கீழ்வரும் கட்டுரை ஜோர்ஜ் திலகன் என்பவரால் இனியொருவிற்கு அனுப்பிவைக்கப்பட்டது. விரிவாக்கப்பட வேண்டியதும் முரண்படத்தக்க கருத்துக்களைக் கொண்டிருந்தாலும் விவாத நோக்கில் கட்டுரையைப் பதிவிடுகிறோம். ஆரோக்கியமான விவாதங்கள் ஊடகச் சுதந்திரம் குறித்த கருத்தை வளர்த்தெடுக்குமானால் மகிழ்ச்சி.
மரங்கள் கூட விண்ணை விசாரணை செய்யும் ஒரு தேசத்திதை முச்சுக் கூட விடமுடியாமல் முடக்கிவைத்துவிட்டார்கள்.
ஈழத்தில் மக்கள் வேதனைப்படும் போது புலம்பெயர் நாடுகளில் கண்ணீர்வடிக்கும் உணர்ச்சி கொண்ட மக்கள் கூட்டம் ஒன்றைக் கண்டோம்.
எங்களை நாங்களாக மார்தட்டி வாழ்ந்து மடிந்து பின்னர் மறுபடி உயிர்த்து குறைந்தபட்சம் பிரித்தானிய ஊடக ஜனநாயகத்தையும் அங்கே வாழும் நாகரிகத்தையும் கற்றுக்கொள்ள ஆரம்பித்தோம்.
இந்த குறைந்தபட்ச நாகரிகத்கை படைத்த ஆங்கிலேயரைப்போல நாம் கோட் சூட் அணிந்து டை கட்டியிருக்கிறோம். ஆனால் நாம் மட்டும் உள்ளத்தாலும் உணர்வாலும் மாறாமல் அப்படியே நிலபிரத்துவ சர்வாதிகாரியாக இருக்கிறோம் என்பதைத்தான் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஊடகவியலாளரான தினேஷ் அவர்கள் ஜீ ரீ வி யிலிருந்து வெளியேறவேண்டிய நிலைமை தோற்றுவிக்கப்பட்டதாக ஜீரீவியின் உள்வட்டாரத்திலிருந்து நம்பகரமாக அறிகிறோம்.
ஜீ டீ வி க்கு ஒரு வரலாறு உண்டு. அதனை நேசிக்கும் லட்சக்கணக்காண ரசிகர்கள் இருக்கிறார்கள். அதன் சோதனை மிகுந்த நாட்களில் அதனோடு அரைபட்டினி நிலையிலிருந்து உழைத்த ஒருசிலரில் தினேஷ் ஒருவர். அதன் வளர்ச்சிக்காக அவர் வழங்கிய பங்களிப்பு அளப்பரியது என்பதை அதன் நிர்வாகம் மறுக்காது என நினைக்கிறோம்.
முரண்பாடுகள் உடன்பாடுகள் என்ற எல்லாவற்றையும் ஒரு மூலையிலே தூக்கிவைத்துவிட்டு உழைப்பு என்ற தராசை வைத்து மட்டும் பார்த்தால் கூட ஜீ.ரி.வி தினேஷிடம் இருந்து பெற்றுக்கொண்டது கூலியால் சமப்படுத்த முடியாதது.
ஆனால் திடீரென ஒரு சீ ஈ ஓ அதற்குள் புகுத்தப்பட்டது பலரையும் அதிர்ச்சியடையவைத்தது. ஏனெனில் அவர் ஒர் அரசு இல்லாத அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சர். வில்லியம் ஹேக் பீபீசியின் சீ ஈ ஓ வாக வருவi;த பிரித்தானிய மக்கள் ஒத்துக்கொள்ள மாட்டார்கள். அதிகம் ஏன் ஜி எல் பீரிஸ் ரூபவாகினியின் சீ ஈ ஓ வாவதை இலங்கை மக்கள் கூட ஒத்துக்கொள்ள மாட்டார்கள். ஆனால் ஜீ டீ வி; அந்த அரசு இல்லாத அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சரை சீ ஈ ஓ வாக நியமித்தமையைப்பற்றி பல்வேறு ஊகங்களும் கருத்துகளும் எழுந்தன. அவற்றை இங்கு நாம் ஆராய வேண்டியதில்லை. ஆனால் இத்தகைய ஒரு அரசியல் நியமனம் ஊடக சுதந்திரத்திற்கு அடிப்படையில் முரணாணது என்பதை நாம் அழுத்தம் திருத்தமாக கூற விரும்புகிறோம்.
ஒரு விடயத்தை நினைவில் வைத்துக் கொள்வது அவசியம்.
ஊடகவியலாளர்களை அடிமை எஜமானர்கள் பாணியில் அடிமைகளைப் போல நடத்த முடியாது. தங்களோடு செயற்படுகின்ற ஊடகவியளார்களை மனிதர்களாக நடத்தத்தெரியாதவர்களுக்கு ஊடக சுதந்திரம் பற்றியும் மகிந்த ராஜபக்ஷவின் ஊடக அடக்குமுறை பற்றியும் பேசுவதற்கு உரிமை கிடையாது.
நாங்கள் ஊடகவியாலாளர்கள் அதிகாரவர்கத்தின் நலனுக்காக மரணித்து மாண்டுபோன சமூகத்தைச் சார்ந்தவர்கள். மக்கள் அனைத்தையும் பார்த்துப் பழக்கப்பட்டிருக்கிறார்கள். ராஜபக்ச லண்டன் வந்தபோது தெருவுக்கு வந்து ஆர்ப்பரித்தவர்கள். இனி ஜீ.டி,விக்குப் போக அதிக நேரமாகாது.
நிர்வாக ரீதியான பிரச்சினை ஒன்றுதான் இதற்குக் காரணம் என்றால் அதனைக் கையாளவதற்கு சில சட்டவரைமுறையும் நாகரீகமான நடைமுறையும் இருக்கிறது. தாதா பாணியில் அதனைச்செய்ய முடியாது.