Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மலையகத்தில் உள்ளுராட்சி நிறுவனங்களை உருவாக்காது, வட்டாரங்களை மாத்திரம் உருவாக்குவது ஒரு கண் துடைப்பாகும்: அ.லோறன்ஸ்

Nuwara_Eliyaநாடு பரந்தளவில் இலங்கையில் 335 உளட்ளுராட்சி நிறுவனங்கள் செயற்படுகையில,; 15 இலட்சம் மலையக மக்களுக்காக நுவரெலிய, அம்பகமூவ, அட்டன் ஆகிய மூன்றே மூன்று உள்ளுராட்சி நிறுவனங்கள் மாத்திரமே காணப்படும் போது, இந்த உள்ளுராட்சி நிறுவனங்களில் வட்டாரங்களை உருவாக்குவது மாத்திரம் எந்த விதத்திலும் மலையக மக்களுக்கு பிரயோசனமானதாக அமையாது. மாறாக வட்டாரங்கள் மாத்திரம் உருவாக்குவது ஒரு கண் துடைப்பாகவே அமையுமென மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகம் அ.லோறன்ஸ் தற்போது நாடுமுழுதும், வட்டாரங்கள் அமைத்து புதிய முறையில் வட்டார விகிதாச்சார முறையில் தேர்தலை நடத்துவதற்கான, நடவடிக்கைகள் உள்ளுராட்சி மாகாண சபை அமைச்சு மேற்கொண்டுவரும் நிலையில் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

மலையக மக்களுக்காக நுவரெலியா பதுளை, கண்டி இரத்தினபுரி போன்ற மாவட்டங்களில், இருபதுக்கு மேற்பட்ட உள்ளுராட்சி நிறுவனங்களை, உள்ளுராட்சி சீர்திருத்தத்தில் எல்லை மீள் நிர்ணயம் செய்யக்கூடிய சூழல் இருந்த போதும், வெறுமனே அம்பகமூவ, நுவரெலியா, அட்டன் போன்ற உள்ளுராட்சி நிறுவனங்களில் வட்டாரங்களை பிரிப்பதற்கு மாத்திரம் எல்லை மீள் நிருணயத்தை மேற்கொண்டிருப்பது வேண்டுமென்றே, உள்ளுராட்சி சபைகளை மலையக மக்கள் மத்தியில் உருவாக்குவதை தவீர்ப்பதற்காகவோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

தற்போது பாராளுமன்ற தேர்தல் தொகுதிகளுக்கு கட்டாயம் எல்லை மீள் நிருணயம் செய்யவேண்டுமென்று சகல கட்சிகளும் ஏற்றுக்கொண்டிருக்கும் போது, உள்ளுராட்சி சீர்திருத்தத்தில் மலையக மக்கள் அதிகமாக வாழும் பகுதிகளில், உள்ளுராட்சி நிறுவனங்கள் மிக குறைவாக இருக்கின்ற நிலையில் உள்ளுராட்சி நிறுவனங்களை உருவாக்குவதற்கான முயற்சியை இதுசம்பந்தப்பட்ட உள்ளுராட்சி அமைச்சு தவிர்த்திருப்பது இம்மக்கள் மத்தியில் உள்ளுராட்சி நிறுவன உருவாக்கத்தை வேண்டுமென்றே தடு;த்திருப்பது போல் தெரிகின்றது.

2010ம் ஆண்டு பொது நிருவாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு அதன் செயலாளர் திருமதி ளு.மு. வீரதுங்க அவர்களை எல்லை மீள் நிருணய குழுவின் செயலாளராகக்கொண்டு எல்லை நிருணயம் தொடர்பாக முன்மொழிபுகளைப் பெற்று, நுவரெலியாவில் தற்போது காணப்படும் 5 பிரதேச செயலகங்களுக்கு மேலதிகமாக மேலும் 7 பிரதேச செயலகங்களை எல்லை நிருணயம் செய்து அதற்கான அறிக்கைகளை சமர்ப்பித்திருந்தது. அதன்படி நுவரெலியா பிரதேச செயலகத்தை தலவாக்கலை, அக்கரப்பத்தனை நுவரெலியா ஆகிய மூன்று பிரதேச செயலகங்களாக எல்லை நிருணயம் செய்வதற்கும்,

அம்பகமூவ பிரதேச செலயகத்தை மஸ்கெலியா, நோர்வூட், கினிகத்தேன என்று மூன்று பிரதேச செயலகங்களாக எல்லை நிருணயம் செய்வதற்கும், ஹங்குரான்கெத்தயை, இரு பிரதேச செயலகங்களாக எல்லை நிருணயம் செய்வதற்கும், வலப்பனை இரு பிரதேச செயலகங்களாக எல்லை நிருணயம் செய்வதற்கும், கொத்மலையை இரு பிரதேச செயலகங்களாக எல்லை நிருணயம் செய்வதற்கும் கொள்கை ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டு, மேலதிகமாக தற்போதுள்ள பிரதேச செயலகங்களோடு மேலும் 7 புதிய பிரதேச செயலகங்களுக்கான எல்லை நிருணயம் செய்யப்பட்டிருந்தது.

இதன்படி நுவரெலியா மாவட்டத்தில் 12 பிரதேச செயலகங்கள் எல்லை மீள் நிருணயம் செய்வதன் மூலம் 12 பிரதேசசபைகள் ஏற்படுத்தப்பட்டிருக்கவேண்டும். இதன்படி 4 இலட்சம் மலையக தமிழ் மக்கள் வாழும் நுவரெலியா மாவட்டத்தில், குறைந்தது அவர்களுக்கென 7 பிரதேசசபைகளை மாநகரசபை, நகரசபைகள் என 10 உள்ளுராட்சி நிறுவனங்கள் உருவாக்கப்பட்டிருக்கும். ஆனால் பொது நிருவாக அமைச்சு இதனை கிடப்பில் போட்டு விட்டு தற்போது வெறுமனே வட்டாரங்களை மாத்திரம் உருவாக்கியுள்ளது. இது முழுக்க முழுக்க மலையக மக்கள் வாழும் பகுதிகளில், மிக பெரிய குறைப்பாடாக நிலவும் உள்ளுராட்சி நிறுவனங்களின் உருவாக்கத்தை தடைச்செய்துள்ளது. ஆகவே மேற்படி வட்டார அறிமுகம் மாத்திரம் நுவரெலிய, பதுளை, கண்டி இரத்தினபுரி போன்ற மலையக மக்கள் வாழும் பகுதிகளுக்கு பெரிய பிரயோசனமாக அமைய மாட்டாது.
உள்ளுராட்சி நிறுவனங்கள் தான் உருவாக்கப்படவில்லை என்றாலும் கூட, நுவரெலியா மாவட்டத்தில் உருவாக்கிய வட்டார முறையிலும் பாரபட்சமே காணப்படுகின்றது.

தலா இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட ஜனத்தொகையைக் கொண்ட நுவரெலியாவிற்கும், அம்பகமூவ பிரதேச சபைகளுக்கும் 35, 31 வட்டாரங்களே எல்லை மீள் நிருணயம் செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ஒரு இலட்சத்திற்கும் குறைந்த வலப்பனை ஹங்குராங்கெத்த, கொத்மலை ஆகிய பிரதேச சபைகளுக்கும் 33, 32, 24 என வட்டாரங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இவ்விதம் வட்டாரம் ஒதுக்குவதிலும் கூட ஜனத்தொகை, வாக்காளர் அடிப்படையில் கூடுதலான அம்பகமூவவுக்;கும், நுவரெலியாவிற்கும் வட்டாரங்கள் ஒதுக்கப்படவில்லை. வட்டாரம் ஒதுக்குவதிலும் நுவரெலியா, அம்பகமூவ பகுதிகளுக்கு பாரபட்சம் காட்டப்படுள்ளது.

இன்று நாட்டில் தேர்தல் சீர்திருத்தம் எல்லை மீள் நிருணயம் பற்றி முனைப்பாக பேசப்படும் நிலையில், உள்ளுராட்சி தேர்தல் சீர்திருத்தம,; மலையக மக்கள் செறிவாக வாழும் நுவரெலிய, பதுளை, கண்டி இரத்தினபுரி போன்ற மலையக மாவட்டங்களில,; மலையக இந்த சந்தர்ப்பத்தில் எல்லை மீள் நிருணய நடவடிக்கைகளில், இம்மக்கள் மத்தியில், மிகப் பெரிய குறைப்பாடாக காணப்படும் உள்ளுராட்சி நிறுவனங்களின் பற்றாக்குறையை போக்குவதற்கு, உள்ளுராட்சி நிறுவனங்களை உருவாக்குவதற்கான எல்லை நிருணயத்திற்கு முன்னுரிமை கொடுத்து, அதன் பிறகே வட்டாரங்கள் ஒதுக்கப்பட்டிருக்கவேண்டும்.

அதற்கு மாறாக வெறுமனே வட்டாரங்கள் ஒதுக்கப்பட்டிருப்பது ஒரு மாபெரும் கண்துடைப்பாகும்.
மலையக மக்கள் மத்தியில் உள்ளுராட்சி நிறுவனங்களை உருவாக்குவதற்கு பொது நிருவாக உள்ளுராட்சி அமைச்சு முன்னுரிமை வழங்க வேண்டும். 2010ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட எல்லை மீள் நிருணய நடவடிக்கையை மீண்டும்சம்பந்தப்பட்ட அமைச்சு நடைமுறைப்படுத்த வேண்டும். இதில் மலையகளை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சி, சிவில் அமைப்புக்கள், மலையக தலைவர்கள் வாய்மூடி மௌனிகளாக இல்லாமல் சம்பந்தப்பட்ட அமைச்சரை, இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்த வேண்டும். ஒரே நாளில் நடைபெறவிருக்கும் உள்ளுராட்சி தேர்தலில், ஏற்கனவே ஒதுக்கொண்ட 12 பிரதேசசெயலகங்களை உருவாக்கி 12 பிரதேசசபைகளுக்கான உள்ளுராட்சி தேர்தலாக நுவரெலியா மாவட்டத்தில் இது நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். என ம.ம.மு செயலாளர் நாயகம் அ.லோறன்ஸ் மேலும் வலியுறுத்தியுள்ளார். இதே நடைமுறை மூலம் பதுளை கண்டி, இரத்தினபுரி போன்ற மலையக மக்கள் வாழும் மாவட்டங்களிலும் புதிய உள்ளுராட்சி நிறுவனங்கள் உருவாக்கப்பட வேண்டும்.

Exit mobile version