தென் இந்திய தொலைக் காட்சி ஊடகங்கள் புலம்பெயர் நாடுகளில் தன் நச்சு வேர்களை எப்போதும் அழிக்க முடியாதவாறு நிலை நிறுத்திவிட்டன. இவற்றின் ஏக போக உரிமையை எங்கள் புலம்பெயர் தமிழ் முதலாளி மாபியாக்கள் வைத்திருக்கின்றர் இவர்கள் தான் தமிழர்களுக்கு விடுதலையை வாங்கித் தரப்போவதாக வாய் கிழியப் பேசும் விடுதலை வீரர்கள்.
இது ஒரு புறம் இருக்க இன்னொரு பக்கத்தில் லண்டனில் உள்ள இரண்டு பிரதான தொலைக் காட்சிகளான தீபம் மற்றும் GTV ஆகியவற்றின் சாயம் நன்றாக வெளுத்து விட்டது வயித்துப் பிழைப்புக்காக போலித் தமிழ் தேசியத்தை தூக்கிப் பிடித்துக் கொண்டு மக்களிடம் பிச்சை எடுக்கும் இந்த இரு ஊடகங்களும் முழு நேரமாக இந்திய தொலைக்காட்சித் தொடர் குப்பைகளையும் ‘சொல்வதெல்லாம் உண்மை’ போன்ற மிக குரூரமான நிகழ்சிகளையும் ஒளிபரப்பி தங்கள் விளம்பரதாரர்களைத் திருப்திப் படுத்தி உபரி வருமானத்தையும் ஈட்டி தங்கள் பொக்கற்றை நிரப்பிக் கொள்கிறார்கள்.
சரி இதையும் போகட்டும் என பல்லைக் கடித்துக் கொண்டு சகித்தால் தமிழர்களுக்கு இவர்கள் வடிக்கும் நீலிக் கண்ணீரையும் தென் இந்தியாவில் மிக மலிவான கூலிக்கு வேலை செய்யக் காத்திருக்கும் மீடியா போலிகளை வைத்து வடிக்கிறார்கள். செய்தி முதல் அரை வேக்காட்டுத் தனமான அரசியல் நிகழ்சிகள் எல்லாம் இணையம் மூலம் இந்தியாவில் இருந்தே வர வழைக்கப் படுகின்றது என்ற உண்மை எம் மக்கள் எத்தனை பேருக்கு தெரியும்.
புலம் பெயர்ந்து இங்கே வாழும் தமிழ் அறிவிப்பாளர்களை சுரண்டிப் பிழைப்பு நடத்திய இந்த ஊடகங்கள் அவர்கள் தமது சம்பளப் பிரச்சினை எழுப்பிய போது அவர்களைத் துரத்தி அடித்து விட்டு மலிவான கூலிகளை இந்தியாவில் ஒழுங்கு பண்ணிக் கொண்டனர். தொலைக் காட்சியில் முகம் காட்டும் மற்றையவர்கள் இந்த கொள்ளையடிக் கும்பலின் முக்கிய தாதாக்களும் புகழெனின் உயிரும் கொடுக்கும் புக ழே ந்திகளுமே.
ஊடகம் நடத்துவது சாதாரண விஷயம் அல்ல கனக்க காசும் வேணும் எண்டு நீங்கள் கேட்கலாம், உண்மை இந்தியத் தொடர்களையும் படத்தையும், பாட்டையும் போட மட்டும் ஒரு தொலைக்காட்சி நடத்தத் தான் வேண்டுமா? துப்புக் கெட்ட பிழைப்பு இல்லையா. மக்களை சிங்கள அரசு அழிக்கிறது எண்டு சொல்ல என்ன வக்கு இருக்கிறது? நீயும் தானே உன் மக்களை அழிக்க அரசோடு துணை நிற்கிறாய்!
இதோ வருகிறது முள்ளி வாய்tக்கால் பேரவல நாள் தயாராகிக் கொள்ளுங்கள் நடிப்புச் சுதேசிகளே மற்றுமொரு நாடகத்துக்கு.