Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பல்கலைக்கழக மாணவர்கள் எங்கே : அச்சுறுத்தலும் பின்புலமும்

vasanthiகைதான யாழ்.பல்கலைக்கழக மாணவர்களை பொங்கலுக்கு முன்பதாக விடுதலை செய்வதாக உயர்கல்வி அமைச்சரும் இலவசக் கல்வியைத் தனியார்மயப்படுத்தும் நோக்கில் செயல்படுபவருமான எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்திருந்தார். கைதான மாணவர்கள் நால்வரும் ஏன் விடுதலை செய்யப்படவில்லை என்று பல்கலைக்கழக நிர்வாகமோ, தமிழ்த் தலைமைகளோ, புலம் பெயர் அமைப்புக்களோ இதுவரை எந்தக் கோரிக்கையையும் முன்வைக்கவில்லை.

அவரவர் தமது அடையாளங்களுக்காக ஆங்காங்கே போராட்டம் அறிக்கை என்று வெளியிட்டுவிட்டு அடங்கிப் போயுள்ளனர். யாழ்.பல்கலைக்கழகத்தில் மயான அமைதி நிலவுகிறது.

பல்கைலைக்கழக மாணவர்களுக்கு ஆதரவான போராட்டங்கள் என்று முழங்குபவர்கள் தமது அடையாளத்தை உறுதிப்படுத்திக்க்கொள்ளவும் தன்னார்வ நிறுவனங்களின் பின்னல் ஒளிந்துகொண்டும் போராடத் தலைப்படுகிறார்கள்.
மகிந்த ராஜபக்சவின் பாசிச அரசு தனது இனச்சுத்திகரிப்பை வடகிழக்கு தமிழர்கள் மீதும் முஸ்லிம்கள் மீதும் முழுவேகத்தில் கட்டவிழ்த்துவிட்டுள்ளது. மலையகத் தமிழர்களை தொடர்ந்தும் இந்த நூற்றாண்டின் அடிமைகளாகவே பேணிவருகிறது.

ஈழம் பெற்றுத் தருகிறோம் பேர்வளிகள் என்று தமிழ் நாட்டில் கொக்கரித்த இனவாதிகளான வை.கோ, சீமான், நெடுமாறன் வகையறாக்கள் குறைந்தபட்சம் தமிழ் நாட்டு மாணர்வகள் மத்தியிலாவது இந்த பிரச்சனையை எடுத்துச் செல்லவில்லை. அதற்கு அவர்கள் விரும்பியதாகத் தெரியவில்லை. யாருக்கும் பாதிப்பற்ற புலம்பெயர் தமிழர்களை உணர்ச்சிவசப்படுத்தி பணம் பறிக்கும் சில அறிக்கைகளோடு நிறுத்திக்கொண்டனர்.

இந்த நிலையில் தமிழ் மாணவன் பாதுகாப்பாக கல்வி கற்க வேண்டுமானால் தனியார் பல்கலைக்கழகம் ஒன்றையே தெரிவு செய்ய வேண்டிய நிலை ஏற்படும். இதையே எஸ்.பி.திசனாயக்க விரும்புகிறார். தனியார் பல்கலைக்கழகம் தமிழரின் சொத்து என்ற சுலோகத்தோடு புலம்பெயர் தேசிய வியாபார்வைகள் தமது அடுத்த நகர்வை மேற்கொள்ள ஆரம்பித்துவிடுவார்கள்.

இந்த நிலையில் யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் மீதான் ஒடுக்குமுறையும், அவர்களைத் தொடர்ந்தும் அச்சம் தரும் சூழலில் அனாதரவாகப் பேணுவதும், அவர்களுக்கு ஆதரவாக எழக் கூடிய போராட்டங்களைத் தன்னார்வக் குழுக்கள் உள்வாங்கிக் கொள்வதும் இலவசக் கல்வியை அழிப்பதற்கான முனைப்புக்களாகவே கருத முடியும்.

தமிழ் நாட்டின் பிரபல ஊடக வியாபாரியும் புதிய தலைமுறை என்ற தொலைக்காட்சியின் உரிமையாளருமான பச்சைமுத்துவின் மற்றைய மில்லியன்கள் புரளும் வியாபரம் கல்வி.

தமிழகத்தின் அதி உயர்ந்த பணம் வசூலிக்கும் தனியார் பல்கலைக்கழகமான எஸ்.ஆர்.எம் இன் அதிபர் பச்சை முத்து SRM-Lanka-Pvt-Ltd என்ற தனியார் பல்கலைக்கழகங்களுக்கான நிறுவனத்தை ஏற்கனவே ஆரம்பித்துவிட்டார். இந்தியாவில் இவர்களின் நிறுவனங்களின் பட்டியல்.

Nightingale Matriculation Higher Secondary School, Valliammai Polytechnic Institute,SRM Engineering College,SRM College of Nursing and SRM College of Pharmacy,SRM School of Nursing and SRM College of Physiotherapy,SRM Institute of Hotel Management,SRM Arts & Science, SRM Polytechnic Institute,Easwari Engineering College, SRM College of Occupational Therapy, SRM Institute of Management & Technology,Valliammai Engineering College, SRM Institute of Science and Technology,SRM Dental College,SRM Medical College Hospital and Research Centre,SRM Institute of Management and Technology, Modinagar, DelhiChennai Medical College, TrichyInter Disciplinary School of Indian System of Medicine, TRP Engineering College, Trichy,Faculty of Science and Humanities, Vadapalani.

எஸ்.ஆர்.எம் மட்டுமன்றி பல தனியார் கல்வி வியாபாரிகள் .பல்கலைக் கழகங்களைக் குறிவைக்கின்றனர்.

தமிழ் மாணவர்கள் பல்கலைக்கழகங்களில் கல்விகற்பதற்கான அச்சம் தரும் சூழலை ஏற்படுத்துவதானது, கல்வி வியாபாரிகளையும் ஊக்கப்படுத்தும். நிர்வாணமான வியாபாரிகளான தமிழ் நாட்டின் இனவாதிகள் ஒருபோதும் பச்சைமுத்துவின் இலாப வெறிக்கு எதிராகத் திரும்பமாட்டார்கள்.

இன்று யாழ்.பல்கலைக்காகத்தில் ஏற்பட்ட இராணுவ ஒடுக்குமுறையை அடுத்து பச்சைமுத்து குழுமம் தனியார்பல்கலைக் கழகத்திற்கான வேலைகளைத் தீவிரப்படுத்தியுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.

ஆக தமிழ் நாட்டில் இனவாதிகளின் பக்கத்திலிருந்து போராட்டங்களை எதிர்பார்க்க வாய்ப்பில்லை.

புலம் பெயர் நாடுகளில் பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆதரவான அனைத்தையும் புலி வியாபாரிகள் நிராகரித்தனர். இங்கு நான்கு இடதுசாரி அமைப்புக்கள் இணைந்து வெளியிட்ட கண்டன அறிக்கைகளை யாரும் கண்டுகொள்ளவில்லை.

சோனியாவின் கண்களில் ‘லைட்’ டைக் கண்ட சுரேன் சுரேந்திரன் உட்பட்ட அனைத்து தேசிய வியாபாரிகளும் இலங்கை அரசின் தனியார் மயப்படுத்தும் திட்டத்தை ஆதரிப்பார்கள் என்பதில் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை.
இந்த நிலையில் புலிகளின் தவறான அரசியல் நம்பிக்கை வைத்திருந்த தமிழ் நாட்டின் இனவாதிகள், உலகின் ஒடுக்கும் அரசுகள், தன்னார்வ நிறுவனங்கள், புலம் பெயர் தலைமைகள் அனைவரும் மாணவர்களைக் கைவிட்டுவிடுவார்கள் என்பதே உண்மை.

ஐ,எம்.எப் கல்வி தனியார்மயப்படும் வேகம் போதாமல் உள்ளது என்று விசனம் தெரிவித்துள்ளது. அரச பல்கலைக்கழகங்கள் அச்சுறுத்தப்படுவதை ஐ.எம்.எப் உம் அதன் நெறியாளர்களான அமரிக்க ஐரோப்பிய நாடுகளும் வரவேற்பார்கள். தேசியப் போராட்டத்தை கையகப்படுத்தி அழித்துவரும் இலங்கை – புலம்பெயர் தமிழ் மேட்டுக்குடிகளும் தனியார் மயத்தை வரவேற்பார்கள் என்பதில் எந்த ஐயமும் கிடையாது.

இந்த நிலையில் தமது யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் போராட்ட ஆரம்பம் தனியார் கல்விக்கு எதிரானதாகவும், உலகம் முழுவதும் காணப்படும் போராடும் மானவர் மற்றும் மக்கள் பிரிவுகளோடு இணைந்ததாகவும் அமைய வேண்டும்.

தொடர்புடைய பதிவுகள்:

பல்கலைக்கழக மாணவர் போராட்டம் – அழிப்பதற்கு ஆயத்தமாகும் பிழைப்பு வாதிகள் : சபா நாவலன்

யாழ்.பல்கலைக்கழக மாணவர் போராட்டங்கள் தொடர வேண்டுமா?(2) – விஜிதரன் போராட்ட அனுபவங்களிலிருந்து : சபா நாவலன்

யாழ்.பல்கலைக்கழக மாணவர் போராட்டங்கள் தொடர வேண்டுமா? – படிப்பினைகளிலிருந்து..  : சபா நாவலன்

20 வீதமான மாணவர்களே யாழ்.பல்கலைக்கழகத்திற்கு வருகை தந்தனர்

படிப்பதற்காகப் போராடும் போராடுவதற்காகப் படிக்கும் யாழ்.பல்கலைகழக மாணவர்கள்

நாளை  பல்கலைக்கழகம் நடைபெறாவிட்டால்  பதவி துறப்பேன் : துணைவேந்தர்

கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்கவிட்டால் பல்கலைக்கழகத்தை  மூடுவேன் : உயர்கல்வி அமைச்சர் மிரட்டல்

மாணவர்களை  விடுதலை செய்யுங்கள் : FUTA

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் : இலங்கை அரசின் தந்திரோபாய நகர்வு

கைதான பல்கலைக்கழக மாணவர்களும் தேசியக் கூட்டமைப்பின் காட்டிக்கொடுப்பு நாடகமும்

உளவியல் வதைக்கு உள்ளாக்கப்படும் யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள்

Sri Lankan Army control University of Jaffna students- students refused release – but army promises “student rehabilitation”

புதிய தலைமுறை: நடுத்தர வர்க்கத்தின் நாட்டுமருந்து!

 

பொய்யிலே பிறந்து..பொய்யிலே வளர்ந்த…புதிய தலைமுறை பச்சமுத்து&கோ..!

 

Updates on ground situation in Jaffna

 

Exit mobile version