இதை எல்லாம் ஒரு புறத்தில் எதிர்காலத்தின் பசிக்கு விற்பனை செய்துவிட்டு புலிகளின் திசைக்குத் திரும்பினால் அங்கு நிலைமையே வேறு. ஈழத்தில் புலிகள் வாழ்கிறார்களா இல்லையா என்பது இப்போதைக்கு விடைகிடைக்கும் வினாவல்ல.
நெடியவன் குழு, கே.பி குழு, இவர்களுக்கு எல்லாம் எதிரான குழு என்று பல குழுக்களாகப் புலிகளின் புலம் பெயர் பிரதி நிதிகள் சிதறிப் போயுள்ளனர். இதை எல்லாம் தவிர நாடுக்டந்த தமிழீழம் சலசத்துச் சரிந்து போயிருக்கிறது.
இங்கே வேடிக்கை என்னவென்றால் ஒவ்வொரு குழுவுமே நாம் முன்னைய புலிகளின் இன்றைய இருப்பு என்று கூசாமல் கூறுகின்றனர். ஒவ்வொரு குழுவையும் புலிகளின் உத்தியோகபூர்வ பிரதிநிதிகளாக அங்கீகரித்துக் கொள்வோமென்று ஒரு பேச்சுக்காக வைத்துக்கொண்டாலும் அவர்கள் என்னதான் செய்துகொண்டிருக்கிறார்கள்? அவர்களின் செல்நெறி என்ன?
இப்போதுள்ள சூழலின் யதார்த்தம் அவலங்களையும், அழுகுரல்களையும், விரக்தியயும், வெறுப்பையும் தனது இயக்கத்தோடு இரண்டறக் கலந்துகொண்டுள்ளது. துயரில் புலம்பும் மக்களின் மரண ஓலத்தை தமது நலன்களுக்காக
பல தடைவைகள் நாங்கள் சிக்கலில் மாட்டியிருக்கிறோம் தீர்த்துக்கொண்டதும் வெளியிடுகிறோம் என்று சாவகாசமாகக் கூறிவிட்டுச் செல்கிறார்கள். அதுவும் கொத்துக்கொத்தாகப் பலிகொடுத்துவிட்டுத் தான் சொல்கிறார்கள்.
சிக்கலே இல்லாத நேரடியான மக்களின் உணர்வுகளுக்குப் விடைபகரக் கூடியவற்றைக் கூடப் பேச மறுக்கிறார்கள். திருமாவளவனும், வை.கோவும், நெடுமாறனும் கற்றுக்கொடுத்த பாடங்களோ இவை?
பிரபாகரன் மரணித்துப் போனப்போது அவர்களின் சொந்தத் தேவைக்காக மாவீரர் பட்டியலிலிருந்து நீக்கிவிட்டு கருணாவின் முன்னால் தெருவோரத்தில் கிடத்திவிட்டிருந்தார்கள். முடிந்துபோன அவமானத்தை புறந்தள்ளினால் மக்களின் உணர்வுகளுக்கோ பதில் இல்லை.
அவற்றை அடுக்கிக்கொண்டே போகலாம்….
-கே.பி என்ற குமரன் பத்மநாதன் யார்? அரசின் உளவாளியா புலியின் தியாகியா? மகிந்த அரசின் மந்திராலோசகரான கே.பியை அம்பலப்படுத்தி பிரச்சாரம் கூட வேண்டாம், ஒரு அறிக்கையாவது போட்டிருக்கலாமே?
– போர்க் குற்றவாளி மகிந்தவை கூண்டில் நிறுத்த என்ன செய்கிறீர்கள்?
– தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்திய அரசின் அடிமையாக மாறிவிட்டதே, என்ன செய்ய உத்தேசம்?
-அரச துணைக் குழுக்களை தொடர்பான உங்களின் வேலைத்திட்டம் என்ன?
-இலங்கையில் புலிகள் என்று கூறிக்கொள்ளும் ராம் என்பவர் யார், அவரின் அரசியல் நிலை என்ன, அவருக்க்கு எதிரான உங்களின் செயல்திட்டம் என்ன?
– புலம்பெயர் புலிகளின் எத்தனை பிளவுகள் இருக்கின்றன, யார் எதிரியோடு, யார் நண்பனோடு?
– பிரபாகரனைக் காப்பாற்ற ஒருலட்சம் தமிழர்களைத் திரட்டி போராட்டம் நடத்தியவர்கள் நீங்கள், இப்போது மக்களின் மரண ஒலம் கேட்கும் போது எங்கே போனீர்கள்.
– புனர் வாழ்வு என்று கூறிக்கொண்டு மக்களைச் சூறையாடுகிறது ராஜபக்ச அரசு உங்களின் நிலைபாடு என்ன? என்ன செய்யப்போகிறீர்கள்? மக்கள் என்ன செய்யவேண்டும்?
– தமிழ்ப் பேசும் மக்களின் பிரதேசங்கள் சூறையாடப்படுகின்றன, அதை எதிர்கொள்வது எப்படி?
– அபலைத் தமிழ்ப் பெண்கள் பாலியல் வதைக்கும் தொழிலுக்கும் உட்படுத்தப்படுகிறார்கள் ஏன் பார்த்துக்கொண்டு மௌனமானீர்கள்?
– யார் யாரெல்லாம் மக்கள் பணத்தைப் பதுக்கி வைத்துள்ளார்கள்? அகதிகளுக்கு அந்தப்பணத்தை வழங்குமாறு ஏன் பகிரங்கக் கோரிக்கையை முன்வைக்கக் கூடாது?
– நீங்கள் நம்பியிருந்த ஐரோப்பாவும், அமரிக்காவும், இந்தியாவும் தான் உங்களை நட்டாற்றில் விட்டுவிட்டு ராஜபக்ச குடும்பத்தை அரவணைத்துக் கொள்கிறதே அவர்களிடன் இன்னும் என்ன எதிர்பார்கிறீர்கள்.
– நீங்கள் நம்பியிருந்த நட்புசக்திகளின் மறைமுக அல்லது நேரடி உதவியோடுதான் தமிழ் மக்கள் துவம்சம் செய்யப்பட்டார்கள், இப்போது யார் உங்களின் நண்பர்கள், யார் எதிரிகள்?
இப்படி ஆயிரம் சில்லறைக் கேள்விகள்! அரசியல் ஞான சூன்யங்களே பதில் சொல்லும் தகமைபெற்ற, தத்துவ மேற்கோள்களுக்குள் அடங்காத இந்தக் கேள்விகளுக்கு உங்கள் பதிலை முள்ளிவாய்க்கால் முடிந்து பதினாறு மாதங்கள் வரை கண்டுபிடிக்க முடியவில்லை என்பது உங்களை அரசியல் அனாதைகளாக்கிவிடுகிறது.
இது தொடருமானல் ஐரோப்பாவில் தமிழர்களைக் கையாள அனுப்பிவைக்கப்பட்ட அனுர மெதெகெரவும் ஹம்சாவும் தம்மைத் தமிழர்களின் பிரதினிதிகள் என்று அறைகூவினால் ஆச்சரியப்படுவதற்கில்லை.