நிலத்தைச் சார்ந்தே சமூகத்தின் உற்பத்தி அமைந்திருந்தது. நிலங்களை அதிகமாக சொந்தமாக வைத்திருந்தவர்களை நிலப் பிரபுக்கள் என்றார்கள். அந்தச் சமூகத்தை நிலப்பிரபுத்துவச் சமூகம் என்றார்கள். மன்னர்களே அதிக நிலத்தை உடமையாக வைத்திருந்தனர்.
ஆக, மன்னர்களின் ஆதிகத்தில் குறு நில மன்னர்கள், நிலப் பிரபுக்கள், சிறு நில உடமையாளர்கள், பண்ணை அடிமைகள் என்று சமூகம் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது. இவ்வாறு ஒழுங்கமைக்கப்பட்ட சமூகத்தில் மன்னர்கள் மாற்றமடையும் போது மக்களின் பண்பாடு, மொழி போன்றவற்றின் ஒரு பகுதியும் மாற்றமடைந்தது. நிலப் பிரபுத்துவ காலத்தில் அந்த அமைப்பிற்குரிய தத்துவம் ஒன்று அவசியமானது. மதங்களே அத் தத்துவ அமைப்பை சமூகத்திற்கு வழங்கியது.
குறு நில மன்னர்களை அழித்தும் அட்க்கியும் மன்னர்கள் பேரரசுகளை உருவாக்கினார்கள். குழுக்களாக இருந்த
சமூகங்களை ஒன்றிணைத்து பேராசுகள் தோன்றிய போது மக்கள் மத்திய்ல் குழப்பங்கள் உருவாகின. பேரரசுகளுக்கு எதிராக அனைத்துப் பிரிவு மக்களும் கிளர்ந்தெழுந்தார்கள். இந்தியாவில் இந்து மதமே இவற்றை முடிவிற்குக் கொண்டுவந்து மக்களை அடக்கியாள வழிசெய்தது. வெவ்வேறு தொழில் பிரிவினைகளக் கொண்ட குழுக்களான சமுதாயத்தை ஒருங்கிணைத்து பேரரசுகள் உருவாகின. ஒவ்வொரு தொழில் செய்தவர்களும் ஒவ்வோரு சாதியைச் சேர்ந்தவர்கள் எனவும் அது கடவுளின் படைப்பு எனவும் மையப் பேரசை நோக்கி மக்களை இசைவாக்கம் அடைய வைத்தது இந்துத்துவம்.
இதனால் மக்களை அடக்கியாள மன்னர்களுக்கு மதங்கள் தேவைப்பட்டன. ஆக, மதங்களே நிலவுடமைச் சமுதாயத்திற்குரிய தத்துவார்த மேற்கட்டுமானத்தை வழங்கின.
இது இந்தியாவிற்கு மட்டுமல்ல, நிலப்பிரத்துவ சமூக அமைப்புக் காணப்பட்ட எல்லா நாடுகளுக்கும் இது பொருந்தும். நாடுகளில் குறிப்பாகக் காணப்பட்ட உற்பத்தி முறைக்கு எற்ப மதங்களின் பண்பும் வேறுபட்டது.
இந்தியா போன்ற நாடுகளில் நிலம் சார்ந்த பயிரிடுகை விவசாயமே பிரதான தொழில். அதற்காகக் கால் நடைகள் பயன்படுத்தப்பட்டன. இதனால் விவசாயத்திற்கு நிலங்களை உழுவதற்கும், நீர் இறைப்பதற்கும், போக்குவரத்து வசதிகளுக்கும் கால் நடைகள் தேவைப்பட்டன. இதனால் கால் நடைகளைக் கொல்வதும் மாமிசம் உண்பதும் இந்து மதத்திற்கு ஒவ்வாத ஒன்று என்றும் குற்றச் செயல் என்றும் இந்து மதம் கூறியது.
ஐரோப்பாவிலோ கால் நடை வளர்ப்பும் மாமிச உணவும் மக்களின் பிரதான உணவாகியது. இதனால் ஐரோப்பாவில் பேரரசுகளை இறுக்கமாகக் கட்டிவைத்திருந்த தத்துவமான மதங்களுக்கு மாமிச உண்ணுதலுக்கு எதிரான பிரச்சாரம் தேவைப்பட்டிருக்கவில்லை.
இவ்வாறு மக்களை இணைக்கும் மையப் பகுதியாக மன்னர்களும், பேரரசுகளை காக்கும் தத்துவார்த்த மேல்கட்டுமானமாக மதங்களும் நில உடமைச் சமூகத்தில் காணப்பட்டன.
நிலப் பிரபுத்துவ காலத்தில் தேசங்களோ அன்றி தேசியமோ இருந்ததில்லை. மன்னர்களின் ஆட்சி நிறைவுறும் போதே தேசங்கள் தோன்றின.
முட்டாள்தனமான இவ்வாறான முடிவுகள் ஈழப் போராட்டம் ஆரம்பிப்பதற்கான நுளை வாசல்களில் காணப்பட்டன. பிற்காலத்தில் இவையே பல அழிவுகளுக்கும் வழிவகுத்தன.
தாமே ஆண்ட பரம்பரை என்ற உணர்வை மக்களுக்கு தோற்றுவித்து அதையே சமூகத்தின் பொதுப்புத்தியாக்கி ஒடுக்கப்படும் ஏனைய தேசிய இனங்களான தமிழ்ப் பேசும் முஸ்லிம்களையும் மலையகத் தமிழர்களையும் போராட்ட தளத்திலிருந்து நீக்கி பேரினவாதத்திற்குச் சேவை செய்தார்கள்.
ஆண்டபரம்பரை ஆட்சிசெய்ய வேண்டுமானால், அமரிக்காவும் கனடாவும் செய்வ்விந்தியர்களுக்கும், அவுஸ்திரேலியாவும் நியூசிலாந்தும் அப்ரோஜீன் பழங்குடி மக்களுக்கும் சொந்தமாக வேண்டும்.
ஆக, நில உடமைச் சமூக அமைப்பின் அழிவிலேயே தேசங்களும் தேசிய இனங்களும் தோன்றுகின்றன. ஆண்ட பரம்பரைகளிலிருந்தல்ல.
மிகுதி அடுத்த பதிவில்…