Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மகிந்த – பன்கி மூன் கபட நாடகம்?

இலங்கையில் இடம் பெற்ற யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் இடம் பெற்ற சம்பவங்களைப் பற்றி, ஆராய்ந்து அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு, ஐ.நா. செயலாளர் நாயகம் பன்கி மூன் நியமித்த நிபுணர் குழுவின் அறிக்கை குறித்து வெளிநாடுகள் தொடர்பான பீதியை ஏற்படுத்தும் முயற்சியில் மகிந்த ராஜபக்ஷ அரசு ஈடுபட்டுள்ளது.

நிபுணர்; குழுவை, ஐ.நா. செயலாளர் நாயகம் எவ்வாறு நியமித்தார் என்பதை நாம் ஆராய வேண்டும்.

இலங்கையில் யுத்தம் முடிவுற்றதும் 2009 மே மாதத்தில் இலங்கைக்கு விஜயம் செய்த பன்கி மூன் ஜனாதிபதி ராஜபக்ஷவுடன் ஏற்படுத்திக்கொண்ட உடன்பாட்டிற்கமைய இந் நிபுணர் குழுவை ஐ.நா. செயலாளர் நாயகம் நியமித்தார். எனவே, இந்நிபுணர் குழு இலங்கை அரசின் உடன்பாட்டுடனேயே நியமிக்கப்பட்டது.

பின்னர் இந்நிபுணர் குழுவிடம் தனது சான்றாதாரங்களைத் தெரிவிக்க மறுத்த

இலங்கையரசு, மேற்படி நிபுணர் குழு இலங்கைக்கு விஜயம் செய்து நிலைமைகளை ஆராய்வதற்கும் அனுமதி வழங்காமல் இவ்வறிக்கையை ஒரு தரப்பு அறிக்கையாக வெளியிடவும் உதவியது.

ஐ.நா. செயலாளர் நாயகத்திற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டிய இவ்வறிக்கை எவ்வாறு பகிரங்கப்படுத்தப்பட்டது?

இத்தகைய ஓர் அறிக்கையை பகிரங்கப் படுத்துவது தொடர்பான அங்கீகரிக்கப்பட்ட சம்பிரதாயம் இல்லாது விட்டாலும், அது ஐ.நா. செயலாளரிடம் உத்தியோக பூர்வமாகக் கையளிப்பதற்கு முன்னர் அது பற்றிய கருத்துக்களை ஏற்புடைய அரசிடம் சமர்ப்பித்து அதன் அபிப்பிராயங்களைப் பெறுவது சம்பிரதாயமாகும் அதற்கமைய, இலங்கை அரசின் கருத்துக்களைப் பெறுவதற்கு 2011 ஏப்ரல் 12ம் திகதி இவ்வறிக்கை இலங்கை அரசிடம் கையளிக்கப்பட்டது. ஆனால் ஏப்ரல் 25ல் நிபுணர் குழு அறிக்கையை ஐ.நா. செயலாளர் நாயகம் பகிரங்கப்படுத்தும் வரை தனது எதிர்ப்பையோ அல்லது அபிப்பிராயத்தையோ ஐ.நா. செயலாளர் நாயகத்திற்கு உத்தியோகபூர்;வமாக இலங்கையரசு தெரிவிக்கவில்லை.

இதற்குப் பதிலாக தனக்குச் சாதகமான ஊடகங்கள் மூலம் அறிக்கையைப் பகிரங்கப்படுத்தி, ஜனாதிபதியை மின்சாரக் கதிரையில் அமர்த்துவதற்கான சர்வதேச சதித்திட்டம் நடைபெறுகிறது என ஒரு சர்ச்கையை இலங்கையரசு நாடு பூராவும் ஏற்படுத்த முயற்சித்துள்ளது.

இதுவரை இந்நாட்டின் உழைக்கும் மக்கள் சார்பில் அவர்;களின் சம்பளத்தை உயாத்துவதாகக் கூறிய உறுதிமொழியை மறந்துவிட்ட ராஜபக்ஷ அரசு இன்று பன்கீ மூனின் அறிக்கையை எதிர்ப்பதையே தனது மே தின அறை கூவலாகக் கொண்டுள்ளது.

இவ்வறிக்கையை அடிப்படையாகக் கொண்டு ஜனாதிபதி ராஜபக்ஷவை மின்சாரக் கதிரையில் அமர்த்த முடியுமா?

இலங்கை அரசின் உடன்பாட்டுடன் ஐ.நா. செயலாளர் நாயகம் நியமித்த நிபுணர் குழு அறிக்கை அத்தகையதொரு பரிந்துரையைச் செய்யவில்லை. அவ்வாறு செய்யும் சட்டபூர்வமான அதிகாரமும் அதற்குக் கிடையாது.

ஐ.நா. செயலாளர் நாயகம், நிபுணர் குழு அறிக்கை தொடர்பாக ஏதாவது நடவடிக்கை மேற்கொள்வதாயின் பின்வரும் விடயங்களில் ஒன்றையேனும் பூர்த்தி செய்தல் வேண்டும்:

• ஐ. நா. பாதுகாப்புச் சபையில் பிரேரணையொன்று நிறைவேற்றப்பட வேண்டும்.அல்லது

• ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழப் பேரவையில் பிரேரணையொன்றை நிறைவேற்ற வேண்டும் அல்லது

• ஐ.நா. பொதுச் சபையில் பிரேரணையொன்று நிறைவேற்றப்பட வேண்டும்.

ஐ.நா. பாதுகாப்புச் சபையின் வீட்டோ அதிகாரம் உடைய் சீனா, ரஷ;யா போன்ற நாடுகள் உட்பட இந்தியாவும் ஏற்கனவே இலங்கை அரசை ஆதரிப்பதால், மேற்கூறிய நடவடிக்கைகள் மூலம் செயலாற்ற. ஐ.நா. செயலாளர் நாயகம் அதிகாரத்தைப் பெறமாட்டார். எனவே, மகிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியை மின்சாரக் கதிரையில் அமர்த்துவதற்கான சாத்தியம் இல்லை. போர்க் குற்றங்கள் பற்றிய குற்றச்சாட்டை இலங்கையரசுக்கு எதிராக முன்வைக்க முடியுமா?

சர்வதேசக் குற்றங்கள் தொடர்பான நீதிமன்றம் முன்னே அத்தகைய குற்றங்களைச் சார்த்துவதாயின் மேற்படி உடன்படிக்கையில் கைச்hத்திட்ட நாடுகள் தொடர்பாக மாத்திரமே அவ்வாறான நடவடிக்கை எடுக்க முடியும். இலங்கை இவ்வுடன்படிக்கையில் கைச்சாத்திடாத காரணத்தினால் போர்க் குற்றங்களை முன்வைப்பதற்கான சாத்தியப்பாடு கிடையாது.

மேற்கூறிய காரணங்களால் ஐ.நா. பாதுகாப்புச் சபையில் பிரேரணையொன்றை அங்கீகரிப்பதற்கான சாத்தியமும் இல்லை.

உண்மை நிலை இவ்வாறு இருக்கையில் மகிந்தராஜபக்ஷ அரசு வெளிநாட்டுப் பீதியை ஏன் உருவாக்கியுள்ளது?

நாள்தோறும் வாழ்க்கைச் செலவு அதிகரித்த வண்ணமுள்ளது. நிவாரணங்கள் படிப்படியாக வெட்டப்படுகின்றன. மக்கள் மீது பல்வேறு அழுத்தங்கள் சுமத்தப்படுவதால் அவர்களின் கோபத்துக்கு ஆளாகாமல் கவனத்தைத் திசை திருப்பவே இக்கபட நாடகம். அரசு 68 வீதமான வரிச்சுமைகளை மக்கள் மீது சுமத்தியுள்ளது. இன்று நாம் ஒரு ரூபாயைச் செலவு செய்தால் 68 சதங்களை அரசு வரியாக அறவிட்டுக்கொள்கின்றது. உலக வங்கியின் ஆலோசனைகளுக்கமைய பல லட்சக்கணக்கான தனியார்; ஊழியர்;களின் சேமலாபநிதியைக் கொள்னையடித்து அரச வருமானத்தை அதிகரிக்க மேற்கொள்ளும் அநீதிகளுக்கெதிராக கொதித்தெழும் மக்களின்; கோபத்தைத் திசை திருப்ப இத்தகைய கபட நாடகங்கள் அரசுக்குத் தேவை.

உண்மையிலேயே இது தேசப்பற்றுன்ற அரசா?

இன்று இவ்வரசு விடுவித்ததாகப் பறை சாற்றும் நிலங்களை வெளிநாட்டுக் கம்பனிகளுக்குத் தாரைவார்த்துக் கொடுத்து வருகிறது. கொழும்பில் உள்ள இராணுவத் தலைமையகம் அமைந்த காணியை வெளிநாட்டுக் கம்பனியொன்றிற்கு ஏற்கனவே ஹோட்டல் ஒன்றை நிறுவ விற்கப்பட்டுள்ளது.

உண்மையான தேசப்பற்றாளர்களாயின் நாட்டின் வளங்களை அனைத்து மக்களின் நல்வாழ்விற்கும் பயன்படுத்தப்பட வேண்டும். ஜனநாயகத்தையும் சுதந்திரத்தையும் உறுதிப்படுத்தி மனித உரிமைகளைப் பேண வேண்டும்.

இவை இன்று இலங்கையில் இடம்பெறுகின்றனவா?

‘உரிமைகளுக்கான கலந்துரையாடல்’
(Rights-Dialogue)
1149,ராஜகிரிய வீதி,,ராஜகிரிய.
01.05.2011

Exit mobile version