Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பொங்கல் பரிசு … விவசாயிகளின் கழுத்தில் தூக்குக் கயிறு – டி.அருள் எழிலன்.

புத்தாண்டு, பொங்கல், சென்னை சங்கமம் என தமிழர்களுக்கு இது பண்டிகைக்காலம். ஆமால் மத்திய தர, மேல் மத்தியதர தமிழர்கர்கள் மட்டுமே கொண்டாடும் பண்டிகைக் காலமாக உருவாகியிருக்கிறது. ஆனால் மத்திய மாநில அரசுகளோ மக்கள் சுபிட்சமான வாழ்வொன்றை வாழ்வதாக தொடர்ந்து பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார்கள். கசக்கிற கரும்பு விலையைப் பார்த்து முழுக் கரும்பு வாங்காமல் கத்தரிக்காயை வாங்கி குழம்பு வைத்து பத்து ரூபாய்க்கு கவரிங் நகை வாங்கி பிள்ளைகளுக்கு அணிந்து, சுடு சோறு சாப்பிடுவதற்காக அரிசி கடன் வாங்கிக் கழிகிறது ஏழைகளின் பொங்கல் ஆனால் ஏழைகளில் காய்கரியாக இருக்கும் கத்தரிக்கும் இன்னும் சில மாதங்களில் ஆப்பு வைக்கிறது மத்திய மாநில அரசுகள்.

மரபணு மாற்றக் கத்தரிக்காயை சந்தைக்குக் கொண்டு வருவதற்கான வேலைகளை முடுக்கி விட்டுள்ள மத்திய அரசு இன்னொரு பக்கம் மக்கள் கருத்தறியும் கூட்டம் என்ற பெயரில் நாடகம் ஒன்றையும் அரங்கேற்றி வருகிறது. 28 மாநிலங்களைக் கொண்ட இந்தியாவில் நான்கே நான்கு இடங்களில் மட்டும் மக்கள் கருத்தறியும் கூட்டங்களை நடத்தப் போகிறது மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகம். அமெரிக்க மாண்டாண்டோவின் அடியாட்களாக மாறிப் போன மத்திய காங்கிரஸ் அரசோ பாரம்பரீய இந்திய விவாசாயத்தையும், ஏழை, எளிய மக்களையும் அச்சுறுத்தி மரபணு மாற்றப் பயிர்களை சந்தைக்குக் கொண்டு வந்து அமெரிக்காவிற்கு சேவை செய்யக் காத்திருக்கிறது.
கொல்கத்தாவில் நடந்த மக்கள் கருத்தறியும் கூட்டத்தில் விஞ்ஞானிகளும், விவாசியிகளும், பொது மக்களும் தங்களின் எதிர்ப்பைத் தெரிவித்து கூட்டத்தை விட்டு வெளியேற அதை கண்டு கொள்ளாத மத்திய அரசோ வருகிற பிப்ரவரி மாதமே கத்தரியை சந்தைக்குக் கொண்டு வரும் முஸ்தீபுகளில் இருக்கிறது.

ஏற்கனவே இயர்க்கை வேளாண்மைக்கு எதிராக மரபணு மாற்றப் பயிர்களை அனுமதிக்காதே என்ற கோரிக்கையோடு நாடு முழுக்க விவசாய சங்கங்கள் போர்க் கொடி தூக்க, மரபணு மாற்றப் பயிர்களுக்கு அங்கீகாரம் வழங்கலாமா? கூடாதா? என்று ஆராய குழு ஒன்றை அமைத்தது மத்திய அரசு. மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகத்தின் கீழ் உள்ள மரபணு மாற்ற தொழில் நுட்ப அங்கீகாரக் குழு
(Genetic Engineering Approval Committee) கடந்த அக்டோபர் மாதத்தில் தனது அறிக்கையை மத்திய அரசுக்கு அளித்துள்ளது. அதில், ‘‘மரபணு மாற்று கத்தரிக்காய் நுகர்வோருக்கு மிகவும் பாதுகாப்பானது ’’ என்று மரபணு மாற்றக் கத்தரிக்காய்க்கு நற்சான்றிதழ் வழங்கியுள்ளது. கோவை வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் முருகேசபூபதியோ, ‘‘மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்தரிக்காய்களை சாப்பிடுவதால் புற்றுநோய், பக்கவாதம், ஏற்படுவதாக எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்தரிக்காய்களால் எவ்வித பாதிப்புகளும் ஏற்படாது. இந்தியாவில் கடந்த ஆண்டு 7.6 மில்லியன் ஹெக்டேர் பரப்பளவில் 82 சதவீத மரபணு மாற்றம் செய்யப்பட்ட பி.டி.ரக பருத்தி சாகுபடி செய்யப்பட்டது.

இச்சாகுப்படியின் பரப்பளவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. விவசாயிகள் பி.டி.ரக தொழில் நுட்பத்தையே விரும்புகிறார்கள். இவ்வகை மரபணுப் பயிர்களால் மனிதர்களுக்கோ ஏனைய உயிரினங்களுக்கோ எவ்வித பாதிப்புகளும் இல்லை’’ என்று சொல்லியிருக்கிறார் முருகேச பூபதி. பூபதியின் இதே குரலைத்தான் கருணாநிதி தலைமையிலான மாநில அரசும் கொண்டிருக்கிறது. மாநில அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகமும் இதே விதமான கருத்தைத்தான் தொடர்ந்து தெரிவித்து வருகிறார்.

சரி அது என்ன பி.டி.ரக தொழில் நுட்பம்.

‘‘ஒரு உயிர் தனது தன்மையை அடுத்த சந்ததிக்கு மாற்ற உதவும் அணுவை மரபணு என்கிறோம். இந்த மரபணுக்கள் மனிதர்களுக்கு மட்டுமின்றி விலங்குகளுக்கும் உள்ளது. இந்த மரபணுக்கள் குறித்த முழுமையான உண்மைகளை மனித இனமோ, மருத்துவ ஆய்வுகளோ இன்னும் முழுமையாக கண்டடைய வில்லை. ஆனால் மரபணுக்கள் குறித்த இந்த ஆய்வுகளின் ஒரு பகுதியாக மரபணுவை மாற்றி அமைக்கும் ஆய்வுகளும் தொடர்ந்து வருகின்றன. நல்ல விளைச்சல் தரக்குடிய ஒரு தாவரத்தை அதே இனத்தைச் சார்ந்த இன்னொரு வகையோடு இணைத்து புதிய ரக தாவரம் ஒன்ரை உருவாக்கும் வித்தையை நமது விவசாயிகளே காலம் காலமாக செய்து வந்திருக்கிறார்கள். ஒரு தாவரத்தை இன்னொரு தாவரத்தோடு இணைக்கும் ஒட்டு மூலமாக ஏராளமான ரக வகைகளை உருவாக்கியும் இருக்கிறார்கள்.

இது இயர்க்கையானது. ஆனால் உலகெங்கிலும் மனிதர்கள் உண்ணும் அத்தனை உணவுப் பொருட்களிலுமே மரபணு மாற்றம் செய்யப்பட்ட உணவுப் பொருட்களை உற்பத்தி செயவதற்கான ஆய்வுகள் உலகெங்கிலும் நடந்து வருகின்றன. மேற்குலகின் பெரும்பாலான நாடுகள் இந்த மரபணு மாற்றப் பயிர்களை தடை செய்திருக்கிறது. அல்லது சந்தைக்கு வருகிற மரபணு மாற்றப் உற்பத்திப் பண்டங்களில் ‘‘இது மரபணு மாற்றத் தொழில் நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டது’’ என்ற முத்திரையோடு வருகிறது. நுகர்வோர் விருப்பம் என்றால் வாங்கிக் கொள்ளலாம். ஆனால் இந்தியாவில் இப்படியான லேபிள்கள் எதுவும் இல்லாமலேயே சந்தைக்கு வர இருக்கிறது பி.டி.கத்தரிக்காய்.மரபணு மாற்றம் செய்யப்பட்ட உருளைக்கிழங்கைத் தடை செய்திருக்கிறது.

தென் ஆப்ரிக்க அரசு 13&ற்கும் மேற்பட்ட நாடுகள் மரபணு மாற்ற பயிர்களை சந்தைப்படுத்துவதில் இருந்து பின் வாங்கியிருக்கிறது. சில நாடுகள் இறக்குமதி செய்ய மட்டுமே அனுமதி அளித்திருக்கிறது. மேற்குலக நாடுகள் எல்லாம் நிதானமாக யோசித்து செயல்படும் இந்த மரபணு மாற்ற விவாகரத்தில் இந்திய அரசு அவசரகதியில் பி.டி. கத்தரியை சந்தைப்படுத்துவதில் குறியாக இருக்கிறது. மரபணு மாற்றம் செய்யப்பட்டு சந்தைக்கு வரும் கத்தரிக்காய் விளைநிலத்தில் விளைந்ததா? அல்லது சோதனைக் கூடத்தில் உருவானதா? என்பது கூட நுகர்வோருக்குத் தெரியாது. இதனால் ஏற்படும் பின் விளைவுகளுக்கு யார் பொறுப்பேற்கப் போகிறார்கள்? என்று கேள்விகளுக்கு ஆள்வோர்களிடம் எவ்வித பதில்களும் இல்லை.

கத்தரிக்காய் என்பது உணவுப் பொருள் மட்டுமல்ல அது ஒரு மூலிகை உணவு. பி.டி.ரக கத்தரிக்காயை உருவாக்கி அதை சந்தைக்கு கொண்டு வருவது நேரடியாக உணவுப் பாதிப்பை ஏற்படுத்தும் எனபதோடு நமது பாரம்பரிய மருத்துவ முறைகளில் மிக மோசமான பின் விளைவுகளை ஏற்படுத்தும். தவிறவும் பி.டி.ரக பயிர்களை ஆதரிப்பவர்கள் அதை ஒரு உற்பத்திப் பொருளாகவும், வணிக நோக்கோடும் மட்டுமே பார்க்கிறார்கள். அதனால் இந்த மரபணு மாற்றப் பயிர்கள் உடலில் ஏற்படுத்தும் பின் விளைவுகள் குறித்து அக்கறையற்றவர்களாகப் பேசுகிறார்கள். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி என்பது தேவைப்படும் போது செயல்பட வேண்டும். அதாவது மல்லிகைப் பூவை நாம் முகர்ந்தால் யாருக்கும் தும்மல் வராது வரக்கூடாது. ஆனால் அலர்ஜியை உருவாக்கும் ஹெமிக்கல் ஒன்றை நுகரும் போது ஒருவருக்கு தும்மல் வருவது இயல்பு. ஆனால் பூவை நுகரும் போது தும்மல் வருகிறது என்றால் அவரது உடலில் நோய் எதிர்ப்பு அணுக்கள் எந்த நேரத்தில் வேலை செய்ய வேண்டுமோ அந்த நேரத்தில் வேலை செய்யவில்லை என்று பொருள். மரபணு மாற்றப் பயிர்கள் நமது உடலில் உள்ள நோய் எதிர்ப்பு கிருமிகளின் இயல்பான செயல்பாட்டை குலைத்து விடும் ஆபத்து உள்ளது.

தவிறவும் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஷெரலி என்ற பேராசிரியர் இந்த மரபணு மாற்றப் பயிர்களின் ஆபத்துகளை எடுத்துச் சொல்லி இதை தடை செய்ய வேண்டும் என்றார். இந்திய அரசுக்கும் அவர் இது குறித்து எழுதியிருந்தார். ஆனால் அவரது கோரிக்கை ஐய்ரோப்பாவில் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. இந்திய அரசு அதைக் கண்டு கொள்ளவில்லை.

இந்த மரபணுக் கத்திரிக்காய்கள் நமது நிலங்களில் பயிரிடப்படும் என்றால் இயர்க்கையாக விளையும் கத்தரிக்காய் கூட வளராமல் போகும் அல்லது மரபணுப் பயிர்களாக மாற்றம் பெறும் வாய்ப்பு உள்ளது. உலகில் இது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. அயல்மகரந்தச் சேர்க்கை மூலம் காற்றில் பரவியே இது ஏனைய பயிர்களை நாசம் செய்து விடும். என்றெல்லாம் உலகெங்கிலும் பாதிக்கப்பட்டவர்கள் அச்சம் தெரிவிக்கிறார்கள். கடைசியாக ஒன்றை மட்டும் கேள்வியாக கேட்க விரும்புகிறேன். பாரம்பரீயமாக பல ரகங்களில் நமது விவசாயிகள் இயர்க்கையாக உற்பத்தி செய்து தடையில்லாமல் கிடைக்கும் உணவுப் பொருட்களை புழு தாக்குகிறது என்கிற காரணத்தைச் சொல்லி செயர்க்கைக் கருவூட்டல் மூலம் எதற்காக இந்த பி.டி.கத்தரிக்காயைக் கொண்டு வர வேண்டும். இதனால் லாபம் அடையப் போகிறவர்கள்.

இந்திய விவசாயிகளா? அல்லது பன்னாட்டு நிறுவனங்களா? இந்திய விவசாயிகளின் ரத்தத்தை எடுத்து ஏகாதியபத்தியங்களின் பசியாறக் கொடுப்பதுதான் கொள்கை என்றால் அதை நாம் எவ்வழியிலேனும் எதிர்க்க வேண்டாமா?

Bacillus thuringiensis என்ற பாக்டீரியாவை கத்தரிக்காயின் மரபணுவில் புகுத்தி அதில் பூச்சிக் கொல்லி சக்தியை அதிகரித்து அதன் வீரியத்தை அதிகப்படுத்த நமது மரபான பயிர்களின் அணுக்களை மாற்றி உற்பத்தி செய்வதுதான் மரபணு மாற்றம் என்பது. கத்தரிக்காயில் Bacillus thuringiensis என்ற பாக்டீரியாவின் உதவியோடு தயாரிக்கப்படுவதால் அந்த பாக்டீரியாவின் முதல் எழுத்தை இனிஷியலாக போட்டு B.t கத்தரிக்காய் என்று அழைக்கிறார்கள். மரபணு மாற்றுத்தொழில் நுட்பம் இயற்கையாக நடந்தவரை அறிவியலாக மட்டுமே இருந்தது. ஆனால் இந்த அறிவியல் என்பது பன்னாட்டு நிறுவனங்களின் கையில் சிக்கியபோது அறிவியலில் அரசியல் கலந்தது. இதனால் விவாசாயிகளுக்கு பேரிழப்புகள் காத்திருக்கின்றன. உணவு நஞ்சாவதோடு, விதைகள் மீது விவசாயிகள் கொண்டுள்ள பாரம்பரிய உரிமைகள் பன்னாட்டு நிறுவனங்களிடம் களவுபோகும். பன்னாட்டு நிறுவனங்களுக்கு கப்பம் செலுத்தாத விவசாயிகள் விதைத்திருடர்களாக சித்தரிக்கப்பட்டு தண்டனை விதிக்கப்படுவார்கள். இந்தியர்கள் எதைச் சாப்பிடுவது என்பதை பன்னாட்டு நிறுவனங்களே தீர்மானிக்கும்.

அதை சாப்பிட்டு நோய்வந்தால் அதற்கான மருந்துகளையும், அதே பன்னாட்டு நிறுவனங்கள் விற்பனை செய்வதாகக்கூறி இந்தியர்களின் ரத்தத்தை உறிஞ்சும்.

தொண்ணூறுகளின் முற்பகுதியில் உலகமயமாக்கள் கொள்கை இந்தியாவுக்கு அறிமுகமானபோது தனியார் வந்தால்தான் இவர்கள் எல்லாம் திருந்துவார்கள் என்று பொதுப் புத்தியில் கட்டமைக்கப்பட்டது. இந்த இருபது ஆண்டுகளில் எங்கும் தனியார் மயம், ரியல் எஸ்டேட், வங்கி, குளிர்பானங்கள் என எதையும் பன்னாட்டு நிறுவனங்கள் விட்டு வைக்கவில்லை. பூர்வகுடிகள் அவர்களின் மண்ணிலிருந்து வேரோடு பிடுங்கி எறியப்படுகிறார்கள். சொந்த வீடு பற்றிய கனவுகளில் இருந்த கீழ் மத்திய தர வர்க்கமோ அந்த ஆசைகளை மூட்டை கட்டி வைத்து விட்டு குறைந்த வாடகையில் நல்ல வீடு ஒன்று கிடைக்குமா? என்று ஏங்கி நிற்கிறது. மன்மோகனோ, கருணாநிதியோ, ஜெயலலிதாவோ இவர்கள் எப்போது மக்களைப் பற்றி கவலைப்பட்டார்கள். இந்திய விவசாயத்தை நாசமாக்கி ஏழை விவசாயிகளை தூக்குக் கயிற்றின் கீழ் நிறுத்தி வைத்த பசுமைப் புரட்சியின் அடுத்த பரிணாமாக வருகிறது. பி.டி. கத்தரி கண்ணெதிரில் காலியாகும் நமது மரபார்ந்த விவசாயத்தை காப்பாற்ற நாம் என்ன செய்யப் போகிறோம்.

Exit mobile version