தேவியன், அப்பன், கோபி என்ற மூன்று விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் மீண்டும் புலிகள் அமைப்பை மீளக் கட்டியமைக்க முற்பட்ட வேளையில் இலங்கை அரச படைகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்கள் என்ற சம்பவத்தைக் காட்டி இலங்கை அரசு வடக்கிலும் கிழக்கிலும் இராணுவத்தைக் குவித்து வருகிறது. முழுக்க முழுக்க வியாபார நோக்கங்களுக்காகவே செயற்படும் பொறுப்புணர்வும் மக்கள் பற்றும் இல்லாத ஊடகங்கள் இது குறித்து கற்பனைக் கதைகளையும் கட்டுக்கதைகளையும் அடுக்கி வருகின்றன. இலங்கை அரசு மேற்கு அரசுகளை ஏமாற்றுவதற்காக இப்படி ஒரு சம்பவத்தைத் திட்டமிட்டு நடத்தியதாகவும் அதற்கு மேற்குலகம் என்ற ‘பால் குடி பாப்பா’ ஏமாற்றப்பட்டதாகவும் தமது அரசியல் கோமாளித்தனத்தை நம்புமாறு மக்களைக் கோருகின்றனர்.
மக்களுக்கு உண்மைகளை மறைப்பதையே ‘தேசிய’ ஊடகத் தர்மமம் என்று வரித்துக்கொண்டுள்ள பண வெறிகொண்ட புலம் பெயர் வியாபாரிகள் நடத்தும் நாடகம் இன்னும் பல அழிவுகளை ஏற்படுத்தவல்லது.
இந்த்த மூவரதும் கொலையில் நேரடித் தொடர்பானவர்கள்:
1. இலங்கை அரசு.
2. இந்த்திய அரசு.
3. தலைமைச் செயலகம்.
2009 ஆம் ஆண்டு வன்னிப் படுகொலைகள் முடிந்த்த பின்னர், தேவியான் அல்லது தெய்வீகன் என்பவர் மதுரைப் பகுதியில் வேறு சிலரோடு தங்கியிருந்த்தார். ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடியே தான் மடிந்த்துபோக வேண்டும் என்ற உறுதி கொண்டிருந்த்த இவர் வெளி நாட்டிற்குச் சென்று பாதுகாப்பாக வாழ்வதற்கான எல்லா வாய்ப்புக்களையும் நிராகரித்துள்ளர். இவரோடு தொடர்புகொண்டிருந்த்த தலைமைச் செயலகம், தாம் அடுத்த கட்டப் போராட்டத்தை நடத்தப் போவதாக கூறியிருந்தனர். ஆனால் அவர்கள் சொன்ன அடுத்தகட்டப் போராட்டம் இந்திய உளவுப் படைகளின் கையிலிருந்தது. மதுரையிலிருந்த்த தெய்வீகனை கேரளாவிற்குக் இந்த்திய உளவுப் பிரிவினர் கூட்டிச் சென்றதை தலைமைச் செயலகம் அறிந்த்து வைத்திருந்தது. இவ்வாறு ஒரு சம்பவம் நடைபெறுகிறது என்பதை நீண்ட காலத்தின் முன்பே சாத்திரி என்ற முன்னை நாள் புலி உறுப்பினர் தனது பதிவுகளில் எழுதியிருந்தார்.
கோபி மற்றும் அப்பன் போன்றவர்கள் குறித்த ‘முழுமையான’ தகவல்கள் இன்னும் கிடைக்கவில்லை. எது எவ்வாறாயினும் இவர்கள் முன்னரே கைது செய்யப்பட்டு மாங்குளம் முகாமில் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர் என்றும், தெய்வீகனோடு சேர்த்துக் கொல்லப்பட்டனர் என்பதும் நம்பகமற்ற கட்டுக் கதைகள்.
தெய்வீகனையும் ஏனைய இரண்டு போராளிகளும் மீண்டும் போராட வேண்டும் என அப்பாவித்தனமாக இந்திய அரசையும் அதன் உளவுத்துறையையும் நம்பி கொலையுண்டு போனார்கள் என்பதே தரவுகள் சொல்லும் உண்மையாகும்.
பொதுவாக போராட்டங்கள் அழிக்கப்பட்ட பின்னர் மேலும் போராடக்கூடியவர்களை அடையாளம் காண்பட்தும் அவர்களை அழிப்பதும் அரசுகளின் வழமையான நடைமுறை.
இலங்கையில் தெய்வீகனையும் ஏனைய இருவரும் தொடர்புகொண்ட பலர் இன்னும் சிறையிலேயே வைக்கப்பட்டுள்ளனர். ஆனால் இந்த் மூவரும் கைது செய்யப்படக்கூடிய சாத்தியங்கள் இருந்தும் இலங்கை இராணுவம் அவர்களை அழித்துள்ளது. அதற்கான காரணம் உளவுத்துறையின் கட்டுப்பாட்டில் தம்மை அறியாமலேயே உபடுத்தப்பட்ட இருவரிடமிருந்தும் மேலதிகத் தகவல்களைப் பெற்றுக்கொள்ளவேண்டிய அவசியம் இருந்திருக்கவில்லை. அதே வேளை இவர்கள் தொடர்புகொண்ட ஏனையோரிடமிருந்து தகவல்களைப் பெற்றுக்கொள்ள இராணுவம் முயற்சிக்கிறது என்பது தெளிவாகின்றது.
நெடியவன் என்பவர் தலைமைச் செயலகத்திற்கு எதிரணியைச் சார்ந்தவர் என்பதை இலங்கை அரசு அறியாமலிருக்க வாய்ப்பில்லை. எனினும், மூவரும் ‘நெடியவன் குழுவைச்’ சார்ந்தவர்கள் என்பதை இலங்கை அரசு அறிவித்ததற்கான காரணங்கள் சந்தேகத்திற்குரியவை.
தலைமைச் செயலகம் அதன் எதிரணியான அனைத்துலகச் செயலகத்துடன் ஒப்பிடும் போது புலம்பெயர் மக்கள் மத்தியில் செல்வாக்கிழந்துள்ளது. இலங்கையில் தாக்குதல் ஒன்று நடைபெறுமானால் தனது செல்வாகை மீட்கலாம் என்பது தலைமைச் செயலகத்தின் அனுமானமாக இருந்திருக்கலாம்.
மூவரும் அனைத்துலகச் செயலகம் சார்பானவர்கள் என்பதை வெளியில் கூறினால் தமது அரசியல் பிழைப்பிற்கு பாதிப்பு ஏற்படலாம் என்பதை அனுமானித்துக்கொண்ட அனைத்துலகச் செயலகம் சார்பானவர்கள், இப் படுகொலை தொடர்பான புதிய புனைகதைகளை கட்டவிழ்த்துவிட்டுள்ளனர். பிரபாகரன் உயிருடன் வாழ்கிறார் என்று அவரை அனாதையாக்கிய பொய்யிலிருந்து இன்று வரை இவ்வாறே இக்குழுக்களும், இவர்கள் சார்ந்த ஊடகங்களும் மக்களை மந்தைகளாக்கி தம்மை மேய்ப்பவர்களாக்கியுள்ளன.
ஆயிரம் மைல்களுக்கு அப்பாலிருக்கும் இலங்கையில் நடைபெறும் நாளந்த சமூக அரசியல் நிகழ்வுகளை தமது பிழைபிற்காகப் பயன்படுத்தும் இக்குழுக்களுக்கும் வாழ்வதற்காகப் போராடும் மக்களுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது.
வன்னியில் நடைபெற்ற இனப்படுகொலையோடு புலிகள் அழிக்கப்பட்ட பின்னரே இலங்கையில் அரசிற்கெதிரான மக்கள் போராட்டங்கள் தலதூக்க ஆரம்பித்துள்ளன. கடந்த நான்கு ஆண்டுகளில் வடக்கிலும் கிழக்கிலும் நூற்றுக்கணக்கான போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. பல போராட்டங்கள் ‘சாணக்கிய சம்பந்தன்’ குழுவின் தலையீடில்லாமலே நடைபெற்றுள்ளன. முஸ்லீம் தமிழர்கள் பல போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். மலையகத்தமிழர்கள் மத்தியில் போராட்டங்கள் எழுகின்றன.
சிங்கள மக்கள் மத்தியில் நடைபெற்ற மூன்று முக்கிய போராட்டங்களில் அரசபடைகள் துப்பாக்கிப் பிரையோகம் நடத்தியுள்ளன. ஒரு போராட்டத்தில் மக்களால் தாக்கப்பட்ட போலீஸ் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். கடந்த முப்பது வருடங்களில் காணப்படாத அளவிற்கு இலங்கை அரசிற்கு எதிரான மக்களின் தன்னெழுச்சியான போராட்டங்கள் தலையெடுத்துள்ளன.
இப் போராட்டங்களை ஒன்றோடொன்று தொடர்பு படுத்துவதும், அதற்கான அரசியல் தலைமை தோற்றுவிக்கப்படுவதும், அதனூடாக சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டம் வென்றெடுக்கபடுவதும் அவசியமானதாகும்.
இந்த அரசியலின் ஊடாக மக்கள் அணிதிரட்டப்பட்டால், அதன் வளர்ச்சி தற்காப்பு யுத்தமாக வளர்ச்சியடையும்.
அவ்வாறான வளர்ச்சியைத் தடுப்பதற்கு ராஜபக்ச அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள்:
1. புலிகள் மீண்டுள்ளார்கள் எனவும் மீண்டும் நாட்டைப் பாதுகாக்க வேண்டும் என சிங்கள மக்களிற்கும் கூறுவது.
2. சிங்கள பௌத்த பாசிசத்தை வலுப்படுத்தும் சிறுபான்மைத் தேசிய இனங்கள் மீதான தாக்குதல்களை அதிகப்படுத்துவது.
3. ஐ.நாவும் மேற்கு ஏகாதிபத்தியங்களும் தன்னைத் தூக்கில் போடப்போகிறார்கள் எனச் சிங்கள மக்களை ஏமாற்றுவது.
தமது பிழைப்புவாத இருப்பிற்காக புலம்பெயர் அமைப்புக்களும் ஏனைய தமிழ் இனவாத அமைப்புக்களும் ராஜபக்ச அரசிற்கு எதிரான மக்களின் போராட்டத்தின் வளர்ச்சியைத் தடுக்கின்றன.
வளர்ச்சியைத் தடுப்பதற்கு இவ்வமைப்புக்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள்:
1. புலிகள் மீட்சிபெறுவார்கள் என்றும் மீண்டும் தாம் அதே வழிமுறைகளில் போராட்டத்தை முன்னெடுக்கப் போகின்றோம் என்றும் சிங்கள மற்றும் தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல உலகின் ஜனநாயக முற்போக்கு சக்திகளுக்கும் கூறுவது.
2. சிங்கள பௌத்த பாசிசத்தை வலுப்படுத்தும் வகையில் வட-கிழக்குத் தமிழர்கள் அல்லத சிறுபான்மைத் தேசிய இனங்களை எதிரிகளாக்குவதும், போராடும் சிங்கள உழைக்கும் மக்களை எதிரிகளாக்குவதும்.
3. ஐ.நா உம் மேற்கு ஏகாதிபத்தியங்களும் ராஜபக்சவைத் தூக்கில் போடப்போகிறார்கள் என்று தமிழ் மக்களை ஏமாற்றி அவர்கள் முன்னெடுக்கக்கூடிய போராட்டங்களை மட்டுப்படுத்தி அனைத்து மாற்று வழிகளையும் மூடிவிடுவது.
இந்த வகையிலேயே மூவரது கொலை ராஜபக்ச பேரினவாத அரசிற்கும் அதேவேளை புலம்பெயர் அமைப்புக்களுக்கும் தீனி போடுகிறது. இலங்கையில் தேசிய இனங்கள் பிரிந்து செல்லும் உரிமைக்கான போராட்டம் தவிர்க்க முடியாத உடனடி முன் நிபந்தனை. அப்போராட்டம் பிழைப்புவாதிகளின் கோரப்பிடியிலிருந்து விடுவிக்கப்படுவதும் மக்கள் சார்ந்த அரசியல் இயக்கத்தின் தலைமை உறுதிப்படுத்தப்படுவதும் இன்று அவசியமானதும் அவசரமானதுமாகும். இந்த உண்மை புரிந்துகொள்ளப்பட்டிருந்தால் வீரம் மிக்க மூன்று போராளிகளதும் விலைமதிப்பற்ற உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கும்.