நோவேயியபாரளுமன்றக்கட்டிடத்தில் முள்ளிவாய்கால் 3ம் ஆண்டு நினைவுக் கூட்டம்
முள்ளிவாய்காலின் 3ம் ஆண்டு துயரைப்பகிர்ந்து கொள்ளும் முகமாக நோர்வேயில் செவ்வாய்கிழமை 15.05.2012 அன்று பாராளுமன்றத்தின் தொழிற்கட்சியின் குழுமக்கூடத்தில் ஒன்று கூடல் ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. அன்றைய முக்கியஸ்தர்களாக சுரேஸ் பிரேமச்சந்திரனும் முன்னை நாள் சுற்றுச்சூழல் அபிவிருந்தி அமைச்சரும் இலங்கையின் சமாதானத்தூதருமான எரிக் சூல்கெய்மும் பிரசன்னமாகி இருந்தார்கள். சுரேஸ் பிரேமச்சந்திரனைத் தொடர்ந்து எரிக் பேசினார். முதலில் பலரின் வேண்டுகோளுக்கிணங்க இவருடைய கருத்துகள்களை பதிவு செய்தபின்னர் சுரேஸ் பிரேமச்சந்திரனின் கருத்து பதிவுசெய்யப்படுகிறது.
ஏகபோகங்கள் எவ்வாறு தமது நலன்களுக்காக சில கணங்களுக்கு உள்ளாகவே தமது கருத்துக்களை மாற்றிக் கொள்கின்றன என்பதற்கு எரிக் சூல்கெய்ம் ஒரு உதாரணம்.
சிறீலங்கா ஒரு விசித்திரமானநாடு. உள்நாட்டுப்பிரச்சனைகளைத் தீர்க்க வெளிநாட்டு உதவிகள் உள்ளே வரும்போது மற்றைய நாடுகள் அதைவரவேற்கும் ஆனால் இலங்கையில் அத்தனை நல்நோக்கங்களும் உதவிகளும் எதிர்க்கப்படும். நான் அடிக்கடி நியாயமற்றமுறையில் பலதடவைகள் சௌனிய சிங்கள ஊடகங்களால் வெள்ளைப்புலி என்று குற்றம் சாட்டப்பட்டேன். போரின் இறுகிக்காலகட்டங்களில் கில்லறி கிளின்டனும், டேவிட் மினபாங்கும், நானும் தலைமைப்பயங்கரவாதிகளாக பதாகைகளில் தூக்கப்பட்டோம். சிறீலங்காவை உலகநாடுகளில் இருந்து தனிமைப்படுத்த முன்நின்று உழைக்கும் பயங்கரவாதிகள் நாங்கள் என்றே சிங்களத்தீவிரவாதிகளால் வர்ணிக்கப்பட்டோம். இதில் தமிழ்நெட்டும் குறைந்து விடவில்லை இவர்களும் போரின் இறுதிக்கட்டப்பேரளிவுக்கும் பிரபாரனின் முடிவுக்கும் எனது மதிப்பீடே காரணம் என்று குற்றம் சாட்டி எழுதினார்கள்.
நான் அரசியல் இடைத்தரகராக இருந்தபோது ஐ.நா சபையில் இரண்டாவது ஸ்தானத்தில் இருக்கக்கூடியவரும், பாங் கி மூனின் சகோரதராகக் கருதப்படுபவருமான ஜெனரல் நம்பியாரிடம் உயர்பாதுகாப்பு வலையத்தை எப்படி உருவாக்குவது, கையாளுவது என்று அறிவுரை செய்வதற்காக இலங்கையரசால் அழைக்கப்பட்டார். அவர் உருவாக்கிய பதிவுக்கோர்வை உடனடியாகவே இலங்கை அரசாலேயே நிராகரிக்கப்பட்டது. புலிகள் அதை நேரடியாக மறுதலிக்கவில்லை. இதன்பின்னர் நம்பியாரிடம் இருந்து எதையும் கேட்க முடியவில்லை. இப்படியான நடைமுறைகளே உலகநாடுகளின் நம்பிக்கையையும் தலையிடுகளையும் தடுத்தன. இதன்விளைவே இறுதிக்கட்டப்போரில் தமிழர்களின் பேரவலமாகப் பரிணாமம் பெற்றது.
அன்றைய இந்தியப்பிரதமரான இராஜீவ்காந்தியைக் கொன்றமை, இலக்ஸ்மன் கதிர்காமரை கொன்றமை, இலங்கை சர்வதேசவிமானநிலையமான கட்டுநாயக்கா விமானநிலையத்தாக்குதல் போன்றன புலிகள் சர்வதேசத்தின் நன்மதிப்பை இழப்பதற்குக் காரணமாக இருந்தது. அயல்நாடான இந்தியாவின் அனுசரணை என்பது இலங்கைக்கு அவசியமானது. இராஜீவ்;காந்தியைக் கொன்றுவிட்டு இந்தியகாங்கிரசில் செல்வாக்குக் கொண்ட அவரின் மனைவியிடம் இருந்து எப்படி நல்ல அனுரசணைகளை எதிர்பார்க்க முடியும். அமெரிக்க ஜனாதிபதியைக் கொன்றுவிட்டு அமெரிக்கா நோக்கி எப்படி உதவிக்கரம் நீட்டமுடியும்?
இப்படியான நடவடிக்கைகள் சர்வதேசத்தின் நன்முயற்சிகளுக்குத் தடையாகவே அமைகின்றன. உண்மையின்படி தமிழர்களும் அரசும் உலகநாடுகளின் உதவியை மனதார வரவேற்பதே விருப்புக்குரியது.
பிரபாகரன் பலஆண்டுகளாகவே அதிகாரம் கொண்டவராக தனிமைப்படுத்தப்பட்டே இருந்தார். நான் நினைக்கிறேன் முதன்முதலில் சந்தித்த வெள்ளையன் நானாகத்தான் இருக்க முடியும். அரசியல், உலகஜதார்த்தங்களை சொல்லவோ, அறிவுரைவளங்கவோ யாரும் இருக்கவில்லை. அன்ரன் பாலசிங்கத்துக்கு அதற்கான உரிமை இருந்தது. அவர் இறந்ததும் அந்தச்சந்தர்பமும் இழக்கப்பட்டது. இந்த செயல்திட்டத்தை சர்வதேசங்கள் செய்திருக்கலாம். பிரபாகரனை அணுகி அலசி ஆராய்ந்து ஒரு சுமூகமான முடிவை எட்ட முயற்சித்திருக்காலாம், பேசியிருக்கலாம்.
புலிகள் யாழ்பாணத்தை விட்டு துரத்தப்பட்ட பின்னர் அமைதிக்காக அரசியல்தீர்வு நடவடிக்கைகளில் இறங்கியிருக்க வேண்டும். அதைச்செய்யவில்லை
2002ல் புரிந்துணர்வு ஒப்பந்தகாலத்தில் சர்வதேச அழுத்தங்களின் பின்னர் நிறைவேற்று அதிகாரங்கள் கொண்ட மாநிலசுயாட்சி ஒன்று வடகிழக்குக்காக முன்மொழியப்பட்டு அனைவராலும் ஆதரிக்கப்பட்டு இறுதியில் பிரபாகரனிடம் கொடுக்கப்பட்டபோது அதை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை.
இராணுவவெற்றிகளால் ஒவ்வொரு இடத்தையும் புலிகள் இழந்து தோல்வியைச் சந்தித்தபோதுகூட புலிகள் திடமான அரசியல்முடிவை எட்டமுயற்சிக்கவில்லை. அதுமட்டுமல்ல பல்லாயிரம் தமிழர்கள் கொன்றுகுவிக்கப்பட்டு இராணுவம் முன்னேறும் போது கூட புலிகளுக்குத் தெரிந்திருக்க வேண்டும் தோல்வி என்பது உறுதி அரசியல் தீர்வுதான் ஒரேவழி என்பதை உணர்ந்திருக்க வேண்டும்.
இன்நிலையில் மற்றவர்களைக் குற்றம் சாட்டுவதனூடாக இலக்குகளை அடையமுடியாது. இது இன்னமும் சிக்கல்களையே ஏற்படுத்தும். இன்றுள்ள நிலைப்படி தமிழர்கள் சுயமாக அரசியலைவரையறுத்து சரியான இலக்குகளை தெரிவுசெய்து ஐக்கிய இலங்கை என்னும் வரம்புக்குள் செயற்படுவது அசியமானது. இன்று இலங்கைக்குள் இருக்கும் சர்வதேச அழுத்தங்கள் இதற்கு உதவியாக இருக்கும். சர்வதேசமும் இதற்கே உதவிசெய்யவும் விரும்பும்.
இந்தத்தமிழர்களின் பிரச்சனையானது உள்நாட்டு அரசியல்தீர்மானங்களால் நிறைவேற்றப்படவேண்டியது அப்படி இல்லாவிடில் சர்வதேசங்களின் அனுசரணையுடன் எட்டப்படவேண்டியது. அதற்கான சந்தர்ப்பம் உள்ளது என்பதை ஐ.நா மனிதவுருமை மன்றின் தீர்மானம் சுட்டுடிக்காட்டியுள்ளது. நானறிந்தவரை முதல்தடவையாக இப்படியான ஒன்றுக்கு இந்தியா வாக்களித்திருப்பது ஒருமுக்கியமான மைல்கல் என்பதை மறந்துவிடலாகாது. இந்தப்பேரவலம் நடந்து முடிந்து 3ஆண்டுகள் கடந்தும் தமிழர்களின் அடிப்படைப்பிரச்சனை தீர்க்கப்படாமல் இருக்கிறது. வடக்குக்கிழக்கின் சுயாட்சியோ, சிங்கள,தமிழ், இஸ்லாமியரின் சமவுரிமைகளுக்கான ஆரம்பமோ இன்னும் காணப்படவில்லை. இதை நடைமுறைப்படுத்தவேண்டியது இன்று அதிகாரத்தில் இருக்கும் மகிந்தராஜபக்சவின் அரசே.
தொடர்ந்து சூல்கெய் பேசுகையில் இன்று இலங்கையின் பெருமொழிகளாக சிங்களம் தமிழ் இரண்டுமே உள்ளன. இதன் அடிப்படையில் எடுக்கப்படும் தீர்மானங்கள் நல்ல முடிவுகளைக் கொடுப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. மேலும் கூறுகையில் சர்வதேசத்தின் கருத்துக்கள் என்ன என்பதை அறிந்து செய்யப்படுவது அவசியமானது. அவையாவன ‘சர்வதேசமானது இலங்கையில் எந்தவடிவமான பலாற்காரத்தையோ ஆயுதப்போராட்டத்தையோ ஆதரிக்காது’ ‘ நாட்டைக் கூறுபோடுவதை அனுமதிக்காது’ பல்லினம், பல்லின்காலாச்சாரம், பல்மதக்கோட்பாடுகள் கொண்ட சமஉரிமையுள்ள, சமபெறுமதியுள்ள ஒரு ஐக்கிய இலங்கையையே சர்வதேசம் ஆதரிக்கும்’ ‘ அதாவது ஐக்கிய இலங்கைக்குள் வலுவான நிறைவேற்று அதிகாரம் கொண்ட சுயாட்சியையோ, அதற்குக் குறைவான மாநிலசுயாட்சியையோ, அதாவது பெடரல், கொன்-வெடரல், அதிகாரநிறைவேற்று வடிவங்கொண்ட எதாவது ஒன்றையோதான் வடகிழக்கிற்கு கிடைப்பதையே உலகநாடுகள் எதிர்பார்க்கின்றன: இதைத்தெரிந்து கொள்ள ஐரோப்பா போன்ற நாடுகளுக்கு வந்துபடிக்க வேண்டிய அவசியம் கிடையாது. அயல்நாடான இந்தியாவிலேயே இதைக் காணலாம்.
இந்தியா பல்லினக் கலை, கலாச்சார, மத, இனங்களைக் கொண்ட நாடு. இவர்கள் சமஉரிமையுடனேயே வாழ்கிறார்கள். வித்தியாசமான மாநிலங்களைக் கொண்ட இந்தியாவில் வித்தியாசம் வித்தியாசமான வலுவான சட்டங்கள் உருவாக்கப்பட்டு ஒற்றுமையுடனான ஒரு மாநிலசுயாட்சி நடைபெறுகிறது.
இவர்தன்பேச்சின் இறுதியில் தமிழர்கள்தான் தமது அரசில்குறிகளையும் தேவைகளையும் தாங்களாகவே ஐக்கிய இலங்கைக்குள் தீர்மானிக்க வேண்டும் என்பதையே உலகநாடுகள் விரும்புகின்றன. இலங்கையரசால் ஏற்றுக்கொள்ளப்படா நியாயமான கோரிக்கைகள் உலகநாடுகளின் அழுத்தத்தின் கீழ் நிறைவேற்றுவதற்குக் சாத்தியங்கள் உண்டு. தமிழர்களின் பலமான முயற்சிகள் உலகநாடுகள் தமதுபிரச்சனைக்காகக் கைகொடுக்க வேண்டும் என்பதே. இதற்காக சர்வதேசங்களுடன் பேசவேண்டிய அவசியம் இவர்களுக்கு உண்டு.
பலர் நம்புகிறார்கள் இலங்கைப்பிரச்சனைதான் சர்வதேசங்களின் நிகழ்ச்சி நிரலில் முதலிடத்தில் இருப்பதாக. ஆனால் நாம் யதார்த்தத்தை உணர்தல் அவசியமானது. ஏதோ ஒருசிலதடவைகள் மட்டும் பராக்உபாமா இலங்கைப்பிரச்சனை பற்றிக் கதைத்துக் கலந்துரையாடியுள்ளார். இன்றைய முக்கியபிரச்சனையாக வோசிங்டனில் இருப்பது உலகத்தை உலுப்பும் பொருளாதாரப்பிரச்சனையே. அடுத்து இருப்பது அமெரிக்காவுக்கு வெளியில் உள்ள ஆப்கானிஸ்தான், ஈராக், சோமாலியா, ஈரான், எகிப்த், லிபியாவினுடைய வௌ;வேறு பிரச்சனைகளே. எதுவானாலும் சிறீலங்காவின் பிரச்சனை முதலிடத்தைப் பெறவில்லை. ஒருவருடத்துக்கு முன்னர் மியன்மாரின் பிரச்சனை முக்கிய இடத்தைப்பெற்றாலும் அது நிகழ்ச்சி நிரலின் முதல் 10க்குள்ளேயே வரவில்லை. பின்னர் மீண்டும் உலகநாடுகளின் ஆர்வம் இலங்கைநோக்கித் திரும்பியது. சமாதானத்தை தனித்து நின்று ஏற்படுத்த முடியாது. இலங்கையின் பங்களிப்பும் தேவை. த.தே.கூ தேர்தலில் வெற்றியடைந்தது மிக முக்கியமான நேர்வினையாக(நேர்குறியாக)வும் அமைகிறது. உங்களில் பலர் என்னைவிட மேற்படிப்புகளைக் கொண்டவர்களாக உள்ளீர்கள். அதனால் செயற்திட்டங்களை சிறந்தமுறையில் திட்டமிட்டு அமைக்கும் வலுக்கொண்டுள்ளீர்கள். இருப்பினும் இலங்கையின் தலைமைகளில் இருந்தே முடிவுகள் எட்டப்படவோ வெளிக்கொண்டு வரப்படவோ வேண்டும். சகலசிங்களவர்களும் தமிழர்களின் பிரச்னைதீர்ப்பதில் உடன்பாடுள்ளவர்களாக இல்லை. முஸ்லீம்களின் பிரச்சனையும் முன்னராகவே வெளியில் கொண்டுவந்து நீட்டப்பட்டுள்ளது. இதனால் இலங்கை அரசாங்கம் சகலவினங்களுக்குமான சமஉரிமை, சமபெறுமதியுள்ள அரசியலையே முன்மொழிகிறது. கரங்களை உலகநாடுகள் நோக்கி நீட்டுவதனூடாகவே முடிவுகள் இலகுவாக எட்டப்படலாம்.