40 வருடங்களில் ஒன்று மட்டும் நிகழ்ந்திருக்கிறது! உலகத்தின் ஒரு பகுதியாவது ஈழத் தமிழர்கள் உரிமை மறுக்கப்படுகிறது என்பதை ஒப்புக்கொள்கிறார்கள். ஆனால் ராஜபக்ச அரசும் அதன் அடிவருகளும் இலங்கைத் தீவில் இனப்பிரச்சனை என்பது இல்லை என்று பிரச்சாரங்களை முடுக்கிவிட்டுள்ளது. தவிர, புலம் பெயர் நாட்டில் புலிகளும் தமிழ் நாட்டில் அதன் ஆதரவாளர்களும் தான் தேசிய இனப்பிரச்சனை உருவாக்குகிறார்கள் என்று தொடர்ச்சியான அப்பட்டமான பொய்ப் பிரசாரங்களை மேற்கொண்டு வருகிறது.
பௌத்த சிங்களப் பேரினவாத அரசு மேற்கொண்டு வரும் இந்தப் பிரசாரங்களை முறியடிக்க எமக்கு முன்னால் இருக்கும் தடைகளில் பிரதானமானது புலம் பெயர் புலிகளின் அடிப்படைவாத விசுவாசிகள். அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் மக்களின் உயிர்களையும், அவர்களின் தன்னுரிமையையும் விட புலிகள் என்ற அடையாளமே அவர்களுக்கு முதன்மையானதாக உருத் தெரிகிறது. ஒரு தந்திரோபாயத்திற்காகவேனும் புலி அடையாளத்தைக் கைவிடத் துணியாத இவர்களில் இருவகையினர் காணப்படலாம்.
1. அரசின் நோக்கத்தை வலுப்படுத்த முனையும் அரச உளவாளிகள் மற்றும் வியாபாரிகள்
2. அப்பாவித்தனமாகப் புலி அடையாளத்தைப் பற்றிக் கொள்கிறவர்கள்.
இந்த இரண்டு பகுதியினருமே இலங்கை அரசிற்கும் அரசியல் வியாபாரிகளுக்கும் மறைமுகமாவோ நேரடியாகவோ துணை போகின்றனர்.
இங்கு முதலாவது பகுதியினர் எதிர்கொள்ளப்பட இரண்டாவது பகுதியினர் வென்றெடுக்கப்பட வேண்டும்.
அவர்களை வென்றெடுப்பதற்கான அரசியல் வேலைத் திட்டம் ஒன்று முன்வைக்கப்பட வேண்டும்.
1. தேசிய ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தை முற்போக்கு ஜனநாயக சக்திகள் முன்னெடுக்க வேண்டும்.
2. மக்கள் போராட்டங்களை முன்னெடுப்பதற்கான ஜனநாயக சூழலை ஏற்படுத்துவதற்கு அரசிற்கு எதிரான அழுதங்கள் வழங்க வேண்டும்.
3. உலகில் ஜனநாயகப் போராட்டங்களை முன்னெடுக்கும் முற்போக்கு சக்திகளோடு இணைந்து கொள்ள வேண்டும்.
மக்கள் மீது பற்றுக்கொண்ட ஒவ்வொருவரும் இந்த அடிப்படை வேலைத் திட்டங்களில் இணைந்து கொள்வார்கள் என்ற நம்பிக்கை நம் அனைவர் மத்தியிலும் உள்ளது.
இது வரைக்கும் இந்த வழிகளை நிராகரித்திருக்கிறோம்.
1. தேசியப் போராட்டத்தை முன்னெடுப்பதில் முற்போக்கு ஜனநாய சக்திகள் இணைக்கப்படவில்லை.
2. மக்கள் போராட்டங்கள் நிராகரிக்கப்பட்டே வந்துள்ளன.
3. சந்தர்ப்பவாத அரசியல் வாதிகளோடும் அதிகாரப் பற்றுக்கொண்டோரும் தான் எமது நம்பிக்கைக்குரியவர்களாக இருந்தார்கள்.
இது வரைக்கும் இந்த வழிகளை நிராகரித்திருக்கிறோம்.
1. தேசியப் போராட்டத்தை முன்னெடுப்பதில் முற்போக்கு ஜனநாய சக்திகள் இணைக்கப்படவில்லை.
2. மக்கள் போராட்டங்கள் நிராகரிக்கப்பட்டே வந்துள்ளன.
3. சந்தர்ப்பவாத அரசியல் வாதிகளோடும் அதிகாரப் பற்றுக்கொண்டோரும் தான் எமது நம்பிக்கைக்குரியவர்களாக இருந்தார்கள்.
இவை முழுமையான அரசியல் வேலைத் திட்டமல்ல ஆனால் அழிவிலிருந்து ஆரம்பிப்பதற்கான முதலாவது ஆரம்பமாக அமையலாம்.
ஆனால் நமது போராட்டமோ புலிகொடிக்குள்ளும், தேசியத் தலைவருக்குள்ளும் இன்னமும் முடங்கிப் போயிருக்கின்றது என்பது துர்பாக்கியமானதே.