
சமச்சீர் கல்வி, புதிய சுகாதாரக்காப்பீடு, மதுக் கடைகளின் வேலை நேரத்தை அதிகா¢த்து இருப்பது ஆகியவற்றை எதிர்த்து இருக்கிறார்கள். இந்தஆய்வின் முடிவுகளில் தங்களுக்குச் சாதகமான அம்சங்ளை இரு கட்சிக் கூட்டணியினரும் பறை சாற்றிக்கொள்கிறார்கள்.
இந்த ஆய்வில் மேற்கொள்ளப்பட்ட இன்னொரு மிகமுக்கியமான அம்சத்தை யாரும் கண்டு கொண்டதாகவே தொ¢யவில்லை. அது தான் ஈழத் தமிழர்கள் பற்றிய தமிழகமக்களின் கருத்து. இந்த ஆய்வின் படி 64 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட மக்கள் தனித் தமிழ் ஈழம் ஒன்று தான்ஈழத் தமிழர்களுக்கான நிலையான தீர்வாக இருக்கமுடியும் என்று கருத்து தொ¢வித்து இருக்கிறார்கள்.
இது வலுவான ஊடகங்களின் கவனத்தைக் கவரவே இல்லை. சில ஊடகங்கள் மட்டுமே வேண்டா வெறுப்பாக ஏதோ ஒப்புக்குச் சப்பாணி போல வெளியிட்டுள்ளன.
இன்று நடைபெறும் அரசை மக்கள் அரசு என்றும் மக்களின்எண்ணங்களையும் விருப்பங்களையும் தான் அரசு செயல்படுத்துகிறது என்றும் கொஞ்சமும் கூச்சமில்லாமல் விளம்பரப்படுத்திக்கொள்கிறார்கள். அது உண்மையாக இருக்கும் பட்சத்தில் தனித் தமிழ் ஈழம் தான் நிலையான தீர்வாக இருக்கமுடியும் என்று 64 சதவிகிதத்திற்கும் அதிகமான மக்கள் கூறியுள்ள நிலையில் அதற்கான முயற்சியில் அல்லவா அரசுஈடுபட்டு இருக்க வேண்டும்? ஆனால் நம் அரசு அதற்கு நேர் எதி¡¢டையாக அல்லவா நடந்து கொள்கிறது?அப்படியானால் இந்த அரசு யாருக்காகச் செயல்படுகிறது? இவ்வரசை இயக்கும் விசைகள் யாவை?
முதலாளித்துவப் பொருளாதார உற்பத்தி முறை தான்இன்று உலக நாட்டு அரசுகளை இயக்கிக் கொண்டு இருக்கிறது. இந்தியாவும் அதற்கு விதி விலக்கல்ல.(இந்தியாவில் பார்ப்பன ஆதிக்கம் என்ற இன்னொரு கொடிய விசையும் இருப்பது விடுதலை உணர்வுக்கு எதிரானகூடுதலான சிக்கல்). மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதோ அவர்களுடைய நலன்கள் என்ன என்பதோ அரசின்முடிவெடுக்கும் காரணிகளாக இருப்பதே இல்லை. முதலாளிகள் தங்களிடம் உள்ள பணத்தை முதலீடு செய்து இலாபம்சம்பாதிக்கும் வழிகளைச் செப்பனிட்டுத் தருவதை மட்டுமே எல்லா நாட்டு அரசுகளும் தங்கள் கடமையாகக்கருதுகின்றன. அதற்கு இடையூறாக வரும் எதையும் கொடுமையாக அடக்குவதையும் தங்கள் கடமையாகவே கருதுகின்றன.
ஒரு வேளை மக்கள் சக்திஅரசின் வலிமையை விட அதிகமாகத் திரண்டு விடுமானால் கொஞ்சமும் கூச்சமின்றி மண்டியிட்டு, தற்காலிகமாகப்பின் வாங்குகின்றன. அரசு பணிந்து விட்டது என்று நினைத்து மக்கள் கலைந்த உடன் மீண்டும் உக்கிரமாக எழுந்துமுதலாளிகளின் சார்பாக மக்களின் மேல் அடக்கு முறையை ஏவி விட்டு வெற்றி கொள்கின்றன.
ஆகவே முதலாளித்துவ அரசுகள் இருக்கும் வரையில் மக்கள்தங்கள் எண்ணங்களையும் விருப்பங்களையும் வெளியிடுவதனாலேயே அவை நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்ப்பதுமலட்டுத்தனமான ஆசையே ஆகும். இது போலவே அமொ¢க்காவில் ரொனால்ட் ¡£கன் அதிபராக இருந்த பொழுது அணுவெடிப்புச் சோதனை செய்யலாமா கூடாதா என்று அமொ¢க்க மக்களிடையே ஒரு கருத்துக் கணிப்பு ஆய்வுமேற்கொள்ளப்பட்டது. 72 சதவிகிதத்திற்கும் அதிகமான மக்கள் அணு வெடிப்புச் சோதனை செய்யக் கூடாது என்றுகூறினர். ஆனால் அமரிக்க அரசு மக்களின் கருத்தைச் சிறிதும் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. ஏனெனில் அதுமுதலாளிகளின் நலன்களுக்கு உகந்ததாக இருக்கவில்லை. ஆகவே மக்களின் கருத்துக்கள் முதலாளிகளின் முரட்டுத்தனமானஅதிகாரங்களினால் ஒடுக்கப்பட்டன. அதாவது மக்களின் கருத்துக்கள் மலடாக்கப்பட்டன.
மக்கள் தங்களுடைய எண்ணங்களும் கருத்துக்களும் செயல்படவேண்டும் என நினைத்தால் சோஷலிச அரசை அமைப்பதன்றி வேறு வழியே இல்லை. சோஷலிச அமைப்பைப் பற்றிமுதலாளித்துவ அறிஞர்கள் எதிர்மறைப் பிரச்சாரம் செய்வதை விட (பார்ப்பனர்கள் சாதிப் பிரச்சினையைப்பற்றி மெளனம் சாதிப்பதைப் போல்) அதைப் பற்றி விவாதிக்காமல் பார்த்துக் கொள்வதே சிறந்த வழி என்றுகட்டுப்பாடாக மெளனம் சாதிக்கிறார்கள். பேசியே ஆக வேண்டும் என்ற கட்டாயம் ஏற்படும் பொழுது (பார்ப்பனர்கள்சாதியக் கொடுமைகளைப் பற்றிப் பேச நோ¢டும் கட்டாயம் ஏற்படும் பொழுது தங்களுடைய ஆதிக்கத்தைப் பற்றிப்பேசாமல் பிற்படுத்தப்பட்ட வகுப்புக்கும் தாழ்த்தப்பட்ட வகுப்பக்கும் இடையிலான முரண்பாட்டைக் கூர்மையாக்கி விடுவதுபோல) ஒரே கூச்சல் எழுப்பி எதிர்வாதம் கேட்க முடியாதபடி செய்கிறார்கள்.
மக்கள் தங்களுடைய நல்வாழ்விற்காகஇல்லாவிட்டாலும் தங்களுடைய குழந்தைகளின் நல்வாழ்வை மனதில் கொண்டாவது முதலாளித்துவ உற்பத்தி முறைக்குஎதிராக அணி திரள வேண்டும்.