Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தேர்தல் கூறும் செய்தி : நரசிம்மா

ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் தென்னிலங்கையில் வியப்பை ஏற்படுத்தவில்லை. அவ்வெற்றியை உறுதிப்படுத்த மகிந்த ராஜபக்ச முகாம் கையாண்ட உபாயங்கள் பல சட்டவிரோதமானவையும்முறைகேடானவையும் என்பதில் எவருக்கும் மறுப்பிருக்காது.மக்கள் அவ்வாறான ஒழுங்கீனங்கட்குப் பழக்கப்பட்டுவிட்டனர் என்றுங்கூறலாம். எனினும்,தேர்தல்’பயங்கரவாதத்திற்கெதிரானபோரில்’வெற்றிக்கு

உரிமைகோருவதையேமுதன்மைப்படுத்தியதையும்,ஊழல்,குடும்பஆதிக்கம்,

குற்றச்செயல்களின்அதிகரிப்பு,சமூகவன்முறை,சனநாயகமறுப்பு,அதிகாரத்துஸ்த்

பிரயோகம் பற்றிய குற்றச்சாட்டுக்களைவிட்டால், கொள்கை அடிப்படையில் எந்தவேறுபாடுகளையும் கொண்டிராததையும் நோக்கினால் மக்கள் முன்னிருந்த தெரிவு உண்மையில் அற்பமானதே. ராஜபக்ச ஆட்சியில் நகரங்களில் மக்கள் துன்பப்பட்ட அளவுக்கும் கிராமங்களில் இன்னமும் துன்பப்படவில்லை. ஜே.வி.பி, யூ.என்,பி. கூட்டணி ஒரு எலியும் தவளையும் கூட்டணி போன்றது.அதனிடமிருந்துதேசிய இனப்பிரச்சனைக்கான தீர்வுஎதையும் எதிர்பார்க்க நியாயமுமில்லை.

சரத் பொன்சேகா தேசிய சிறுபான்மையினருக்கு விருப்பான எந்தவாக்குறுதியையும் முன்வைக்கவில்லை.தமிழ் தேசியக் கூட்டணிமிகப்பலவீனமான காரணங்கட்காக பொன்சேகாவுக்குத் தெரிவித்த ஆதரவைப் பேரினவாதக் கண்ணோட்டத்தில் திசைதிருப்பி சிங்களவாக்காளர்களை ராஜபக்சாவுக்கு ஆதரவாகத் திருப்புவதில் கெல உறுமயவும் ஜே.வி.பியிலிருந்து பிரிந்த விமல் வீரவன்சவும் வெற்றிபெற்ற அளவுக்குத் தமிழர்களைப் பொன்சேகாவுக்கு ஆதரவாகத் திருப்புவதில் த.தே.கூ. வெற்றி பெற்றதா என்பது ஜயத்திற்குரியதே.

இவ்வாக்களிப்பை நோக்கும்போது ரணில் விக்கிரமசிங்கா 2005இல் பெற்ற சிறுபான்மைத் தேசிய இனத்தவரின்வாக்குகளை விட அதிக வாக்குக்களை சரத் பொன்சேகா எந்தத் தொகுதிலும் பெற்றாரா என்று கூறுவதுகடினம். சிங்கள ஊடகங்களும் கணிசமான அளவுக்கு ஆங்கில ஊடகங்களும் முழு அரச இயந்திரமும் ராஜபக்சாவுக்கான கடும் பிரசாரத்தை முன்னெடுத்த அளவுக்குத் தமிழ் அச்சு ஊடகங்கள்(தினகரனும்,முஸ்லீம்வாரஏடான விடி வெள்ளியும் தவிர்த்து) பொன்சேகாவுக்காகப் பிரசாரம் செய்தன.

ராஜபக்சவுக்குச் சாதகமான கருத்துக்களைச் சிறிய அளவிலேனும் வெளியிட வேண்டிய நிர்ப்பந்தம் தமிழ் ஊடகங்கட்கு இருந்தது. எனினும் செய்திகள் கையாளப்பட்ட விதம் தெளிவாகவே பொன்சேகாவுக்குச் சாதகமான முறையில் அமைந்திருந்தது.

இவைஅனைத்திலும் முக்கியமாகத் தேர்தலைப் பகிஸ்கரிக்குமாறு தமிழ்க்காங்கிரஸ்விடுத்த கோரிக்கை அடக்கிவாசிக்கப்பட்டுத் தமிழ்க் காங்கிரஸில் கருத்து வேறுபாடுஎன்றவிதமாகவே செய்திகள் வெளியாயின. த.தே.கூட்டணியின் ஒற்றுமை கருதி தமிழ்க்காங்கிரஸ் சம்பந்தன் பொன்சேகாவை ஆதரித்ததை மறுத்துப் பேசாவிடினும் தனது முன்னைய முடிவைமாற்றியதாக அறிவிக்கவில்லை.

மக்கள்தேர்தலைப் பகிஷ்கரிக்கக் கூடும் என்ற அச்சம் த.வி.கூ தலைமைக்கு மட்டுமன்றித் தமிழ்ப்பத்திரிகைகட்கும் வலுவாக இருந்தது.னாயிறு தினக்குரலில் வரும் “மறுபக்கம்” என்ற பத்தி வாக்குச் சீட்டுக்களைப் பழுதாக்குவதைப் பரிந்துரைத்து வந்ததால் அதை மறுக்கும் விதமாக பலரும் களமிறக்கப்பட்டனர்.

கலாநிதி கீதபொன்கலன் , ஓய்வுபெற்ற பேராசிரியர் சிவத்தம்பி,ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதவான் விக்னேஸ்வரன் ஆகியோர் ஒன்றுக்குப்பலமுறை தமிழ் மக்கள் “அரசியல் நீரோட்டத்தில் இணைய வேண்டும்” என்றும் தேர்தலில் பங்கு பற்ற வேண்டும் என்றும் விரிவாக எழுதினர்.

தினக்குரலில் காலகண்டனின் பத்தியும் கலாநிதி சிவசேகரத்தின் கட்டுரைகள் இரண்டும் தேர்தல் புறக்கணிப்பு அல்லது யாருக்குச்சீட்டுப்ப்ழுதாக்கலை வலியுறுத்தினாலும் பிற கட்டுரைகள் பலவும் மாற்றுக்கருத்துக்களையும் பொன்சேகாவை ஆதரிக்கவேண்டிய நியாயத்தையும் வலியுறித்தின.

சரத் பொன்சேகாவை ஆதரித்த சம்பந்தனுக்குப் பெரும் முக்கியத்துவம் கிட்டியது. தமிழ் ஊடகங்களின் செல்லப்பிள்ளையாகயிருந்த விக்கிரமபாகு கருணரத்ன பெருமளவும் ஓரங்கட்டப்பட்டார்.சிவாஜிலிங்கத்தை ஒரங்கட்டுவதில் உதயன் கடும்முயற்சிமேற்கொண்டது. அவரை நிந்தித்துப்பேசுமாறு பல பிரமுகர்கள் தூண்டிவிடப்பட்டனர்.
சிவாஜிலிங்கத்தைப் பற்றிப் புதியஜனநாயகக்கட்சியின் செயலாளர் செந்தில்வேலிடம் கேட்ட கேல்விக்கு அவர் வழங்கிய பதில் பொன்சேகாவை ஆதரிப்பவர்கட்க்கும் ஒரு பலமான சூடாக அமைந்ததால் உதயன் அவரிடம் வேண்டிப் பெற்ற செவ்வி வெளிவிடப்படவில்லை.

இவ்வாறு பொன்சேகாவுக்குத் தமிழ்மக்களின்வாக்குகளைப்பெற்றுக் கொடுக்கவும் சென்ற ஆண்டு நடந்த யாழ்ப்பாண மாநகரசபைத் தேர்தலின் முன்பாதியைத்மிழ்மக்கள் பின்பற்றாமல் தடுக்கவும் எடுத்த முயற்சிகள் படுதோல்வியடைந்தன. யாழ்ப்பாணமாவட்டத்தில் 20சதவீதமானோரே வாக்களித்தனர்.
வாக்களித்தோரில் மூன்றரை சத வீதத்திற்கு மேலானோர் வாக்குச் சீட்டுக்களைப் பழுதாக்கினர். தெற்கில் பழுதாக்கினோரின் சராசரித் தொகை0.8 சதவீதமளவிலேயே இருந்தமை கவனிக்கத்தக்கது. வன்னியில் வாக்களிப்பு வீதம் மிகக் குறைவான வாக்குப்பதிவுடைய முல்லைத்தீவை நீக்கினாலும்,40சதவீதத்திலுங்குறைவாயிருந்தது.திருகோணமலை,மட்டக்களப்பு மாவட்டங்களிலும் திகாமதுல்லையில் அம்பாறை தவிர்ந்த பகுதிகளிலும் 62 சதவீதமளவிலேயே வாக்களிப்பு இருந்த்து.
நாட்டின் பிற பகுதிகளில் 70 சதவீதத்திற்கும் 80 சத்வீதத்திற்குமிடையில் வாக்க்ளிக்கப்பட்டமை கவனிக்கத்தக்கது. திருகோணமலைத் தொகுதியிலும் மட்டக்களப்புமாவட்டத்திலும் வன்னியிலும் இரண்டு சதவீதமான வாக்குகள் பழுதாக்கப்பட்டன.

மட்டக்களப்புமாவட்டத்தியில் தேர்தலன்று நண்பகல் 12 சதவீதமானோரே வாக்களித்திருந்தனர். அதையடுத்துப் பாதிரிமாரும் மெளலவிகளும் பல்வேறு சமூகப் பிரமுகர்களும் களமிறக்கப்பட்டு வாக்களிப்புவீதம் உயர்த்தப்பட்டது.

தமிழ்மக்களவுக்கு இல்லாவிடினும் முஸ்லீம் மக்கள் நடுவிலும் மலையக மக்கள் நடுவிலும் தேர்தல்பற்றிய உற்சாகம் குறைவாகவே இருந்ததுடன் தமிழரும் மலையகத்தமிழரும் பெருந்தொகையாக வாழ்ந்த கொழும்பு நுவரெலிய மாவட்டங்களின் தொகுதிகளில் 2 சதவீதமான வாக்குச்சீட்டுக்கள் பழுதாக்கப்பட்டன.
சிறுபான்மைத் தேசிய இனத்தோரின் வாக்குக்களில் ராஜபக்சவுக்கு விழுந்ததைப்போல இருமடங்கு பொன்சேசாவுக்கு விழுந்ததைச் சுட்டிக்காட்டுபவர்கள் தமிழ்மக்களின் புறக்கனிப்பையும் பழுதாக்கல் வீதத்தையும் பற்றிப்பேச விரும்புவதில்லை.
யாழ்ப்பாண,வன்னிமக்கள் உரத்தகுரலிலும் கிழக்கின் தமிழர் சற்றுத்தணிகையாகவும் சொல்லியுள்ள செய்தி என்ன?

தமிழ்மக்கள் எந்தச் சனாதிபதி வேட்பாளரையும் தாம் ஏற்கவில்லை என்பதை மட்டுமா?

தங்கள் தலைவர்கள் எனப்பட்டோரின் பரிந்துரைகளை நிராகரிக்கிறார்கள் என்பதையுமா?

சமூகத்தில் உள்ளமதத்தலைவர்கள்,முன்னாட் பெரும்பதவிக்காரர், அறிஞர்கள் எனப்பட்டோர் எல்லாரும் ஒரு வேட்பாளரை மனதில்வைத்துக்கொண்டு தமிழ்மக்கள் தமது அரசியல் உரிமையை வீணாக்கக்கூடாது என்று முதலைக் கண்ணீர் விட்டதை நன்றாக விளங்கிக்கொண்டார்கள் என்பதையா?

தமிழ் நாளேடுகளின் செய்தித் திரிப்புக்களும் இரட்டிப்புக்களும் அகச்சார்பான விளக்கங்களும் அலுத்துவிட்டது என்பதையுமா?

எல்லாவற்றீலும் உண்மை உள்ளது. ஆனால் மக்கள் வெறும் நிராகரிப்புடன் நின்றுவிடக்கூடாது.இறுதிவரை புறக்கணிப்பு, குறிப்பாக வாக்குச் சீட்டைப்பழுதாக்கல், என்பதில் உறுதியாக நின்றதற்குப் புதிய ஜனநாயகக் கட்சி மெச்சப்பட வேண்டும்.

எது எவ்வாறாயினும் இப் புறக்கணிப்பு வெறும் புறக்கணிப்பு அரசியலாக முடங்கிவிடக் கூடாது.

1. புறக்கணிப்பு அரசியல் புறக்கணிக்கப்பட்டோரின் அரசியலாக, ஒடுக்கப்பட்டோரின் அரசியலாக விரிவுபெற வேண்டும்.
2. குறுகிய தமிழ்த் தேசியவாதம் தமிழர்களை எத்தகைய அழிவுகளிற்குக் கொண்டுவந்து விட்டுள்ளது என்பதைப் பற்றித் தமிழர்களை உரக்கச் சிந்திக்குமாறு சகல முற்போக்கு சக்திகளும் அவர்களை ஊக்குவிக்க வேண்டும்.சலுகை அரசியலும், தரகு அரசியலும் தான் பாரளுமன்ற அரசியலாகத் தொடரும். அதற்குச் சமாந்தரமாக அதை மேவும் விதமாக, மக்களைத் தங்கள் உரிமைக்காக தாங்களே குரல் எழுப்பிப் போராடும் ஒரு சக்தியாக வளர்த்தெடுக்க அவர்கள் முன்வரவேண்டும்.
3. தமிழ் மக்கள் தொடர்ந்தும் பிற ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களிடமிருந்தும், சிங்கள மக்களிடமிருந்தும், குறிப்பாக அவர்களிடையே உள்ள நல்ல சக்திகளிடமிருந்தும், தம்மை அன்னியப்படுத்திக் கொள்ளக் கூடாது. இவ்விடயத்தில் தென்னிலங்கையில் இன்று பலவீனமாக உள்ள நேர்மையான இடதுசாரி சக்திகளை வலுப்படுத்த தமிழ் மக்களின் விடுதலையில் அக்கறையுள்ள அனைவரும் கவனம் செலுத்த வேண்டும்.
4. வடக்கின் மக்கள் அதற்கான பச்சை விளக்கைக் காட்டியுள்ளனர். பாதையறிந்து பயணத்தை முன்னெடுப்பது எளிதல்ல ஆனால் அது தட்டிக்கழிக்கத் தகாத வரலாற்றுப் பணியாகும்.

Exit mobile version