Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தேர்தலால் ஜனனாயகத்தைத் தோற்றுவிக்க முடியுமா : நிவேதா நேசன்

wikiஇன்றய உலகில் தேர்தலும் அதனால் தோற்றுவிக்கப்பட்டுள்ள ஜன‍னாயகமுமே சிறந்தது என்ற கருத்து உலகில் ஒவ்வொரு மனிதன் மத்தியிலும் விதைக்கப்பட்டுள்ளது. தேர்தல் என்ற அமைப்பு முறை உலகில் தோன்றுவதற்கு முன்பதாக உலகில் மன்னர்களது பரம்பரைகளே ஆட்சி செய்தன. மன்னர்களின் அழிவில் தான் தேர்தல் மற்றும் பாராளுமன்ற ஜன‍னாயகம் என்வை தோன்றின. அது தோன்றிய காலத்தில் முன்வைக்கப்பட்ட ஜன‍னாயக அமைப்பு என்பது மன்னர்களின் சர்வாதிகாரத்தை விட பல மடங்கு மேலானதாகவும் மக்கள் தமது நிர்வாகிகளைத் தெரிவுசெய்யும் குறைந்த பட்ச சுதந்த்திரத்தை உடையவர்களாகவும் காணப்பட்டனர். இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அரசியல் கட்சிகள் தேர்தலில் பங்குபற்றின. அவற்றுள் அதிகபடியான வாக்குகளைப் பெற்றுக்கொள்பவர்கள் வெற்றிபெற்றனர். அவர்கள் பாராளுமன்றத்தில் மக்களை நிர்வகிப்பதற்கான சட்டங்களை இயற்றும் அதிகாரத்தையும் பெற்றிருந்தனர். இவ்வாறான பாரளுமன்றம் என்ற நிர்வாக சபையில் தேர்தலின் பின்னணியில் இருந்தது என்ன. அதன் அடிப்படைகள்

இன்று அது மக்களுக்கு உகந்ததா என்பது காலத்திற்குக் காலம் வந்த்துபோகும் விவாதங்கள்.

உலகில் நாங்கள் வாழுகின்ற சமூகம் முழுமையும் இந்தத் தேர்தல் முறையை ஜன‍னாயகம் என்று ஏற்றுக்கொள்வதான தோற்றப்பாடு ஒன்றைக் காணலாம். இதன் அடிப்படை என்ன என்பதைப் புரிந்த்துகொள்வதன் வழியாகவே தேர்தல் தரும் ஜன‍னாயக உரிமையையும் அறிந்த்துகொள்ளலாம்.
‍‍‍‍‍

நாம் வாழும் சமூகம் ஒரு வைகையில் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. சில பணம்படைத்தவர்கள் சமூகத்தில் செல்வாக்குச் செலுத்தும் அதிகாரம் படைத்தவர்களாகவும் அதன் கீழ் அவர்களுக்குச் சேவையாற்றும் நிர்வாகிகளும், சேவைத் துறை வேலையாட்களும், பின்னர் உற்பத்தி திறனுடைய மத்தியதர வர்க்கமும், இதைவிட சமூகத்தின் கீழ் நிலையிலுள்ள உற்பத்தியில் நேரடியாக ஈடுபடும் தொழிலாளர் விவசாயிகளும் என்று சமூகம் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.

சமூகத்தில் பணம்படைத்தவர்களே ஆதிக்கத்தின் உச்சத்தில் காண்படுகின்றனர். கடந்த்த முப்பது வருடங்களில் பணம்படைத்த இந்த்த அதிகார வர்க்கம் கூட மாற்றமடைந்த்துள்ளது.

இன்றைய காலத்தில் அமரிக்கவிலும் ஐரோப்பாவிலும் உள்ள விரல் விட்டெண்ணக் கூடிய சில செல்வந்தர்கள் அந்த்த நாடுகளில் நிலை கொண்டுள்ள நிறுவனங்களில் பங்குச் சந்த்தை ஊடாக தமது பணத்தை முதலீடு செய்கிறார்கள். இந்த்த முதலீடுகள் இல்லாமல் எந்தப் பெரிய வியாபார நிறுவனங்களையும் நடத்த முடியாது. இந்த்த நிறுவனங்கள் உலகம் முழுவதும் தமது தமது கிளைகளைப் பரப்பி வருகின்றன. மிகச் சிறிய வியாபாரத்தைக் கூட இந்த்த நிறுவனங்களே ஆக்கிரமித்துக் கொள்கின்றன. அமரிக்காவிலிருக்கும் வால் மார்கோட் என்ற சில்லரை வியாபார நிறுவனம், கோஸ்டா என்ற கோப்பி விற்கும் கடை, மக்டொனால்ட் மற்றும் கே.எப்.சி சண்விச் விற்கும் கடை போன்ற சிறிய அன்றாட வாழ்வோடு தொடர்புடைய நிறுவனங்கள் கூட தமது கிளைகளை உலகம் முழுவதிலும் உள்ள மூலைகளெல்லாம் பரப்பியுள்ளன.

வறிய நாடுகளில் மலிவான விலையில் கோப்பியைப் பெற்று அங்கேயே மலிவான கூலியில் அதனைப் பதப்படுத்தி பின்னர் அதிக விலையில் அந்த்த நாட்டு மக்கள் உட்பட உலகம் முழுவதும் விற்பனை செய்கிறார்கள். இதனால் வரும் இலாபத்தை அமரிக்காவிலும் ஐரோப்பாவிலும் வாழும் பங்கு சந்த்தை ஊடாக முதலிடும் செல்வந்தர்கள் பெற்றுக்கொள்கிறார்கள். இந்த்தியா இலங்கை ஆபிரிக்கா போன்ற நாடுகளில் வாழ்கின்ற முதலாளிகளோ அமரிக்க ஐரோப்பிய நிறுவனங்கள் முதலீடுகளை தமது நாடுகளில் நிர்வகிப்பவர்களாக மாறியுள்ளனர்.அதாவது இந்த முதலாளிகளின் உள்ளூர் தரகர்களே இவர்கள். இவ்வாறு தரகு வேலை செய்வதற்காக இவர்களுக்கு சன்மானம் வழங்கப்படுகிறது. இந்தச் சன்மானத்தால் உள்ளூர் முதலாளிகள் பணக்காரர்களாக மாறும் அதே வேளை மேலும் மேலும் தமது நாடுகளைச் சுரண்டி அதிக பணம் சம்பாதிப்பது எப்படி என்ற வழி முறைகளையும் அன்னியர்களுக்கு சொல்லித் தருகிறார்கள். ஆக, உள்ளூர் தரகு முதலாளிகளும் அன்னிய முதலாளிகளும் இணைந்து தமது நாடுளிலிருந்த்து பெரும் செல்வத்தை அன்ன்ய நாட்டு முதலாளிகளிடம் ஒப்படைக்கிறார்கள்.

இப்படி உலகம் முழுவதும் ஒழுங்கமைக்கப்பட்ட அமைப்பை ஏற்றுக்கொண்டு அந்த அமைப்பைக்கு எதிராக மக்களிடமிருந்த்து எதிர்ப்ப் எதுவும் ஏற்படாமல், மக்களின் சிந்தனையை இதற்கு ஆதரவாக மாற்றி ஆட்சி நடத்த பல கட்சிகள் போட்டி போடுகின்றன. அல க‌இந்தக் கட்சிகளின் நோக்கம் இருக்கின்ற சுரண்டல் அமைப்பை மாற்றியமைப்பதல்ல அவற்றை நிர்வகிப்பதே. இந்த்தியாவில் காங்க்ரஸ் கட்சி, பாரதீய ஜனதா கட்சி போன்ற கட்சிகள் மட்டுமல்ல கம்யூனிஸ்ட் கட்சி என்ற பெயரிலுள்ள கட்சிகளும் இந்த சுரண்டல் அமைப்பை ஏற்றுக்கொண்டு அதனை தம்மால் மேலும் சிறந்த்த வகையில் நிர்வகிக்க முடியும் என்று கூறிப் போட்டி போடுகின்றன.

இந்தச் சுரண்டல் அமைப்பு முறையை மாற்றி மக்கள் நேரடியாக ஆட்சியில் பங்குபற்றும் ஜன‍னாயக அமைப்பை தோற்றுவிக்க வேண்டும் என்றால் இருக்கின்ற அமைப்பை நிர்வகிப்பதற்கு வாய்ப்புக் கேட்டு அதாவது மக்களைச் சுரண்டுவதற்காக வாய்ப்பை மக்களிடமே கேட்டுப் பெற்றுக்கொள்ளும் தேர்தல் ஜனனாயகமும் பல கட்சி அமைப்பு முறையும் அழிக்கப்பட்டு புதிய அமைப்பு முறை ஒன்று தோன்ற வேண்டும்.

அப்படி மக்கள் ஆட்சியில் நேரடியாகப் பங்குபற்ற வேண்டுமானால் சுரண்டல் அமைப்பு முறையான இந்த சமூகம் மாற வேண்டும். அவ்வாறு மாற்றப்பட்ட சமூகத்தை மக்கள் நிர்வகிக்க வேண்டும். அதற்கான அமைப்பு ஒன்று தேவை.
இவ்வாறான மக்கள் தேர்தலும் மக்கள் ஆட்சியும் சோவியத் ரஷ்யாவில் காணப்பட்டது. அது அமரிக்கா, ஐரோப்பா போன்ற நாடுகளில் காணப்படும் எண்ணக் கூடிய பன முதலைகளை அச்சுறுத்தியது. அவர்கள் தமது அரசுகளூடாக மிக நீண்டகாலப் யுத்தம் நடத்தி அந்த அமைப்பை அழித்துவிட்டார்கள். ஆனால் அதே ரஷ்யாவிலும் இன்னும் பல நாடுகளிலும் தவறை உணர்ந்த்துகொண்ட்வர்கள் மக்கள் ஜன‍னாயகத்தை மீட்கப் போராடுகிறார்கள்.
அந்த மக்கள் ஜனனாயகம் எப்படி ஆட்சி நடத்தியது என்பது சுவாரசியமானது.

முதலாளித்துவ நாடுகளில் பணம்படைத்த சில முதலாளிகளும் ஏனைய ஒடுக்கப்பட்ட மக்களும் என்று சமூகத்தைப் பிளவுபடுத்தி அதனுள் உயிர்வாழ்ந்தவர்கள் முதலாளிகள். அவர்களை அதிகாரவர்க்கம் என்று கூறுகிறோம்.இந்த அதிகார வர்க்கம் மக்களால் தெரிவுசெய்யப்படவில்லை. அவர்கள் மக்களைச் சுரண்டிக் கொழுத்தவர்கள்.

சோசலிச நாடுகளில் மக்களால் தெரிவுசெய்யப்படாத அதிகார வர்க்கத்தை நீக்கி புதிய மக்களுக்கான அமைப்பை உருவாக்கியது அங்கிருந்த கம்யூனிஸ்ட் கட்சி. அவர்கள் மீண்டும் அந்த்த அதிகாரவர்க்கம் முளைவிடாமல் பாதுகாத்துக்கொள்ள மக்கள் ஆட்சி நடத்தினர்.

முதலாளித்துவ நாடுகளில் இருக்கின்ற அமைப்பை நிர்வகிப்பதற்காக கட்சிகள் போட்டிபோட்டனவே அதே போன்று சோசலிச நாடுகளில் இருக்கின்ற சுரண்டலற்ற அமைப்பை நிர்வகிப்பதற்காக மக்கள் போட்டிபோட்டனர்.

மக்கள் தம்மை நிர்வகிக்கும் நிவாகிகளைத் தேர்தல் ஊடாகத் தாமே தெரிவு செய்தனர். ஒவ்வொரு சிறிய ஊர்களிலும் கம்யூன்கள் என்ற அமைப்புக்களை உருவாக்கியிருந்தனர். அந்தக் கம்யூன்களில் தெரிவுசெய்யப்படுபவர்கள் கம்யூனிஸ்ட் கட்சியின் அங்கத்தவர்களாக இருக்கவேண்டிய தேவை இல்லை. அவர்கள் மக்களால் தெரிவுசெய்யப்பட்டனர். இவ்வாறு மக்களால் பல கிராமங்களிலும் நகரங்களிலும் தெரிவு செய்யப்பட்டவர்கள் இணைந்த்து பிரமிட் போன்ற ஒரு அமைப்பை உருவாக்கினர். இவர்களே தமது சுரண்டலற்ற அமைப்பிற்கு உட்பட்டு சட்டம் இயற்றி நிர்வகிக்கும் வேலையைச் செய்டனர்.

முதலாளித்துவ அமைப்பில் பிரச்சாரம் செய்வதற்குப் பணம் வைத்திருப்பவர்கள் அல்லது அன்னிய நாடுகளின் பணத்தில் பிரச்சாரம் செய்பவர்கள் ஆட்சிக்கு வந்தனர். சோசலிச நாடுகளிலோ மக்களால் தெரிவுசெய்யப்பட்டவர்களே ஆட்சிக்கு வந்தனர்.

முதலாளித்துவ நாடுகளில் தேர்தல் மூலம் தெரிவுசெய்யப்படும் ஒருவர் தவறு செய்தால் ஆட்சியிலிருந்த்து நீக்கப்பட்ட ஐந்த்து வருடங்களுக்கு மேல் காத்திருக்க வேண்டும். சோசலிச நாடுகளில் ஒருவர் தவறிழைத்தால் உடனடியாகவே மக்கள் ஒன்றுகூடி புதிய பிரதினிதியைத் தெரிவுசெய்தனர். இவ்வாறு பாராளுமன்றத் தேர்தல் ஊடாக ஜனனாயகம் என்ற பெயரில் போலியாக மக்கள் மத்தியில் திணிக்கப்பட்ட நிர்வாக அமைப்பு முறைக்கு எதிராக மக்களின் ஜனனாயகம் ஒன்றை தோற்றுவிப்பதே சோசலிச ஆட்சி. இதனைச் சர்வாதிகாரம் என்றும் ஜனனாயக மறுப்பு என்றும் பொய்ப் பிரச்சரம் செய்தவர்கள் ஜன‍னாயகத்தை விரும்பாத மக்களைச் சுரண்டும் மக்களின் விரோதிகளே.
இலங்கயில் ஜன‍னாயகத்தின் அழிவுகள் இன்னும் ஆழமானவை.

ராஜபக்சவின் கிரிமினல் அரசு இருக்கின்ற சுரண்டல் அமைப்பு முறையைத் தானே நிர்வகிக்க வேண்டும் என்றும் அதனை நிவகிப்பதற்குக் கூட தேசிய இனங்களை ஒடுக்குவதே ஒரே வழி என்றும் கூறுகிறது.

பிரித்தானிய காலனி ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்ற காலம் முழுவதும் இலங்கையின் சுரண்டல் அமைப்பை நிர்வகிப்பதற்கு தேசிய இனங்களை ஒடுக்க வேண்டிய தேவை ஆட்சிக்கு வந்த்த ஆளும் வர்க்கங்களுக்கு இருந்தது. இதனால் சிறுபான்மைத் தேசிய இனங்களைக் காரணம்காட்டி சிங்கள மக்கள் மத்தியிலிருந்த்து தோன்றிய போராட்டங்களை ஒடுக்கிவந்தனர். இன்று இது இன்னும் சிக்கலான நிலையை அடைந்த்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் இலங்கை அரச இராணுவத்தோடு ஆயுதப் போராட்டம் நடத்திய காலத்தில் இலங்கை அரசு பெர்ந்த்தொகையான இராணுவத்தை உருவாக்கியது. இதனால் கிரமப்புறங்களில் வேலைவாய்ப்புக்கள் அதிகரித்தன. உற்பத்தியும் வருமானமும் இல்லாத இந்த வேலைவாய்ப்பிற்கு ஊதியம் வழங்க இலங்கை அரசிற்கு அதிக பணம் தேவைப்பட்டது. இதற்குரிய பணத்தை இலங்கை அரசாங்கம் உலக வங்கியிடமிருந்த்தும் சர்வதேச நாணய நிதியத்திடமிருந்த்தும் அமரிக்க ஐரோப்பிய நாடுகளிடமிருந்த்தும் இந்த்திய சீன அரசுகளிடமிருந்த்தும் பெற்றுக்கொண்டது.

இதனால் இலங்கை வரலாற்றில் இல்லாத அளவிற்கு அந்த நாடு கடனாளி நாடாக உள்ளது.

இந்தக் கடனை திருப்பிச் செலுத்த முடியாத நிலையிலுள்ள இலங்கையின் வளங்களைச் சுரண்டுவதற்காக இந்த நாடுகளும் உலக வங்கியும் நிபந்தனைகளை விதிக்கின்றன. இலங்கையில் முதலிடுவதற்கும் வளபங்களைச் சுரண்டுவதற்கும் இன்னும் அதிக‌ வாய்ப்பளிக்குமாறு கோருகின்றன. கடல்வளம், நிலவளம், எண்ணை வளம், கூலி உழைப்பு போன்ற அனைத்தையுமே அபகரித்துக்கொள்ள நிபந்த்தனைகளை விதிக்கின்றன. இனச் சுத்திகரிப்பு நடத்தியோ அன்றி வேறு வழிகளிலோ தேசிய இனப் பிரச்சனையை இல்லாமல் செய்யக் கோருகின்றனர். இதனால் தமது நிறுவனங்கள் சமாதான சூழலுல் வியாபாரம் செய்யும் நிலையை ஏற்படுத்தக் கோருகின்றனர். இதற்கு அப்பால் இனப்படுகொலை பொன்ற நிகழ்வுகளைத் தவிர தெற்காசியாவில் இலங்கை மக்களே அதிக வாழ்வுக்காலத்தையும் கல்வியறிவைய்ம் கொண்டவர்களாக உள்ளனர். சிறந்த இலவச மருத்துவமும் இலவசக் கல்வியுமே இதற்கான அடிப்படைக் காரணங்கள். உலக வங்கியும் சர்வர்தேச நாணய நிதியமும் கல்வியையும் மருத்த்வு சேவையையும் தனியார்மயப்படுத்தக் கோருகின்றன. ஏற்கனவே இதற்கான திட்டங்கள் உருவாக்கப்பட்டுவிட்டன. இந்தியா, சீனா, ஐரோப்பிய நாடுகள், அமரிக்கா போன்ற ஏகாதிபத்திய நாடுகளின் ஆசியோடு இனச் சுத்திகரிப்பும் தடையின்றி நடைபெறுகிறது.

இவ்வாறு இலங்கை அரசாங்கம் தனது சுரண்டல் அமைப்பை உருவாக்கியுள்ளது. இந்தச் சுரண்டல் அமைப்பை நிர்வகிப்பதற்காக உப தேர்தல்களை நடத்துகிறது. இப்போது வடக்கில் மாகாண சபைத் தேர்தலையும் நடத்துகிறது. இந்த மாகாண சபைத் தேர்தலில் இலங்கை அரசின் சுரண்டலையும் இனச்சுத்திகரிப்பிற்கான நிகழ்ச்சி நிரலையும் திறமையுடன் செய்துமுடிப்போம் என்று கட்சிகள் போட்டிபோடுகின்றன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு புறத்திலும் மறுபுறத்தில் அரச ஆதரவு துணைக் குழுக்களும் போட்டி போடுகின்றன. இவர்களின் நோக்கம் ராஜபக்ச அரசின் இனச் சுத்திகரிப்பையும் சுரண்டல் அமைப்பையும் மாற்றுவதல்ல அவற்றைத் மக்கள் மத்தியிலிருந்த்து போராட்டங்கள் எழாமல் செவ்வனே நிர்வகிப்பதே. இதற்காகவே போட்டி நடக்கிறது. மக்களின் நோக்கமோ இந்த அமைப்பை மாற்றுவதே.

கட்சிகளை அரசியலிலிருந்த்து அழிப்பதும் மாற்றத்துக்கான அரசியலை முன்னெடுபதுமே இனிமேல் உருவாகும் புதிய அரசியல் சக்திகளின் நோக்கமாக அமைய முடியும்.

Exit mobile version