன்றை (moral compass) உருவாக்குவதற்கான பணிகளில் ஈடுபட வேண்டும்.

Rohini Hensman  ஒரு சுதந்திர ஆய்வாளரும், எழுத்தாளரும் மற்றும் இந்தியா மற்றும் இலங்கையில் பணிபுரியும் செயற்பாட்டாளர் ஆவர்.
மொழியாக்கம்: தங்கம்.

Exit mobile version