புலிகளின் மையப்பகுதி உறுப்பினரான இவர் நோர்வேக்கு திருமணம் செய்து கொண்டதன் மூலமாகவே நோர்வேக்கு வந்தார் என்று கருதப்படுகிறது.
சர்வதேசபுலனாய்புக் பகுதியில் பயங்கரவாதிகளை வேட்டையாடும் கொலண் குழுவினால் நெடியவனின் வதிவிடம் சட்டவரைமுறைக்குள் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டார். இந்த சோதனைக்குக் காரணம் இவர் புலிகளின் முக்கியமான மையப்பகுதியைக் கொண்டவர் என்றும் பயங்கரவாதத்திற்காக பெருந்தொகையான பணமுதலீடு செய்பவர் என்ற சந்தேகத்தின் பெயரிலேயே இந்த வேட்டை நடந்தது.
நெதலாந்து புலனாய்புப்பிரிவின் தகவல்படி நெடியவன் மில்லியன் கணக்கில் புலிகளுக்குக் முதலிட்டுள்ளார், பங்களித்துள்ளார் என்பதாகும். இதை சுருக்கமாக இப்படி விளங்கிக் கொள்ளலாம். அதாவது நோர்வே வாழ் தமிழர்களின் பணமும், முதலீட்டுக்காக புலிகளின் பணமும் கொலண்டின் ஊடாக மாற்றப்பட்டுள்ளது.
சென்றவருடம் 7 புலிகள் கொலண்டில் பிடிக்கப்பட்டு விசாரிக்கப்பட்டதைத் தொடர்ந்தே இதனுடன் நெடியவனும் சம்பந்தப்பட்டுள்ளார் என்ற காரணத்தினால்; இவரும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
நோர்வேயிய தொலைக்காட்சியான ரிவி 2ன் செய்திப்படி
http://www.tv2nyhetene.no/innenriks/norsk-tamil-i-hemmelige-terroravhoer-3497196.html
கொலண்டின் வேட்டைக் குழுவினால் விசாரிக்கப்பட்டார். ஒரு கொலண் நீதியரசருக்கும் 5 வழக்கறிஞர்களையும் கொண்டகுழு நெடியவனை விசாரித்தது என்ற செய்தி அறியப்படுகிறது.
பயங்கரவாதத்துக்கான பணமுதலீடு காரணமாக 7தமிழர்கள் கொலண்டில் கைது செய்யப்பட்டும் 16க்கு மேற்பட்டவர்கள் விசாரிக்கவும் பட்டுள்ளனர். தேசியப்பாதுகாப்பு இரகசிய இலாகா குறிப்பிடத்தக்க அளவு பெரும்தொகை பணத்தை புலிகள் முதலிட்டுள்ளனர் என்பதை கண்டறிந்துள்ளது.
இதில் 52வயதுடைய கணக்காளர் ஒருவர்தான் கொலண்டுக்கு புலிகளுக்குத் தலைவன் என்பதும் அறியவந்துள்ளது. இந்த நெடியவனை பற்றிய விபரங்களை ஊடகவியலாளருக்குக் கொடுக்க மறுத்த நோர்வே உளவு இலாக கொலண் குழுவிற்கு தாம் உதவினோம் என்பதை தெழிவாக வெளிப்படுத்தியுள்ளனர்.
உலகில் பலநாடுகள் புலிகளை பயங்கரவாதப்பட்டியலில் சேர்த்திருந்தாலும், இராஜதந்திர உறவுகள் காரணமாக நோர்வே இதைச் செய்யவில்லை என்பதை பலர் உணர்ந்திருப்பார்கள். இலங்கை அரசுக்கும் புலிகளுக்கும் இடையில் நடந்த பேச்சு வார்த்தைகளுக்கு நோர்வே அனுசரணையாளர்களாக இருந்ததே இதற்கு முக்கிய காரணம் எனலாம். பலநாடுகளின் கண்களில் புலிகளின் சுயாதீன அசைவுக்குரிய இடமாக நோர்வே இருப்பதாகக் கணிக்கப்பட்டாலும் ஐரோப்பிய ஒன்றிய நடைமுறைகளுக்கு நோர்வேயும் கட்டுப்பட்டு ஆகவேண்டும் என்ற நியதியுள்ளது என்பதை மறக்காது இருப்பது அவசியம்.
எது எப்படி இருந்தாலும் நோர்வே பயங்கரவாதத்துக்கான பணமுதலீடு நெடியவன் குறித்த நிகழ்வுகளை போதியளவு இறுக்கமாகக் கடைப்பிடிக்கும் என்று வெளிவிவகார அமைச்சின் செயலாளர் போல் லொன்செத் குறிப்பிட்டுள்ளார்.
தமிழர் அவை, நாடுகடந்த தமிழீழம் என்று இருபிரிவுகளாக புலிகள் நோர்வேயில் இயங்கிவருகின்றனர். நெடிலன் மறைமுகத்தலைமையின் பின்னாலேயே நோர்வே தமிழர் அவை இயங்குவதாக அறியப்படுகிறது.
2003 இலைதளிர்காலத்தில் நோர்வேயின் சோசலிச இடதுசாரிக்கட்சி, எரிச் சூல்கெய்மைச் சந்திக்க பாராளுமன்றம் சென்ற புலிகளின் குழுவில் நெடிலன் பின்வரிசையில் நிற்கும் படத்தின் இணைப்பை கீழே பார்க்கவும்:
வெளிநாட்டு பாதுகாப்பு அமைச்சின் வலதுசாரிக்கட்சியைச் சேர்ந்த பேத்தர் எஸ் கித்மார்க் நெடிலன்குறித்த செய்திபற்றி மிக எதிர்மையான கருத்துக்களை வெளியிட்டார். இப்படியான பயங்கரவாதத்திற்கான பணமுதலீடுகள் இலங்கையில் ஒரு ஆயுதப்போராட்டத்துக்கு வழிவகுக்கும் என்பது குறிப்பிட்டிருந்தார். அத்துடன் புலிகளின் சுதந்திரமான அசைவுகளும் சுதந்திரமான பயங்கரவாத முதலீடுகளும் அயல்நாடுகளுடன் முரண்டநேருகிறது என்றும் இப்படியான விடயங்கள் மீண்டும் பொதுமக்களை அழிக்கும் ஒரு ஆயுதப்போராட்டத்துக்கு வளிவகுக்கும் என்று மேலும் குறிப்பிட்டிருந்தார்.