Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

சுப்பிரமணிய சாமி : ‘தேசிய’ அசிங்கம் ! : மனோகரன்

ஈழத் தமிழின அழிப்புப் போர்க்குற்றவாளி பாசிச ராஜபக்சேவுடன் உறவாடும் தமிழ் விரோத – தமிழர் விரோத பார்ப்பன அரசியல் அதிகாரத் தரகன் சு.சாமி.
ஈழத் தமிழின அழிப்புப் போர்க்குற்றவாளி பாசிச ராஜபக்சேவுடன் உறவாடும் தமிழ் விரோத – தமிழர் விரோத பார்ப்பன அரசியல் அதிகாரத் தரகன் சு.சாமி.

அக்கிரகாரத்து மாமாப்பயல், அண்டப் புளுகன், ஆட்சிக் கவிழ்ப்பு சதிகாரன் – என்றெல்லாம் இழிவாகச் சித்தரிக்கப்படும் சுப்பிரமணிய சாமி, “எல்லை தாண்டி வந்து மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களது படகுகளைச் சிறைபிடித்து வைத்துக் கொள்ளுங்கள் என்று இலங்கை அரசுக்கு நான்தான் ஆலோசனை வழங்கினேன். அதைத்தான் இப்போது இலங்கை அரசு செய்து கொண்டிருக்கிறது” என்று தனது தமிழர்விரோத திமிர்த்தனத்தை இப்போது மீண்டும் கக்கியிருக்கிறார்.

மைய அரசுக்குத் தெரிந்துதான் இலங்கைக்குச் சென்றேன்; தமிழக முதலாளிகளின் படகுகளைப் பிடித்துக் கொண்டு கூலித் தொழிலாளிகளான மீனவர்களை விடுவிக்குமாறு நான்தான் ராஜபக்சேவிடம் சொன்னேன் என்று அயலுறவு அமைச்சரைப் போலப் பேசுகிறார் சு.சாமி. தமிழர்களை ரவுடிகள் என்று சாடும் சு.சாமி, ராஜபக்சேவுக்கு ஆதரவாக இனப் படுகொலையை ஆதரித்து திமிராகப் பேட்டியளிக்கிறார். இருப்பினும், தமிழகத்தைத் தவிர வேறு எந்த பா.ஜ.க. தலைவர்களும் இவருக்கு எதிராகக் கண்டன அறிக்கைகூட வெளியிடவில்லை. இவர் பா.ஜ.க.வின் அகில இந்திய செயற்குழு உறுப்பினர்களில் ஒருவர் என்று கூறப்பட்டாலும், பா.ஜ.க.வில் எந்தப் பொறுப்பிலும் இல்லாத சு.சாமியின் பேச்சுக்கு பதில் சொல்ல முடியாது என்று நழுவிக் கொள்கிறார் மத்திய அமைச்சரான பொன் ராதாகிருஷ்ணன். அதேசமயம், சு.சாமிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு அளித்துக் கொண்டிருக்கிறது மோடி அரசு.

யார் இந்த சு.சாமி? ஒரு அரசியல்வாதிக்குரிய சமூக ஆதரவோ, மக்களிடம் மதிப்போ இல்லாத ஒரு நபரால் இது எப்படி சாத்தியமாகிறது? அடிக்கடி விமானத்தில் பறக்கும் சு.சாமிக்கு எப்படி இவ்வளவு சொத்துக்களும் வருமானமும் கிடைத்தது?அவரது தொழில்தான் என்ன?

சில பத்திரிகையாளர்கள் தேர்தல் கூட்டணியை உருவாக்க ஒரு ஏற்பாட்டைச் செய்து, அதைத் தமது ஏடுகளில் முதன்மைச் செய்தியாக்கி எப்படி மாமா வேலை செய்கிறார்களோ, அதேபோல அரசியலில் இத்தகைய வேலையைச் செய்பவர்தான் சு.சாமி. தில்லானா மோகனாம்பாள் திரைப்படத்தில் வரும் வைத்தி என்ற கதாபாத்திரத்தின் மறு அவதாரம்தான் சு.சாமி. இத்தகைய நிழல் மனிதர்கள்தான் “சோர்ஸ்” என்ற பெயரில் அங்கேயும் இங்கேயும் தகவல்களைப் பரிமாறும் நபர்களாக இருக்கின்றனர். இத்தகைய அரசியல் – அதிகாரத் தரகர்களைப் பிடித்து தேர்தல் கூட்டணிக்கு நோட்டம் பார்ப்பதென்பது ஓட்டுக்கட்சிகளின் உத்தியாக உள்ளது. அந்தத் தரப்பின் கோரிக்கை என்ன, எதிர்பார்ப்பு என்ன, பலவீனம் என்ன என்பதையும், அதற்கு இந்தத் தரப்பின் கருத்து என்ன என்பதையும் பரிமாற்றம் செய்யும் இரகசிய இணைப்புச் சங்கிலியாக இவர்கள் இருக்கின்றனர்.

பார்ப்பன பாசிஸ்டுகளின் கூட்டணி : கொலைகார பார்ப்பன சங்கராச்சாரி, இந்துவெறி அசோக் சிங்காலுடன் கூடிக் குலாவும் சு.சாமி.

விபச்சார வழக்கில் கைதாகி பிணையில் விடுவிக்கப்பட்ட நடிகை புவனேஸ்வரி, சாதிக் கட்சியான மருத்துவர் சேதுராமனின் மூவேந்தர் முன்னேற்றக் கழகம் கட்சியில் சேர்ந்து மாநில மகளிர் அணிச் செயலாளராகியுள்ளார். அவரை விபச்சாரி என்பதா, அல்லது அரசியல் பிரமுகர் என்பதா? இப்படித்தான் சு.சாமி போன்ற பேர்வழிகளும் உள்ளனர். சினிமா மற்றும் வீட்டுமனைத் தொழிலில் இவர்கள் மீடியேட்டர்கள் என்ற பெயரில் குறிப்பிடப்படுகின்றனர். அரசியல், சினிமா, வீட்டுமனைத் தொழில், பெருந்தொழில் நிறுவனங்கள், மத நிறுவனங்கள், பண்பாட்டு அமைப்புகள் – என அனைத்திலும் இத்தகைய நபர்கள் நீக்கமற நிறைந்துள்ளனர். சசிகலா நடராசன் எத்தகைய அரசியல் தரகர் என்பது தமிழக மக்களுக்குத் தெரியும். இருந்தாலும், தமிழினப் பிழைப்புவாதிகள் அவரைப் பயன்படுத்திக் கொள்வதை ஒரு உத்தியாகக் கொண்டுள்ளனர். அதேபோலத்தான் பல வண்ணப் பிழைப்புவாதிகளும் சு.சாமியைப் பயன்படுத்திக் கொள்வதும், மறுபுறம் இதைக் கொண்டு தனது நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள சு.சாமி ஆட்டம் போடுவதும் நடக்கிறது.

தமிழகத்தின் சோழவந்தானைப் பூர்வீகமாகக் கொண்ட பார்ப்பன குடும்பத்தில் பிறந்து வளர்ந்த சு.சாமி, பொருளாதாரப் பட்டம் பெற்று முதலாளித்துவச் சந்தைப் பொருளாதாரத்தை ஆதரித்து கம்யூனிசத்தை வெறியோடு எதிர்த்தார். அதனாலேயே அன்று சோவியத் ஆதரவு இந்திரா காந்தியின் ஆட்சியை எதிர்த்து இந்துத்துவ ஜனசங்கத்தை ஆதரித்தார். இந்திராவின் அவசரநிலை பாசிச ஆட்சிக் காலத்தில் தலைமறைவாகி அமெரிக்கா, பிரிட்டன் முதலான நாடுகளுக்குச் சென்று அங்குள்ள அதிகாரத் தரகர்கள் மூலம் இந்திரா காந்தியின் சோவியத் ஆதரவு ஆட்சிக்கு எதிரான சதிகளில் ஈடுபட்டார். அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ. மற்றும் இஸ்ரேலிய மொசாத் கும்பலுடன் இரகசியத் தொடர்பு கொண்டிருந்தார். பின்னர் ஜனதா கட்சியின் நிறுவனர்களில் ஒருவராகி, அதன் தலைவராகவும் செயல்பட்டார்.

இரகசிய உலக பேர்வழியும் போலி சாமியாருமான சந்திராசாமியின் (இடது) தொழில் கூட்டாளியான சு.சாமி, “நான் பிராமணன்; ஒரு பிராமணன் யாரிடமிருந்து வேண்டுமானாலும் கையேந்தி யாசகம் பெறலாம்” என்று தனது விபச்சாரத்தனத்தைப் பச்சையாகவே வெளிப்படுத்தியிருக்கிறார்.

இது தவிர, இரகசிய உலகப் பேர்வழிகளான போலிச் சாமியார் சந்திராசாமி, ஆயுதபேரத் தரகன் ஆதனன் கஷோகி முதலானோரின் நெருங்கிய கூட்டாளியான சு.சாமி, ராஜீவின் போபர்ஸ் பீரங்கிக் கொள்ளையை மூடிமறைக்க இரகசிய உலகப் பேர்வழிகளுடன் சேர்ந்து போலி ஆவணங்களைத் தயாரித்ததோடு, அப்போதைய பிரதமர் வி.பி.சிங்கின் மகனுக்கு செயிண்ட் கிட்டீஸ் தீவில் உள்ள வங்கிகளில் இரகசியக் கணக்கு உள்ளதாக போர்ஜரி செய்தார். சகுனித்தனங்கள், தரகு வேலைகள் மூலம் பிரபலமாகி அப்போதைய சந்திரசேகர் ஆட்சியில் நீதி மற்றும் சட்டத்துறை அமைச்சராகவும் செயல்பட்டார். அதன் பிறகு காங்கிரசுக்கு வெளியே இருந்து கொண்டு நம்பகமான தரகனாக இயங்கிய சு.சாமி, நரசிம்மராவ் ஆட்சிக் காலத்தில் டங்கல் (காட்) ஒப்பந்தக் கமிட்டிக்குத் தலைவராக நியமிக்கப்பட்டார். அந்த ஒப்பந்தத்தில் இந்தியாவின் சார்பில் கையெழுத்திட்டதன் மூலம், இந்தியப் பொருளாதாரத்தை அமெரிக்காவுக்கு அடகு வைக்கும் தலைமைத் தளபதியாகச் செயல்பட்டார்.

1992-ம் ஆண்டிலேயே ஜெயா ஆட்சிக்கு எதிராக மூன்றாவது அணியைக் கட்டிவருவதாகக் கூறிக் கொண்ட சு.சாமி, அதற்காக ஜெயாவின் உடன்பிறவா சகோதரி சசிகலாவின் கணவரும் அதிகாரத் தரகனுமாகிய நடராசனுடன் கைகோர்த்தார். ஆளுநரைச் சந்தித்து மனு கொடுத்துவிட்டு, ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்புக்கு எதிராக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கடந்த 1996-ம் ஆண்டில் வழக்கைத் தொடுத்தார். அதன் பிறகு சு.சாமியும் ஜெயலலிதாவும் சமரசமாகி, அ.தி.மு.க. ஆதரவோடு இரண்டாவது முறையாக வாஜ்பாய் தலைமையில் பா.ஜ.க. கூட்டணி ஆட்சி அமைந்தது. அப்போது மதுரை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான சு.சாமியை நிதியமைச்சராக்க வேண்டுமென்றும், சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டுமென்றும் வாஜ்பாய் அரசுக்கு ஜெயலலிதா நிர்ப்பந்தங்கள் கொடுத்து வந்தார். பின்னர் எதிர்த்தரப்பின் பிழைப்புவாதத் தலைவர்களை ஒருங்கிணைத்து டீ பார்ட்டி வைத்து வாஜ்பாய் அரசுக்கு அளித்துவந்த ஆதரவைத் திரும்பப் பெற்று அவரது ஆட்சியை ஜெயலலிதா கவிழ்த்ததில் முக்கிய தரகனாகச் செயல்பட்டவர்தான் சு.சாமி.

தமிழக மற்றும் வட இந்தியப் பார்ப்பனக் கும்பலால் தூக்கி நிறுத்தப்படும் அரசியலதிகாரத் தரகன் என்பதால், நீதிபதிகள்கூடப் பதவி உயர்வுக்காக சு.சாமியிடம் உறவு வைத்துக் கொள்கிறார்கள். அதனால்தான் வக்கீலாக இல்லாத சு.சாமி நீதிமன்றத்தில் சர்வசாதாரணமாகப் புழங்க முடிகிறது. அதிகாரத் தாழ்வாரங்களில் உள்ள இரகசியங்களைத் தெரிந்து கொண்டு பிளாக்மெயில் செய்வதும், உயர் நீதிமன்றங்கள், உச்ச நீதிமன்றத்தில் உள்ள பார்ப்பன அதிகாரிகள் மற்றும் நீதிபதிகளை வைத்து காரியம் சாதிப்பதென்பதும் சு.சாமியின் தொழிலாக உள்ளது. இதனால்தான் தில்லைக் கோயிலைக் கைப்பற்ற தீட்சிதர்கள் தொடுத்த வழக்கு உள்ளிட்டு, ஒரு குறிப்பிட்ட வழக்கை ஒரு குறிப்பிட்ட நீதிமன்றம்தான் விசாரிக்க வேண்டும், குறிப்பிட்ட நீதிபதிகள் குழுதான் விசாரிக்க வேண்டும் என்று சு.சாமியால் செல்வாக்கு செலுத்த முடிகிறது.

1995-ம் ஆண்டில் ஹவாலா தொடர்பான ஒரு வழக்கை மையப் புலனாய்வுத்துறை விசாரித்து வந்த நிலையில், அதிகாரத் தரகனும் ஹவாலா தொழில் செய்துவந்தவருமான சுரேந்திர ஜெயின் என்ற ஹவாலா பெருச்சாளியும் சிக்கினார். அவரது டைரியில் காங்கிரசு – பா.ஜ.க. அரசியல்வாதிகள், அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்டு அப்போது மையப் புலனாய்வுத் துறையின் இயக்குனராக இருந்த விஜய் கரணும் இலஞ்சம் வாங்கியவர் பட்டியலில் இருந்தார். கூடவே சு.சாமியின் பெயரும் அதிலே இருந்தது. இலஞ்ச ஊழலை எதிர்க்கும் தூய்மையான அரசியல்-பொருளாதார மேதையாகச் சித்தரிக்கப்படும் சு.சாமியின் யோக்கியதைக்கு இந்தச் சான்று ஒன்றே போதுமானது.

பார்ப்பானும் ஆதிக்க சாதியினரும் இலஞ்ச ஊழலில் ஈடுபட்டால் தவறல்ல; ஆனால், சூத்திரனும் தாழ்த்தப்பட்டனும் ஈடுபட்டால் அது மிகப் பெரிய குற்றம் என்பதுதான் சு.சாமியின் நியாயவாதம். “2ஜி ஊழல் விவகாரத்தில் எனக்கு முன்பிருந்த அமைச்சர்கள் எத்தகைய வழிமுறைகளைக் கடைபிடித்தார்களோ அதையேதான் நானும் பின்பற்றினேன்; நான் குற்றமற்றவன் என்று ஆ.ராசா திரும்பத் திரும்பக் கூறுகிறாரே?” என்ற கேள்விக்கு, “ராசாவுக்கு முன்பிருந்த பா.ஜ.க. அமைச்சர்கள் என்ன செய்தார்கள் என்பது எனக்குத் தேவையில்லை” என்றார் சு.சாமி. (குமுதம் ரிப்போர்ட்டர், 5.12.2010) ஏன் தேவையில்லை என்று அவர் விளக்கவில்லை. 2ஜி ஊழல் விவகாரத்தில் மன்மோகன், சிதம்பரம் ஆகியோர் கூட அவருக்கு முக்கியமில்லையாம்; ராசாதான் அவருக்குக் குறியாம். அது ஏன்?

தனியார்மயம் – தாராளமயம் என்பதே ஊழலுக்கும் கார்ப்பரேட் முதலாளிகளின் கொள்ளைக்கானதாகவும் உள்ள நிலையில், அதில் 2ஜி விவகாரத்தில் நடந்த ஊழல் மோசடியை மட்டும் பூதாகரமானதாக்கி, தி.மு.க.வை அரசியல் அரங்கிலிருந்தே ஒழிக்க சு.சாமி மூலமாக பார்ப்பன கும்பல் மீண்டும் ஒரு தாக்குதலை நடத்தியதையே சு.சாமி அளித்துள்ள பேட்டி நிரூபித்துக் காட்டுகிறது. இதற்கு முன்னர், தி.மு.க.வுக்கு எதிரான ஆயுதமாக ராமன் பாலம் விவகாரத்தை வைத்து ஆட்சிக் கவிழ்ப்புச் சதிகளில் இறங்கினார் சு.சாமி. 2007-ல் சென்னை உயர் நீதிமன்றத்தில் சேதுசமுத்திரத் திட்டத்துக்கு எதிராக சு.சாமி தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்வதற்குப் பதிலாக, சு.சாமியின் வாதத்தை அங்கீகரித்து இந்த வழக்கை உச்ச நீதிமன்றத்துக்கு அனுப்பி வைத்தார், தலைமை நீதிபதி ஷா. உச்ச நீதிமன்றத்தில் தொல்லியல் துறை தாக்கல் செய்த மனுவை எதிர்த்து, இது இந்து நம்பிக்கைக்கு எதிரானது என்று அத்வானியும் இந்துத்துவ பரிவாரங்களும் அலறினர். இதனாலேயே பார்ப்பன எதிர்ப்பு மரபை தமிழகத்திலிருந்து ஒழித்துக் கட்டி, எப்படியாவது பார்ப்பன பாசிசத்தை நிலைநாட்டும் தங்களது பொது நோக்கத்துக்காக சங்கராச்சாரி கைதையொட்டி ஏற்பட்ட பகையை மறந்து துக்ளக் “சோ’’வும், சு.சாமியும், அத்வானியும், ஜெயலலிதாவுடன் கைகோர்த்தனர்.

வாஜ்பாய் ஆட்சியைக் கவிழ்க்க ஜெயலலிதாவின் முக்கிய தரகனாகச் செயல்பட்ட சு.சாமி, காங்கிரசின் சோனியா உள்ளிட்டு எதிர்த்தரப்பு பிழைப்புவாதத் தலைவர்களை ஒருங்கிணைத்து நடத்திய டீ பார்ட்டி.

ஈழ விடுதலைக்கு எதிராகவும் தமிழர்களுக்கு எதிராகவும் திமிராகப் பேசிவந்த சு.சாமி, உயர்நீதி மன்ற புறக்கணிப்புப் போராட்டத்தை வழக்குரைஞர்கள் நடத்திவந்த நிலையில், அதைக் கேலி செய்யும் வகையில் தில்லை தீட்சிதர்களுக்காக வாதாட வந்தார். போராடும் வழக்குரைஞர்களைத் தீவிரவாதிகள், ரவுடிகள் என்றெல்லாம் கேவலமாகப் பேசிவந்த சு.சாமி மீது வழக்குரைஞர்கள் அழுகிய முட்டையை வீசி உரிய முறையில் மரியாதை கொடுத்தனர். அதைத் தொடர்ந்து வழக்குரைஞர்கள் மீது கொலைவெறித் தாக்குதலை போலீசு கட்டவிழ்த்துவிட்டதைத் தமிழக மக்கள் நன்கறிவார்கள். சு.சாமியோ வழக்குரைஞர்கள் மீதான தாக்குதலை நியாயப்படுத்தியதோடு, வழக்குரைஞர்களைப் பொறுக்கிகள், காலிகள் என்றெல்லாம் வசைபாடினார்.

அமர்த்தியா சென்னுக்கு நோபல் பரிசு கிடைத்தபோது அதை கிறித்துவ சதி என்றும், கொலைகார சங்கராச்சாரியின் கைதுக்கு சோனியாவின் சதிதான் காரணம் என்றும் சு.சாமி அரிய கண்டுபிடிப்புகளை அவிழ்த்துவிட்டார். முஸ்லிம்களின் பிறப்பு விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், எதிர்காலத்தில் முஸ்லிம்களே இந்த நாட்டில் பெரும்பான்மையாகி விடுவார்கள்; இது பேரபாயம் என்று சாமியாடினார். அவரது உளறல்களும் நடவடிக்கைகளும் எப்படியிருப்பினும், பார்ப்பன பாசிச சித்தாந்தத்தை அடிப்படையாகக் கொண்டுள்ள அதிகாரத் தரகர்தான் சு.சாமி. அன்று உ.பி.யில் சமாஜ்வாதி கட்சியும் பகுஜன் சமாஜ் கட்சியும் இணைந்து ஆட்சியைப் பிடித்ததும், அது பார்ப்பனர்களுக்கு ஆபத்து என்று அலறிய சு.சாமி, பிராமண சுயாபிமான் அந்தோலன் சமிதி என்ற அமைப்பை உருவாக்கி, ஆட்சிக் கவிழ்ப்பு சதிகளில் ஈடுபட்டார். இன்று பா.ஜ.க.வில் சங்கமித்து சமஸ்கிருதத்தைத் தேசிய மொழியாக்க வேண்டும் என்று பார்ப்பன வெறியைக் கக்குகிறார்.

தனிநபர், கட்சியின் பலவீனத்தையும் உள்விவகாரங்களையும் தெரிந்துகொண்டு பிளாக்மெயில் செய்வதென்பது சு.சாமியின் தொழில். அது தெரிந்திருந்தும் தமது அரசியல் ஆதாயத்துக்காக பலதரப்பட்ட பிழைப்புவாதிகளும் இந்த அரசியல் விபச்சாரியிடம் உறவு வைத்துக் கொள்கிறார்கள். சு.சாமிக்குத் தகவல்களையும் ஆதாரங்களையும் கொடுத்து காரியம் சாதிக்கப் பார்க்கிறார்கள்.

போபர்ஸ் பீரங்கிக் கொள்ளையை மூடிமறைக்க இரகசிய உலகப் பேர்வழிகளுடன் சேர்ந்து போலி ஆவணங்களைத் தயாரித்து போர்ஜரி வேலைகளில் ஈடுபட்ட சு.சாமியுடன் பீரங்கித் திருடன் ராஜீவ்.

“தனியொரு மனிதனாக நின்று, உலகம் சுற்றிவந்து இப்படி அரசியல் பண்ணுகிறீர்களே, உங்களுக்கு எங்கிருந்து நிதி கிடைக்கிறது?” என்று சு.சாமியிடம் கேட்டபோது, “நான் பிராமணன்; ஒரு பிராமணன் யாரிடமிருந்து வேண்டுமானாலும் கையேந்தி யாசகம் பெறலாம்; தவறில்லை” என்று தனது விபச்சாரத்தனத்தைப் பச்சையாகவே கூறினார் சு.சாமி. இருப்பினும், சு.சாமியின் அரசியலதிகாரத் தரகு வேலைகளைக் காட்டி பார்ப்பன சமூகம் பெருமைப்பட்டுக் கொள்கிறது. அன்று சு.சாமியைக் கைது செய்ய ஜெயலலிதா முயற்சித்த வேளையில், அவர் மாறுவேடம் பூண்டு கண்ணாமூச்சி விளையாடிபோது, இந்தத் துணிச்சல் யாருக்கு வரும் என்று பார்ப்பன பத்திரிகைகள் வெகுவாக சிலாகித்து எழுதின.

சு.சாமியின் கொட்டங்களுக்கு அவர் பார்ப்பனராக இருப்பதும், சட்டம், நீதி, போலீசு, இராணுவம், அதிகாரிகள், ஊடகங்கள் – என அனைத்திலும் பார்ப்பன கும்பல் ஆதிக்கத்தில் இருப்பதும் முக்கிய காரணமாகும். தத்தமது தேவைக்கேற்ப இவரைப் பயன்படுத்திக் கொண்டு ஆதாயமடைவதால், பார்ப்பன கும்பல் இவரை தூக்கிப் பிடிக்கிறது. அதனால்தான் பார்ப்பன ஊடகங்கள் இவருக்கு மதிப்பும் மரியாதையும் அளித்து, இவரைப் பற்றிய செய்திகளை முதல் பக்கத்தில் கொட்டை எழுத்தில் போடுகின்றன. ஒருபுறம் கோமாளி என்றும், ஆதாரமில்லாமல் புளுகுவதாகவும் அவரைக் கிண்டல் செய்தாலும், மறுபுறம் அவரது நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளித்து, அவரிடம் கருத்துக் கேட்புகளை நடத்துகின்றன.

இன்றைய அரசியல் கட்டமைப்பில் சு.சாமி போன்ற கழிசடைப் பேர்வழிகள் கொட்டமடிக்க முடிகிறதென்றால், அது இந்த கட்டமைப்பின் பலவீனத்தைத்தான் காட்டுகிறது. மேலும், பெரு முதலாளிகள், ஏகாதிபத்தியவாதிகள், கொள்கை வகுப்பாளர்கள் – என அனைத்து அரங்குகளிலும் தொடர்புகளை வைத்துள்ள சு.சாமிக்கு தனது பார்ப்பன பாசிச நோக்கங்களுக்கு ஏற்ப அரசியல் தரகுவேலை செய்வதும், காரியம் சாதிப்பதும் சுலபமாக உள்ளது.

அரசியலும் சமூகமும் சீரழிந்து கிடப்பதால் இத்தகைய அதிகாரத் தரகர்கள் இன்னமும் ஆட்டம் போடுகின்றனர். இதனால்தான் அழுகிய முட்டையை முகத்தில் அடித்தாலும், அம்மண ஆட்டம் நடத்தி ஜெயா கும்பலால் இழிவுபடுத்தப்பட்டாலும் கூச்சநாச்சமின்றி சு.சாமி போன்ற பேர்வழிகள் இன்னமும் கொட்டமடித்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், தமிழர்களுக்கு எதிராகப் பேசும் சு.சாமியைத் தமிழகத்தில் நுழைய விடாமல் துரத்தியடிப்பதும், அதனைப் பார்ப்பன பாசிசத்துக்கு எதிரான போராட்டமாக முன்னெடுத்துச் செய்ல்வதும்தான் இன்றைய அவசியமாக உள்ளது.

– மனோகரன்
___________________________________
புதிய ஜனநாயகம் – அக்டோபர் 2014
___________________________________

Exit mobile version