Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

சுய நிர்ணய உரிமை = பயங்கரவாதம் = இனப்படுகொலை (-விளங்கிக்கொள்ளல்-) : S. மோகனராஜன்

சர்வதேச சட்டங்கள் குறித்த தமிழில் இதுவரை வெளிவராத புதிய தகவல்களை உள்ளடக்கியிருப்பதால் கட்டுரை பதிவுசெய்யப்படுகிறது.

சுய நிர்ணய உரிமை = பயங்கரவாதம் = இனப்படுகொலை(-விளங்கிக்கொள்ளல்-)

சுயநிர்ணய உரிமை, பயங்கரவாதம், இனப்படுகொலை இவை மூன்றும் வௌவேறான மூன்று தலைப்புகள் என்றாலும் ஒன்றோடு ஒன்று நெருங்கிய உறவு கொண்டுள்ளது. இன்றைய உலக நாடுகளில் இடம் பெறும் பிரச்சினைகளோடு தொடர்புடைய முரண்படக்கூடிய இக்கருத்தேற்புகள் பற்றிய போதிய விளக்கமும், தவறான விளங்கிக்கொள்ளல் மூலமும் பல சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. நாடுகள் பல தமக்கு ஏற்றால் போல இக்கருத்தேற்புகளை விளங்கிக்கொண்டுள்ளதுடன் அதன்படி செயற்படும் போது ஏற்படும் சர்வதேச சட்ட மீறல்களையும் நியாயப்படுத்துவதற்கு இந்த நுட்பத்தினைக் கடைப்பிடிக்கின்றன. இலங்கையும் அவ்வாறான பட்டியல் படுத்தக்கூடிய நாடுகளுள் ஒன்று எனவே இதன் சட்ட, அரசியல் பிரச்சினைகளில் இம்மூன்று கருத்தேற்பு பற்றிய ஓர் விளங்கிக்கொள்ளல் முயற்சியை இக்கட்டுரை மூலம் மேற்கொள்கிறேன்.

சுயநிர்ணய உரிமை (Right to self determination)
தனது சொந்த நிலப்பகுதியின் மக்கள் தாமே அரசியல், சுதந்திரம் பற்றியும், பொருளாதாரம் பற்றியும் தீர்மானிக்கும் உரிமையே சுயநிர்ணய உரிமை எனலாம். இக்கருத்தேற்பு (Mesopotaminian.) மோசபத்தேனியாக் காலமளவுக்கு பழையது என்பதுடன் கிரேக்க நகரரசுகளிலும் காணப்பட்டது(1) வட அமெரிக்கர்கள் ஸ்பெயின், பிரான்ஸ், பிரித்தானியா காலனித்துவத்திற்கு எதிராக அவர்களின் போராட்டத்தில் சனநாயக சுயநிர்ணய உரிமை தோன்றியது எனலாம்.
இது மக்கள் இறைமை, சமத்துவம், உரிமை, இயற்கைச்சட்டம் என்பவற்றுக்கு முரணானது. அமெரிக்க சுதந்திர போராட்டம், பிரான்சிய புரட்சி என்பன மக்களிடமே உண்மையான அதிகாரம் உண்டு என்பதனையும், சுயநிர்ணய போராட்டத்திமையும் வெளிப்படுத்தின.
17ம் நூற்றாண்டின் ஆரம்ப காலங்களில் தென்அமெரிக்க நாடுகள் ஸ்பெயினிடமிருந்து சுயநிர்ணய உரிமை பெற்றன. 1821 – 1829 கிரேக்க யுத்தம், 1898 –அங்கேரியன் புரட்சி என்பன மக்கள் சுயநிர்ணய உரிமைக்கான ஒற்றுமையையும், அங்கிகாரத்தையும் உணர்த்துகின்றன. அமெரிக்க சிவில் யுத்தத்தின் பின்பு West Indian தீவுகள் Sanit Thomas, Sanit John என்பவற்றுக்கும் 1868ல் ஹவாய் தீவுக்கும் சுயநிர்ணயம் வழங்க மறுத்தது. ஸ்பானிய-அமெரிக்க யுத்தம் 1899இன் பின்பு ஐக்கிய அமெரிக்கா மக்கள் சம்மதம் இன்றியே முன்னைய ஸ்பானிய காலனித்துவ நாடுகளான கானா, Puerto Rico என்பவற்றை இணைத்தனர். இன்னும் அவற்றை தமது கட்டுப்பாட்டுள் வைத்துள்ளது.(1.1)

1917ல் போல்சவிக் கட்சி ஆட்சின் போது (U.S.S.R) முதலாம் உலக யுத்தத்தில் இருந்து வாபஸ் பெற்று ஏனைய நாட்டு சுயநிர்ணய உரிமையை ஏற்று அங்கிகரித்திருந்தது. லெனின் சுயநிர்ணயம் பற்றி- “It would be wrong to interpret the right to self determition as meaning but right to existenee as a separate state”(2) என்கிறார்.

1918ம் ஆண்டு அரசியலமைப்பு நாடுகளுக்கு பிரிந்து செல்லும் அதிகாரம், உரிமையை வழங்கியது. Treaty of Bresk Litovsk 1918 1918 இல் ரஸ்யா, பின்லாந்து, எஸ்டோனியா, லத்வியா, உக்கிரைன், லத்துவேனியா, போலாந்து போன்ற நாடுகளுடனான சுதந்திர யுத்தத்தில் இருந்து விலக வழிசமைத்தது யுத்த முடிவில் பல புதியரசுகள் தோன்றின.(3) 1920-1930 காலக்கட்டத்தில் ரு.மு காலனித்துவத்திற்கு எதிராக பல சுதந்திர இயக்கங்கள் இயங்கின. Britain Statute ot West Minster கனடா, நியுசிலாந்து, போக்லாந்து, ஐரிஸ் குடியரசு, அவுஸ்திரேலியா தென்னாபிரிக்கா ஒன்றியம் போன்ற நாடுகள் சுதந்திரமாக வழிவகுத்தது.

பிற்பட்ட Antantic Chartter சுயநிர்ணய உரிமையை ஏற்றதுடன் 1942 பல Declaration சுயநிர்ணய உரிமையை 26 நாடுகள் ஏற்றது 1945 இல் அது உறுதிப்படுத்தப்பட்டது. UN Charter Article I Part 2 (Chapter 1) To develop Friendly relations and Nations based on respect for the principle of equal right and self – determination of people and to fatal other appropriate measure to strength universal peace” என்கிறது.

குடியியல் அரசியல் உரிமைகள் பற்றிய சர்வதேச உடன்பாட்டு ஒப்பந்தம் (ICCPR) Part I ஐ உறுப்புரை 1 ‘மக்கள் அனைவரும் சுயநிர்ணய உரிமையை கொண்டுள்ளனர். அந்த அடிப்படையில் அவர்கள் தமது அரசியல் நிலையைச் சுதந்திரமாக முடிவு செய்வதுடன் தமது பொருளாதார சமூக பண்பாட்டு விருத்தியையும் சுதந்திரமாக நாட உரித்துடையவர்கள்'(4) என உறுதிப்படுத்தியுள்ளதுடன், உறுப்புரை 1(2) சர்வதேச ஒத்துழைப்புக்கு பாதிப்பற்றவிதத்தில் சுயநிர்ணய உரிமை இடம் பெற வேண்டும். என அங்கிகரிக்கினிறது. எனவே உலக அமைதிக்கு பாதிப்பு ஏற்படுமாறு இயங்கலாகாது.

பொருளாதார சமூக பண்பாட்டு உரிமைகள் பற்றிய சர்வதேச உடம்பாட்டு ஒப்பந்தம்(4யு) உறுப்புரை 1 உம் அதையே கூறுவதுடன் மக்களின் சொந்த சீவனோபாய வழிகள் பறிக்கப்படுதலை கட்டுப்படுத்துகிறது. மக்கள் எனும் சொல் சிறுபான்மையின மக்கள் சுயநிர்ணய உரிமைப்பற்றி கூறுகிறது. என்பது பொதுவான அனுமானம்(5) தனியான மொழி, கலர்சாரம், தனியான சமயம், பிரத்தியேக நிலப்பகுதி என்பவற்றை தமிழர்கள் கொண்டுள்ளர் எனவே அவர்களது சுயநிர்ணய கோரிக்கை நியாயமானது. ரு.னு.ர்.சு அனைத்துலக மனித உரிமைகள் பிரகடனம் உறுப்புரை 15 ‘ஒவ்வொருவரும் தேசியத்துக்கான உரிமைக்கொண்டுள்ளதுடன் எந்த விதத்திலும் பலாத்காரமான தேசியம் பறிக்கப்பட, மறுக்கப்பட அல்லது மாற்றப்பட முடியாது என உறுதி செய்துள்ளது.

சுயநிர்ணய உரிமையும், இறைமையும் (ஆள்பல ஒருமைப்பாடும்) முரண்பட்ட இரு முனைகள். USSR கிழக்கு ஜேர்மனியை உருவாக்க முனைந்தது. மக்கள் சீனா கம்யுனிச நாடுகளை நிறுவ முன்னின்று இயங்க மேற்கு நாடுகள் சுயநிர்ணயம் கம்யூனிசத்திற்கு வழிவகுக்கும் என பயந்து முதலாளித்துவத்தினை தக்கவைத்தது. சில இடங்களில் தமக்கு ஏற்ற நாடகத்தினை ஆடி உலக நாடுகளுக்கு பொய்யை உண்மையெனக் காட்ட முனையம் கொசோவோ விடுதலையில், ஐக்கிய அமெரிக்கர்: ரஷ்யா பக்கமிருந்த நாடுகளை தமது பக்கமிருக்க அங்கு தமது தளமாக கொகோவாவை பயன்படுத்த நினைத்து தமது படைகளை நிறுத்தி சுயநிர்ணய விடுதலை வழங்கியது. இது உண்மையான சுயாட்சியல்ல என்பதை உலக நாடுகள் பல அறிந்ததாலேயே எதிர்த்தன. ஜோர்ஜியாவின் தென் மாகாணங்களான தென் ஒஸ்ஸதியா, அப்காசியா, பிரதேசங்களுக்கு சுயாட்சி வழங்கியது. இவை 1991ல் இருந்தே சுயாட்சி பிரகடனம் செய்திருந்தாலும் ஜோர்ஜியாவுடன் உடன்படிக்கை முலமாக தென்ஒஸ்ஸதியாவில் ரஷ்ய படை இருந்தது. 2/3 மக்கள் தென் ஒஸ்ஸதியா மக்கள் கொண்ட இப்பிரதேசத்திற்கு ரஷ்யா ஆரம்பத்திலிருந்தே ஆதரவு வழங்கி வந்ததுடன் அதனாலேயே ஜோர்ஜாவின் யுத்த அடக்கு முறைக்கு பதிலளிப்பதாக யுத்தம் செய்து தனிநாடாக ஏற்றது. U.S.A க்கு போட்டியாகவே இப்பிரகடனமும் அமைந்தது என்பது வேறு விடயம். சுயநிர்ணயம் பற்றிய சிக்கலாலே கம்யூனிசத்தை கண்டு முதலாளித்துவ நாடுகள் பயந்து நிற்க பனிப்போர் இடம்பெற்றது என்பது உண்மை. U.S.A – Portugal Angola வின் சுயநிர்ணயம் பறிக்கப்பட உதவியது. USSR Hungarian revolution of 1956 ஐ மீறி சுயநிர்ணய கொள்கையை எதிர்த்தது. இவற்றுக்கெல்லாம் பதில் சொல்ல 2000ம் ஆண்டு UN Millennium Declaration சுயநிர்ணய விடுதலை இயக்கங்களை பற்றி கவனம் செலுத்த தவறியது.

இறைமை மக்கள் வெளிப்பாடு எனவே அது சுயநிர்ணய உரிமையுடன் முரண்படுகிறது. J. Pavkovic சுயநிர்ணயம் தொடர்பான சர்வதேச உறவு பற்றிய மூன்று கோட்பாடுகள் வெளியிட்டார்.(7)

1. The realist theory of International relations – ஆட்புல ஒருமைப்பாட்டுக்கு முக்கியத்துவம் வழங்குகிறது. ஊழடன றயச காலக்கட்டத்தை ஆயதழச Pழறநச இதையே பின்பற்றியது.

1. Liberal Internationalisam- தனிமனித சுதந்திரத்தை ஏற்கின்றது. நாடுகளுக்கிடையிலான யுத்தத்தை எதிர்க்கிறது.

3. Cosmopolitan Liberalism.- அரசியல் அதிகாரம் மூலம் நில எல்லை மாற்றம் பற்றி அங்கிகறிக்கிறது. Defacto self – Determination ஐ மறுக்கிறது.

Self – Determination பற்றி home rule, regional autonomy, self – governant , title to Land, federation Independence என பல வரைவிலக்கணம் கூறப்படுகின்றது. உலகில் நாடுகள் என அங்கிகரிக்க (Statehood recognition) தேவையான மொன்றி வீடியோ மகாநாட்டில் தேவைப்பாடுகள் பூர்த்தி செய்யப்படின் உலக நாடுகள் நாடுகளாக ஏற்படற்கான கடப்பாடு உண்டு.(8) வரையறுக்கப்பட்ட நிலம், நிலையான மக்கள் தொகை, உறுதியான (effective Control) கட்டுப்பாடுடைய அரசாங்கம், இறைமை சர்வதேச அங்கிகாரம் இருக்குமாயின் நாடுகளாக அங்கிகரிக்க வேண்டியது அவசியம். இவை அரசியல் நலன் சார்ந்த விடயம் எனவே உறுதியான சர்வதேச சட்டம் இதற்கில்லை என்பது முக்கியமான விடயமாகும். தமது நாட்டு நலனில் இன்னொரு நாட்டு அங்கிகாரம் தங்கியிருக்கும் எனவே தான் இந்திய தமிழீழத்தை அங்கிகரிக்க மறுப்பதோடு அதை நசுக்க இலங்கை அரசுக்கு உதவி செய்கின்றது.
ஈழத்தவர்களது சுயநிர்ணய கோரிக்கையானது வடக்கு கிழக்கு பிரதேசத்தில் வாழும் தமிழ் மக்களது மட்டு;மன்றி மலையக மக்களதும் தான் அவர்களும் தனியாட்சி அல்லது Statehood recognitionகோரிநிற்கின்றனர் இன்று உக்கிரமடைந்திருக்கும் யுத்த சூழலுக்கு காரணம் தமிழ் மக்கள் சுயநிர்ணய கோரிக்கை நீண்ட காலமாக மறுக்கப்பட்டு வந்ததே. வட்டுக் கோட்டை தீர்மானம் TULF தனது முதலாவது தேசிய சம்மேளனத்தில் – 1619 இன் பின் தமிழ், சிங்கள பிராந்தியங்கள் தனித்தனி சுயராச்சியங்களாக இருந்தன இவை 1833 கோல்புறுக் ஆணைக்குழு recommendation கீழும் தனித்தனியாகவே ஆளப்பட்டன. என்பதோடு தமிழர்களின் உரிமை படிப்படியாக வாக்குரிமை, தமிழ் பிரதேசங்களில் சிங்கள குடியேற்றம், சிங்கள மொழி பிரகடனம் (அரச கரும மொழி) ஓரங்கட்டல் அடக்குமுறை என தமிழர்களுக்கு எதிரான சிங்கள அரசியல் செயற்பாட்டின் விளைவாகவே தமிழகத்தின் முக்கியத்துவத்தினை உணர்த்தியது.

திம்பு பிரகடனம் 1985 துரடல 13ம் திகதி EPRLF EROS, PLOT, LTTE, TULF என்பன சேர்ந்து அரசாங்கத்தின் தீர்வு திட்டத்துக்கு எதிரான தமது பிரகடனத்தை வெளியிட்டது. அதிலே சுயநிர்ணயத்தின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தியது(9) ஒஸ்லோ பேச்சுவார்த்தை, புரிந்துணர்வு உடன்படிக்கை 2001 December 26ல் வலுவுக்கு வந்த இலங்கை அரசுக்கும் LTTE க்கும் இடையிலான யுத்த நிறுத்த ஒப்பந்தம் 2002 February 23ம் திகதி வலுவிற்கு வந்தது இதற்கு நோர்வே வெளிவிவகார அமைச்சர் துயn Pநவநசளழn இலங்கைக்கான நோர்வே John Westbory ஆகியோர் தூதுசென்றனர்.

நோர்வேயின் உதவியுடன் சமாதான பேச்சுவார்த்தைகள் பல சுற்றுகளாக இடம்பெற்றன. இதை பிரச்சார உத்தியாக பயன்படுத்தி சிங்கள அரசாங்கம் உலக நாடுகளிடம் உதவிகளை பெற்றுக்கொண்டது. இதற்கான பல உதவி நாடுகளின் மகாநாடுகளும் இடம்பெற்றன (Tokyo summit) ஆயினும் அவ்வுதவிகளின் பின்பு வடகிழக்கு பகுதிகளில் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்கும் கட்டியெழுப்புவதற்கும் (ISGA) இடைக்கால தன்னாட்சி அதிகார சபையை டுவுவுநு கோரினர் அதை அரசாங்கம் எதிர்க்கவே மீண்டும் பழைய நிலை தோன்ற பல ஆயுத குழுக்களது உதவிகளை அரசாங்கம் பெற்றுக்கொண்டு பிரித்தாளும் தந்திரத்தைக் கொண்டு தமிழ் மக்களுக்கு எதிராக அரச பயங்கரவாதத்தினை அது செயற்படுத்தலானது.விளைவாக யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை ஒருதலைப்பட்சமாக இலங்கை அரசாங்கம் கிழித்தெறிந்தது, ஒப்பந்தங்களை ஒருதலைப்பட்சமாக கிழித்தெறிவது இலங்கை அரசாங்கத்திற்கு வழமையானது.(10) என்றாலும் சர்வதேசத்திற்கு அரசாங்கம் யுத்த நீறுத்தத்தை கிழித்து எறிந்தது என்பது வியப்பாகவே அமைந்தது. இவ்விடத்திலே இலங்கை அரசாங்கம் UDHR, UN charter, Genera Convention additional Protocal ஐ என்பவற்றை அப்பட்டமாக மீறியது, நோர்வே வெளியேரியது. சர்வதேசம் இலங்கை அரசாங்கத்தின் செயற்பாட்டை அவதானிக்கத் தொடங்கியது.(11)
இனப்படுகொலை (Genocide)
இலங்கை அரசாங்கம் தமிழர்களுக்கு எதிராக ஆயுதக்குழுக்களின் உதவியுடன், அல்லது ஆயுத குழுவுடன் கூட்டு சேர்த்து தமிழர்களை திட்டமிட்டு கொலை செய்தல் (14-39 வயதுக்கு இடைப்பட்ட ஆண்களை கொல்லுதல்) கடத்தல், சட்ட விரோத கைது காரணமின்றி தடுத்து வைத்தல், குடியிருப்புகள், பொது தளங்கள், விமான தாக்குதல் போன்ற படுகொலை செயற்பாடுகளால் ஈடுபட்டு வருகின்றது. இதை அவ்வப்போது ஏனைய பல துணை செயற்பாடுகள் மூலம் நியாயப்படுத்தவும் செயிகிறது. செஞ்சோலை படுகொலை, சத்துருகொண்டான், குமாரப்புறம் படுகொலை தம்பளகாமம் படுகொலை, மயிலந்தென்னை படுகொலை, 17தொண்டர் நிறுவன உதவியாளர்கள் படுகொலை, பாடசாலை, தேவாலயம் வைத்திய சாலைகள் மீதான குண்டுத்தாக்குதல்கள் மூலமான கொலைச்சம்பவங்கள், பித்துனுவௌ படுகொலை, போன்று அடிக்கிக்கொண்டே போகக்கூடியவாறு தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இறுதியாக முள்ளிவாய்க்கால் படுகொலை இவற்றை ஆராய்ந்தால் சதாம் உசைனை தூக்கிலிடமுன் இலங்கையில் ஆட்சியிலிருந்த பலர் தூக்குக் கயிரில் தொங்கியிருக்க வேண்டும்.
அரசின் இவ்வாறான செயற்பாடுகளை சர்வதேச சட்ட மீறலாக காணலாம் அந்தவகையில் Genocide Convention இன் உறுப்புரை 1 கீழ் யுத்த, அமைதி சூழலில் இனப்படுகொலை செய்வது சர்வதேச குற்றமாகும். முழுமையாக, பகுதியாக தேசிய இன,மத,சமய குழுவினை அழிக்கும் நோக்குடன் குழு அங்கத்தவர்களை கொல்லுதல் உடல், உள பாதிப்பினை ஏற்படுத்துதல் உடல், பௌதீக ஊனத்தன்மையை, வாழ்க்கையை முழுமையாக, பகுதியாக பாதித்தல்(12) என்ற பிரிவின் கீழ் இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகளை கொண்டு வருவதன் மூலம் இதனை State terrorism என தண்டிக்கலாம்.

ஓவ்வொரு நாளும் தமிழ் மக்கள் இலங்கையில் கொல்லப்படுகின்றனர், கடத்தப்படுகின்றனர், இடம்பெயர்கின்றனர், நாடு விட்டு வெளி நாடு செல்கின்றனர், இடையில் பலர் மாய்கின்றனர். பிறப்பு வீதம் கட்டுப்படுத்தப்படுகின்றது, கல்வி வளர்ச்சி தடைப்படுத்தப்பட்டு, கலாசாரம் இல்லாதொழிக்கப்படுகின்றது, தமிழர் சுவடுகள் வரலாறுகள் அழிக்கப்படுகின்றன அவை இனப்படுகொலையின் செயற்பாடுகளே.(13) சிங்கள மக்களிடையே, தமிழர்கள் பற்றி தவறான புரிந்துணர்வை ஏற்படுத்தி அவர்கள் மீதான வன்முறையை கட்டவிழ்த்து விடுகின்றனர். தமிழர்களது தாயக பிரதேசம் இரண்டாகப்பிரிக்கப்பட்டது, பிரதேச வாதம் எண்ணெய் ஊற்றி வளர்த்தெடுக்கப்படுகின்றது. இதற்கு பின்னால் ஏகாதிப்பத்தியத்தின் இராஜத்தந்திரம் இல்லாமல் இல்லை. இவ்விடத்திலே நாம் பொருள் முதல்வாதத்தினைக் கொண்டு பார்க்கையில் இருதரப்பிலும் இன்பத்தை அனுபவிப்பதும், துன்பத்தை அனுபவிப்பதும் யார்? யார்? என நன்கு அறியலாம். பணம் படைத்த யாரும் களத்தில் ஆயுதம் ஏந்தவோ அதனால் பாதிப்படையவோயில்லை. மாறாக பணம் சம்பாதிக்க,வாழ்க்கை நடத்த கதியற்றோர் பலாத்காரமாக LTTE யினரால் சேர்க்கப்படுகின்றனர். சிறுவர்கள் யுத்தத்தில் ஈடுபடுகின்றனர் அவர்களை இலங்கை அரசப்படைகள் பாரபட்சமின்றி சுட்டுக் கொள்கிறது. சிவிலியன்கனுக்கு LTTE என பதவியும் வழங்குகிறது.

அரசாங்கத்தரப்பிலும் பணம் படைத்த யாரும் படையில் சேருவதும் இல்லை, அதற்கான தேவையும் இல்லை சேர்ந்தவரும் உயர் பதவிகளை வகிக்கும் உயிருக்கு ஆசைப்பட்டு சாதாரண ஏழைக்குடும்ப பிள்ளைகள் தமது குடும்பத்திற்காகவும், தமது வேலையில்லா பிரச்சினைக்கான தீர்வாகவுமே இராணுவத்தில் சேர்கின்றனர் பலர் விரும்பியும் சேர்வதுண்டு. இவர்கள் மனங்களில் இனவெறி விதைக்கப்பட்டிருக்கும். ஆயுதம் ஏந்திய படையினர் பாலியல் துஸ்ப்பிரயோகங்கள், கைதிகளை கொல்லுதல், மிகமோசமாக நாடாத்துதல் போன்ற செயல்களை செய்யும் போது அரசு பொறுப்பாகின்றது.(14) Rome statute of International Crimminal Court Art 8(2) © International Confilit ஒன்றின் போதான மனித குலத்துக்கு எதிரான குற்றம் பற்றி கூறுகிறது. J Common Article 3 of Geneva Convention இல் கூறப்பட்டுள்ள International Charecter அல்லாத யுத்தத்தின் போது அரசுத்தரப்பு பின்பற்ற வேண்டிய மனிதாபிமான சட்ட விதிகள் தொடர்புடையது. இலங்கை அரசாங்கம் இதை ஏற்றுள்ளமையால் இனம், மதம், பிறப்பு, அடிப்படையில் இலங்கை அரசாங்கம் செய்யும் ஓரங்கட்டலுடனான மனிதாபிமானமற்ற நடவடிக்கை சர்வதேச சட்ட மீறலாகும்.

இவ்வாறான சட்ட மீறல்களுக்கு தனிப்பட்ட ரீதியிலும், உயர் அதிகாரிகள் உட்பட சிப்பாய்களும், அதை ஏவிவிட்டவர்களும் பொறுப்புடையவர்கள் இதற்கு குற்ற மனம் தேவையில்லை என பல ICTY, ICTR தீர்ப்புகள் காணப்படுவதுடன். ICC Art 25(2) கீழ் நீதிமன்றம் தனிநபர் குற்றவியலுக்கு பொறுப்பாக்கலாம். இன்று இலங்கை இராணுவம் வன்னிப்பிரதேச மக்கள் சொத்துக்களுக்கு பாரிய சேதம் விளைவித்து வருவதுடன், மக்கள் அகதிகளாக காட்டுப்பகுதிகளில் வாழ்கின்றனர். இது J Geneva Convention Article 8(2) (b) (2) இன்கீழ் குற்றமாகும்(15) இதே வேளை வைத்திய சாலைகள், பொதுக்கட்டிடங்கள், மக்கள் மீது போர் நடத்துதல் குற்றம் எனும் பிரிவினை(16) மீறும் வகையில் இலங்கையில் அரசுப்படைகள் செயற்பட்டு வருகின்றது. ஐ.நா வின் நிபுணர் குழு அறிக்கை இதற்கு போதுமான சாட்சியாகும். இதனை சர்வதேச நாடுகளும் ஏற்கின்றன என்பது UNHRCதீர்மானத்திலிருந்து தெளிவாகின்றது.

உலகில் Khartoum Government, Darfurian சிவில் மக்களுக்கு எதிரான தமது ஆயுதப்பலத்தினை பிரயோகித்து சுமார் 400,000 மக்களை படுகொலை செய்தது. இது போல இலங்கை அரசாங்கம் மும்முனையிலான தாக்குதலை மேற்கொண்டதால் மக்கள் கொல்லபபட்டனர்;. இன்னோரன்ன இன்னல்களுக்கு உட்படுகின்றனர். எனவே UN Securite Council 1706 ம் இலக்க resolution நிறைவேற்றியது.(17)

Ruwanda Jean Paul Akayesu தனது ஆட்சிக்காலத்தில் மேற்கொண்ட இனப்படுகொலைக்காக விசாரணை நடாத்தப்பட்டது. J. Pol pot கம்போடியாவில் மொத்த மக்கள் தொகையில் சுமார் 25மூ மக்களை யுத்தம், பசி, அதிக வேலை வாங்கி கொலை செய்தார். Khmer Rowge (Red Combodian) Army மூலமாக தமது நடவடிக்கைகளை மேற்கொண்டான். இவனுக்கு எதிராக ICC இல் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இனப்படுக்கொலை செய்யப்படும் மக்கள் தொகையைப் பார்த்தே தலையீடு செய்து வருகின்றது. இதற்கு UN Charter article 2(4) ஐ சுட்டிக்காட்டுகிறது. அரசும் தமது குற்றங்களுக்கு பாதுகாப்பாக இதை பிரயோகிக்கின்றது. அதை உறுப்புரை 2(4) – ஒரு நாட்டு உள்ளடக்க விடயங்களில் அது சுதந்திரமாக செயற்படவும் ஏனைய நாடுகள் தலையீடு, அச்சுறுத்தலில் அருந்து சுதந்திரமாகவும் செயற்பட உறுப்பு நாடுகள் பணிக்கப்பட்டுள்ளது. இது ஒருபக்கமிருக்க பாதுகாப்பினை காரணம் காட்டி ஏனைய அரசுகளிடம் போட்டி போட்டு ஆயுதங்களை வாங்கும் இலங்கை அரசாங்கம் சர்வதேச தன்மை கொண்ட யுத்தங்கள் பாவிக்கத்தக்க ஆயுதங்களையும் உள்நாட்டு யுத்தங்களுக்கு பிரயோகிக்கின்றது. இது மக்களை குறிவைத்து நடத்தப்படுவதே குற்றம் என்பதில் தெளிவு காண்பது முக்கியம்.(18) இந்தியா இதனாலே இலங்கையை காப்பாற்றுகிறது.

பயங்கரவாதம் (Terrorism)

பயங்கரவாதம் பற்றி சர்வதேசத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட வரைவிலக்கணம் கிடையாது. ஆயின் இலக்கு இன்றிய வன்முறையான குற்றச்செயல், சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட செயற்பாடு (Deliberately target of People) இதனை அடைவதற்காக கட்சி, தேசியவாதிகள், மதக்குழுக்கள் புரட்சியாளர்கள் என்போரை தமது நோக்கத்துக்கு பயன்படுத்தும்(19) சர்வதேச ரீதியில் பயங்கரவாதத்தின் தோற்றமானது, சுயநிர்ணய உரிமைகளுடனும், இனப்படுகொலையுடனும் தொடர்புடையது. ஏகாதிபத்திய சக்திகளின் அடக்கு முறைகளுக்கு எதிரான செயற்பாடுகளை சிலவேளை பயங்கரமாகக் காட்டும் அச்சக்திகளே அவற்றை எண்ணெய் ஊற்றி வளர்த்து வந்துள்ளன. சதாம் உசைன், பின்பேடலை உருவாக்கியது அமெரிக்கா என்பது எல்லோரும் தெரிந்த விடயமே. பயங்கரவாதத்தினை ஒழிப்பதற்கான சர்வதேச ஒத்துழைப்பு, அணிசேரா மாநாட்டு கொள்கை என்பவற்றுக்கிடையிலான ஒத்துழைப்பின் கீழ் பயங்கரவாதத்தை இல்லாதொழிக்க முனைகின்றது.

இதற்கிடையில் பயங்கரவாதம் Extra Territorial என்பதால் ஏகாதிபத்திய அரசுகள் பலவீனமான நாடுகள் மீது அல்லது சோசலிச ஆட்சி நிறுவ முனையும் நாடுகள் மீது படையெடுத்து அந்நாடுகளை தரைமட்டமாக்கி தமது பலத்தை நிறுவுகின்றதும், உலக நாடுகளில் உள்ள வளங்களை சுரண்டவும் செய்கின்றது. ஈராக், ஆப்கான் யுத்தத்தில் பிரித்தானிய முன்னாள் பிரதமர் டொனி பிளையர் அது பொய்யாக தொடுக்கப்பட்ட யுத்தம் என பகிரங்கமாகவே ஏற்றார் அவை அணுவாயுதங்களை வைத்திருந்ததற்காக குற்றம் சுமத்தியது வெறும் கண்துடைப்பு என்பது வெளிச்சத்திற்கு வந்துவிட்டது. சர்வதேச ரீதியில் பயங்கரவாதத்தினை வென்றெடுக்க முடியாத நிலையில் SAARC Regional Convention Suppression of terrorism கைச்சாத்திடப்பட்டது.( இது போல பல உள (20)) இதன் பின் இலங்கையில் அவசரகால விதிகளில் அவை கொண்டுவரப்பட்டன.(21)

இஸ்லாமிய நாடுகள் பல இஸ்லாமிய சட்டத்தின் கீழ் மிக மோசமாக மனித உரிமைகளை மீறுவதுடன் பயங்கரவாதத்தை புனிதப்போர் எனவும் நியாயப்படுத்தி மக்களை பிழையான வழியில் நடத்துகின்றன. இதில் சிறுவர்கள், குழந்தைகள், பெண்கள், என அனைவரும் ஈடுப்படுத்தப்படுகின்றனர். உலகில் மத்திய கிழக்கு நாடுகளிலும், ஆபிரிக்க நாடுகளிலும் சிறுவர் ஆயுதப்படைகளில் சேர்க்கப்படும் விதம் அதிகம் எனலாம் National advisory Committee on Criminal Justice Stanards and goals Task force 6வகையான பயங்கரவாதத்தினை பட்டியல் படுத்துகின்றது.

01) Civil disorders
மக்களுடைய அமைதியான, பாதுகாப்பான சமூகமான சூழலைக் கெடுத்தல், சீர்குலைத்தல்

02)Political Terrorism.
அரசியல் நோக்கம் கொண்ட அமைப்பு அதை அடைவதற்கான பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபடும்.

03) Non political Terrorism
பயங்கரவாதத்தையும், அரசியல் செயற்பாடுகளையும் வேறுபடுத்துவர்hயின் இது அச்சுறுத்தல் மூலம் அரசியல் இலாபம் பெறும் ஒரு செயற்பாடு எனலாம்.

04) Quasi Terrorism.

Incidental Crimes . இது அவர்களுடைய இலக்காக இருக்காது ஆயின் அதே முறைமை, தொழில்நுட்பங்களை பயன்படுத்துவர் (உதாரணமாக விமானங்கட்டுதல்).

5) Limited Political Terrorism.

மட்டுப்படுத்தப்பட்ட அளவில் அரசியல் அதிகாரத்தை கைப்பற்ற ,;தக்கவைக்க செய்யப்படும் பயங்கரவாதம்.

6) Official or State Terrorism.
ஆட்சியில் உள்ளவர்கள் அதை தக்கவைக்க, நடாத்தப்படும் பயங்கரவாத செயல்கள் இதனுள் அடங்கும்(22)
இந்த அடிப்படையில் பல இயக்கங்கள் பயங்கரவாத இயக்கங்களாக பட்டியல் இடப்பட்டு தடைசெய்யப்பட்டு வந்துள்ளன. சில நாடுகள் அரச பயங்கர வாதத்தை முன்னெடுத்து வருகின்றது. பயங்கரவாதத்திற்கு எதிராக இணைந்து செயற்பட முன்வந்துள்ள பல நாடுகள் மக்கள் நலனை அக்கறை எடுக்காமல் செயற்படுவதால் அதன் தாக்கங்கள் அதிகமாகவே உள்ளது.
இலங்கையை பொருத்தமட்டில் பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் (The war against terrorism) என்ற பெயரில் வடபுலத்து தமிழ் மக்களுக்கு எதிரான யுத்தத்தையே முன்னெடுத்து வருகின்றது. இதற்கு இலங்கையில் நடக்கும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்களே சான்றுகளாகும். 2009.05.19 முடிவில் பல்லாயிரக்கணக்கான மக்கள், சொத்துக்கள் இல்லாதொழிக்கப்பட்டாலும் அல்லது பயங்கரவாதத்தால் ‘இன்னுமொரு பயங்கரவாதம் ‘ இல்லாதொழிக்கப்பட்டாலும் மக்களின் பிரச்சினை, தேசியப்பிரச்சினை தீர்ந்ததாகவோ அதற்காக அர்ப்பணிப்புடன் அரசோ, அரசியல் கட்சிகளோ செயற்பட்டதாகவோ இல்லை. இதற்கு மக்கள் காட்டும் எதிர்ப்பு என்ன? எவ்வாறு வெளிப்படுத்துகின்றனர்? அதற்கான சூழல், சுதந்திரம் எவ்வாறு உள்ளது? என்பன ஆராயப்படவேண்டியவையே.

இதற்கிடையில் வெளிப்படைத்தன்மையோ பொறுப்பு கூறல் பண்போ இல்லாமல் எவ்வாறு இலங்கை சிறுபான்மையின மக்களுக்கு உரிமைகளை வழங்கும் என்பது அடக்குமுறை அதிகமாயுள்ள பேரினவாத அரசியல் விளையாட்டில் எட்டாக்கனியாகவே இருக்கப்போகிறது. இதைப் பெற்றுத்தருவதாக பலர் வருவார் போவார் மக்கள் மட்டும் மௌனமாய் மாய்வார் மௌனமாய் இருக்கும் மடடும்.
S. மோகனராஜன் LL.B (Hons). சட்டத்தரணி

Exit mobile version