Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தொடரும் அரசியல் வெற்றிடத்தில் …….. அடையாளாஅட்டை என்ற கேலிக்கூத்து : ஞானசுந்தரம் மனோகரன்

ஈழத்தில் புலிகளின் போராட்ட வழிமுறை தோல்வியைச் சந்தித்த போதும், புலம் பெயர் நாடுகளில் புலிகளைச் சார்ந்த அமைப்புக்கள் தோல்வியடந்த அதே அரசியலை முன்னெடுக்க முயல்கின்றன. அழிக்கப்பட்ட தலைமை முப்பது வருடங்களைப் பின்னோக்கிய அரசியல் வெற்றிடத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இரண்டாவது மூன்றாவது மட்டத்திலான தலைமை வரை அழிவைச் சந்திருக்கிறது. புலிகள் ஏகத்தலைமையை ஏற்றுக்கொண்ட காலத்திலிருந்து மட்டுமல்ல, தேசிய விடுதலை இயக்கங்கள் இராணுவக் குழுக்களாக உருமாற்றம் பெற்ற காலத்திலிருந்தே இந்த அழிவரசியல் ஆரம்பமாகிவிட்டது. இன்று அரசியல் வெற்றிடத்தைத் தவறுகளிலிருந்து கற்றுக்கொண்டு நிரப்புவதற்குப் பதிலீடாக அதே புலிகளின் பழமைவாத அரசியலை முன்வைக்கிறார்கள்.
தமது சமூக வாழ்வைத் தக்கவைத்துக்கொள்ளும் நோக்கிலும், புலம் பெயர் நாடுகளில் தமது அடையாளத்தை நிலைனாட்டும் நோக்கிலும், வெறுமனே வியாபார நோக்கிலும் மூன்று வகையான கூறுகளின் ஒருங்கிணைவே இங்குள்ள புலம் பெயர் புலி அரசியலின் தொடர்ச்சி.
கடந்தகாலங்களில் புலம்பெயர்நாடுகளில் வெறுமனே தலைமை வழிபாடும், வெறும் தேசியத் தேவாரமும் பாடிய சக்திகள் ,இன்னும் புலம்பெயர்நாடுகளில் உள்ள கோவில் ,மற்றும் தமிழ்பாடசாலைகளிலும் ஏதோ விதத்தில் அதிகாரம் செலுத்திக்கொண்டுதான்
இவர்களும் புலம்பெயர் கட்டமைப்புகளும் சேர்ந்துதான் வட்டுக்கோட்டை வாக்கெடுப்பு, நாடுகடந்ததமிழீழ வாக்கெடுப்பு என்று பெரும்பணத்தை செலவழித்து,பெரும் கேலிக்கூத்தாடியவர்கள்.
மேற்கு நாடுகள் முழுவதிலும் எந்த அடிப்படை அரசியல் திட்டமுமின்றி மக்களின் பணத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு முன்னெடுக்கப்பட்ட இந்த இந்த நாடகங்களின் வழியாக அப்பாவிகளை இன்னமும் ஏமாற்றிக்கொண்டு தான் இருக்கின்றார்கள்.
இவர்கள் மக்களை ஏமாற்றுவதற்கென்றே சில அரசியல் சுலோகங்களை வைத்திருக்கிறார்கள். பிராபகரனை கடவுள் என்ற எல்லைவரை மறுபடி மறுபடி பிரச்சாரம் செய்தல், புலிகள் மீதான கண்மூடித்தனமான விசுவாசம் என்பன மட்டும் தான் இவர்களின் குறிக்கோள். இலங்கை அரசின் அரசியலைக் கூட பிரபாகரன் மற்றும் புலிகள் மீதான பற்று என்ற முழக்கங்களின் கீழே மிக இலகுவாக நடத்திவிடலாம். இவர்களுக்கு அரசியல் என்பது கிடையாது.

இலங்கை அரசோடு உல்லாசமாக உலாவரும் கே.பி உருவாக்கிய நாடுகடந்த தமிழீழம் இதுவரைக்கும் இலங்கை அரசிற்கு எதிராக எந்தக் காத்திரமான நடவடிக்கையும் மேற்கொண்டதில்லை. குறைந்த பட்சம் ராஜபக்ச அரசு போர்க்குற்றவாளி என்பதை ஆவணப்படுத்தும் காத்திரமான ஆதாரத்தை உலக மக்கள் முன்வைக்க இவர்கள் ஏதாவது நடவடிக்கை மேற்கொண்டிருக்கலாம்.
காலத்திற்குக் காலம் இலங்கை அரசிற்கு பாதிப்பு ஏதுமின்றி அதிரடியாக மக்கள் முன் தோன்றி, சில நாடகங்களை அரங்கேற்றுவார்கள். பாராளுமன்றத் தேர்தல், பிரதமமந்திரி தெரிவு, மஞ்சள் நிற பட்டி குற்றிக்கொள்ளல், புலிக்கொடி பறக்கவிடுதல், கனவான்கள் போல உடையணிதல் போன்ற இன்னோரன்ன நாடகப் பாணியிலான நிகழ்வுகளை அரங்கேற்றுவார்கள்.
இவற்றிற்கெல்லாம் சிகரம் வைத்தால் போல எல்லா அதிகார அமைப்புக்களும் மேற்கொள்வதைப்போல புலம் பெயர் தமிழ்ர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்போகிறார்களாம்! நமது எதிர்காலச் சந்ததி இந்தக் கேலிக் கூத்தையெல்லாம் கண்டு அவமானமடையும் என்பதை எண்ணிப்பார்க்க வேதனை மேலிடுகிறது.
இந்த நாடுகடந்ததமிழீழத்தினர் பழைய பாணியில் வெறும் நப்பிக்கையை மட்டும் ஊட்டி கலர்,கொடி,சின்னம்.தேசியஅடையாளஅட்டை என்று புலம்பெயர்மக்களை முட்டாள் ஆக்க முற்படுகின்றார்கள். புலிகளால் மறுக்கப்பட்ட,அழிக்கப்பட, அரசியலை பார்க்க தகுதி இல்லாத இவர்கள் தேசியத்தின் பெயரில் புலம் பெயர்மக்களுக்கு மதவாதிகளைப்போல, பொய்யான நப்பிக்கையை மட்டும் கொடுக்க முற்படுகின்றார்கள்.

இவர்கள் இதற்காக பிரதமர்,துணைப்பிரதமர்.மற்றும் அமைச்சர்கள் எல்லாம் உருவாக்கிஉள்ளார்கள். இவர்கள் அதிகாரம் செலுத்த முன்புஇருந்த கட்டமைபுகளைத்தான் கட்டமுற்படுகின்றார்கள்.இவர்களுக்கு முற்பது வருடங்களாக இருந்த கட்டமைப்பு, எப்படி இருந்த இடம் இல்லாமல்போனது என்பதை உணரமுற்படவுமில்லை,அதை ஒட்டியதேடலும்மில்லை அனாலும் இவர்களிடம் தேசியப்பிரச்சனைக்கு வெறும் அடையளசசின்னக்களின் ஊடாகவும்,உணர்ச்சிமயமாகவும் மக்களுக்கு காட்டி ஏமாற்ற முற்படுகின்ரர்கள்.
இத்தகைய செயற்பாடானது ஒருபெரும் அரசியல் வெறுமையை உருவாக்கும்.அதே நேரத்தில் புலம்பெயர் சமூகத்தில் உள்ள முன்னேரியபிரிவினர்கள் அல்லது மாற்று புரச்சிகரசக்திகளும் இதற்கான காரணிகள் என்பதையும் புரிந்துகொள்ளவேண்டும்.இந்த முன்னேறிய பிரிவினர்கள் புலம் பெயர் நாட்டில் இதுவரை எந்த முன்னேற்றமான நடவடிக்கையையும் முன்னெடுக்கவில்லை என்பதையும் பார்க்கவேண்டும்.
முன்னேரிய பிரிவினரும் மக்கள் பற்றுள்ளவர்களும் இதை முன்னெடுத்தால் இலங்கை அரசு சார்ந்த உதிரிகள் கூட்டமும், புலி சார் அடிப்படை வாதிகளுடன் இணைந்து தாக்குதல் நடத்துகிறார்கள்.
இனியாவது இந்த அரசியலற்ற அதிகாரத்தனமான கூட்டத்தை புலம்பெயர் அரசியலில் இருந்து அகற்ற முற்படவேண்டும். சிறலங்கா அரசானது தமிழ்மக்கள் ஒரு தேசியஇனம் என்ற அடையாளத்தை இல்லாது அழிப்பதின் மூலமாக தேசியப்பிரச்சினைக்கு “தீர்வுகண்டு” கொண்டு இருக்கின்றது. ஆனால் புலம்பெயர் சக்திகளோ தோற்றுப்போன,அரசியல் அற்ற கட்டம்ப்புக்களை கட்டமுற்பட்டுக்கொண்டு ,அடையாளஅட்டை கொடுத்துக்கொண்டு இருக்கின்றார்கள். ……….

Exit mobile version