தமிழ் பேசும் மக்களின் வரலாற்றுப் புமி, இன்று வரலாறுகள் மறைக்கப்பட்டு- சிதைக்கப்பட்டு ஐக்கிய இலங்கை எனும் கோசத்திற்குள்-பௌத்த சிங்கள பேரினவாத கட்டுமானங்களுடாக தமிழரின் பாரம்பரிய பிரதேசங்கள் பறிமுதல் செய்யப்பட்டு பங்கு போடப்படுவது தொடர்கின்றது.
1948லிருந்து மாறிமாறி ஆட்சிக்கு வரும் பேரினவாத அரசும்- அதன் அரசுயந்திரங்களும் இன்றுவரை திடடமிட்ட ஆத்துமீறிய குடியேற்றங்களால் சத்தமிடாமலேயே-சத்தங்கள் வெளியே தெரியாமலேயே அபகரிக்கப்பட்டு இந்த புமிக்குச்சொந்தமான தமிழ்பேசும் மக்கள் இன்று அரசியல் அனாதைகளாக,உரிமைகள் பறிக்கப்பட்டு அருகிவரும் காலப்போக்கிற்கிடையில்- இருப்புக்களே கேள்விக்குறியாக்கப்படும் நிலையை கணக்கிலிடக்கூடஅருகதையற்றவர்களாக ஆக்கப்படுகின்றனர்.
“இலங்கையின் சோசலிச ஜனநாயகக் குடியரசின்” ஜனாதிபதி பதவியையேற்ற மகிந்த ராஜபக்சா 1467:3ஆம் இலக்க 2006 ஒக்றோபர் 16ம் திகதி பாராளுமன்றத்தில் இலங்கை வர்த்தமானி அறிவிப்பினூடாக திருகோணமலைநகரயையும்-நகரைச்சுற்றியுள்ள 15 மைல்களுக்குட்பட்ட பிரதேசத்தையும் ‘சுதந்திர வர்த்தக வலயம் ’ என்ற போர்வையில் ஏகாதிபத்திய நாடுகளுக்கு சிங்களபேரினவாத அரசின் சட்டமாக்கல் மூலம் தாரைவார்த்துக் கொடுத்ததை காலத்திற்கு காலம் பாராளுமன்ற கதிரைகளை தக்கவைத்துக் கொள்ளும் எந்த குறுந்தேசியவாததமிழ்தலைமைகளுமோ-எந்த தமிழ்பேசும் அரசியல்கட்சிகளோ இவற்றை முன்னிறுத்தி சாத்வீகப்போராட்டங்களை முன்னெடுத்தோ அன்றி சர்வதேச அரங்குகளுக்கு அம்பலப்படுத்தியோ அன்றி அந்தந்த பிரதேசங்களின் முன்இந்த சட்டரீதியான இனஅழிப்புக்களின் நிர்மாணங்களை வெளிக்கொணர்ந்தோ ஆன்றி இந்த மக்களையறியாமலேயே இந்தப் பேரினவாத அரசால் இவர்கள் சூறையாடப்படுவதை முன்னிறுத்தி இவற்றை தடுத்துநிறுத்த வெகுஜனப்போராட்டங்களை வழிநடத்தி இவற்றிற்கான தீர்வுகளை முன்னெடுக்காமல் காதோடுகாது வைத்ததுபோல் இந்த தமிழ் குறுந்தேசிய தலைவர்களும் தமது நிலபுலன்களை விற்று இவற்றை பணமாக்கிக்கொண்டு
பலநாடுகளையும் தேடி தமது குடும்பங்களை நிலைப்படுத்தியதுதான் மிச்சம்.
தமது பாராளுமன்றக்கதிரைகளுக்ககாக 3சகாப்தங்களாக புலிகளின் ஊதுகுழல்களாகவும்-தற்போது மகிந்த சிந்தனையின் முகவர்களாகவும் செயற்படுகின்றனர்-தமது தேசியக்கூட்டமைப்பையே துண்டாடிக்கொண்டு.எனவே சிங்களப்பேரினவாதமும் தமிழ் குறுந்தேசியவாதமும தமது சொந்தநலன்கள்-இருப்புக்கள்சார்ந்தே எக்காலத்திலும் செயற்படும் எந்த உண்மைகளையும் அம்பலத்திற்கு கொணர்ந்து அதை வெகுஜனப்போராட்டமாக வடிவமைக்கமுடியாதவர்களே இந்த தமிழ்தேசியவாதிகள்.ஆனால் பாராளுமன்ற கதிரைகளுக்காக யாருடனும் கூட்டுச்சேர்வார்கள்-தமது சொந்த வர்க்க நலன்களுக்காக எந்தக் கூட்டையும் சிதறடிப்பார்கள்.
எனவே தமிழ்தேசியத்தலைமைகள் தத்தமது பிரதேசங்களில் இலங்கைப்பேரினவாத அரசால் நடைபெறும் அத்துமீறல்கள்-ஆக்கிரமிப்புக்கள்-உரிமைப்பறிப்புக்கள்-அழித்தொழிப்புக்கள் எதையுமே கண்டுகொள்ளமாட்டார்கள் .வாக்குவேட்டைக்கான தேர்தல் பிரச்சாரக் காலங்களைத்தவிர.
2006மாவிலாறு பிரச்சனை தொடங்கி முள்ளிவாய்க்கால் முடிவுவரை சிங்களபேரினவாதஅரசு, பயங்கரவாதத்தை அழித்தொழித்த அதே நேரம்-அதன் வெற்றிடங்களை மூச்சுக்காற்று இடைவெளிகூடதாமதிக்காத நிலையில் மாவிலாறு சம்புர் குடும்பிமலை பிரதேசங்களில் தொடங்கிஅங்குள்ள பாரம்பரிய கிராமங்களையும் கலாச்சார பண்பாட்டு அடையாளங்களையும் நிர்மூலமாக்கி அங்குள்ள தமிழ் பேசும் மக்களையும் நடுவீதிக்கு கொணர்ந்து வீதிவீயாக-கிரமம் கிராமமாக இடம்பெயர்ந்து திருமலைமாவட்டத்திலிருந்து பாட்டாளிபுரம், இலங்கைத்துறை முகத்துவாரம் வெருகலுடாக மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள கதிரவெளி, கண்டலடி ,வாகரை ,பால்சேனை, வம்மிவெட்டுவான் என்று 100 கிலோ மீறறர்தூரத்தையும் தாண்டி கால்நடையாகவே அலைந்துதிரிந்து கடைசியாக சத்துருக்கொண்டான் போன்ற இடைத்தங்கல் முகாம்கள் வரை அவர்கள் அலைந்து திரிந்த அவல வரலாறு சொல்லிலோ எழுத்திலோ அடங்காது..உயிர்கள்-உடமைகள்உட்பட இழப்பதற்கு ஒன்றும் இல்லை என்பதுவரை இடம் பெயர்ந்து இத்தனை வருடம் இன்னும் தத்தமது சொந்தப்பிரதேசங்களைத் தேடி அலைகின்றனர்.
இலங்கைப் பேரிணவாத அரசு ஒருகையில் பயங்கரவாதத்தைத்தான் தாம் அழிப்பதாக கூறிக்கொண்டு எம்மக்களையும் ஓடஓடவிரட்டியடித்துக்கொண்டு மறுபக்கத்தால் இந்த கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசங்களையும்-விவசாயம் ,மீன்பிடி ,கைத்தொழில், கால்நடைவளர்ப்பு என அத்தனை மனித வளத்தின் பொருளாதார கட்டுமாணங்களையும் நிர்மூலமாக்கியதோடு நிற்காமல் சுதந்திரவர்த்தக வலயத்திற்கும்-உலகசந்தைப்பொருளாதாரத்திற்கும் ஏற்ப வகையில் பல வகையறாக்களாக பல்வேறு நாடுகளுக்கும் அபிவிருத்தி-புணர்நிர்மாணம் என்ற பெயரில் விலைகூறி பிரதேசங்களை விற்றுளளனர்.
2006ஏப்ரல் வரை சம்புர் கிராமசேவகர்பிரிவானது சம்புர்கிழக்கு-சம்புர்மேற்கு-கூனித்தீவு-நவரட்ணபுரம்-கடற்கரைச்சேனை என 5பெரும்பிரிவுகளை கொண்ட 1500குடும்பங்கள் தன்னிறைவாக-கல்வியறிவு மேலோங்கி சிறப்பாக சந்தோசமாக வாழ்ந்துவந்தனர்.
2006 ஏப்ரல் 25ம் திகதி இரவோடிரவாக சம்புர் பிரதேசத்தின் மீது இலங்கை அரசின் தாக்குதல் ஆரம்பிக்கப்பட்டது.அதாவது மூதூர் மாவட்டத்தில் பல சிறப்பம்சங்களும்- வரலாற்று பாரம்பரியங்களுடனும் சம்பந்தப்பட்ட சம்புர் பிரதேசம் நிர்மூலமாக்கப்பட்டு அங்கிருந்த கலாச்சார அடையாளங்களான ஒருபெரும் முக்கியத்துவம் வாய்ந்த பழமையான சிறப்புப்பெற்ற ஒருகாளிகோவில் உட்பட 5கோவில்களும்-8 பெரும் பாடசாலைகளும் உள்ளடங்கிய பலகிராமங்கள்சிதைக்கப்பட்டு நிர்மூலமாக்கப்பட்டது.
இங்கு பரம்பரையாக வாழ்ந்த மக்கள் மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் உட்பட்ட இடைத்தங்கல் முகாமகள் வரைகடந்த மூன்றரை வருடமாக அரைவயிறும் கால்வயிறுமாக அரச கொடுப்பனவு உணவுடனும் ஏதிலிகளாய் பல சிரமங்களோடு ஏதோ வாழ்ந்தோம் உயிரோடு இருக்கின்றோம்என்று காலத்தை ஓட்டினார்கள்.அதுவும் தமது சொந்த கிராமங்களிற்கே குடியேற்ற வேண்டுமென பலவிதத்திலும் இடைத்தங்கல் முகாம்களில் வாழ்ந்துகொண்டே போராடினார்கள்
இவர்களின் இடைவிடாத போராட்டத்தாலும் குறிப்பிடத்தக்க வெளிநாட்டு அழுத்தத்தாலும் கடந்த சிலமாதங்களாக மீள்குடியேற்றம் நடைபெற்றதாகச் சொல்லப்பட்டது.
ஆனால் சம்புர் பிரதேச மக்கள் 2006லிருந்து இதுவரை தமது பிரதேசங்களை கண்ணால் பார்க்கக் கூடக்கிடைக்கவில்லை.மாறாக மட்டக்களப்பு இடைத்தங்கல் முகாம்களிலிருந்து மீள்குடியேற்றம் செய்வதாகச் சொல்லி கிளிவெட்டியில் , கேட்பாரற்றுக்கிடந்த காட்டுப்பிதேசங்களில் இவர்களை வாகனங்களில் கொண்டுசென்று இறக்கி விட்டு அவர்களையே காடுகளை வெட்டித்துப்பரவு செய்து அதற்கான தற்காலிக குடில்கள் அமைக்கசொல்லி சிறிது உபகரணப்பொருட்களை மட்டும் கொடுத்துவிட்டு எந்தவித உணவுப்பொருட்களோ மருந்துப்பொருட்களோ அத்தியாவசிய பொருட்களோ கொடுக்கப்படாமல் மீள்குடியேற்றம் என்ற போர்வையில் மீண்டும் மக்களைக்கொண்டு சென்று குப்பைகள் போல் கொட்டியுள்ளனர்.
சம்புர் பிரதேச மக்களின் ஒரு பகுதியினரை கடைசியாக றால்குழி-கடற்கரைச்சேனை பகுதியிலுள்ள பாவனைக்கே உகந்ததல்லாத இன்னொரு பகுதி காட்டுப்பிரதேசத்தை காட்டிவிட்டு அங்கும் தொடர்ந்து எம்மக்களை அனாதையாக்கியுள்ளனர்.நாடோடி மக்கள் கூட மலையும் வனப்புமான இடங்களில் தமது வாழ்க்கைத்தரத்திற்கேற்ப வாழ்ந்தஎம்நாட்டில், எமது தமிழ்பேசும் மக்கள இப்படி அரசியல் அனாதைகளாக தங்கள் சொல்லோணாத்துன்பங்களை கேட்போர் யாருமற்ற நிலையில் மிஞ்சிய உயிரை கையில் பிடித்த வண்ணம் வாழ்கின்றனர்.
2006யுத்தம் தொடங்கிய நாளிலிருந்து இன்றுவரை ஒட்டுமொத்த சம்புர் பிரதேசமும் அதியுயர் ராணுவ பாதுகாப்பு வலையமாகவே பிரகடனப்படுத்தப்பட்நிலையில் தொடர்ந்தும் உள்ளது.எந்த சிவிலியன்களோ-சிவில் நிர்வாகமோ மறுக்கப்பட்டு முற்றுமுழுவதுமாக ராணுவத்திற்குரிய பிரதே சமாகவே உள்ளது.இந்த ராணுவ வலயமாக பிரகடனப்படுத்திய
பிரதேசங்களைத்தான் மேற்குறிப்பிட்டதன்படி இந்திய அணல் மின்நியைத்திற்கு கொடுத்துள்ளது யாவரும் அறிந்ததே.
ஆயினும் 2007ற்கு பிற்பட்டகாலங்களில் இந்த உடன்படிக்கைகளிற்கிடையே சில பிக்கல் பிடுங்கல்கள் உருவாகி தொடர்ந்த அணல் மின்நிலையவேலைகள் பின்போடப்பட்டிருந்தன.இதன் உள் மர்மங்கள் இதுவரை வெளிவராத நிலைமைகளில் தற்போது ஒரு சில மாதங்களாக சம்புர் பிரதேசத்திற்கு வெளியே காட்டுப்பிரதேசங்களில் குடியேற்றப்படும் மக்கள் மூலம் சில தகவல்கள் வெளிவரத்தொடங்கியுள்ளன.வன்னி யுத்தம் முடிந்த நிலையில் தற்போது அணல் மின்நிலைய வேலைத்திட்டம் தீவிரமாக நடப்பதாகவும் இக்கட்டுரை எழுதிக்கொண்டிருக்கும் 24.10.09ன் நாளில் சில அவதானிகளால் வெளிப்படுத்தப்பட்ட தகவல் மிக வேதனைக்குரியதாக உள்ளது.
அதாவது அணல் மின் நிலைய வேலை மும்முரமாக நடக்கும் இந்நேரம் இயற்கையாக மழைக்காலமாகையால் மழைவராமல் தடுக்க வானவெளியிலிருந்து விமானங்களின் மூலம் ஏதோவொருவகை துப்பாக்கி வேட்டுச் சத்தங்களுடாகவோ அன்றி அதனூடாக ஏதோ வெடிச்சத்த முறையில் மழைமேகம் கொள்ளும் கருமுகில்கள் கலைக்கப்படுகின்றதாக.இப்படியாக இயற்கையை கூட திசைமாற்றும் இந்த அதிகாரவர்க்கங்கள் ஒன்று சேர்ந்து எமது இனத்தின் இயற்கையான பொருளாதார கட்டுமானங்களையும், அதன் வளங்களையும்,இருப்பபையுமே மறுதலிக்கின்றன,வேரோடு அழிக்ககின்றன.
இந்த இடம் ஆதிகாலம் தொட்டே தமிழர் வாழும் புமி..இதில் அழகான வெருகல் ஆறும்,அதனருகே மலையும்,அழகான மண்செறிந்த மண்தரைக்கடலும் இயற்கையின் தாராளம் நிறையவே செறிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.இங்குள்ள மக்கள்சிறப்பானறால்,மீன்பிடிதொழில்களையும்,கால்நடைவளர்ப்புக்களையும்,மேற்கொண்டும், மலையடி வுhரங்கள் செழிப்பாக இருப்பதால் விசேட மூலிகை வைத்தியங்களிலுமாக தத்தமது தகுதிகளுக்கும்-திறமைகளுக்குஏற்ப தொழில் செய்து சிறப்பாக காலாதிகாலம் வாழ்ந்துவந்தனர்.
துற்போது 2006யுத்தத்திற்கு பின் அப்பிரதேச மக்களை யுத்தசூழலைக்காட்டி நகர்த்தியும்,நகரப்பண்ணியும் சிதறுண்டு புழைப்புத்தேடி அலையவைக்கப்பட்டுள்ளனர்.தற்போது இங்கும் இலங்கைப்பேரினவாத அரசு இந்த இடைவெளியில்ஆந்த அழகிய பிரதேசத்தை தம்வசப்படுத்தி பெரிய மலை மீது புதிதாக புத்தவிகாரையைக் கட்டிமுடித்து,அங்குள்ள
கடல் சார்ந்த பகுதியை சர்வதேசஉல்லாச பிரியரின் உறைவிடமாக்க- பணத்தைக்கொட்டிசொர்க்கபுரியாக்கிவருகின்றனர்.
தற்போது ‘இலங்கைத்துறைமுகத்துவாரம்’ ‘லங்கா பட்டினம்’ என பெயர் மாற்றப்பட்டு ஒரு புதிய நகருக்குரிய அத்தனை வசதிகளும் செய்யப்பட்டு இந்த வேலைத்திட்டங்கள் முடியும் தறுவாயில் உள்ளதுமொத்தத்தில் எமது மக்கள் தமது பிரதேசத்தில் தன்னிறைவோடு வாழ்ந்த இடங்களையெல்லாம் தொடர்ந்து சுவீகரித்துசிங்கப்புர் மாதிரிகளையும்-உல்லாசபுரிகளையும்-நவீன உற்பத்தி ஆலைகளையும் அபிவிருத்தி-மறுசீரமைப்பு என்று உருவாக்கி இனவாதத்துடன் அடுத்தகட்ட செயல்களையும் நகர்த்துகின்றனர்.
அதாவது இத்தருணத்தில் காத்திருந்து தென்பகுதிகளிலிருந்து சிங்களமக்களை நாளாந்தம் பஸ்களில் 50அல்லது 60பேராக அழைத்து வந்து லங்காபட்டினத்தின் செழிப்பையும் வருமானத்தையும் காட்டி அவர்களுக்கு உடனுக்குடன்ஆத்தனை வசதிகளையும் செய்துகொடுத்து குடியேற்றிவருகின்றனர்.
அங்கு பாரம்பரியமாக வாழ்ந்த தமிழ்பேசும் மக்கள் விரட்டியடிக்கப்பட்டு,தொழிலும் இல்லை,, வாழ்வும் இல்லைவதிவும் இலலையென நாடோடிகளாக திரிய இவர்களுக்குஉரிமையான புமியை, சத்தம் சந்தடியில்லாமலேயே எங்கிருந்தோ சிங்களமக்களை கூட்டிவந்து அனைத்து வசதிகளுடனுமாக புதிய புத்தவிகாரையை மையப்படுத்தி ‘சிங்கள பௌத்த கலாச்சாரங்களை’தமிழ் பிரதேசங்களில் அடாவாடித்தனமாக இந்த அரசு மேற்கொள்வது எந்த வகையில் புத்த தர்மம்?
இந்தியாவிலிருந்து அசோக சக்கரவர்த்தியால் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட புத்தமதம் அகிம்சையையும்-காருண்யத்தையும் போதிக்கின்றதா?அல்லது புத்த மத்த்தின் அடிப்படைத் தத்துவத்தையே நிர்மூலமாக்குகின்றதா?தென்பகுதியில் சுதந்திரமாக,எல்லாவசதிகளோடும்வாழவழியும்,பரந்தநிலப்பரப்புக்களும்,இயற்கையான செழிப்பான பிரதேசங்களும் இருக்கும்போது ஏன் இந்த சிங்கள மக்களை ஆசைகாட்டி, துவேசம் ஊட்டி எம் இனத்தை எல்லாவழியிலும் அழித்துவிட்டு, இப்படி அத்துமீறிய குடியேற்றங்களை 58லிருந்து இந்த மாறிமாறிவரும் அரசுகள் இப்படியே மேற்கொள்கின்றனர்.இதனால் ஒரே நாட்டில் வாழும் இரு இனங்களுக்கிடையே முரண்பாட்டை வளர்த்து,நாளும் கூர்மையடையச் செய்து இனரீதியாக மோதவிட்டு தனது வர்க்க நவன்களை பாதுகாத்து குளிர் காய்கின்றது.இதனை பாதிக்கப்பட்ட எமது இனம் சுட்டிக்காட்pனால் நாம் தேசிய ஒற்றுமைப்பாட்டை சிதைக்கின்றோம் என்பார்கள்.
இநத அரசும் அரசுசார் ஊது குழல்களும் ஐக்கிய இலங்கைக்குள் பிரச்சனை தீர்ப்பதாகச் சொல்லி ,இவ் அரசுகள்எம் இனத்தின் அடிப்படையுரிமைகளையே பறித்து மொத்தத்தில் எம்மை இந்நாட்டுப் பிரஜைகளற்ற நிலைக்குத் தள்ளுகின்றது.
மேலும், மேற்குறிக்கப்பட்டவாறு இதுவரையில் திருமலையின் எல்லைக் கிராமங்கள்தான்சிங்களமயமாக்கப்படுவதும்,ஆத்துமீறல்களுக்குள்ளாக்கப்படுவதுமாக என்ற வரலாற்றுடன் போராடிக்கொண்டிருக்கும் நாம், குறுகிய நிலப்பரப்பைக்கொண்ட திருகோணமலை நகரப்பகுதியையும் இப்போது ஒட்டுமொத்தமாக இழந்து விடுவோமோ என்ற பயம் வந்துள்
ளது.ஏனெனில், குறுகிய நிலப்பரப்பில் மிச்செறிவாக தமிழ்பேசும்மக்களே காலாதிகாலத்திற்கும் வாழ்ந்துவருகின்றனர்.
இதில 1983ற்கு பின் வடமாகாணத்தில் தொடர்ந்து நடைபெற்றுவரும் பலதரப்பட்ட அரசியல் நெருக்கடிகளால் குறிப்பிடத்தக்க தமிழ்பேசும் மக்கள் இடம்பெயர்ந்து திருமலை நகரை நோக்கி குடியேறினர்.மேலும் இங்குள்ள எல்லைக்கிராமங்களில், இனரீதியான ஒடுக்குமுறைகளாலும் கனிசமான மக்கள் திருமலைநகரைநோக்கியே இடம்பெயர்ந்து வாழ்வது குறிப்பிடத்தக்கது.
1983ற்கு பின் இந்த 2006 மாவிலாறு பிரச்சனை வரை இங்கு, சிங்கள மக்கள் இல்லையென்று சொல்லும் அளவிற்குஏதோ அங்கொண்டும் இங்கொண்டுமாகவே வாழ்ந்து வந்தனர்.
தற்போது கடந்த 3 வாரத்திற்குள் வழக்கம்போல்,தென்பகுதியிலிருந்து சிங்கள மக்களை பேருந்துகளிலும்,விசேட விமானங்களிலுமாக நாளாந்தம் போக்குவரத்தது உதவிகளை தீவிரமாக அரச நிர்வாகத்தின் உதவியுடன்செய்து இப்பேரினவாத அரசு குடியேற்றத்தை செயற்படுத்துகின்றனர்.இந்த சிங்கள மக்கள் நகரிலுள்ள கடற்கரை வெளியிலும்,பெரிய முற்றவெளிப்பரப்பிலுமாக சிறு சிறு கொட்டகைகளையும்,கடைகளையும் தற்காலிக இருப்பிடமாக வசதியான படங்குகள் மூலம் அமைவிடங்கள் ஒழுங்குசெய்யப்பட்டு குடியேற்றப்படுகின்றனர்.இந்த நகரப்பகுதியின் கடற்கரைப் பிரதேசத்திற்கு அண்மையில்,மிக நீண்டகாலமாகவே றோமன்கத்தோலிக்க தமிழர்களும், குறிப்பிடத்தக்க இந்து சமயமக்களுமாக சுமூகமான உறவுகளோடு வாழ்கின்றனர்.
இதன் மையப்பகுதியில் ‘புனித மரியாள் பேராலயம்’ என்ற போர்த்துக்கேயர் காலத்தில்உருவாக்கப்பட்டமிகப்பெரியதேவாலயமும் ,பாதிரிமார்தங்குமிடகட்டிடங்களும்,அண்மைகாலங்களில் கிறிஸ்தவ சபையால் கட்டப்பட்டபலஅடுக்குள்ள கிறிஸ்தவ பயிற்சி நெறிப்பட்டறையும் ,கோவில் வளவினுள்ளேயே அரசாங்க மயமாக்கப்பட்ட கிறிஸ்தவ பாடசாலையும் ஒரே பெரிய நிலப்பரப்பில் அமைந்துள்ளது.இத் தேவாலயம் தான் திருமலை மாவட்டத்திற்குரிய பெரிய பங்குத் தேவாலயமாக நிர்வாகப் பொறுப்பை மேற்கொள்கின்றது.
தற்போது இந்த கோவில் வளவு, கோவில் விறாந்தைதள் வரை கூட திருமலையை நோக்கி கொண்டுவரப்பட்ட சிங்க ள மக்கள் தற்காலிகமாக தங்க வைக்க ப்பட்டுள்ளனர். இவர்கள் இங்கு கோவிலுக்கு சென்று வரும் தமிழ் மக்களுடன் சுமுகமாகக் கதைத்து ‘தங்களை மகிந்த மாத்தையா தான் ஒவ்வொரு நபருக்கும் 5000ருபா படி கொடுத்துதிருமலை நகரை சுற்றி பார்க்கச்சொல்லி எல்லா போக்குவரத்து செய்து அனுப்பியுள்ளார்.எமக்கும் இந்த ஊர் நன்றாக பிடித்துள்ளது.எல்லா வியாபாரங்களும் செய்ய இங்கு வசதிகள் உள்ளன.நீங்களும் நாங்களும் சிங்களவர்-தமிழர் என்ற பேதமில்லாமல் இங்கு ஐக்கியமாக ஒன்று சேர்ந்து வாழ்வோம் ‘ என்றெல்லாம் ‘மகிந்த சிந்தனையைஐக்கிய இலங்கைக்குள் செயற்படுத்துவதற்காக இந்த சிங்கள மக்கள் எம்மண்ணை நோக்கி கொண்டுவரப்பட்டுஆத்துமீறிய குடியேற்றத்தை மிக நாகரீகமான முறையில் நாகூசாக செய்கின்றனர். இப்படியாக இலங்கையரசும்,ஆதன் யந்திரங்களும் சிங்கள மக்களை ஆசைவார்த்தை காட்டி ஆகப்பட்டவற்றை செய்து கொடுத்து ஒற்றையாட்சிமுறைமை அரசியலை செழுமையாக செயற்படுத்துகின்றனர்.
துமிழ் பேசும் மக்கள் கடந்த 60 வருடத்தில் அனுபவித்த கொடுமைகளில்,கடந்த மாவிலாறு தொடங்கி முள்ளிவாய்கால் வரை கண்மூடித்திறக்கும் வேகத்தில்,அரசியல் அனாதைகள்-நாடோடிகள்- ஏதிலிகள் என ஒன்றுமில்லாமல் ஆக்கப்பட்டுகம்பிவேலிகளுக்குள்ளும்,இடைத்தங்கல் முகாம்களுக்குள்ளும் தமது வாழ்க்கையை தொலைத்துள்ளனர்.
வன்னியுத்தத்தின்போதுராணுவத்தால்மீட்கப்பட்டமக்கள்திருகோணமலையிலிருந்து-புல்மோட்டை வரை அனைத்துவைத்தியசாலையிலுமாக கொண்டுவரப்பட்டபோது திருமலை மாவட்டத்தைச் சேர்ந்த எத்தனையோ தமிழ் மக்கள்தனியாகவும், பொதுஸ்தாபனங்களாகவும் உதவிசெய்ய முன்வந்த போதும்,அந்தந்த மருத்துவ மனையிலிருந்து உறவினர்-நண்பர்கள் -தெரிந்தவர்களென அந்தந்த மக்கள் தமது பொறுப்பில் அந்த மக்களை பொறுப்பெடுக்க முயற்சித்தபோதும் அனுமதிக்காத அரசு அல்லது திருமலையிலிருந்து புல்மோட்டைவரை பெரும் நிலப்பரப்புள்ள பிரதேசங்களில்இடைத்தங்கல் முகாம்களை விசாலமாக ஏற்படுத்தி மக்களை பாதுகாக்க வழிகள் பல இருந்தும்,அந்த மூன்றரைலட்சம் மக்களையும் ஒரே வவுனியா பிரதேசத்திற்குள் மட்டும் இன்றுவரையும் அடைத்து பாதுகாப்பு என்ற பெயரில்பலவழிகளிலும் சீரழிப்பது எந்த புத்த தர்மம்?
திருமலையில் தற்போது தீவிரமாக மிக அவசரஅவசரமாக தென்னிலங்கை சிங்கள மக்களை அள்ளியெடுத்து வந்துகுடியேற்றுவதற்கு பதிலாக இந்த 6மாதத்தில், உலகநாடுகள் இந்த வன்னிமக்களின் குடியேற்றத்திற்கும் புணர்வாழ்வுக்குமென கோடிகோடியாக கொட்டிக்கொண்டிருக்கும் பணத்தில் இந்த மக்களுக்கு அடிப்படைகுடியிருப்புவசதிகள்-புதிய வேலைவாய்ப்புக்கள் என எல்லாவற்றையும் செய்திருந்தால் நாம் மகிந்த சிந்தனையில் சந்தேகப்படுவதைசிறிது சீர் தூக்கிப் பார்க்கலாம். ஆனால் பௌத்த சிங்கள பேரினவாத அரசு காருணயத்தை காட்டுவதற்கு பதிலாககாட்டுமிராண்டித்தனமான திட்டமிட்ட செயல்களைத்தான் செய்கின்றது.
ஐக்கிய இலங்கைக்குள் அனைத்து மக்களும் சமம் என்று சொல்லிக்கொண்டே மிக மோசமான ஒற்றையாட்சி-ஒரேஇனம் என்பதனைத்தானே செயற்படுத்துகின்றது.30 வருடமாக எமது தமிழ் பேசும் மக்கள் பாசிசப் புலிகளின் பயங்கரப்பிடிக்குள் அல்லல்பட்டு,திக்குத்திணறி மீட்கப்புட்ட நிலையில் மீண்டும் அதைவிட மோசமாக இனஅழிப்புக்குள்ளாக்கப்படுவது தான் பௌத்த தார்மீகமா?
புலிகளுடனான மோதலின் ராணுவ வெற்றியை கொண்டாடி ஆர்ப்பரிக்கும் அதேநேரம்,உடனடியாக ஒன்பது மாகாணத்திலும் லடசோலட்சம் பணத்தைக் கொட்டி அரசகால ஸ்தூபிகளுக்கு நிகராக மிகப்பிரமாண்டமாக ஒன்பது மாகாணங்களிலும் யுத்தநினைவுஸ்தூபிகளை அமைப்பதுவும், கிளிநொச்சி,முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், திருகோணமலை
என்ற பாரம்பரிய தமிழ்பிரதேசங்களில் இரவோடிரவாக மாபெரும் புத்த விகாரைகளும் அதன் புனர்நிர்மாணங்களும்அதையொட்டி புத்த நிர்வாகப் பரிபாலனம் என்ற போர்வையிலும் சிங்களபௌத்த பாரம்பரிய கலாச்சாரத்தை வரலாற்று சாட்சியங்களாக நிலைநாட்டி இன்னும் சில வருடத்தில் தமிழ் தேசிய இனத்தின் அனைத்து அடையாளங்களும்அற்றுப்போகும் வழிமுறைகளை இந்த ராணுவ வெற்றிக்களிப்பின் உச்சகட்டமாக செயற்படுத்துவதா புத்த தர்மத்தின் தார்மீகக் கோட்பாடு?
கடந்தகால புலிகளின் தர்பாரில்,உலகிலுள்ள ஈழத்தமிழர்களிடம் பலவிதத்திலும் சேகரித்த பணத்தையும்,புலிகளின்சர்வதேச வியாபார வலைப்பின்னல்மூலம் முடக்கப்பட்டிருந்த கோடிகோடியான சொத்துக்களையும்,மேலும் நாட்டில் எமது மக்களை பலவிதத்திலும் வரையறையில்லா வரிகளை சுமத்தி அறவிட்ட பணங்களையும் இலங்கைப்பணமாக-வெளிநாட்டுப்பணங்களாக-கணக்கிடமுடியாத பெறுமதிமிக்க நகைகளாக என புலிகள் இதுவரை தமிழரை பிழிந்தெடுத்து அபகரித்து, பதுக்கி வைத்திருந்த இந்த பெறுமதியே கணிக்கமுடியாத சொத்துக்களை முள்ளிவாய்க்காலின்முடிவுக்குப்பின் இலங்கை ராணுவம் பகுதிபகுதியாக பல இடத்திலும் புதையல் எடுத்தது போல் எடுத்து அதனைபலவழிகளிலும் தங்கள் ராணுவ வெற்றிக்களிப்பாக உலகம் முழுவதும் தெரியப்படுத்தியது யாவரும் அறிந்ததே.
இலங்கையரசு உண்மையாகவே புத்த தர்மங்களை-அதன் தார்மீகங்களை கடைப்பிடிப்பதாக இருந்தால் எம் மக்களுக்குரிய இந்த சொத்துக்களையாவதுஅந்த வன்னி மண்ணிலேயே அந்த வன்னி மக்களுக்கு இதுவரை பலவிதத்திலும் மீள் கட்டமைப்புக்களை செய்யலாமே .ஓரிரு மாத கால பாவனைக்கென தயாரிக்கப்பட்ட தறகாலிக கூடாரங்களேஏம்மக்களுக்கு நிரந்தர வாழ்க்கையாக்குவார்களா?முன் குறிபபிடபபட்டது போல் மூன்றரை வருடத்திற்கு முன் மாவிலாறில் தொடங்கிய யுத்தத்தில் இருப்பை பறிகொடுத்த மக்களுக்கே இன்றும் நிரந்தர வதிவிடமில்லாதபோது இந்த வன்னிமக்கள் என்றைக்குமே தத்தமது பிரதேசங்களுக்கு மீளக்குடியேற்றப்படுவார்கள் என்ற நம்பிக்கையோ அடையாளங்களோ இல்லை!
பௌத்த தார்மீக போதனையை கடைப்பிடிக்கும் நாடு எனச்சொல்லிக்கொண்டு ஜப்பான்,சீனா போன்ற பௌத்த நாடுகளுடன் எல்லா உறவுகளையும் மிக நெருக்கமாகப் பேணி அந்த வலையத்திற்குள் விழுந்து, யுத்த வெற்றிக்குப்பின்சர்வதேச நாடுகளுக்கே தண்ணிகாட்டித்திரியும் இந்த அரசு எம் இனத்தின் அடையாளமே இல்லாமல் செய்வதற்கானஅத்தனை வழிவகைகளையும் மேற்கொள்கின்றது.
இதற்கு சிறு உதாரணமாக தற்போது வவுனியா இடைத்தங்கல் முகாம்களில் மிருகங்கள் போல் அடைத்து வைத்திருக்கும் எம் மக்களுக்கு மறுவாழ்வு எனச்சொல்லிக்கொண்டு ஜப்பானிலிருந்து வந்துள்ள ஜப்பான் புத்த குருமார்இந்த அகதிமுகாம்களுக்கு சென்று பாடசாலை செல்லக்கூடிய சிறுவர்களை தனியாகவும்,இளைஞர்களை தனியாகவும் வகைப்படுத்தி தனி ஜப்பான் மொழி மூலம் சிறுவர் பாடல்களையும், பௌத்த சமய போதனைகளையும்,பௌத்த சமயவழிபாட்டையும் கூட்டுப்பிராத்தனைகளையும் திணிப்பது எந்த வகைக் கொடுமை?இதனை இந்த அரசு வீடியோ படம் எடுத்து ஆவணப்படுத்தலை துணிந்து செய்வது எந்த வகை நியாயம்?
மேலும் இந்த இடைத்தங்கல் முகாம் தொடக்கப்பட்ட நாளிலிருந்து கைதுசெய்யபட்ட, கடைசியாக சரணடைந்தவிடுதலைப்போராளிகளுக்கு முதற்கட்டாயமாகவே வலுக்கட்டாயமாக சிங்கள மொழியைத்திணித்து படிப்பிப்பதுஎந்த வகை புனர்நிமாணம்?
மொத்தத்தில் 60 வருடமாக தமிழ்பேசும் இனத்தின் அடையாளமான வடகிழக்கிணைந்த தமிழ் பிரதேசங்கள்,மொழி, கலாச்சாரம்,பண்பாடு என்றவற்றை படிப்படியாக அழித்துவந்த பேரினவாத அரசு,வன்னி நிலப்பரப்புக்களையும்அந்த மக்களையும் ஆக்கிரமித்து-அடைத்துவைத்து மிருகங்களையும் விட கேவலமாக நடத்துவதன் மூலம்இந்த மக்களுக்கு கடந்த 6மாதமாக எந்த வாழ்வாதார தேவைகளையும் சீராகச்செய்யாமல் இப்படி இன்னொரு நாட்டவர்களால் பௌத்த சமயம் திணிக்கப்படுவதும்,சிங்கள மொழியை கட்டாயமாக படிப்பிப்பதும் ஒட்டுமொத்த எம் இனத்தின் அடையாளத்தை வேரறுத்து ஐக்கிய இலங்கை என்ற முகமூடிக்குள்,பயங்கரவாத அழிப்பென்ற போர்வைக்குள்இலங்கை என்பது ஒற்றையாட்சியில் ஒரே இனம் தான் என வரலாற்றை நிறுபிக்கவுமே இவற்றை நடாத்துகினறது.
இந்த அரசுதான் தனது தாற்பரியத்தை காலம் காலமாக நடத்துகின்றதென்றால் டக்லஸ் முதல் கருணா வரை,அங்குள்ள தமிழ் தலைமைகள் முதல் இங்கு வெளிநாட்டிலிருந்து விலைக்கும், சலுகைக்குமாக விலைபோன புலம்பெயர் துரோகிகள் அங்கு சென்று புத்தம் சரணம் கச்சாமி என்ற துதிபாடாத குறையாக மகிந்த சிந்தனையின்செயற்பாடாக ‘கிழக்கின்உதயம்-வடக்கின் வசந்தம்’என்பது வரைவடகிழக்கு பிரிப்பை மேற்கொண்டதற்கு உறுதுணையாக இருந்ததிலிருந்து தமிழினம் என்ற அடையாளத்தை எல்லா வழிகளிலும் நிர்மூலமாக்குவதுவரை மகிந்தஅரசுக்கு கைகொடுத்து அந்த அரசின் அத்தனை குற்றவியல்களையும் விதவிதமாக முலாம் புசி துதி பாடித்திரிகின்றனர்.
இன்று இலங்கையரசால் கிழக்கின் உதயம் விடிவைத்தந்துவிட்டதென்று மார்தட்டும் இவ் அரசால் கிழக்கின் முதல்வர் என்ற பொம்மை அரசிற்குரிய பரிச்சார்த்த வேலைத்திட்டம் அம்பலமாவது தெரியவில்லையா?
இந்த சிவநேசதுரை சந்திரகாந்தன் சிறிது விழிப்புப்பெற்று தனது மாகாண சபைக்கு அதிகாரம் எதுவும் இல்லை ஏன புலம்ப கூரைஇல்லாத மந்திரி மகிநதாவின் கைப்பொம்மை மந்திரி கருணா அதற்கு விளக்கம் சொல்வதும்கடந்த 3 வருடமாகஅவர்களுக்குள்குத்துவெட்டுக்களும்,கொலைகளும், நேரத்திற்கு நேரம் கட்சிமாறி நின்றுகாட்டிக்கொடுப்புக்களும் தொடர்கின்றது.
இன்றுவரைகிழக்குமாகாணத்தில்தொடரும்ஆள்கடத்தல்,கொலைமிரட்டல்,கப்பம்பெறல்பெண்கள் கடத்தப்படல்புhலியல் பலாத்காரம் காணாமல்போதல்,துன்புறுத்தல் கொலைசெய்துபழிபோடல் என்பது சராசரி வாழ்க்கையாக பழக்கப்பட்டுவிட்டது.
இதற்கு இன்னொரு உதாரணம்: திருகோணமலை நகரப்பகுதியிலிருந்து நிலாவெளிக்குப் போகும் வழியில் 4 மைல் தூரத்தில் அலஸ்தோட்டம் என்ற சிறிய கிராமத்தை அந்த மாவட்டத்தை தெரிந்த மக்கள் அறிந்திருப்பார்கள்.ஆதில் கடந்த 8 வருடங்களுக்கு முன் கத்தோலிக்க சபை குருவானவர் வணக்கத்திற்குரிய பிலிப் அடிகளார் அவர்களால் ‘இறை இரக்க கோவில்’என்ற சிறிய குடிசை அமைக்கப்பட்டு அப்பகுதி தமிழ் மக்களால் சமயவேறுபாடின்றி இவ் ஆலயம் புஜிக்கப்பட்டுவந்தது.கத்தோலிக்க சபைக்குரிய சிறிய தேவாலயமாகவே இது பரிபாலிக்கப்படுகின்றது.
காலத்திற்கு காலம் குருமார் இடம் மாறிவந்தாலும் அந்த மக்கள் தொடர்ந்து தமது தியானங்கள் -ஆராதனைகளை எந்த சமய முரண்பாடுகளுமில்லாமல் நடாத்தி வந்தனர்.அதில் கடைசியாக பணியாற்றிய .ரமேஸ் கிறிஸ்ரி என்ற மட்டக்களப்பு நகரப்பகுதியைச் சேர்ந்த குருவானவர் சிறப்பாக இந்த மக்களுடன்சேர்ந்து தனது இறைபணியை செய்தார்.கடந்த வன்னிப் பிரச்சனைகளின்போது கூட அந்த கிராமத்து மக்களும்
இந்த குருவானரும் வன்னிமக்களின் சுபீட்சத்திற்காக விசேடவழிபாடுகளை மேற்கொண்டனர்.இதில் விசேசம்என்னெவென்றால் திருமலை நகரப்பகுதியிலிருந்தும்,அயல் கிராமங்களிலிருந்தும் வாராவாரம் வெள்ளிக்கிழமைகளில் நடையாக நடந்து சென்றும் கூட கூட்டுப்பிராத்தனைகளை இந்து கிறிஸ்தவ மக்கள் என்ற வேறுபாடில்லாமல் மக்கள் வழிபடுவார்கள்.
அந்த ரமேஸ் கிறிஸ்ரி என்ற குருவானவரும் வேறுமாவட்டத்திலிருந்து வந்திருந்தாலும் அந்த பிரதேச மக்களுடன் அன்பாக பழகி எல்லோரிடமும் நன்மதிப்பைபெற்று கோவிலையும்அந்தக் கிராமத்தையும் சிறப்பாக நடத்தி,அக் கோவில்பணியிலும் அக்கிராமப்பணியிலும் அம் மககளை சிரமதானப்பணிகள்மூலம்,ஈடுபடுத்தி தனது சேவையை மேற்கொண்டார்.
கடந்த புரட்டாதிமாதமளவில் ‘கருணா குழு’வினர் என்றுஅடையாளப்படுத்தப்பட்ட ஒரு சிலர் இவரிடம் வந்துமிரட்டி பணம் கேட்டதாகவும்,இவர் இந்தக் கோவில் சிரமதானப் பணிக்குரிய பணத்தை தரமுடியாதென்று மறுத்த தகவலும் இக் குருவானவரால் தனது பணிகள் சார்ந்த நிர்வாகத்திற்கு சொல்லப்பட்டுள்ளது.
கடந்த அக்றோபர் 4ம் திகதி ஞாயிற்றுக்கழமை திருப்பலி முடுpந்து விட்டு திரும்பிய குருவானவர் இரவு 10 மணியிலிருந்து காணாமல் போயுள்ளார்.யாரோ இவரை இடைமறித்து நிர்வாணப்படுத்தி அடித்து உதைத்து ஏதோ திராவத்தை பருக்கி வீதியில் போட்டுச் சென்று அருகில் 1மைல் தொலைவிலுள்ள உப்புவெளி கிறிஸ்தவ குருக்கள் பணியகத்திற்கு தொலைபேசி மூலம் செய்தி சொல்லியுள்ளனர்.
அதாவது, இந்தக் கோவில் குருவானவர் வீதியில் நிர்வாணமாகக் குடித்துவிட்டு கிடப்பதாக அறிவித்துள்ளனர்.உடனே கிறிஸ்தவ பணியகமும் அந்த ஊர்மக்களும் அலரை தேடிச் சென்று மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.நிர்வாணமாக்கப்பட்ட அந்த குருவானவரின் உடல் மிக மோசமாக அடித்து துன்புறுத்தப்பட்டுள்ளமை வைத்திய பரிசோதனை சான்றிதழ் மூலம் நிறுபிக்கப்பட்டுள்ளது.மேலும் இச சம்பவம் சம்பந்தமாக குருக்கள் பணியகத்திற்கு வந்த தொலைபேசிச் செய்தியை விசாரிக்கும் கடமை அந்தப் பணியக தலைமைக் குருவானவருக்குள்ளதால் விசாரணையை சம்பவம் நடந்த அயலிலுள்ள பொதுமக்கள் மத்தியிலும்,குருவானவரின் வாக்குமூலத்தின் மூலமும், வைத்திய அறிக்கைகளின்படியும் விசாரித்ததில் இது அந்தபணம் கேட்டு தொல்லைபடுத்திய கடத்தல் கப்பம் கோரும் கருணா குழுவினரின் விசமத்தனமான செயல் என்பது நிருபணமாகியுள்ளது.
இப்படிச் சம்பவங்கள் கிழக்கு மாகாணத்தில் இன்றும் தொடர்வது புதிதல்ல.
6வயதுபெண்குழந்தைவர்சாகடத்கப்பட்டு,கப்பம்கேட்டுபாலியல்துன்புறுத்தப்பட்டு,கொலைசெய்யப்பட்டு,வெட்டிமூட்டைகட்டப்பட்டு வீதியில் எறிந்த இந்த திருமலை நகரையே பதைபதைக்க வைத்த இந்த செயல் உட்படதிருமலை கோணேஸ்வரக்குருக்கள் கொடுரமாக வீதியில் கொலைசெய்யப்பட்டது, இன்றுவரை இங்கு வீட்டுக்கொள்ளை நகையறுப்பு,மிரட்டல்-கொள்ளை,கொலையென ஒரே கருணா பிள்ளையான் குழுக்களே கிழக்கின்
விடிவெள்ளிகளாகத் திரிந்து மக்களை இன்னும் இன்னும் எல்லா விதத்திலும் சீரழித்துக் கொண்டிருக்கின்றனர்.
மொத்தத்தில் தமிழ்தேசியகுறுவாதம், புலிப்பயங்கரவாதம் என்பவற்றை அழிப்பதாக சொல்லிக்கொண்டு அதற்குமாற்றீடாக செயற்படுவதாக கூறிக்கொண்டு இந்தக் காழ்ப்புணர்ச்சியில் பௌத்த சிங்களபேரினவாத அரசுக்கு கூலிஅடிமைகளாகவும்,தமிழரிடம் நசுக்கப்படுவதைவிட சிங்கள அரசிடம் மண்டியிட்டு சலுகைகளுக்காக ஐக்கியஇலங்கை என்னும் கோசத்தில் -மகிந்தசிந்தனையை செயற்படுத்தலாமென்று மெல்ல மெல்லவாக இலங்கையரசின்
ஓற்றையாட்சி தன்மைக்கு,இந்த காழ்புணர்வு கொண்ட ஒரு சிலர் தங்களை தமிழர் என்று சொல்லவே வெட்கப்படுகின்ற இந்த எடுபிடிகள் போன்றோரும்,கொழும்பு இருப்புக்களை-பாராளுமன்றக்கதிரைகளை தக்கவைத்துக் கொள்ளும் சூட்சுமத்தில் மாட்டிக்கொண்ட குறிப்பிடத்தக்கவர்கள் உட்பட வரலாற்றில் இப்படியாக சிலர் மிக கேவலமானபதிவிற்குட்படுவதை உணரவில்லையா?தூங்குபனை எழுப்பலாம்,தூங்குபவன் போல் உரிமைகளைவிலைபேசி விற்று சலுகைகளுக்காக தொங்கிக்கொண்டிருக்கும் இந்த நபர்களை வரலாறு மன்னிக்கவோ மறக்கவோ மாட்டாது.
சகபோராளிகளை,சகஇயக்கங்களை,தமிழ்தலைமைகளை,புத்திஜிவிகளை,ஊடகவியலாளரை என அடித்தும்கொலைசெய்தும்,துன்புறுத்தி நாடுகடத்தி ஓடப்பண்ணியும் என எம் இனத்தின் பக்கபலங்களை பல கிளைகளாகதறித்தும் முள்ளிவாய்க்கால்வரை எம் மக்களை பயணக்கைதிகளாக பாவித்து பலிகொடுத்து தாமும் பலியானபுலிகளின் அதிகார ஆளுமைமிக்க சில தலைமைகளாலும் காலத்திற்குகாலம் அப் புலிகளையே ஆட்டிப்படைத்த வெளிநாட்டுச் சக்திகளாலும் மொத்தத்தில் இவர்களது அடாவடித்தனமான நடவடிக்கைகளால் தமிழ் பிரதேசம் உட்பட எம் மக்களுக்கு விடிவு தரக்கூடிய நல்ல தலைமைகளை இழந்துள்ளோம் .நல்ல தலைமைகள் உருவாகலை தடுக்கப்பட்டுள்ளோம்.எனவே ஒரு சில அதிகாரவெறிபடித்த ஆளுமைத்தலைமைகனின் தவறுகளால் ஒட்டு
மொத்த போராளிகளையோஅன்றி ஒட்டு மொத்த வன்னி மக்களையோ மெபத்தத்தின் எம் இனத்தின் அடையாளங்களையோ நசுக்கி அழித்து எமது காழ்ப்புணர்ச்சிகளை இலங்கையரசிற்கு சாதகமாக பயன்படுத்த விடலாமா?அல்லது அரசின் ஊதுகுழலாக இருந்து புலிப்பயங்கரவாதத்திற்கு ஈடு, அரசபயங்கரவாதம்தான் என நியாயப்படுத்தலாமா?
அன்றைய பிரித்தானிய அரசின் வஞ்சகநோக்கில் அமைந்த பிரித்தாளும் தந்திரோபாயத்தை 1948 இலங்கை சுதந்திரம் பெற்றதெனசொல்லப்பட்டபின்பும் தொடர்ந்த இலங்கை பேரினவாத அரசின் பிரித்தாளும் தந்திர வலைக்குள் எம்தமிழ்பேசும்இனமும், அதன் பிரதேசமும் மாட்டுப்பட்டு பிரித்தாளப்பட்டு கூறுபோடப்பட்டு சிங்கள,தமிழ்,இஸ்லாம்மக்களிற்கிடையே காலத்திற்கு காலம் முரண்பாடுகள் வளர்க்கப்பட்டு ஒட்டு மொத்த பாமர மக்களையும் ஏழைகளையும் வாக்குப்பெட்டகளுக்காக இந்த மாறிமாறி வரும் அரசு பயன்படுத்தியமையும் இதனையே தமிழ் தலைமைகளும் சாதகப்படுத்தியதுமே வரலாறாக முடிந்துள்ளது.
எனவே இனியாவது கடந்த கால தவறுகளை மீட்டெடுத்து பார்த்து பழிதீர்த்து காழ்ப்புணர்ச்சிகளை அரசியலாக்காமல் சிங்கள தமிழ் பேசும் இனங்களுக்கான அனைத்து சகல உரிமைகளும் சட்டஅமுலாக்கலிலும் நடைமுறையிலும் உறுதிசெய்யப்பட்டு உண்மையில் சகல இனங்களுக்கான சமத்துவம்,சகோதரத்துவம்,சமாதானம் பேணப்படுமானால் தான் சகல மக்களின் நிரந்தர விடிவுக்கு வழி கிடைக்கும்.இதை விடுத்து இன்னும் இன்னும் அரச பயங்கரவாதத்தாலும்,விலைபோகும் சிங்கள தமிழ் ஆளும் அதிகார வெறிபிடித்த தமது வர்க்க நலன்களுக்காக செயற்படுவோராலும் தமிழ் சிங்கள மக்கள் வழி நடத்தப்பட நேரிட்டாலோ மீண்டும் இனமுரண்பாடு கூர்மையடைதலும்,
சிங்கள தமிழ் பயங்கரவாதம் மீண்டும் வேர்; விட்டு வளர்தலும் தவிர்க்க முடியாது.
எனவே ஐக்கிய இலங்கை என்ற கபடமான மகிந்தசிந்தனைக்குள் ஒற்றையாட்சியை நிறுவி பகைமுரண்பாட்டைவளர்க்காமல் தமிழ் பேசும் மக்களின் அதிகாரப் பங்கிட்டலுக்கு அமைவாக ஜனநாயக அடிப்படையில் வடகிழக்குஇணைந்த ஒரு நிலப்பரப் பிற்குட்பட்ட ஒருசுயாட்சி முறைமை அல்லது சுயநிர்ணயஉரிமை, அல்லது சமஸ்டியைஓத்த தீர்வும் அதன் செயற்பாட்டையே எம் இன மக்களுக்காக நாம் வேண்டி நிற்பது.
எனவே சர்வதேச நாடுகளும் எமது இலங்கைப்பிரச்சனையில் தமது லாபங்களை இதுவரை பங்கு போட்டுக்கொண்டதோடு நிற்காமல் இனியாவதுரகசியமாக ஆயுதங்களை-தளபாடங்களை விநியோகித்து பயங்கரவாதத்தை அழிததுசமாதானத்தை நிலைநாட்டத்தான் இன்ன இன்ன செய்கின்றோம் என தமது வல்லரசு போட்டிகளை எம் இலங்கை மக்கள் மீது தொடர்ந்தும் திணிக்காமல் எம் அனைத்து மக்களுக்கான மனிதநேய விடுதலைக்கு வழி கோலுங்கள்.உறுதுணையாக இருங்கள்.
ஐ.நாசபையும் மனித உரிமைஅமைப்புக்களும்,அனைத்து சர்வதேச மனிதநேய பொதுஸ்தாபனங்களும் தயவு செய்து எமது இலங்கை மக்களின் நசுக்கப்படும்-ஒடுக்கப்படும் மக்களுக்கான குரலுக்கு செவிசாயுங்கள்.நடவடிக்கை எடுங்கள்-அராஜகங்களை அம்பலப்படுத்துங்கள்.உலகப்பொதுமன்றங்களில் வைத்து நீதிக்காக விசாரணை செய்யுங்கள்.தண்டனை கொடுங்கள்.
காலாதிகாலம் சுரண்டப்பட்ட நாம் இன்று கதறி அழக்கூட நாடின்றி நாதியின்றி சர்வதேச அரங்கை நோக்கி கூக்கரலிடுகின்றோம்-நிதியை நிலைநாட்ட கைகொடுங்கள்.
எம்மை- எம் பிரதேசங்களில் வாழவிடுங்கள்-நாம் என்றும் எமது மனித உரிமைக்காக எமது இருப்புக்களுக்காகபோராடுகின்றோம் .வெறும் சலுகைகளுக்காக அல்ல.