Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பிராய்டிசம் – பகைப்புலமும் வளர்திசையும் : லெனின் மதிவானம்

இன்று சமுதாய யதார்த்தம் சார்ந்த படைப்புகளை நிராகரிக்கும்

surrealism

வகையில் தூக்கிப் பிடிக்கப்படுகின்ற கொள்கைகளில் முக்கியமானவை ஃபிராய்டிசம், சர்ரியலிசம், எக்சிஸ் டென்ஷியலிசம் முதலிய கொள்கைகளாகும். உலகமய சூழலில் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார, பண்பாட்டு நெருக்கடிகள் காரணமாக இவர்கள் சித்தப் பிரமைக்கு ஆற்பட்டு வருவதனைக் காணலாம். இதன் விளைவாக மூளைக் கோளாறு, உறக்கமின்னை, ஹிஸ்டிரியா முதலிய மனநோயிகளினால் பாதிக்கப்பட்டு வருவதனையும் காணக்கூடியதாக உள்ளது.

இந்நிலையில் நரம்பு நோய் வியாதிகளுக்கும் மன சித்தங்களுக்கும் ஆய்வு முறையாகவும் சிகிச்சை முறையாகவும் தோன்றிய ஃபிராய்டிசம் கலை இலக்கிய பண்பாட்டுத் துறையிலும் தாக்கம் செலுத்தக் கூடியதாக அமைந்தது.

ஃபிராய்டு ஏகபோகங்கள் வளர்ச்சி பெற்றிருந்த காலத்தில் வாழ்ந்தவர். அக்காலச் சூழலில் சிறு முதலாளிகள், மத்தியதர வர்க்கத்தினர் சீரழிந்து சின்னா பின்னமாகினர். தனிமனித சுதந்திரம் குறித்து புலம்பிய இவர்கள் எதிர் காலத்தின் அபாயம் குறித்தும் நடுங்கினர். ஏகபோகத்தின் கொடூரங்களை ஒப்புக் கொள்ள முடியாமலும் தமது தனிமனித சுதந்திரத்தை விட்டுக் கொடுக்க முடியாமலும் மனதிற்குள் புழுங்கினர்.

அதேசமயம், ஏகபோக வளர்ச்சியின் போது அதன் கொடூரங்களை எதிர்த்து பாட்டாளி வர்க்கமானது இயக்கமாக கருக் கொண்டு தீவிரமாக போராடியது. இவ்வியக்கங்கள் கூட்டுத் தன்மையை, வாழ்க்கையை பிரதிபலிப்பதாக அமைந்திருந்தன. சமூகத்தின் எண்ணற்ற முரண்களை நியாயப்படுத்தல், சமரசம் செய்தல், அழகுபடுத்தல் என்னும் புண்மைகளை தாண்டி தமக்கே உரித்தான நாகரிகத்துடன் சோஷலிச அமைப்பிற்கான போராட்டத்தை முன்வைத்தது. சிறு முதலாளிகளும், மத்தியதர வர்க்கத்தினரும் இவர்களுடன் இணைந்து செயற்படுவதற்கான ஆளுமையை அவர்களது தனிமனித பற்று அவர்களுக்கு இடம் கொடுக்கவில்லை. எனவே வருங்காலம் குறித்து நம்பக்கையிழந்து சோர்வுற்று சோகக் குரலில் அழுது கண்ணீர் வடித்தனர். இத்தகையவர்கள் குறித்து மாக்ஸிம் கோர்க்கி கீழ்வருமாறு கூறுகின்றார்:

“ஒரு நீதி நெறிக்கொள்கையை உருவாக்க, ஒருவரையொருவர் கடித்துத் தின்பதற்கு வெறிகொண்ட இவர்கள் முயன்றனர். கூர்மையான தன்னுணர்வும் தன்னோக்குமுடையவர்கள் தங்களைப் போன்றே அடுத்தவர்கள் இருந்தால் பொறாமையும் பகைமையும் கொண்டனர். மனித உறவுகளில் ஒருவர் மற்றொருவர் மீது பொறாமையும் சந்தேகமும் கொள்வது சாதாரண நிலைமையாயிற்று. உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுதல் கால வழக்கமாயிற்று. நல்ல உடல் நலமுள்ளவர்கள் இரண்டு மாதத்தில் பித்துக்குளிகளாகவும் சித்த விகாரமுள்ளவர்களாகவும் ஆயினர். நேற்று வரை நண்பர்களாக இருந்தவர்களை, அலட்சியத்தோடு அற்பமாக நினைக்கும் மனநிலைக்கு மாறினர்.

நமது அறிவாளிகளின் தனி மனித சுதந்திர உணர்வு சித்தப்பிரமைக்கும் முழுப் பைத்தியத்திற்கும் அவர்களை ஆளாக்கியது. இவ்வாறு தனிமனிதம் என்ற கொள்கையுடையவர்களது உள்ளங்கள் ஒடிந்து, மனம் குழம்பி, உயர்வு எண்ணங்கள் குன்றி பள்ளத்தில் வீழ்ந்து விட்டனர். இவர்கள் மனநோயால் பீடிக்கப்பட்டு உளறுகிறார்கள். தங்கள் மீது கழிவிரக்கம் கொண்டு கதறுகிறார்கள். தங்கள் மீது பிறரும் இரக்கம்காட்டவேண்டும் என்று உரக்கக் கூவுகிறார்கள்.

ஆம்! இவர்கள்தான் தங்களைத் தாங்களே காதலித்தவர்கள். பிறரைக் காதலிக்கத் தெரியாதவர்கள். இன்று இவர்களுக்குப் பிறர் அனுதாபம் தேவையாம். மனிதர் கூட்டத்தை மந்தையென்று கேலி செய்தவர்களுக்கு இம்மந்தையின் இரக்கம் வேண்டுமாம் நந

அந்தவகையில், பிராய்டிசம் என்பது சமுதாயத்தின் புறநிலையதார்த்தத்தை மறுத்ததுடன் விஞ்ஞானத்தின் பொதுவான விதிகளையும் ஆய்வு முறைகளையும் கைவிட்டு, அகவயமான கற்பனை முறைகளினூடாக தமது கொள்கைகளை உருவாக்கியது. பூர்சுவா உலகம் தமக்கு சாதகமான வகையில் இக் கொள்கையைப் பயன்படுத்திக் கொண்டது. சுரண்டுவோருக்கும் சுரண்டப்படுவோருக்கும் இடையிலான வர்க்க போராட்டத்தை நிராகரிக்கும் வகையில் இக் கொள்கையை இவர்கள் பயன்படுத்திக் கொண்டனர். இவர்களின் கலை இலக்கிய பண்பாட்டு கொள்கைகளையும் கூக்குரலையும் ஆழமாக உற்று நோக்குகின்றபோது சமுதாயத்தில் வாய்ப்பும் வசதியும் பெற்றவர்களின் குரலாகவே அமைந்துள்ளதை நோக்கலாம். இக் கொள்கையின் தாக்கத்தை ஜேம்ஸ் ஜாய்ஸ், ஃபிரான்ஸ், காப்ஃகா, டி.எஸ்.எலியட், சார்த்தே, ஹைடக்கர், காமஸ் முதலானோர் படைப்புகளில் காணலாம். தமிழில் சுந்தரராமசாமி, ஜெயமோகன், சா. கந்தசாமி, மு.பொ, தளையசிங்கம், அ. யேசுராசா முதலானோரின் இலக்கிய படைப்புகளில் இதன் பாதிப்பனை அறியமுடியும். சுருங்கக் கூறின் தூய அழகியல் வாதிகள் அறிந்தோ அறியாமலோ மார்க்சிய கொள்கையையும் அதன் நடை முறையையும் தகர்க்கும் வகையில் ஃபிராய்டிசத்தை தமக்கு சாதகமாக பயன்படுத்தி வந்துள்ளனர். எண்பதுகளுக்கு பின்னர் ஏற்பட்ட உலகமய சூழலில், இக் கொள்கை மீள்கண்டு பிடிப்புசெய்யப்பட்டு புதிய வடிவத்துடன் மார்க்சிய எதிர்ப்பனை நிலைநிறுத்தி வருவருகின்றது.

பின் நவீனத்துவம்

பிராய்டிச கொள்கையின் தர்க்க ரீதியான வளர்ச்சியாக பின் நவீனத்துவம் அமைந்துள்ளது. ஒடுக்கப்பட்ட மக்களை பல பிரிவுகளாக பிரிப்பதுடன் அவர்கள் நலன் சார்ந்த போராட்டத்திறற்கு பல எதிரிகளையும் உருவாக்கிக் கொள்கின்றது. தமிழகத்தில் பறையர் சமூகம் சார்ந்த அடையாள அரசியலை பேசும் இரவிக்குமார் போன்றோர் இடைச்சாதியினரை தமக்கு எதிரியாக கருதிய அதேசமயம், காலச்சுவடு போன்ற பார்பனிய சார்பு கும்பல்களுடனுசார்பு கும்பல்களுடனும் இணைந்து செயற்பட்டு வருகின்றனர். இவர்கள் தமக்கு சாதகமான வகையில் அயோத்திதாசரையும் பயன்படுத்திக் கொள்கின்றனர். மறுபுறத்தில் இரட்டைமலை சீனிவாசனைப் போற்றும் அருந்ததியர் சமூகம் தமக்கு எதிரியாக பறையர் சமூகத்தை கருதுகின்றனர். இவ்வகையில் ஒடுக்கப்பட்ட மக்கள் தங்களுக்குள் ஐக்கியப்பட்டு பிரதான எதிரிக்கு எதிராக போராடுவதற்கு பதிலாக நேச சக்திகளுக்கிடையிலான முரண்பாடுகளையும் எதிர்ப்பையும் ஏற்படுத்திக் கொள்கின்றனர். முதலாளித்துவ நாடுகளின் ஆசீர்வாதத்துடன் இத்தகைய கைங்கரியங்கள் நடந்தேறுகின்றன.

இவ்வகையில் அறிவுத்துறையை ஒன்றுடன் ஒன்று இணைத்து அதன் முழுமையை நோக்காமல் கூறுபடுத்திப் பார்க்கும் போக்கு குறித்து எமிலிபேர்ன்ஸ் கூறும் பின்வரும் கருத்து முக்கியமானதாகும்:

“உண்மைகளைத் தனித்தனியே பரிசீலனை செய்வதன் அடிப்படையில் விஞ்ஞான உண்மைகளை ஓரளவு ஸ்தாபிக்க முடியும் என்பதை மார்க்சியம் மறுக்கவில்லை. ஆனால் ஒன்றை ஒன்று சார்ந்து நிற்கும் நிலையில் அவற்றைப் பரிசீலனை செய்தால், அவற்றின் வளர்ச்சியை ஆராய்ந்தால், அளவு குணமாக மாறுவதைப் பரிசீலனை செய்தால் இதிலிருந்து வெளிப்படும் விஞ்ஞான உண்மை நிச்சயமாக அதிக மதிப்புடையதாகவும், அதிக உண்மையானதாகவும் இருக்கும். சமூக விஞ்ஞானத்திற்கு இது ரொம்ப பொருந்தும், ….. நிகழ்காலத்தில் இயங்கும் சமூகத்தைப் பற்றி மாத்திரம் பரிசீலனை செய்யாது (இது மிகவும் முக்கியமானது) சென்ற காலத்தில் அது இயங்கிய முறையையும் உள்முரண்பாடுகளின் பலனாக அது எவ்வாறு வளர்கிறது என்பதையும் பரிசீலனை செய்வதுதான் மார்க்சிய சமூக ஆராய்ச்சிக்கு மதிப்புக் கொடுக்கிறது. நிகழும் நிகழ்ச்சிக்கு மார்க்ஸ் கூறுவதைப்போன்று, நாம் காண விரும்பனால் நம் கண்ணுக்குத் தெரியும், இயக்கம் உகந்த முறையின் போதப்பூர்வமாகச் செயலாற்றச் சந்தர்ப்பம் அளிக்கிறது.”

இயற்கை, சமுதாயம், மனித சிந்தனை இவற்றின் இயக்கப்பாடு பற்றிய பொது விதிகளை விவரிப்பது தத்துவவியம் என்னும் மெய்ஞ்ஞானமாகும். மார்க்ஸிய முதல்வர்கள் மெய்யியல் ரீதியான பொருள் முதல் வாதத்தை மேம்படுத்திய அதே வேளையில் மனித சமுதாயத்தை ஆராய்வதற்கு அதனை பயன்படுத்தினார்கள். பொருள் முதல் வாதக் கருத்தோட்டத்தில் வரலாற்றைக் கண்டறிந்தார்கள். சமுதாய இயக்கப்பாட்டையும் தத்துவவியலையும் ஒன்று சேர்த்தமையால், ஒருமைப்பாடுடைய தத்துவவியலை அவர்கள் உருவாக்க முடிந்தது.( கைலாசபதி க. (1988), சமூகவியலும் இலக்கியமும். நியூசெஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை. பக் . 16.)

பின் நவீனத்துவாதிகள் இயற்கை, சமுதாயம், மனித சிந்தனை ஆகியவற்றின் இயக்கப்பாடு பற்றிப் பொதுவான விதிகளைக் கடைப்படிக்காமையினால் இயற்கை விஞ்ஞானப் பிரிவுகளையும், சமூக விஞ்ஞானத் துறைகளையும் தத்துவ ஞானத்தையும் வேறு வேறாக பிரித்து நோக்கினர். அவர்களது இலக்கிய கொள்கையில் ஆய்வு முறையியல், சமூகவியல், பொருளியல், வரலாறு, அழகியல், மெய்யியல் என்பன தொடர்பற்று நிற்கின்றன. வர்க்க போராட்டம் அவசியமில்லை என்பதற்காக அவர்கள் கூறும் காரணங்கள்:

அமெரிக்காவில் பாட்டாளி வர்க்கம் இல்லை. அங்கு பொருளாதாரத்துறை சேவைத்துறை ((Service sector), தகவல்

சி.சிவசேகரம்

தொடர்புத்துறை மட்டுமே இருப்பதால் அங்கு பாட்டாளிகள் இல்லை. எனவே, உலகில் பாட்டாளி வர்க்கத்திற்கு இடமில்லை. எனவே வர்க்கப் போராட்டத்திற்கும் இடமில்லை. உற்பத்தி இல்லை என்றால், வர்க்கப் போராட்டம் இல்லை என்றால், சமூகம் எப்படி இயங்குகிறது என்ற கேள்வி எழும். எனவேதான் அவர்கள் உற்பத்தியும் அதனை சாத்திஎப்படி இயங்குகிறது என்ற கேள்வி எழும். எனவேதான் அவர்கள் உற்பத்தியும் அதனை சாத்தியமாக்கும் பாட்டாளி வர்க்கமும், சமூகப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் வர்க்கப் போராட்டமும் உண்டெனச் சொல்லும் மார்க்சியத் தத்துவத்தை மறுக்கின்றனர். காலாவதியாகிவிட்டது என்கின்றனர். தகவல், நுகர்வு, ஆய்வு ஆகியவை தான் உலகை முன்னெடுத்துச் செல்கின்றன என்கின்றனர்.( சி.சிவசேகரம், கட்டுரையாளர்,(2007) பின் நவீனத்துவம் மாயைகளைக் கட்டவிழ்த்தல், தேசிய கலை இலக்கியப் பேரவை ,கொழும்பு. பக்.71.)

அந்தவகையில் தமிழில் பின்நவீனத்துவ சிந்தனையை முன்வைத்தவர்கள் அதன் அரசியல் குறித்து பேசியதாக தெரியவில்லை. பின்நவீனத்துவத்தின் சாரமாக விளங்குகின்ற பெருங்கதையாடல் கூறுபடுத்தல் என்ற கருத்தியல் உலகமயமாதல் சூழலின் ஊடான கொள்ளைச் சுரண்டலுக்கு துணையாக அமைந்துள்ளது. எல்லாப் புனிதங்களையும், மௌனங்களையும் உடைக்கும் விடுதலைக் கருவியாக பாசாங்கு செய்த இவர்கள் முன் வைத்த மறுவாசிப்பு என்ற அம்சமானது சமுதாயத்தில் மக்கள் சார்பாக காணப்பட்ட உள்ளடக்க கூறுகளை தமக்கு சாதகமான வகையில் மாற்றியமைத்துக் கொள்வதாக அமைந்தது.

அதிகார வர்க்க சிந்தனையின் மேலாதிக்கம், முரண்பாடு என்பனவற்றை திசைத் திருப்பவும், யாவற்கும் மேலாக அதிகார வர்க்கம் எதை செய்ய முனைந்து தோல்வியடைந்ததோ அதனையே நவீனத்துவம் என்ற பெயரில் சாத்தியமாக்கவும் பின் நவீனத்துவம் முனைந்துள்ளது.

Exit mobile version