Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

புலிகளின் தோல்வியிலிருந்து கற்றுக்கொண்டு புதிய போராட்டம் முன்னெழும் : மாவோயிஸ்ட் செயலாளர் கணபதி

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) இன் பொதுச் செயலாளர் கணபதி Open சஞ்சிகையின் October 17, 2009  பிரதிக்கு வழங்கியிருந்த செவ்வியின் ஒரு பகுதியின் தமிழாக்கம் இங்கே தரப்படுகிறது. இந்திய மாவோயிஸ்டுக்கள் என அறியப்படும் இக் கட்சி இந்திய அரசிற்கு எதிரான ஆயுதப்போராட்டத்தை நடத்தி வருகிறது.

 Oct 22, 2009 @ 21:50 அன்று பதியப்பட்டது| காலத்தின் தேவைக்காக மீள் பதிகிறோம்

இலங்கையில் புலிகளின் பின்னடைவிற்குக் காரணம் என்ன?

புலிகளின் தோல்லிவிக்கும் குறிக்கத்தக்க அழிவிற்கும் பின்னர் தனியான தன்னாதிக்கமுள்ள தமிழ் ஈழத்திற்கான இயக்கம் பாரிய பின்னடைவிற்கு உள்ளாகியுள்ளது என்பதில் எந்தவித சந்தேகமுமில்லை. தமிழர்களும் போராட்டமும் இப்போது தலைமையில்லாதுள்ளது.

பெருந்திரளான தமிழ் மக்கள் தேசிய வேட்கையுடன் தனியான தமிழ் தேசத்தில் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள்.

இன்று வரைக்கும் தமிழ் ஈழத்தை கோருவதற்காக ஏற்பட்ட அதே நிலைமைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. தமிழ் தேசத்திற்கும், கலாச்சாரத்திற்கும், மொழிக்கும் எதிரான தனது இனவாதக் கொள்கைகளை சிங்கள சோவனிச அரசு மாற்றிக்கொள்ளப் போவதில்லை.

பிரபாகரன் கொல்லப்பட்டதும் புலிகள் தோற்கடிக்கப்பட்டதுமான முதல் வாரத்தில் அதையொட்டி இலங்கை அரசாலும் சோவனிசக் கட்சிகளாலும் இல்லங்கை முழுவதும் ஒழுங்கு செய்யப்பட்ட மாபெரும் அணிவகுப்புக்களும், கொண்டாட்டங்களும், அப்பாவிச் சிங்கள மக்களின் சிந்தனையை நச்சூட்டும் சோவனிசக் கருத்துக்களை வளர்த்தெடுக்கும் எல்லைவரை தமிழ் மக்களுக்கெதிராக சிங்கள அமைப்புக்கள் உருவாக்கி வளர்த்த தேசிய வெறுப்புணர்வைச் சுட்டிநிற்கிறது.

இலங்கை அரசு தமிழ் பிரதேசங்களை ஆக்கிரமிப்பதற்காக முன்வைக்கும் அதே சதித்திட்டமுள்ள கருத்தைத் தான் இஸ்ரேலிய சியோனிச அரசும் முன்வைக்கிறது. நிலமற்ற சிங்கள மக்கள் தமிழ் பிரதேசங்களில் குடியேற்றப்படுவார்கள்.

முழு இலங்கையினதும் குடியியல் எல்லைகள் மாற்றமடையப் போகிறது. தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தின் புதிய எழுச்சிக்கான தளம் இன்னமும் விளைநிலம் போல எஞ்சியுள்ளது.

நீண்ட காலமெடுத்தாலும், புலிகளின் தோல்விக்கான காரணங்களின் படிப்பினைகளிலிருந்து, தமிழ் மக்களின் விடுதலைக்கான போராட்டம் என்பது புத்துயிர்ப்புப் பெறுவது நிச்சயமானது.

பாட்டாளிவர்கச் சிந்தனை முறையையும் பார்வையையும் முன்வைத்து, புதிய தந்திரோபாயங்களை வகுத்த்குக்கொண்டு, பரந்துபட்ட ஜனநாயக மற்றும் தேசிய சக்திகளுடனான இணைவைக் கட்டியெழுப்புவதனூடாக ஒடுக்கப்பட்ட தமிழ் தேசத்தின் விடுதலை என்பது சாத்தியமானதே.

சரியான திசையையும், தலைமையையும் வழங்குவதற்கும், ஏகாதிபத்திய எதிர்ப்பு திசைவழியை ஏற்படுத்துவதற்கும் மாவோயிச சக்திகள் தேவையான அளவிற்குப் பலமடைவதனூடாக தன்னாதிக்கமுள்ள தமிழீழ மக்கள் ஜனநாயகக் குடியரசை அடைய முடியும்.

தவிர புலிகள் அமைப்பிற்கும் தமது கட்சிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என தெளிவுபடுத்தியுள்ளார்.

ஆனாலும் 1980 களின் முதல் காற்பகுதியில் புலிகள் இயக்கத்தில் இருந்து பிரிந்த சில நபர்களின் தொடர்புகளூடாக ஆரம்ப நிலைப் பயிற்சிகளை மேற்கொண்டோம், தவிர, தமிழீழத்திற்கான விடுதலைப் போராட்டத்திற்கு எமது தொடர்ச்சியான ஆதரவை வழங்கி வந்துள்ளோம் எனவும் குறிப்பிடுகிறார்.

Published on: Oct 22, 2009 @ 21:50

Exit mobile version