Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

புதிய உலக ஒழுங்கு – புதிய இணைவுகளின் அவசியம் : சபா நாவலன்

இலங்கையில் நடைபெற மனிதப்படுகொலைகளதும், இனச்சுத்திகரிப்பினதும், இது போன்ற ஆசியப் படுகொலைகளதும் பின்புலம் 2000 ஆண்டுகளுக்குப் பின்னான புவி சார் அரசியலின் புதிய மாற்றாங்களிலிருந்தும் ஆராயப்பட வேண்டும். இந்த அரசியலின் பின்னணியில் உலக மயமாதலோடு சிதைந்து போன உலக ஒழுங்கு காணப்படுகிறது.

இன்று உலகின் அதிகார மையங்கள் புதிய உலக ஒழுங்கு விதியை உருவாக்குவது குறித்து சிந்திக்கின்றன. தெரிவுகள் அனைத்தும் முடிவ்டைந்துவிட்ட நிலையில், உலக ஒழுங்கு வெறும் முயற்சியாகவே மேலதிக நகர்வின்றி நிறுத்தப்பட்டிருக்கிறது. எது எவ்வாறெனினும் உலகம் மறுபடி ஒழுங்கமைக்கப்படுவதற்கான ஓய்வின்றிய முயற்சிகள் தொடர்கின்றன.

உலகம் புதிதாக ஒழுங்கமைக்கப்படுவது இது முதல் தடவையல்ல. ஜோன் மேனாட் கீனெஸ்(John Maynard Keynes) என்ற பொருளியலாளர் முதலாளித்துவத்தைப் பாதுகாக்க 1940 களில் முன்வைத்த கோட்பாடுகளின் அடிப்படையில் ஒழுங்கமைக்கப்பட்ட உலகப் பொருளாதாரம் 1970 களில் மறுபடி நெருக்கடிக்கு உள்ளான போதே நவ-தாராளவாதமும் (Neo-Liberalism) அதன் புதிய பரிணாமமான உலகமயமாதலும் 70 களின் பின்னான ஒழுங்கு நிலையில் முன்னிடம் வகித்தன.

90 களில் மீண்டும் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி உலக மயமாதலைத் தீவிரப்படுத்தும் தீர்வினை முன்வைக்க, அதன் இன்றைய அமைப்பியல் முதலாளித்துவச் சரிவு வரை உலகை நகர்த்தி வந்திருக்கிறது.

1940 களில், அன்றைய பொருளாதார நெருக்கடியை ஆராயும் நோக்கோடு 66 நாடுகளை இணைத்து கீநேஸினால் முன்மொழியப்பட்ட ஒழுங்கமைப்புக் குறித்து ஆராய்ந்தனர். புதிய வல்லரசுகளும் புதிய அணிகளும் உருவாக வழிவகுத்த இந்த மாநாடு, ஆரம்பகட்டத்தில் எந்த முடிவிமின்றி முறிவடைந்தது.

இதன் பின்னர் உருவான புதிய பொருளாதாரப் பகைப்புலத்தில் முளைவிட்டவர் தான் ஜேர்மனியச் சர்வாதிகாரியான ஹிட்லர். 2000ம் ஆண்டுகளின் புதிய ஒழுங்கு விதிகள் தனது நவீன மனிதப்படு கொலையைத் திட்டமிட்டு நிறைவேற்றிக் கொண்டிருப்பது போலவே அன்றைய ஒழுங்கு விதிகளின் முதல் மனிதப்படுகொலைகள் யூத அப்பாவிகள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்டது.

ஒவ்வொரு தடவையும் உலகம் புதிதாக ஒழுங்கமைக்கப்படும் போதும், அதுவும் அமைப்பியல் ரீதியான ஒழுங்கிற்கு உட்படுத்தப்படும் போதும் மனிதப்படுகொலைகள் நடைபெற்றிறுப்பதைக் காணக்கூடியதாக உள்ளது. அதிலும் குறிப்பாக உலக ஒழுங்கின் ஈர்ப்பு மையமாகக் காணப்படும் பகுதிகளில் மனித அழிப்பு இனப்படுகொலை வடிவில் உருவாவதைக் காணலாம்.

2000 ஆண்டுகள் உருவாக்கிய உலக ஒழுங்கின் ஈர்ப்பு மையமும் பிரதான பகுதியும் ஆசியா என்பதில் சமூக விஞ்ஞானிகள் முரண்பட்டதில்லை. எது எவ்வாறாயினும் இன்றைய ஒழுங்கு விதியின் முதல் திட்டமிட்ட மனிதப்படுகொலை இலங்கையில் தான் நடைபெற்றிருக்கிறது.

40 களின் ஆரம்பத்தில் அமரிக்க ஆதரவுடன் கீனேசின் முன்மொழிவு வெற்றிகரமாக ஏற்றுக்கொள்ளப்பட, சர்வதேச நானய நிதியம்(IMF), உலக வங்கி(World Bank), உலக வர்த்தக மையம் என்பன அமரிக்க தலைமையிலான உலக சாம்ராஜ்யத்தைக் கட்டமைத்தது.

1970 களின் முன் பகுதிகளில் இந்த அமைப்பு முறை மறுபடி ஒருமுறை நெருக்குதலுக்கு உள்ளாக, மார்க்சியமும் அது தொடர்பான உரையாடல்களும் புத்துயிர் பெற்றன. ஐரோப்பா எங்கும் போராட்ட அலை அதிகார வர்க்கத்தை ஆட்டம்க்காணச் செய்தது. பிரான்சில் நிகழ்ந்த மக்கள் போராட்டத்தைதின் வெற்றிக்கு அஞ்சிய அன்றைய பிரஞ்சு அதிபர் சார்ள் து கோல் ஜெர்மனிக்குத் தப்பியோடினார்.

1975 இல பாரிசில், ஐந்து பணம்படைத்த நாடுகளைக் கொண்ட உச்சி மாநாடு நிகழ்வு பெற அங்கு இன்னுமொரு தடவை புதிய உலக ஒழுங்கு விதி குறித்துப் பேசப்பட்டது. அப்போது தான் இன்று நெருக்கடிக்கு உட்பட்டிருக்கும் உலக மயமாதல் தொடர்பான உரையாடல்களும் கருத்தியலும் உருவானது.

20 இலிருந்து 25 ஆண்டுகளுக்கு இடையில் இந்த முதலாளித்துவப் பொருளாதார நெருக்கடி ஏற்படுகிறது. 1975 இல் முன்வைக்கப்பட்ட நவ தாராளவாதக் கொள்கை என்பது மேலும் நெருக்கடிக்கு உட்ப்பட 90 களின் ஆரம்பத்தில் அதன் உயர் வடிவமான உலக மயமாதல் தீர்வாக முன்வைக்கப்பட்டது.

உலக மயமாதலின் பின்னான புவிசார் அரசியல் எப்போதுமில்லாத வகையில் மாற்ரமடைந்துள்ளது. முன்னர் உருவான உலகப் பொருளாதாரத் திட்டமிடலுக்கு மாறாக இப்போது ஐரோப்பியப் பொருளாதாரம் ஆசியாவை நோக்கி நகர்த்தப்பட்டுள்ளது. ஆசியாவின் மூலவளங்களைச் சுரண்டிய ஏகபோக முதலாளிகள் இப்போது ஆசியாவின் உற்பத்திறனையும் உறிஞ்சக் கற்றுக்கொண்டுள்ளனர்.

ஆசிய நாடுகளில் இயற்கை வளங்களையும், உற்பத்தித் திறனையும் – உழைபையும், சுரண்டும் நிகழ்சிப்போக்கை “அபிவிருத்தி” என்று பேயரிட்டு அழைக்கின்றனர். இவர்கள் கூறுகின்ற அபிவிருத்திக்கு எதிரான அனைத்து தடைகளையும், எதிர்ப்பியக்கங்களையும் அழிப்பதன் இன்னொரு பெயர் தான் “பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம்”. இந்த யுத்தம் தான் இலங்கையில் ஆயிரமாயிரமாய் மக்களைக் கொலைசெய்தது. இந்தியாவில் பழங்குடி மக்களைக் கொலை செய்கிறது. கஷ்மீரில் போராடும் மக்களை துவம்சம் செய்கிறது. நேபாளத்தில் உரிமை கேட்போரை வேட்டையாட முயல்கிறது.

மறு புறத்தில் ஐரோப்பாவிலும் அமரிக்காவிலும் வலுவிழந்த சமூகத்தின் கீழ் நிலையிலுள்ளோர் மீதான பிரகடனப்படுத்தப்பட்டாத யுத்ததையும் அது கட்டவிழ்த்து விட்டுள்ளது. அவர்கள் போராடிப் பெற்றுக்கொண்ட அனைத்து உரிமைகளும் எந்தக் கருணையுமின்றிப் பறித்தெடுக்கிறது. அதற்கெதிராக அவர்களின் போராட்டம் தீவிரமடைகிறது. நேற்றைய தினம் பிரித்தானியப் பாராளு மன்றத்தில் 60 ஆண்டுகளாக வழங்கப்படுவந்த வீட்டு மானியத் தொகையை நீக்கப்போவதாக கொன்சவேட்டிவ் அரசு அறிவித்துள்ளது. பிரான்சில், ஸ்பெயினில், இத்தாலியில் போராட்டங்கள் தீவிரமடைகின்றன.

புதிய உலக ஒழுங்கு என்று இதுவரை ஏதும் முற்றான முடிவாக்க்கப்படவில்லை. ஒன்றை மட்டும் அதிகார வர்க்கம் தெளிவாக உணர்ந்துள்ளது. முன்னைய ஐரோப்பா போன்ற வாழ்க்கைத் தரத்தை இன்னும் உறுதிப்படுத்த முடியாத நிலைக்கு வந்தடந்துள்ளனர். முன்னைய ஆசியா போன்றதல்ல இன்று. இவற்றை முன்வைத்து ஒரு சில முடிவுகளுக்கு முன்வருகின்றனர்.

ஆசியாவில் புதிய வர்த்தகத்திற்குத் தடையானவற்றை அழித்தல் என்பதும் ஐரோப்பாவில் முன்னைய சமூக நல உரிமைகளை மீளப் பெற்றுக்கொள்ளல் என்பதும் பிரதான அடிப்படையாக அமைகிறது.

இவற்றிற்கு எதிராக ஐரோப்பாவிலும், அமரிக்காவிலும், ஆபிரிக்க நாடுகளிலும், இந்தியாவிலும், நேபாளத்திலும், இலங்கையிலும் அழிக்கப்படும் சக்திகள் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை என்ற முடிபிற்கு நகர்த்திச் செல்லப்பட்டுள்ளனர். ஆசிய மனிதப் படுகொலைக்கு எதிரான தெற்காசியக் கூட்டமைவும், ஐரோப்பிய நாடுகளின் போராடும் மக்கள் பகுதியினருடனான அவர்களின் இணைவும், பெரும் சக்திகாய உருவெடுக்கும் வாய்ப்புகள் தவறவிடப்படக்கூடாது.

Exit mobile version