சோகம் படர்ந்த இந்தியத் நிலப்பரப்பின் தென் மூலையின் கண்ணீர்த் துளிபோல அமைந்திருக்கும் இலங்கைத் தீவினை மையப் புள்ளியாய் முன்வைத்து இத்தனை அரசியல் நகர்வுகள்! இலங்கை என்றால் தேயிலையைப் பற்றியும் தேனீர் பற்றியும் பேசிக்கொள்ளும் காலம் கடந்து இத் தீவினைச் சுற்றி இத்தனை இரஜதந்திரிகளும் அரசியலும்!!
கேட்பாரற்றுக்கிடந்த குட்டித் தீவினைச் சுற்றி நிகழும் அரசியல் சதுரங்கம், நிச்சயமற்ற தன்மை எல்லாம் புதிய உலக மாற்றத்தின், புதிய உலக ஒழுங்கு
இவை அனைதிற்கும் மத்தியில் கொலைகளின் கோரத்தில் துயர்கொண்ட புதிதாய் எழும் கட்சிகளும் இயக்கங்களும் மாற்றங்கள் குறித்து எந்த அக்கறையுமின்றி, தோற்றுப் போன கடந்த காலம் குறித்த எந்த ஆய்வுமின்றி, தமது உணர்ச்சிகளின் வடிகால்களாய் தம்மைத் தகவமைத்துக்கொள்ள முற்படுகின்றன.
இலங்கை அரசின் சதி வலைக்குள், அதன் நிகழ்ச்சி நிரலிற்கு இசைவாக, சுய இலாப நோக்கில் வெறும் தன்னார்வ நிறுவனங்களாக மாறிப்போனவர்களும், அரச முகவர்களாக இயங்குகின்ற மூன்றாம் தர வியாபாரிகளுக்கும் மத்தியில் புதிய அரசியல் இயக்கங்களை உருவாக்கிக் கொள்ள முனைகின்றவர்களின் சமூகப்பற்று மதிப்பிற்குரியதே.புலிகளின் தோற்றுப்போன சிந்தனைத் தொடர்ச்சியை ஒரு ஈகோவாக
பிரச்சனை அதுவல்ல. இது வெறுமனே ஒப்பீடுகளுக்கான காலகட்டமும் அல்ல. இன்றைய தேவை குறித்த கரிசனை எங்கிருந்து உருவாகிறது என்பதே முதன்மையான கேள்வி. தமிழ்ப் புலம் பெயரிகளின் புதிய கட்சிகள் பொதுவாக 3 அரசியல் தன்மைகளை முன்வைக்கின்றன.
1. நிர்வாக அமைப்புக்களை சீர் செய்யப்பட்ட உட்கட்சி ஜனநாயகம் கொண்ட, மறு சீரமைக்கப்பட்ட புலிகள்.
2. 80 களின் ஆரம்பத்தில் இடது சாரி தேசிய வாதிகளால் முன்வைக்கப்பட்ட கருத்துக்களின் பிரதிகளான அமைப்புக்கள்.
3. புலிகளின் மாற்றங்களற்ற தொடர்ச்சி.
இவை அனைத்துமே தூய தமிழ்த் தேசியம் என்ற ஒருங்கு புள்ளியில் இணைகின்றன. தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டம் தோற்றுப் போனமைக்கான காரணமும், புலிகள் கோலோச்சிய 30 வருடங்கள் குறித்த மீள்பார்வையும் இவர்களைப் பொறுத்தவரை ஒரு சிறு குறி வட்டமாகவே காட்சிதருகிறது.
1. புலிகளின் தோல்விக்கு வெறும் ஆயுதங்கள் மீது அவர்கள் கொண்டிருந்த அதீத நம்பிக்கையே காரணம்.
2. புலிகள் பாசிசக் கருத்துக்களைக் கொண்டிருந்தமையே அடிப்படையான தோல்வி.
என்ற அடிப்படையான கருத்துக்களை முன்வைக்கும் முதல் இரு பிரிவினரும் இவற்றைச் சீர் செய்யும் அமைப்பு முறையானது புதிய போராட்ட இயக்கத்திற்கான முன்நிபந்தனையாகக் கருதுகின்றனர். இதன் ஒரு முன் நோக்கிய பார்வையாக இரண்டாம் வகையினர் தம்மை அறிவித்துக்கொண்டு 80 களில் முன்வைக்கப்பட்ட இடதுசாரிக் கருத்துகளை மறுபடி அரங்கிற்குக் கொண்டுவருகின்றனர்.
மார்க்சியக் கருத்துக்களை ஏற்றுக்கொள்வதாகக் கூறும் இடதுசாரிகள் புதிய அரசியல் சூழல் குறித்த குறைந்த பட்ச மீளாய்விற்கும், மதிப்பீடுகளுக்கும் அது தொடர்பான உரையாடல்களுக்கும் கூட முன்வர மறுக்கின்றனர். குறித்த சமூகச் சூழல் பற்றிய பொருள்முதல் வாத ஆய்வையே முதலில் மார்க்சியம் கோருகிறது. இது சமூகம் குறித்த அறிதலுக்கான ஆய்வு முறையாகும் என்கிறது. ஆனால் இடது சாரிகள் என்போர்
80 களில் இடது சாரி தேசிய வாத இயக்கங்கள் முன்வைத்த கருத்துக்கள்:
1. தேசம் தேசியம் சுயநிர்ணய உரிமை தொடர்பானவை.*
2. சமூக கட்டமைப்புக் குறித்த மாவோயிசத்திலிருந்து பிரதியாக்கப்பட்ட கருத்துக்கள்.**
3. கட்சி அமைப்புத் தொடர்பான கருத்துக்கள்.
4. ஐக்கிய முன்னணி குறித்த கருத்துக்கள்.
5. ஒடுக்கப்பட்ட மக்களின் தலைமை குறித்த கருத்துக்கள்.
6. அன்றைய உலக ஒழுங்கு குறித்த பார்வையும் அதன் இயக்கம் பற்றிய அறிதலும். **
இவை அனைத்திலும் உள்ளீடாக அமைந்திருந்த தவறுகள் தான் தமிழ் பேசும் மக்களின் ஒடுக்கு முறைக்கெதிரான போராட்டங்களின் 80 களில் இருந்து ஏற்பட்ட தோல்விக்குக் காரணங்களாக அமைந்திருந்தனவே தவிர தமிழ்ப் பேசும் மக்கள் மீதான சாத்தானின் சாபங்களல்ல.
இவை அனைத்துமே ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்த ஒன்றிலிருந்து மற்றதைப் பிரித்து நோக்க முடியாத கருத்தியல்களாகும்,
80 களின் ஆரம்பத்தில் அனைத்து இயக்கங்களுமே இந்திய
புலம் பெயர் தமிழர்கள் உருவாக்க எத்தனிக்கும் கட்சிகள் பல இத்தத்துவார்த்த அடிப்படைகள் குறித்து மறுவிசாரணைக்கே மறுப்புத் தெரிவிக்கின்றன. புலிகள் ஏற்படுத்திய வெற்றிடத்தைப் பிரதியீடு செய்யும் வகையில் மற்றொரு அமைப்புத் தேவையென வாதாடுகின்றனர். அவைதான் இலங்கையில் புதிய போராட்ட சக்திகளிற்கு உந்து விசையாக அமையும் என்கின்றனர். 80 களில் முன்வைக்கப்பட்ட அதே வகையான வாதம் தான் மறுபடி முன்வைக்கப்படுகிறது.
ஸ்டாலின் தேசிய இனங்கள் குறித்து முன்வைத்த தர்க்கவியல் ஆய்வு முறையூடாகவே இன்று வட கிழக்குத் தமிழர்கள் தேசிய இனமாக வளரும் நிலையிலுள்ள இனக்குழுக்களாக மட்டுமே வரைமுறை செய்யப்படலாம். இன்றைய இலங்கைச் சமூகத்தில் ஆதிக்கம் செலுத்தும் சக்திகளான தரகு முதலாளித்துவத்தின் தற்காலிக உள்முரண்பாடாகவே தேசிய விடுதலைப் போராட்டம் அமையும் என தத்துவார்த்த விளக்கங்கள் முன்வைக்கப்படுகின்றன. இதுவே தேசிய விடுதலைப் போராட்டத்தின் பாரம்பரிய அடிப்படையைச் சாத்தியமற்றதாக்குகிறது என்ற வாதம் குறித்து உரையாடலை ஏற்படுத்த யாரும் தயாரய் இல்லை.
இது ஒன்றல்ல. இடதுசாரி கருத்தியலோடான தேசிய விடுதலை இயக்கங்கள் புலிகளிடமும் இந்திய மேலாதிக்கத்திடமும் தோற்றுப் போனதென்பதும், புலிகளும் மக்களும் சாட்சியின்றி
இந்திய சமூகத்தை அரை நிலப்பிரபுத்துவச் சமூகம் என்று மாவோ வரையறுத்தவாறே பொருத்திக் கொண்டார்கள் இந்திய மாவோயிஸ்டுக்கள். உலக மயம் பெரு நிலப்பிரபுக்களை வியாபர மையங்களை நோக்கி நகர்த்தி இல்லாதொழித்த போது, ஆந்திராவில் தமது நிலைகளை இழந்து பழங்குடி மக்களை ஆதரவுத் தளமாகக் கொள்ளவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். உலக மயம் , நவ-தாராளவாதம், அவை ஏற்படுத்துகின்ற புதிய உலக ஒழுங்கு விதிகள், சிந்தனை முறை, சமூக மாற்றம் குறித்த குறைந்த பட்சப் புரிதலும் இன்றி பழங்குடி மக்களின் இயக்கமாக மாறிப்போன மாவோயிஸ்டுக்களின் தோல்வியிலிருந்தும் கற்றுக்கொள்ள நிறையவே விட்டு வைக்கப்பட்டிருக்கின்றன.
உலகம் முழுவதும் கடந்த நூறாண்டுகளில் அதிகாரத்திற்கு எதிரான எதிர்ப்பியக்கங்கள் அனைத்துமே தோல்வியைத் தழுவிக்கொண்ட துயர படர்ந்த வரலாற்றையே பார்த்திருக்கிறோம். இந்தத் தோல்விகளின் பின்புலம் குறுகிய குழுநிலை போக்கினைக் கடந்து மீள் மதிப்பீடு செய்யப்பட வேண்டும். தோற்றுப்போன அரசியல் எல்லாம் தனிநபர் தவறுகள் அல்லது தந்திரோபாயத் தவறுகள் என்ற குறுகிய எல்லைகளைக் கடந்து தர்க்கீக அடிப்படையிலான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். சமூகத்தின் சமகாலப் புறச் சூழல், மக்கள் திரள அமைப்புக்கள், கட்சி, புதிய உலக ஒழுங்குவிதி என்ற அனைத்துமே மறு பரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
நவ தாராளவாதம் உருவாக்கிக் கொண்டிருக்கும் சமூகம்
80 களின் ஆரம்பங்களில் சில துப்பாக்கிகளும் துண்டுப்பிரசுரம் வெளியிடும் வசதியும் இருந்தால் ஒரு கட்சியை ஆரம்பித்து விடலாம் என்ற நிலை இருந்ததை ஈழப் போராட்டத்தில் ஈடுபட்ட யாரும் மறந்திருக்க மாட்டார்கள். 25 நீண்ட வருடங்களின் பின்னால் அதே மாதிரியை முன்வத்தா கட்சியை அமைத்துக்கொள்வது தொடர்பாகச் சிந்திக்க வேண்டும்.
எதிர்ப்பியக்கங்களின் தேவை அவசரமாக உணரப்படுகின்ற இலங்கைக்கோ இந்தியாவிற்கோ வெளியிலிருக்கின்ற அனைவருக்கும் ஒரு கடமை உண்டு. அது முன்னைப் போல் கவர்ச்சியான தலையங்களையும், பெயர்களையும் வைத்துக்கொண்டு கட்சியைக் கட்டமைப்பதாக நான் கருதவில்லை. ஒரு தேசத்தின் உற்பத்தியோடும், உணர்வுகளோடும் முற்றாகத் தொடர்பறுந்து போயிருக்கும் இன்றைய சூழலில் இரண்டு பிரதான விடயங்களை சமூக உணர்வோடும் நாம் முன்னெடுத்துச் செல்லலாம். முதலாவதாக இலங்கை அரசிற்கு எதிராகவும், அதிகார மையங்களுக்கு எதிராகவும், அவற்றின் உப அமைப்புகளுக்கு எதிராகவும் எமது எல்லைக்குள் அழுத்தங்களை வழங்க முடியும்; இரண்டாவதாக பிரதான தத்துவார்த்தக் கூறுகளை மீள் மதிப்பீடு செய்ய எம்மாலான அனைத்துப் பங்களிப்பையும் வழங்க முடியும்.இவை இரண்டுமே சமாந்தரமாக முன்னெடுக்கப்பட வேண்டியவை என்பதில் எந்தக் கருத்து மாறுதலும் இல்லை.
எங்கள் குழுக்களைப் பிரச்சாரப்படுத்த நபர்களையும், துண்டுப் பிரசுரங்களையும், அச்சுக் கருவிகளையும், இணையங்களையும், ஆயுதங்களையும் தேடிக்கொள்ளும் தகமை படைத்தவர்களாக இருந்
* ஈழத் தமிழ்ப் பேசும் மக்கள் தனித் தேசிய இனம்?
**புதிய உலக ஒழுங்கு விதி – சாம்பல் மேடுகளிலிருந்து.. , இந்திய அரசியல் சதி-புதிய முரண்கள் , இனப்படுகொலை நிகழ்த்திய இந்தியா! – சர்வதேச அரசியற் பின்புலம் ,