Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

புலம் பெயர் பிழைப்புவாத ஊடகங்களை மிரட்டிய சனல் 4 ஆவணப்படத்தின் முக்கிய பகுதிகள் தமிழில்

Press-Conference-at-Killinochiகடந்த ஞாயிறு 03.11.2013 அன்று பிரித்தானியாவிலிருந்து ஒளிபரப்பாகும் சனல் 4 தொலைக்காட்சியில் வன்னிப் படுகொலையும் அதன் பின்புலமும் தொடர்பான ஆவணப் படம் காட்சிப்படுத்தப்பட்டது. வழமையாக சனல் 4 இல் வெளியாகும் no fire zone என்ற ஆவணப்படத் தொடரின் தமிழ் முகவர்களாக தொழிற்படும் புலம் பெயர் வியாபார ஊடகங்கள் இம்முறை ஆவணத்தைக் கண்டுகொள்ளவில்லை. பிரித்தானிய அரசும், மேற்கு ஏகபோகங்களும், அவற்றின் ஊடகங்களுக் ராஜபக்சவைத் தூக்கில் போட்டு தமிழீழம் பிடித்துத் தரும் என்ற அப்பாவி மக்களுக்கு போலி நம்பிக்கைகளை வழங்கும் இந்த ஊடகங்களுக்கு நடந்தது என்ன?

புலிகள் என்ற அடையாளத்தயும் மக்களின் அவலங்களையும் வியாபாரப் பொருளாக்கும் இந்த ஊடகங்களும் அவற்றின் பின்னணியில் செயற்படும் வியாபாரிகளும் 30 வருடப் போராட்ட அரசியலின் தவறுகளிலிருந்து கற்றுக்கொண்டு மக்கள் சார்ந்த அரசியலை முன்வைப்பதை நிராகரிக்கின்றனர். வெறுமனே தமது பிழைப்புக்குறித்து மட்டுமே சிந்திக்கும் இந்தப் பிழைப்பு வாதிகளின் தமிழக நீட்சிகளும் சனல் 4 இன் ஆவணப்படம் குறித்து மூச்சுக்கூட விடவில்லை.

புலிகள் தொடர்பான சனல் 4 இன் அறிமுகமே இதற்கான காரணம். ஏகாதிபத்திய மற்றும் பல்தேசிய ஊடகங்களும் அவற்றின் அதிகார மையங்களும் புலிகளின் நிராகரிக்க முடியாத ஆதாரபூர்வமான அரசியல் தவறுகளைக் காரணமாக முன்வைத்து முழுப் போராட்டத்தையுமே நிராகரிக்கின்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையிலாவது கடந்த காலப் போராட்டத்தின் மக்கள்விரோதக் கூறுகள் குறித்தான ஆய்வும் தவிர்க்க முடியாத சுய நிர்ணய உரிமைக்கான போராட்டத்திற்கன வழிமுறைகளும் முன்வைக்கப்பட வேண்டும் என்பதை நிராகரிக்கும் இந்த அவமானகரமான பிழைப்புவாதிகள் சனல் 4 இன் ஆவணத்தைக் கண்டுகொள்ளாமை வியப்புக்குரியதல்ல.

கடந்த காலப் போராட்டம் குறித்த நேர்மையான மீளாய்வு நிராகரிக்கப்படுமானால் அது முழுப் போராட்டத்தின் மீதான குற்றச்சாட்டுக்களாக முன்வைக்கபட்டு, புதிதாக எழும் போராட்ட சக்திகளை மக்கள் மத்தியிலிருந்து அன்னியப்படுத்துவதற்கான ஆயுதமாகப் பயன்படுத்தப்படும்.
சனல் 4 இன் ஆவணத்தின் முக்கிய பகுதிகள் தமிழில்:

” இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் மாநாட்டிற்காக, இன்னும் ஒரு வாரத்திற்கு உள்ளாக, உலகின் மூன்றில் ஒரு பகுதி மக்களின் தலைவர்கள் இலங்கையின் தலை நகர் கொழும்பில் ஒன்று கூடுகின்றனர்.

இதன் பின்னான இரண்டு ஆண்டுகளுக்கு பொதுநலவாய நாடுகளின் தலைமை இலங்கைக்கு வழங்கப்படும். அங்கு செல்லும் தலைவர்கள் மத்தியில், பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரன், வெளிநாட்டமைச்சர் வில்லியம் ஹேக் ஆகியோர் அடங்குவர். மாகாராணியை பிரதிநிதித்துவம் செய்ய இளவரசர் சார்ள்ஸ் செல்கிறார். ஆனால் ஏற்கனவே நிகழ்வு சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது.

தாம் அங்குசென்று பொதுநலவாய நாடுகளின் எதிர்காலத்தைப் பாதுகாக்கப் போவதாக பிரித்தானியா கூறும் அதே வேளை ஏனையோர் நிகழ்வை நிராகரிக்கும் கனடாவுடன் இணைந்துகொள்ளுமாறு பிரித்தானியாவைக் கோருகின்றனர். மனித உரிமையையும் ஜனநாயகத்தையும் மீறிய கிரிமினல்களிடம் ஏன் தலைமையை ஏன் ஒப்படைக்க வேண்டும் என்று பலர் கோருகின்றனர்.

சுதந்திரமடைந்த முதல் நாளிலிருந்தே சிறுபான்மைத் தமிழர்கள் சிங்களப் பெரும்பான்மையினரின் கரங்களில் வன்முறை, புறக்கணிப்பு போன்றவற்றால் துன்பப்படுத்தப்படுகின்றனர். ஜூலை 1983,தமிழ்ப் புலிகள் என்ற புதிய தமிழ் தேசிய கெரில்லா குழுவொன்றால் இலங்கைச் சிப்பாய்கள் மீது நடத்தப்பட்ட கண்ணிவெடித்தாக்குதலின் பின்னர், அரச ஆதரவாளர்கள் ஒரு வாரகால தமிழர் எதிர்ப்புக் கலவரம் ஒன்றை தொடக்கிவைத்தனர். அந்தக் கலவரத்தின் போது குறைந்தத பட்சம் 3000 தமிழர்கள் கொல்லப்பட்டனர். இலங்கையின் பயங்கரமான சிவில் யுத்தம் ஆரம்பமானது.”

என்ற முன்னுரையோடு ஆரம்பிக்கும் சனல் 4 இன் ஆவணப்படம் வாணி விஜி குறித்த அறிமுகத்தோடு தொடர்கின்றது.

“வாணி விஜி ஒரு தமிழர். அவர் இலங்கையில் பிறந்தவர். ஆனால் அவரது குடும்பம் வன்முறையிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக இடம்பெயர்ந்த பரம்பரையைச் சார்ந்தது.

பல்கலைக்கழகப் படிப்பை முடித்துக்கொண்ட வாணி விஜி, 2008 ஆம் ஆண்டு இலங்கைக்குச் செல்கிறார்.”

இலங்கை பாசிச அரச படைகளால் உயிருடன் கைது செய்யப்பட்டு கொடிய சித்திரவதைகளின் பின்னர் கொல்லப்பட்டு பிணமாக்கப்பட்ட இசைப் பிரியா தொடர்பான முன்னுரையுடன் தொடரும் ஆவணம் இசைப்பிரியாவின் அசாத்திய திறைமைகள் குறித்த பதிவையும் தொட்டுச் செல்கிறது. கூடவே வன்னி புலிகளின் அரசு குறித்தும் கூறுகிறது.

“கவனத்தை ஈர்க்கும் புலிகளின் அரச அதிகாரம் இலட்சியவேட்கையுடைய புதிரானவருமான புலிகளை உருவாக்கிய பிரபாகரனால் தலைமை தாங்கப்படுகிறது. அவரின் தலைமையின் கீழ் புலிகள் குழந்தைப் போராளிகளைப் பயன்படுத்தினர். கட்டயப்படுத்தி ஆட்சேர்ப்பிற்கு உட்படுத்தினர்.
இராணுவரீதியாக பொதுமக்களுக்கு எதிராகவும் இராணுவ இராணுவ இலக்குகளிலும் பயங்கரவாத யுக்திகளைப் பயன்படுத்துவதற்கு அவர்கள் தயார்படுத்தப்பட்டனர். தற்கொலைக் குண்டுதாரிகளையும் அவர்கள் பயன்படுத்திக்கொண்டனர். அது ஒரு மிருகத்தனமான ஆனால் செயற்திறன் மிக்க இராணுவமாகத் திகழ்ந்தது. அது இலங்கை அரசை 2002 ஆம் ஆண்டு சமாதான ஒப்பந்தம் வரை நகர்த்தியது.”

என்று புலிகள் தொடர்பான அறிமுகம் ஒன்றை ஆவணம் முன்வைக்கிறது.

தொடரும் ஆவணம் மகிந்த ராஜபக்ச 2005 ஆம் ஆண்டு ஆட்சிக்குத் தெரிவானதும் கோதாபய ராஜபக்ச உட்பட அவரது குடும்பம் அரசில் பிரதான பாத்திரம் வகிப்பது பற்றியும் கூறுகிறது.

“2006 ஆம் ஆண்டு சிங்கள கடும்போக்குவாதிகளின் வன்மத்தோடு, மேற்கு முன்வைத்த ‘பயங்கரவாதத்தின் மீதான யுத்தம்’ என்ற கருத்தோடு புலிகளின் மீது அனைத்து வழிகளிலுமான தாக்குதலை மகிந்த முன்னெடுக்க ஆரம்பித்தார். 2008 ஆம் ஆண்டு அரசு புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த குறிப்பிடத்தக்க பகுதிகளைத் தனது கட்டுப்பட்டினுள் கொண்டுவந்திருந்தது.

அதன் பின்னர் புலிகள் நடத்திய அரசின் தலை நகரான கிளினொச்சியை அச்சுறுத்த இலங்கை அரசு ஆரம்பித்தது.”
என்று ஆவணம் தொடர்கிறது.

138 நாட்கள் தொடர்ச்சியாக ஓய்வின்றி நடத்தப்பட்ட இனக்கொலை குறித்த விவரணங்கள் ஐக்கிய நாடுகள் சபையின் பணியாளர்கள் வெளியேற்றப்பட்ட சம்பவத்திலிருந்து ஆரம்பிக்கிறது.

தொடரும்….

http://www.channel4.com/programmes/no-fire-zone/4od

Exit mobile version