Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

சே கொல்லப்பட்ட நாளில் சுய நிர்ணைய உரிமைக்க்கான போராட்டத்தின் எதிர்காலம் :ரோய் விமல்

che1முதலாளித்துவச் சுரண்டலின் ஊடகச் சுந்தந்திரம் ஈன்றெடுத்த செல்வாக்கு மிக்க ஊடகங்களில் ஒன்றான டைம்ஸ் இதழ் 20ம் நூற்றாண்டின் 100 செல்வாக்கு மிக்க மனிதர்களில் ஒருவராக சே குவேராவைக் குறிப்பிட்டிருந்தது. சே வாழ்ந்து மடிந்த ஏகாதிபத்திய எதிர்ப்பும் புரட்சிகரச் சிந்தனையும் நமது காலத்தின் இளைஞர்கள் மத்தியில் முகிழ்த்தெழ வேண்டிய தேவை நமது சமூகத்தால் உணரப்படுகின்றது. குறுகிய தேசிய எல்லைகளையும், அருவருப்பான அடையாளங்களையும் கடந்த சே இன் புரட்சிகர உணர்வு பிழைப்புவாதிகள் மட்ட்டுமே எஞ்சியிருக்கும் நமது சமூகத்தின் அவசர தேவை!

சே இன் கீழ்வரும் எழுத்துக்கள் வெறும் எழுத்துக்கள் மட்டுமல்ல, அதனை வாழ்ந்து காட்டியவர்.

”உலகின் எந்த மூலையிலும் ஏகாதிபத்தியம் தலை தூக்குவதைக் கண்டு உங்கள் ரத்தம் சூடேறினால் நீ என் தோழன்” “உண்மையில் நான் அர்ஜெண்டினாவை சேர்ந்தவன் மேலும் க்யுபாவை சேர்ந்தவன், பொலிவியாவை சேர்ந்தவன், ஆப்ரிக்காவை சேர்ந்தவன், ஆசியாவை சேர்ந்தவன், ஏன் அமெரிக்காவை சேர்ந்தவன் கூட. ஏனெனில் அடிமைப்பட்டு கிடக்கும் ஒவ்வொரு நாடும் என் தாய் நாடு. அவர்களுக்கு எனது போராட்டம் தேவை இருக்கிறது. நானொரு கொரில்லா போராளி. அப்படி அழைக்கபடுவதைத்தான் நான் விரும்புகிறேன்.”

“உண்மையில் நான் தமிழ்த் தேசிய இனத்தைச் சேர்ந்தவன். மேலும் சிங்கள ஒடுக்கப்பட்ட மக்களைச்   சேர்ந்தவன், அமெரிக்காவைச் சேர்ந்தவன், ஏன் இந்தியாவைச் சேர்ந்தவனும் கூட. ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களின் பிரிந்து செல்லும் உரிமைக்காகப் போராடினாலும் ஒவ்வொரு ஒடுக்கப்பட்ட நாடும் எனது தாய் நாடு” என்று சே இன் மொழியைப் பேசுவதற்கு எமக்கு மத்தியில் தலைவர்கள் இருந்ததில்லை. இனிமேல் தான் உருவாக வேண்டும், வலு மிக்க இளைய சமூகம் ஏகாதிபத்தியங்களையும், பேரினவாத அதிகாரவர்க்கத்தையும், சிங்கள் ஒடுக்கப்பட்ட மக்களையும் தமிழ்ப் பிழைப்புவாதிகளையும் புரிந்துகொள்ள ஆரம்பித்திருக்கிறது. அதன் உள்ளிருந்து பல சே குவேராக்கள் சமூகத்தை மாற்ற, மனிதாபிமானம் மிக்கவர்களாகத் தோன்றுவார்கள்.

அவர்கள் தமிழ் மக்களின் பிரிந்து செல்லும் உரிமைக்காகப் போராடுவார்கள். சிங்கள ஒடுக்கப்படும் மக்களின் வழிகாட்டிகளாகத் திகழ்வார்கள். இந்திய அரசிற்கு எதிராகப் போராடும் உழைக்கும் மக்களின் தோழர்களாகத் தோழ்கொடுப்பார்கள். உலகம் முழுவதும் ஏகாதிபத்தியங்களின் ஒடுக்குமுறைக்கு எதிராகப் போர்கொடிதுக்கும் மக்களோடு கரம் கோர்த்துக்கொள்வார்கள்.

சிங்களக் கிராமங்களில் புகுந்து அப்பாவிகளை வெட்டிக்கொல்ல மாட்டார்கள். இஸ்லாமியர்களை எதிரிகளாக்க மாட்டார்கள். இந்திய அதிகாரவர்க்கத்தோடும் அதன் அடியாட் படைகளான அரசியல்வாதிகளோடும் கரம் கோர்த்துக்கொள்ள மாட்டார்கள். அமெரிக்காவையும், ஏகாதிபத்தியங்களைம் நம்பி மக்களைப் பணயம் வைக்க மாட்டார்கள்.

அடிமைப்பட்டுக்கிடக்கும் ஒவ்வொரு நாடும் எனது தாய் நாடு என்றதுமே சே ஐயும் நரேந்திர மோடியையும் ஜெயலலிதாவையும் வால்பிடித்து ஈழம் பிடிப்போம் எனக் கூறவல்ல அரசியல் கோமாளிகளால் நிரப்பப்பட்டுள்ள எமது தலைமைகளை அறுத்தெறிந்து புதிய புரட்சிகர சக்திகள் முளைவிட வேண்டும்.

அழிவின் சாம்பல் மேடுகளில் கூட அதிகாரத்தைக் கையகப்படுத்த வெறுக்கத்தக்க வகையில் அலையும் தமிழ்த் தலைமைகளைக் காண்கிறோம். கியூபாவில் புரட்சியாளர்கள் அதிகாரத்தைக் கையகப்படுத்த சே பிரதான காரணி. கியூபப் புரட்சியின் வெற்றியின் பின்னர் அதிகாரத்திற்காக அலைமோதாத சே தனது அடுத்த புரட்சியின் தயாரிப்பிற்கா பொலீவியாவை நோக்கிச் சென்றார்.

சே இன் புரட்சிகரக் கருத்துக்கள் வளர்சியை நோக்கிச் சென்றன. சே யின் சிந்தனை இயக்கம் தேய்வடைந்த பாதையில் எப்போதும் சென்றதில்லை. சேயின் மகிழ்சி வசதியான அரண்மனைகளில் வாழ்வதில்லை. மக்களுக்காகப் போராடுவதிலேயே மகிழ்சியடைந்தார்.

சே இன் வரலாறு ஒரு புரட்சிக்காரனின் உருவாக்கத்தைக் கற்றுத் தருகிறது. மருத்துவக் கல்விகற்ற சே கியூபா புரட்சியைத் தலைமை தாங்கியதை மட்டுமன்றி ஆபிரிக்கா உட்பட ஏனைய லத்தீன அமெரிக்க நாடுகளில் மக்களைப் மக்களை அணிதிரட்டிய சமூகப்பற்றைக் கற்றுத்தருகிறது.
சே ஒரு புத்திசீவி மட்டுமல்ல எமது காலத்தின் முழுமையான மனிதன் என்று ஜோன் போல் சாத்ர் என்ற சே ஐ முழுமையாக ஏற்றுகொள்ளாத பிரஞ்சுக் கல்வியியளான் கூறுகின்றார். மருத்துவராகப் பட்டம்பெற்ற சே குவேரா புரட்சிக்காரனாக மாறிய வரலாறு சமூகம் பற்றிச் சிந்திக்கும் ஒவ்வொரு மனிதனும் அறிந்திருக்க வேண்டிய அரசியல் பாடம்.

கியூபாவின் குறிப்பான சூழலில் வெற்றிபெற்ற போராட்டத்தின் வழி முறையை சே பொதுமைப்படுத்க்த விரும்பவில்லை. மக்களை அணிதிரட்டுவதற்கும் ஆயுதம் தாங்கிய மக்கள் யுத்தத்தைத் தயார் செய்வதற்குமான சே இன் பயணம் தொடர்ந்தது. பொலிவியாவில் மக்கள் மத்தியில் அரசியல் பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளையில் ஆர்ஜன்டீனாவில் பிறந்த சே அமெரிக்க சீ.ஐ.ஏ இனால் கொல்லப்படுகிறார்.

பொலிவியாவில் சி.ஐ.ஏ மற்றும் அமெரிக்க சிறப்பு ராணுவத்தால் சே கைது செய்யப்பட்டு பொலிவிய ராணுவத்தினரால் வல்லெகிராண்டிற்கு அருகில் உள்ள லா கிகுவேரா என்னும் இடத்தில் அக்டோபர் 9ம் தேதி 1967 ஆண்டு சே கொல்லப்பட்டார்.

சே குவேரா இன் குவியத் தத்துவம் என்ற கெரில்லாப் போராட்டமுறை மக்கள் யுத்தம் தொடர்பான விமர்சனத்திற்கு உட்பட வேண்டிய கருத்துக்களைக் கொண்டது. சே இன் பேரால் C.I.A வெளியிட்ட போலி நூல் உள்ளூர் மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வீடுதலை இயக்கங்களிடம் சேர்ப்பிக்கப்பட்டன. பொய்யான ஒன்றை வெற்றிக்கான வழியெனக் கருதிய விடுதலை இயக்கங்கள் வெற்றிகொள்ள இயலாமல் அழிந்து போயின.

சே, மாவோ சேதுங்கைச் சந்தித்த பின் சே இன் போராட்ட முறைகளில் மாற்றங்கள் ஏற்பட்டன. சே இன் உணர்வை முன்னுதாரணகாகக் கொண்டு அவரின் வழிமுறைகள் விமர்சனத்தின் ஊடாக அணுகுவது இன்றைய தேவை. சே இன் தன் நம்பிக்கையோடு புதிய அரசியல் தலைமை உருவாக்கப்பப்படுவது அவசியமானது.

Exit mobile version