Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பிரித்தானிய அரசின் கறைபடிந்த சதி – சாட்சிகளான அதிர்ச்சித் தகவல்கள்: நிவேதா

அப்பாவி மக்களைக் கொன்ற ஆங்கிலேய அவமானம்
அப்பாவி மக்களைக் கொன்ற ஆங்கிலேய அவமானம்

ஈழப் போராளிகள் மீது பிரித்தானிய அரசின் கறைபடிந்த யுத்தம் நீண்ட வரலாற்றைக் கொண்டது. இலங்கை அரசின் கொலைப்படைகளுக்கு இராணுவ மற்றும் உளவுத்துறைப் பயிற்சிகளை வழங்கியும் ஆலோசனைகளை வழங்கியும் பிரித்தானிய அரசு இரத்த தாகத்தைத் தீர்த்துக்கொண்டது. மறுபுறத்தில் புலிகள் இயக்கத்துடன் நல்லுறவை பேணுவதாக நாடகமாடி புறமுதுகில் குத்தியது. 1944 ஆம் ஆண்டு பிரித்தானிய அரசின் இதே போன்ற நடவடிக்கை கடந்த மாதம் நேரடிச் சாட்சியாக வெளியாகியுள்ளது. தன்னுடைய நட்பு சக்திகளைத் தானே அழித்த பிரித்தானிய அரசு நிராயுதபாணிகளான அப்பாவிகளைக் கொன்றுகுவித்தது.

கிரேக்க நாட்டில் நடைபெற்ற இக் கொடுமையை அந்த நாட்டில் பலர் அறிந்து வைத்திருந்தனர். ஆளும் வர்க்கத்தின் அதிகார எல்லைக்குள் முடங்கிக்கிடக்கும் ஊடகச் சுதந்திரம் இவற்றை வெளிக்கொண்டுவரவில்லை. 70 வருடங்களின் பின்னர் கார்டியனில் வெளியான வெறுக்கத்தக்க இக்கொலை பிரித்தானியாவின் அதிகாரவர்க்கத்தின் வரலாறு முழுவதும் துரோகத்தால் ஆனது என்பதைத் தெளிவுபடுத்துகின்றது.

கிரேக்கத்தில் தேசிய விடுதலை முன்னணி National Liberation Front (Greek: Εθνικό Απελευθερωτικό Μέτωπο, Ethniko Apeleftherotiko Metopo, EAM) என்ற அமைப்பை பிரித்தானிய அரசு ஆதரித்ததுவந்தது. கிரேக்கத்தை 1941 ஆம் ஆண்டிலிருந்து ஆக்கிரமித்திருந்த இத்தாலிய பாசிஸ்டுக்களையும், ஜேர்மனிய நாசிகளையும் விரட்டியடிப்பதற்காகப் போராடிவந்த தேசிய விடுதலை முன்னணிக்கு பிரித்தானிய அரசு ஆதரவு வழங்கி உதவிவந்தது.

தேசத்தை விடுவிப்பதற்கான போராட்டத்தை எவ்வாறு முன்னெடுப்பது என்பதற்கு தேசிய விடுதலை முன்னணி முன்னுதராணமாகத் திகழ்ந்தது எனலாம். மத்தியதர வர்க்கத்தினர், தேசிய முதலாளிகள், தொழிலாளர்கள், மாணவர்கள், பெண்கள் என்ற சமூகத்தின் எல்லாப் பிரிவுகளையும் வேறு அமைப்புக்களையும் இணைத்துத் தேசிய விடுதலை முன்னணி கட்டியமைக்கப்பட்டிருந்தது. தேசிய விடுதலை முன்னணிக்குத் தலைமை தாங்கியது கிரேக்கக் கம்யூனிஸ்ட் கட்சி (Communist Party of Greece (KKE)).

கிரேக்கக் கம்யூனிஸ்ட் கட்சியின் வழி நடத்தலில் தேசிய விடுதலை முன்னணி முழு நாட்டிலும் பலம்பெற்ற அமைப்பாக விளங்கியது. ஏற்கனவே கம்யூனிஸ்ட் கட்சியினால் தலைமை தாங்கப்பட்ட மக்கள் அமைப்புக்கள் தேசிய விடுதலை முன்னணியை உறுதியான அமைப்பாகிற்று.

நவீன கிரேக்க வரலாற்றில் மிகப்பெரும் மக்கள் இயக்கமாக உருவெடுத்த தேசிய விடுதலை முன்னணி தனது அரசைக்கூட நிறுவிக்கொண்டது. விடுதலை செய்யப்பட்ட பிரதேசங்களில் உழுபவர்களுக்கும் உழைப்பவர்களுக்கும் நிலத்தைச் சொந்தமாக்கும் நடைமுறகள் உடப்ட பல்வேறு வழிகளில் உற்பத்திக் கருவிகள் மக்கள் உடமையாக்கப்பட்டன.

1944 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் நாசிகள் விரட்டியடிக்கப்பட்ட பின்னர் தேசிய விடுதலை முன்னணியும் கம்யூனிஸ்டுகக்ளின் தலைமையில் முழு நாட்டையும் தமது ஆட்சியின் கீழ் கொண்டுவந்தனர்.

நாசி ஜேர்மனிய அதிகாரம் வெளியேற்றப்பட்ட பின்னர், வெளிநாடுகளில் தஞ்சமடைந்திருந்த கிரேக்கத்தின் முன்னைய அரசும், நாசி ஜேர்மனியுடன் கூட்டுச் சேர்ந்திருந்த அதிகாரிகளும் அதிகாரத்தைக் கையகப்ப்படுத்த முயற்சித்தனர்.
அவ்வேளையில் தேசிய விடுதலை முன்னணி ஏதன்ஸ் நகரில் மிகப்பெரும் அமைதிப் பேரணி ஒன்றை நாசிகளுடன் இணைந்து செயற்பட்ட அதிகாரிகளின் மீட்சிக்கு எதிராக நடத்தியது.

ஆர்ப்பாட்டம் சந்தக்மா சதுக்கத்தைக் கடந்து சென்ற வேளையில் பாராளுமன்றத்தின் கூரைப் பகுதிகளிலிருந்து ஆர்ப்பாட்டக் காரார்களின் மீது ஏதன் போலிஸ்படை துப்பாக்கிப்பிரயோகம் செய்தது. பொதுவாக இளையோர்கள் கலந்துகொண்ட ஆர்ப்பாடத்தில் இரதம் ஆறாக ஓடியது, பலர் காயமடந்தனர். 28 பொதுமக்கள் அங்கேயே கொல்லப்பட்டனர்.

வின்ஸ்டன் சேர்ச்சில், ஸ்டாலின், ரூஸ்வெல்ட் ஆகியோரின் படங்களைச் சுமந்து சென்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது துப்பாக்கிப் பிரையோகம் செய்தவர்கள் நாசிப் படைகளின் ஆதரவாளர்களே என உலகம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

பிரித்தானியப் படைகள் நாசிகளை முற்றாக அழிப்பதற்காகவே அங்கு நிலைகொண்டிருப்பதாகப் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. நடந்ததோ வேறு. சாட்சியின்றி நடத்தப்பட்ட இக் கொலைகளின் பின்னணியில் பிரித்தானியப் படைகளே இருந்தன என்ற உண்மைகள் சாட்சிகளாக இப்போது வெளியாகியுள்ளன.

பிரித்தானியப் படைகள் உள்ளூர் நாசி ஆதரவாளர்களுக்கு ஆயுதங்களை வழங்கி ஆர்ப்பாட்ட்க்காரர்களைக் கொலைசெய்யத் தூண்டிவிட்டு பின்னதக தாம் நாசி ஆதரவாளர்களுக்கு எதிராகப் போராடுவதாகப் பிரச்சாரம் செய்தது.

பிரித்தானியப் பிரதமர் வின்ஸ்டன் சேர்ச்சிலின் படங்கள் பொறிக்கப்பட்ட் பதாகைகளை ஏந்தி வந்தவர்கள் மீது பிரித்தானியப் படைகளே துப்பாக்கிப் பிரையோகம் செய்த கோரம் நட்ந்து முடிந்து இன்று 70 ஆண்டுகள் கடந்துவிட்டன.

நாசிகளுக்கு எதிராக பிரித்தானியா போராடியது என மக்களும் தேசிய விடுதலை முன்னணியின் ஒரு பகுதியும் நம்பிக்க்கை கொண்டிருந்தது. பிரித்தானியாவின் கணிப்பு வேறு வகையிலிருந்தது. தேசிய விடுதலை முன்னணி கம்யூனிஸ்டுக்களால் தலைமை தாங்கப்படுவதால் அது ஏகாதிபத்தியங்களுக்கு எதிராக மாறலாம் என பிரித்தானியா முடிவெடுத்தது. தேசிய விடுதலை முன்னணியை அழிக்க நாசிகளுட்ன் இணைந்துகொண்டது. ஹிட்லரின் நாசிப்படைகளை வெளியேற்ற தேசிய விடுதலை முன்னணியை ஆதரித்த பிரித்தானியா, இப்போது நாசிகளுடன் இணைந்து கம்யூனிஸ்டுக்களை அழிக்க திட்டம் தீட்டியது. அதன் ஒரு பகுதியகவே அமைதிப் பேரணி மீது துப்பாக்கிப் பிரையோகம் நடத்தப்பட்டது. துப்பாக்கிச் சூட்டில் மரணித்தவர்களில் தேசிய விடுதலை முன்னணியின் முக்கிய உறுப்பினர்களும் அடங்குவர்.

தேசிய விடுதலை முன்னணியில் இணைந்திருந்த ஏனைய அமைப்புக்களிடையெ மோதல்களை உருவக்க பிரித்தானிய அரசு சதித் திட்டங்களை மேற்கொண்டது.

அப்போது 16 வயதில் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பற்றிக்கியோஸ் இற்கு இப்போது 86 வயது. நடந்தவைகளை அப்படியே ஊடகங்களுக்குத் தெரிவித்தார். அவரைத் தொடர்ந்து வேறு சாட்சிகளும் உண்மையைக் கூற ஆரம்பித்துள்ளன.
மக்கள் பற்றுள்ளவர்களுக்கு எதிராகக் கொலைகாரக் கும்பல்களுடன் சேர்ந்து உலகம் முழுவதும் அவலத்துள் அமிழ்த்தும் ஏகாதிபத்திய நாடுகளில் பிரித்தானியா கறைபடிந்த யுத்தங்களுக்குப் பேர்போன நாடு.

அடுத்த சில வாரங்களில் நாசிகளோடு இணைந்திருந்த அதிகாரிகளைத் தண்டிப்பதற்குப் பதிலாக பிரித்தானியப் படைகள் அவர்களோடு இணைந்து இடதுசாரிகளை அழிக்க ஆரம்பித்தது. ‘அழிவுகளின் துர்நாற்றத்தை இப்போதும் உணர்கிறேன்’ என்கிறார் 86 வயதாகும் பற்றிக்கியோஸ். நாசிகளுடன் இணைந்து பிரித்தானிய விமானப்பட்டை கம்யூனிஸ்ட் கட்சிகளின் நிலைகள் முழுவதையும் அழிக்க ஆரம்பித்தது. ‘இத்தனை வருடங்களின் பின்னரும் விமானங்களின் இரைச்சல் எனது காதுகளில் கேட்டுக்கொண்டிருக்கிறது’ என்கிறார் பற்றிக்கியோஸ்.

KKE போராளிகள்

1946 ஆம் ஆண்டு பிரித்தானியப் படைகளின் ஆதரவோடு மக்களால் வெறுக்கப்பட்ட அரசன் ஆட்சியில் அமர்ந்துகொண்டார். கம்யூனிஸ்டுக்கள் முழுமையான தலைமறைவு யுத்தத்தை ஆரம்பித்தனர். 1946 ஆம் ஆண்டு கம்யூனிஸ்டுகளுக்கு எதிராகப் போர்தொடுக்க பிரித்தானியாவோடு அமெரிக்காவும் இணைந்துகொண்டது. 1947 ஆம் ஆண்டு கம்யூனிஸ்டுக்கள் வடக்கு மலைப்பிரதேசத்தில் தற்காலிக அரசை அமைத்துக்கொண்டனர்.

அமெரிக்க, பிரித்தானிய அரசுகளின் ஆதரவோடு கம்யூனிஸ்டுக்களுக்கும் மக்களுக்கும் எதிரான போர் தொடர்ந்தது. மலைப் பிரதேசங்களுக்கான உணவு மற்றும் நீர் வினியோகங்களை அமரிக்க ஆதரவு நாசி மற்றும் மன்னரின் படைகள் துண்டித்தன. யுத்தத்தில் ஐம்பதயிரம் பேர் கொல்லப்பட்டனர். ஐந்து லட்சம் மக்கள் இடம்பெயர்ந்தனர். இறுதியில் ஒக்ரோபர் மாதம் 16 ஆம் திகதி 1949 ஆம் ஆண்டு போர்நிறுத்ததைக் கிரேக்கக் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்து
கம்யூனிஸ்ட் கட்சியின் இராணுவப் பிரிவினரில் ஒரு பகுதியினர் அல்பேனியாவிற்குள் சென்ற பின்னர், மன்னர் ஆட்சியுடன் யுத்த நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

ஒப்பந்ததிற்கு மாறாக கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் ஆதரவாளர்கள் உட்பட ஆயிரக்கணக்கானவர்களை பிரித்தானிய அமெரிக்க ஆதரவு அரசபடைகள் பல்வேறு குற்றங்களைச் சுமத்தி அழித்துப்போட்டது. உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் தலைவர்கள் உட்படப் பலருக்கு என்ன நடந்தது என்பது தெரியாமல் போனது.

1980ஆம் ஆண்டு வரை கம்யூனிஸ்டுக்கள் உள் நாட்டிலும் வெளி நாடுகளிலும் தேடித் தேடி அழிக்கப்பட்டனர். கொல்லப்படவர்கள் தவிர, 1962 ஆம் ஆண்டு 13 வருடங்களின் பின்னர் 4498 போராளிகள் சிறையிலிருப்பதாகவும், 998 பேர் வெளி நாடுகளில் இருப்பதாகவும் கிரேக்க அரசு அறிவித்தது. கம்யூனிஸ்டுக்களின் குழந்தைகளை அனாதைகள் என அரசு அறிவித்தது. தேவாலயங்களுடன் இணைந்த சீர்திருத்தப் பள்ளிகளுக்கு அவர்களைப் பலவந்தமாக அனுப்பி வைத்தது. சிலர் அமெரிக்க, பிரித்தானியப் பணக்காரர்களால் தத்தெடுக்கப்பட்டனர். 1967 ஆம் ஆண்டு கம்யூனிச அபயத்திலிருந்து நாட்டைப் பாதுகாக்கிறோம் என்ற தலையங்கத்தில் எழு சர்வாதிகாரிகளைக் கொண்ட குழு ஒன்றை அமெரிக்க அரச சார்பு உள்ளூர் அரசு நியமித்தது. அவர்களின் தலைமையில் மேலும் கைதுகளும் சித்திரவதைகளும் ஒடுக்கு முறையும் தொடர்ந்தன.

இவ்வளவு அழிவுகளின் பின்னரும் கொன்சர்வேட்டிவிற்கான தமிழர்கள், தொழிற்கட்சிக்கான தமிழர்கள், ஒபாமாவிற்கான தமிழர்கள் என்று ஒற்றர்கள் குழுக்களை உருவாக்கி வைத்துக்கொண்டு ஈழப் போராட்டத்தை நடத்தப் போகிறோம் என்று கூறும் கோமாளிகளை எப்படியழைப்பது.

http://www.theguardian.com/world/2014/nov/30/athens-1944-britains-dirty-secret?CMP=fb_gu

Exit mobile version