மார்ச் 25 பின் மதியம் மூன்று மணியளவில் போல் நியுமனை ஸ்காபரோவில் சந்தித்தோம். என்னுடன் சேனா, பா.அ.ஜயகரன் ஆகியோரும் உடனிருந்தனர் பேட்டிக்கு செல்ல முன்னர் போல் நியுமன் பற்றிய ஒரு சுருக்கமிது. இவர் பெங்க@ரில் பிறந்து வளர்ந்த தமிழர். இவர் தற்சமயம் பெங்க@ரில் உள்ள சென். ஜோசப் கல்லூரியில் அரசியல் பேராசிரியராக கடமையாற்றுகின்றார். இலங்கைக்கு பல தடவைகள் சென்று வந்துள்ளார். “இலங்கைத் தமிழர் பிரச்சினை”யை ஆய்வு கருத்தாக கொண்டு பெங்க@ர் பல்கலைக் கழகத்தில் கலாநிதிப் பட்டப்படிப்பை முடித்துள்ளார். கடந்த பல வருடங்களாக தமிழர் பிரச்சினையை உலகளவில் வெளிக்கொணர்வதில் மும்முரமாக இயங்குகின்றார். ஜெனிவாவிற்கு சென்று விட்டு இந்தியா திரும்பும் வழியில் ரொரண்ரோ வந்திருந்தார்.
அமெரிக்கா ஏன் இந்த கோரிக்கையை முன் வைத்தது? அதன் பிண்ணனி என்ன?
போல்: மே 18 போருக்கு பின்னால் அப்போதைய அமெரிக்க அதிபர் Bush இருந்தார். அதன் பின்னர் அமெரிக்க அரசில் மாற்றம். டெமோகிரட்டிக் ஒபமா ஆட்சிக்கு வந்தார். இலங்கை அரசியல்ரீதியாக எந்த மாற்றமும் கொண்டுவரவில்லை. இரண்டாவது காரணம் இந்து சமுத்திரத்தை சீனா தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விடும் என்ற அச்சம். இலங்கை ஒரு கேந்திர முக்கியமான இடத்தில் உள்ளது. தெற்காசியாவில் சீனாவின் அதிகாரத்தை அமெரிக்கா விரும்பவில்லை. மூன்றாவது காரணம் மகிந்த இராஜபக்ச தனது உறவுகளாக லிபியா கடாபி, சீனா, வடகொரியா, ஈரான், புட்டின் என சர்வாதிகாரிகளை கொண்டிருந்தார். நேட்டோ லிபியாவிற்குள் சென்றதை மகிந்தவும் எதிர்த்திருந்தார். சரத் பெர்ணான்டோவின் விடுதலையை அமெரிக்கா வலியுறுத்திய போதும், இலங்கை அதனை செய்யவில்லை. நான்காவதாக. அமெரிக்கா ஓர் Big Bully. பல நாடுகளில் சண்டித்தனம் செய்துள்ளது. அமெரிக்காவின் செல்வாக்கு வீழ்ந்து கொண்டிருக்கின்றது. இந் நிலையில் இவ்வாறான செயல்பாடுகள் மூலம் சரியும் செல்வாக்கை மீளப் பெறுவதற்கான ஓர் சிறிய முயற்சி இது.
(ஏப்ரல் 12 ரொரண்ரோவில் நடைபெற்ற கூட்டமொன்றில் பேசிய கலாநிதி ஜீட் லால் பெர்ணான்டோ “அமெரிக்க கோரிக்கையானது தமிழ் மக்களையே பயமுறுத்துகின்றது. LLRC ஐ ஏற்றுக் கொள்ளும்படி வற்புறுத்தப்படலாம்” எனத் தெரிவித்தார்)
சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் இலங்கையின் போர்க்குற்றங்களை சீரிய பார்வையுடன் கவனிக்காத ஐ.நா மனித உரிமைகள் குழு எவ்வாறு இப்பொழுது அதாவது 19வது கூட்டத் தொடரில் ஏற்றுக் கொண்டது.?
போல்: பயங்கரவாதத்தை அழித்தமைக்காக இலங்கையை பாராட்டிய நாடுகளே இன்று இலங்கைக்கு எதிராக வாக்களித்துள்ளனர். அன்று இலங்கைக்கு ஆதரவாக லத்தீன் அமெரிக்க நாடுகள் இருந்தன. உண்மையை வெளிப்படுத்த Latin American Friendship Association in Tamil Nadu உருவாக்கப்பட்டது. பிரபல லத்தீன் அமெரிக்க எழுத்தாளர் Ron Ridenour உடன் தொடர்புகள் உருவாக்கப்பட்டு இலங்கையில் நடைபெற்ற அட்டூழியங்கள் வெளிப்படுத்தப்பட்டன. சனல் நான்கின் கில்லிங் பீள்ட்ஸ் ஆவணப்படங்கள் திரையிடப்பட்டன. இலங்கையின் காட்டுமிராண்டித்தனத்துக்கு எதிராக பல சாட்சியங்கள் வெளிவந்தன. ஹெட்லைன்ஸ் ருடே, MDTV போன்ற தொலைக் காட்சி நிறுவனங்களும் இலங்கையின் காட்டுமிராண்டித்தனத்தை வெளிப்படுத்தின. இக் காலகட்டத்தில் பல ஆய்வறிக்கைகளும் வெளிவந்தன. இவற்றில் இலங்கை அரசால் வெளியிடப்பட்ட அறிக்கையைத் தவிர மற்றனைத்தும் இலங்கை அரசின் குற்றச் செயல்களை உறுதி செய்தன. உதாரணத்துக்கு ஒரு விடயத்தை இந்த நான்கு அறிக்கைகளும் எவ்வாறு வெளிப்ப:டுத்தியுள்ளன. (அறிக்கையை சுட்டிக் காட்டுகின்றார்) அவர் குறிப்பிட்ட அறிக்கை இது
| UN Panel of Exports Report | Channel 4 Killing Fields | People’s Tribunal of Sri Lanka (Dublin July 2009) | US Department of State Report to Congress (2009) | Lessons Learnt and Reconciliation Commission (LLRC) |
| இராணுவம் அதிகளவு செல்லடித்;தமையினால் பல்லாயிரம் மக்கள் இறந்துள்ளனர். | மக்கள் கொல்லப்பட்டமைக்கான விடியோ சாட்சியங்கள் உள்ளன. | மக்கள் கொல்லப்;பட்டமை சாட்சியங்கள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. | இராணுவம் அதிகளவு செல்லடித்;தமையினால் பல்லாயிரம் மக்கள் இறந்துள்ளனர் அல்லது படுகாயமடைந்துள்ளனா; | பாதுகாப்பு படைகள் மக்களை அதிகளவு பாதுகாப்புடன் பாதுகாத‘தனா; |
இவற்றைத் தவிர சிங்கள பத்திரிகையாளர்கள் பலர் இலங்கை அரசின் அட்டூழியங்களை வெளிக்கொணர்ந்துள்ளனர். இறுதிப் போரில் பங்கு பற்றிய இராணுவத்தினர் மனநோயாளிகள். அவர்கள் கொலைகளையும், பாலியல் வன்முறைகளையும் செல் போனிலும், விடியோவிலும் பதிவு செய்து மீண்டும், மீண்டும் போட்டுப் பார்த்து இரசிக்கின்றனர். அந்த மனநோயளிகளின் பதிவுகளும் சாட்சியங்களாக மாறியுள்ளன.
ஆரம்பத்தில் இலங்கை இந்தப் போரை சாட்சி இல்லாத போராவே மாற்ற முயற்சித்தது. உலகில் முதன் முறையாக போர்க் களத்திலிருந்து ICRC ஐ வெளியேற்றியது. இந்தியா சார்பாக இப் போரை நடாத்தியவர் சதீ நம்பியார். இவரது சகோதரர் விஜய் நம்பியார். இவர் ஐ.நா வின் விசேட அதிகாரி. ஆரம்பத்தில் இலங்கைக்கு சாதகமாக இருந்த பல விடயங்கள் இருந்துள்ளன.
இந்திய நிலைப்பாட்டில் ஏற்பட்ட மாற்றத்திற்கு காரணங்கள் என்ன?
போல்: பல காரணங்கள். அண்மைய தேர்தல் தோல்வி. வெளிநாட்டு அமைச்சரின் இலங்கை விஜயத்தின் போது உறுதியளித்த விடயங்கள் மறு நாளே காற்றில் பறக்க விடப்பட்டன. 50,000 வீடுகள் கட்ட உறுதியளித்து விட்டு வெறும் 8000 வீடுகளே கட்டப்பட்டன. மீனவர் மீதான தாக்குதல்கள் இருக்காது எனக் கூறிவிட்டு மறு நாளே 200 மீனவர்கள் கல்லால் அடித்துக் கொல்லப்பட்டனர். 13வது திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என உறுதியளித்துவிட்டு மறு நாள் அதனையும் மறுத்தார். கடந்த தமிழ்நாட்டுத் தேர்தலில் கௌhங்கிரசுக்கு தமிழ் நாட்டில் பயங்கரத் தோல்வி. ஒரு ஒட்டு மொத்தக் கலவையே இம் மாற்றத்துக்கு காரணம்.
அமெரிக்க முன்வைத்த அறிக்கையில் இந்தியா முன்வைத்த மாற்றங்கள் மாற்றப்பட்ட பின்னரே இந்தியா ஆதரவளித்தது என்பது உண்மையா?
போல்: ஆம். அது உண்மை. இறுதிச் சரத்தில் ஒரு சிறு மாற்றத்தின் பின்னரே இந்தியா ஏற்றுக் கொண்டது. அமெரிக்கா சமர்ப்பித்த அறிக்கை உறுதியானாதல்ல. ஆனாலும் இலங்கை பதிலளிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
இறுதிப் போரின் போது 4இலட்சத்து 28 ஆயிரம் பேர் அங்கிருந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறைந்தது 40 ஆயிரம் பேர் இறந்திருக்கலாம். போரின் பின்னர் 2இலட்சத்து 82 ஆயிரம் பேர் அகதி முகாம்களில் இருந்துள்ளனர். அப்படியாயின் மிகுதி ஒரு இலட்சத்து ஆறாயிரம் பேருக்கு என்ன நடந்தது.?
அடுத்து என்ன?
போல் : தொடர்ச்சியாக ஐ.நா மற்றும் உலக அமைப்புக்களிடம் அதிகளவு சாட்சியங்களை கொண்டு செல்ல வேண்டும். தொடர்ந்து இலங்கை மீதான சர்வதேச அழுத்தத்தை அதிகரிக்க வேண்டும். இதற்கான பிரச்சாரங்களில் ஈடுபடவேண்டும்.