1992 ஆம் ஆண்டிலிருந்து முதலாளிமார் சம்மேளனத்திற்கும் தொழிற்சங்கங்குளுக்கிடையிலும் கைச்சாத்திடப்படும் கூட்டு ஒப்பந்தம் மூலம் தொழிலாளர்களின் சம்பளம் நிர்னணியக்கப்பட்டு வருகிறது.; தற்போது, 21 கம்பனிகளின் பிரதிநிதிகளைக் கொண்ட முதலாளிமார் சம்மளேனத்திற்கும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், இலங்கைத் தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம், பெருந்தோட்டத் தொழிற்சங்க கூட்டமைப்பு என்பவற்றிற்கிடையில் கைச்சாத்திடப்படும் கூட்டு ஒப்பந்தத்தின் மூலம் தொழிலாளர்களின் சம்பளம் தீர்மானிக்கப்படுகிறது. இந்த கூட்டு ஒப்பந்தத்தின் மூலம் நிபந்தனை வேலை நாள் அடிப்படையில் சம்பளம், அலவன்ஸ் என்பன நிர்ணயிக்கப்பட்டு வருகிறது நிர்ணயிக்கப்படும் சம்பளம் இரண்டாண்டுகளுக்கு அமுல் படுத்தப்படும்.
இறுதியாக 2009 ஆம் ஆண்டில் செய்து கொள்ளப்பட்ட கூட்டு ஒப்பந்தத்தில், அடிப்படைச் சம்பளம் 285 ரூபாவும் தேயிலை விற்பனை மூலமாக 30 ரூபாவும் ஊக்குவிப்பு அலவன்ஸாக 90 ரூபாவுமாக மொத்தம் 405 ரூபா சம்பளம் வழங்கப்பட வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. தோட்டம் 100 வீத வேலை நாட்களை வழங்கினால் 75 வீத வேலை நாட்கள் வேலை செய்தால் மாத்திரமே அலவன்சுடன் கூடிய 405 ரூபா முழுச் சம்பளத்தினையும் பெறமுடியும். ஒரு நாள் வேலை குறைந்தாலும் முழுச்சம்பளத்தினையும் பெறமுடியாது.
இந்தக் கூட்டு ஒப்பந்தம் மூலம் தொழிலாளர் சம்பளம் நிர்ணயிக்கப்படும் முறையே தொழிலாளர்களுக்குப் பாதகமானதாக அமைந்திருக்கிறது என்ற குற்றச்சாட்டு நீண்டகாலமாக முன்வைக்கப்பட்டு வருகிறது. தொழிலாளர் விடுதலை முன்னணியின் தலைவர் டி. அய்யாத்துரை, அரசாங்கம் 1992 ஆம் ஆண்டு பெருந்தோட்டங்களை தனியார் மயப்படுத்தல் திட்டத்தின் மூலம் 23 கம்பனிகளுக்கு வழங்க முன்வந்தது. அப்போது பெரும்பாலான தொழிற்சங்கங்கள் எதிர்ப்புத் தெரிவித்திருந்த நிலையில் அரசாங்க ஆதரவு தொழிற்சங்களான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், இலங்கைத் தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் ஆகியவற்றின் ஆதரவோடு அரசாங்கம் தோட்டங்களை தனியார் மயப்படுத்தியது.
அந்தச் சமயத்தில் அரசாங்கமும் பெருந்தோட்டக் கம்பனிகளும் மேற்குறித்த இரண்டு தொழிற்சங்கங்களும் ஒரு கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டன. அதிலிருந்தே தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பான விடயங்கள் கூட்டு ஒப்பந்தத்தின் மூலம் தீர்மானிக்கப்பட்டு வருகிறது எனக்குறிப்பிட்டிருக்கிறார்.
1992 ஆம் ஆண்டு முதல் நடைமுறையிலிருந்து வரும் கூட்டு ஒப்பந்தம் மூலம், நிபந்தனை வேலை நாள் அடிப்படையில் சம்பளம், அலவன்ஸ் என்பன நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. “கம்பனிகளின் இலாபத்தை முன்னிட்டே இவ்வாறு நிர்ணயிக்கப்பட்டு வருகிறது” எனக் குறிப்பிட்டிருக்கிறார் தொழிலாளர் விடுதலை முன்னணியின் தலைவர் டி. அய்யாத்துரை. இதனால் நாட் சம்பளம், குறைந்த பட்ச சம்பளம், அரசாங்க தொழிலாளர் நாட் சம்பளம் என்ற அடிப்படையில் தொழிலாளர் சம்பளம் தீர்மானிக்கப்படும் முறை மாற்றப்பட்டுள்ளது. அத்துடன் 1942 ஆம் ஆண்டிலிருந்து சம்பள நிர்ணய சபை மூலமாக கிடைத்து வந்த வாழ்க்கைச் செலவு உயர்வுப் புள்ளி அலவன்ஸ் நிறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் பல தோட்ட நிர்வாகங்கள் குறித்த வேலை நாட்களை வழங்காததுடன் 30 ரூபா ஊக்குவிப்பு அலவன்ஸையும் வழங்காதிருந்தன.
தற்போதைக்கு தொழிலாளர்களுக்கான புதிய சம்பளத்தை நிர்ணயிப்பதற்கான புதிய கூட்டு ஒப்பந்தம் ஒன்றை செய்துகொள்வதற்கான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்படவேண்டியுள்ளது.
தொழிலார்கள் தரப்பிலிருந்து அதிகரித்;துள்ள வாழ்க்கைச் செலவினை சமாளிக்கக் கூடியவகையில் சம்பளம் அதிகரிப்பு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. பல்வேறு தொழிற் சங்கங்களும் அரசியல் கட்சிகளும் பல சம்பள முறைகளை பரிந்துரைத்துள்ளார்கள். ஆனால் முதலாளிமார் சம்மேளனமோ, தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் வறுமை நிலை குறைந்து வந்திருக்கிறது, பல அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு தொழிலாளர்களுடைய சமூக நிலை உயர்வடைந்திருக்கிறது என்றவாறான பரப்புரைகளைச் செய்ய ஆரம்பித்துள்ளது. அதே வேளை கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுகின்ற தொழிற்சங்கள், தற்போதைக்கு தொழிலாளர்களுக்கான எந்த உறுதி மொழிகளும் வழங்கமுடியாத நிலையில்; இந்தப் “பேச்சுவார்த்தைகளுக்கு” செல்லத் தயாரகிவருகிறாhர்கள்
பெருந்தோட்டத் தொழிற்சங்க கூட்டமைப்பின் செயலாளர் ஓ.ஏ.இராமையா, இணக்கப்பாட்டுக்கு வரும் வரை பேச்சு வார்தைகள் தொடரும். எனவே சம்பளத்தொகை குறித்து இப்போது எதுவும் கூறமுடியாது” எனத் தெரிவித்திருக்கிறார்.
முத்து சிவலிங்கத்தினுடைய கூற்றிலிருந்து தொழிலாளர்களின் சம்பளத்தினை நிர்ணயிப்பதில் முதலாளிமார் சம்ளேம் வலுவான பாத்திரத்தினை வகிப்பதையே அவதானிக்க முடிகிறது. ஓ.ஏ.இராமையாவினுடைய கூற்றும் எந்த நம்பிக்கைகளயும் ஏற்படுத்துவனவாக இல்லை.
இலங்கைத் தேசிய தோட்டத் தொழிலாளர் சங்க செயலாளர் கே.வேலாயுதம், “இம்முறை பேச்சுவார்த்தைகளின் போது கடந்த முறை மேற்கொள்ளப்பட்ட கூட்டு ஒப்பந்தத்தில் அமுல் படுத்தப்படாத பல விடயங்கள் குறித்து நாம் தீவிரமாகப் பரிசீலிப்போம். முதலாளிமார் சம்மேளனம் சில விடயங்களில் பண்பாளர்களாக நடந்து கொள்ளவில்லை” எனக்குறிப்பிட்டிருக்கிறார். கே.வேலாயுதம் அவர்களுடைய கருத்திலிருந்து புதிய சம்பளத்தை நிரணயிப்பதற்கு அப்பாலான பல பிரச்சினைகளையும் பேசித்தீர்மானிக்க வேண்டியிருப்பது புலனாகிறது.
கே.வேலாயுதம், முதலில் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட தொழிற்சங்கங்களுக்கிடையில் கலந்துரையாடல் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன் பின்பே முதலாளிமார் சம்மேளனத்துடன் கலந்துரையாடலுக்குச் செல்ல வேண்டியுள்ளது எனக்குறிப்பிட்டிருக்கிறார். ஆயினும் இகக்லந்துரையடல் குறித்து பாரிய எதிர்பார்புகள் எதுவும் வெளியிடப்படவில்லை.
கூட்டு ஒப்பந்தந்தத்தில் கைச்சாத்திடாத தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பாக பல கருத்தக்ளை முன்வைக்கத் தொடங்கியிருக்கிறார்கள். அவர்களிடையேயும் புதிய சம்பளம் தொடர்பாக கருத்து ஒருமிப்பு ஏற்படவில்லை. அதே வேளை தொழிலாளர்கள் மத்தியிலான கலந்துரையாடல்கள் நடத்தப்படாத நிலையே காணப்படுகிறது.
முதலாளிமார் சம்மேளனம் மற்றும் தொழிற்சங்கங்களின் கூட்டு ஒப்பந்தத்தின் மூலம் தொழிலாளர்களுக்கு இதுவரை நன்மைகள் கிடைக்கவில்லை என்பதே கடந்த கால அனுபவம்.