Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பொஸ்னியாவிலிருந்து ஐரோப்பிய அதிகார மையங்களை நோக்கி வீசப்பட்ட அணுகுண்டு

bosnia
பொஸ்னியாவின் பெரும்பாலான பகுதிகள் அரசபடைகள் கட்டுப்பாட்டை இழந்தன

யூகோஸ்லாவியாவில் தலையிடுவதற்காக பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகள் அமெரிக்கா தலைமையிலான நேட்டோவுடன் இணைந்து திட்டமிட்டன. யூகோஸ்லாவியாவில் அமைதியுடனும் சமாதானத்துடனும் வாழ்ந்த தேசிய இனங்களான பொஸ்னியர்கள், குருவேசியர்கள், சேர்பியர்களிடையே திட்டமிட்டு முரண்பாடுகளைத் தோற்றுவித்தன. ஏகாதிபத்திய சார்பு முகவர்களூடாக இந்த முரண்பாடு இத் தேசிய இனங்களிடையே தேசிய வெறியாக மாற்றப்பட்டது.

தாம் உருவாக்கிய மோதலைப் பயன்படுத்தி யூகோஸ்லாவியாவில் தலையிட்ட நேட்டோ நாட்டுப் படைகள், டேடொன் என்ற ஒப்பந்ததை ஏற்படுத்தின. அந்த ஒப்பந்த அடிப்படையில், பொஸ்னியா இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது.Federation of Bosnia and Herzegovina, republika srpska என்ற இரு பகுதிகளும் பொதுவான ஒரு பிரதேசத்தையும் கொண்டிருந்தது.

தனது அடிமைகள் ஆட்சியில் அமர்ந்துகொள்ளுமாறு பொறிமுறை ஒன்றை ஏற்படுத்திய ஏகாதிபத்திய நாடுகள் நாட்டைச் சுரண்ட ஆரம்பித்தன. உலக வங்கியும், உலக நாணய நிதியமும் (IMF) வாரி வாரி கடன் வழங்கியது. பல்தேசியப் பெரு நிறுவனனங்கள் முதலீடு என்ற போர்வையில் நாட்டைச் சுரண்டின. பொதுத் துறைகள் தனியார் மயமாக்கப்பட்டு பல்தேசிய நிறுவனங்கள் கைகளில் வழங்க்கப்பட்டன. வங்கிகள், கல்வி, மருத்துவம் ஆகிய துறைகள் தனியார் மயமாகின. இவர்களின் பணத்தில் உருவான கிரிமினல்கள் நாட்டை ஆள ஆரம்பித்தனர். ஜனநாயகம் என்று மக்கள் எண்ணிய அரச அமைப்பு சர்வாதிகாரமாக மாறியது. அதனோடு கூடவே ஏழைகள் உருவாகினர்.

பல்தேசிய வியாபாரிகள் கொள்ளையிட அரசு முழுமையாக அனுமதிக்கிறதா என்பதைக் கண்காணிக்க, ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்மட்டக் குழு, கண்காணிப்புக் குழு என்ற பெயரில் உருவாக்கப்பட்டு இன்றுவரை நிலைகொண்டுள்ளது.

கடந்த 19 வருடங்களாக பொஸ்னியா ஐரோப்பிய ஒன்றியத்தின் காலனி நாட்டை போன்றே செயற்பட்டு வந்தது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் கண்காணிப்பின் கீழ் பெரும்ப்பாலான அரச நிறுவனங்கள் தனியார் மயப்படுத்தப்பட்டன. நூறுவீதம் அரசால் கட்டுப்படுத்தப்பட்ட வங்கிப் பொருளாதாரம் கடந்த 19 ஆண்டுகளில் 85 வீதம் ஆஸ்திரிய வங்கிகளின் கைகளுக்கு மாறியது. ஐ.எம்.எப் பணத்திலேயே நாடு தன்னை ஓட்டிக்கொண்டிருக்கிறது. 44 வீதமானவர்கள் வேலையற்றவர்கள்.

பொஸ்னியாவின் தொழில் மையம் துல்சா என்ற நகரம். அங்கு அரசால் இலாபத்தில் நடத்தப்பட்ட நிறுவனங்களான Dita, Polichem, Poliolchem, Gumara and Konjuh என்பவை தனியார் மயப்படுத்தப்பட்டு பல்தேசிய வியாபார நிறுவனங்களுக்கு வழங்க்கப்பட்டன. வழமையாகவே பல்தேசிய நிறுவனங்கள் நடந்துகொள்வதைப் போன்றே வளங்களை ஒட்டச் சுரண்டிவிட்டு நிறுவனங்களை மூடிவிட ஆரம்பித்தன. பெப்ருவரி மாதம் 4ம் திகதி இந்த நிறுவனனங்களில் வேலைசெய்த 600 வரையான தொழிலாளர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்த ஆரம்பித்தனர். அரசாங்கத்தைப் பதவி விலகக் கோரியும், தமது ஊதிய நிலுவையை, சுகாதார சேவை, ஓய்வுதியம் ஆகியவற்றை வழங்கக் கோரியும் போராட்டம் நடத்தினர்.

மறு நாளே ஆறாயிரம் பேர் அரச அலுவலகத்தின் முன்னால் கூடினர். ஆர்பாட்டம் ஏனைய இடங்களுக்கும் பரவியது. தேசிய வெறிக்குப் பேர்போன நகரமான சராஜேவு இல் பெருந்திரளானவர்கள் தெருவிற்கு வந்து போராடினர். துல்சா நகரைல் அரசாங்கக் கட்டடம் ஆர்ப்பாட்டம் நடத்திய தொழிலாலர்களால் கையகப்படுத்தப்பட்டது. கட்டடம், அங்கிருந்த தளபாடங்கள் கைப்பற்றப்படு அதன் ஒரு பகுதி தீமூட்டப்பட்டது. ஐரோப்பிய ஒன்றியம் தொழிலாளர்களைக் கட்டுப்படுத்துமாறு அரசாங்கத்திற்கு முதலில் எச்சfரிக்கை செய்தது. பிறகு ஐரோப்பிய இராணுவத்தைக் கொண்டுவருவோம் என அதன் பிரதிநிதிகள் எச்சரித்தனர்.

போராடும் தொழிலாளர்கள் அதற்கு அஞ்சவில்லை. பொஸ்னியாவில் குரூரமாக மோதிக்கொண்டிருந்த தேசிய இனங்களின் தொழிலாளர்கள் தமது வேறுபாடுகளை மறந்து ஒன்றிணைந்தனர்.

‘சர்வதேச சமூகம்’ என்று தம்மை அழைத்துக்கொள்ளும் உலக நாடுகளின் அதிகாரவர்க்கங்களின் தலையீடு தீர்விற்குப் பதிலாக அழிவையே ஏற்படுத்தியது என்று ஆர்ப்பாட்டத்தை ஒழுங்குபடுத்தியவர்கள் கூறினர். 1992 இற்கும் 1995 ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட மூன்று ஆண்டுகால யுத்தம் தேசிய வெறியுடன் நடத்தப்பட்டதன் பின்னணியில் இந்த சர்வதேச நாடுகளே இருந்தன என்பதை நீண்டகாலம் நம்பமறுத்த மக்கள் இன்று இவ்வாறு கூறுகின்றனர்.

அரச அதிகாரிகளைப் பதவிநீக்கம் செய்து ஆட்சியைக் கையகப்படுத்தத் தயாராகும் தொழிலாளர்கள்

பெரும்பாலும் ஏகாதிபத்தியங்களுக்குச் சார்பான செய்திகளை மட்டுமே வெளியிடும் ரொய்ட்டர் நிறுவனம் இவ்வாறு கூறுகிறது.: ‘ 1995வ் இல் நடைபெற்ற அமெரிக்கா தலைமையிலான நேட்டோ நாடுகளின் ஆக்கிரமிப்பு கொலைகளுடன் நிறைவு பெற்றது, ஆனால் தேசியவாதக் கட்சிகளான முஸ்லீம்கள், சேர்பியர்கள், குருவேசியர்கள் ஆகியோர் அரச தொழிற்சாலைகளைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர். அரச உத்தியோகங்கள், இலாபகரமான ஒப்பந்தங்கள் ஆகியவற்றைப் பெற்றுக்கொண்டனர்.’

ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிநாட்டு அலுவல்களுக்கான கொள்கைவகுப்பாளர் குழுவின் தலைவரான கத்ரீன் ஆஷ்ரொன் பொஸ்னியாவிற்கு வந்து சிக்கல்களை கையாள்வதாகப் போராடும் தொழிலாலர்களை வருந்திக் கேட்டார். மிரட்டல்களுக்கும் கெஞ்சல்களுக்கும் அடிபணியாத தொழிலாளர்கள் உள் நாட்டு அரசைக் கைப்பற்றினர்.

துல்சா பகுதி உள்ளூர் அரசாங்கம் முழுமையாகத் தொழிலாளர்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்ததது. அவர்கள் அங்கே ஆட்சியைக் கைப்பற்றிக்கொண்டனர். அவர்கள் உள்நாட்டு அரசின் பிளீனம் ஒன்றை உருவாக்கி ஒவ்வொரு துறையையும் பொறுப்பிலெடுத்துள்ளனர்.

இது ஐரோப்பியத் தொழிலாளர்களுக்கு தெளிவான உதாரணத்தைக் கொடுத்துள்ளது. இதுவரை தமது வாழ்வைச் சுரண்டிவந்த முதலாளித்துவப் பொருளாதர ஆட்சியை தூக்கியெறிந்து தமது நேரடிக் கட்டுப்பாட்டுகுள் உள்ள புதிய அமைப்பு ஒன்றை நிறுவியுள்ளனர். இன்று பல்தேசிய வியாபாரக் கும்பலால் அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் உலகத்தில் இது மிக முக்கியமான ஒரு நிகழ்வு.

தேசிய வாதமும், தேசிய இன முரண்பாடுகளும் நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர் இயக்கத்தை அழிப்பதற்காக தன்னார்வ நிறுவனங்களும், திரிபுவாத அழிவு சக்திகளும் களத்தில் இறக்கப்பட்டுள்ளனர். துலஸ் நகரத்தின் சமூக ஜனநாயகக் கட்சியம் பொஸ்னிய தொழிலாளர் கம்யூனிஸ்ட் கட்சியும் போராட்டத்தை ஆதரிக்கின்றன. தத்துவார்த்தரீதியான தலைமை வழங்கப்பட்டால் முஸ்லிம்கள், சேர்பியர்கள், குருவேசியர்கள் ஆகியோரைக் கொண்ட பொஸ்னியாவின் 3.8 மில்லியன் மக்கள் புதிய வரலாற்றைப் படைப்பார்கள்.

Exit mobile version