Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

சுதந்திர போராட்ட வீரர் தியாகி வாஞ்சிநாதனி​ன் நினைவை போற்றுவோம் : கு.கதிரேசன்

1947 இல் வெள்ளை ஏகாதிபத்தியத்திடம் இருந்து பெற்றசுதந்திரம் இந்திய முதலாளிகளின் கைகளில் சென்று விட்டாலும் அந்த சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட பல சுதந்திரபோராட்ட வீரர்கள்தங்கள் இன்னுயிரை துச்சமென மதித்து தாய்நாட்டின் அடிமை தலையை அறுத்தெறிய களம் இறங்கினர். இந்தியாவின்வடக்கே பகத்சிங் , ராஜகுரு,சுகதேவ் ,சந்தரசேகர் ஆசாத் போன்ற ஈடு இணையற்ற சுதந்திர போராட்டவீரர்களை போலவே தெற்கில் பாரதியார், வ.உ.சிதம்பரனார்,வா.வே.சு.ஐயர், சுப்ரமணிய சிவா போன்றவர்கள் சமகாலத்தில் வெள்ளையர்களுக்கு சிம்மசொப்பனமாக திகழ்ந்தனர்.

இவர்களுள் திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவராக இருந்தஆஷ்துரை என்ற கொடுங்கோலனைசுட்டுக்கொன்றதன் மூலம் தமிழக மக்கள் மத்தியில் என்றும் நீங்காத இடத்தை பிடித்துள்ளார் தியாகி வாஞ்சிநாதன்.

தியாகி வாஞ்சிநாதன் திருநெல்வேலி மாவட்டம்செங்கோட்டையில் , 1886 ம் ஆண்டு ரகுபதி மற்றும் ருக்மணிதம்பதியருக்கு மகனாக பிறந்தவர்இவரது இயற்பெயர் சங்கரன் என்றாலும் வாஞ்சி என்றே அனைவரும் அழைத்தனர் .கல்லுரி படிக்கும் போதே பொன்னம்மாளை மனம்முடித்து வனத்துறையில் பணியாற்றினார்.1911 ல் சுதந்திர போராட்டம் உச்சத்தை அடைந்திருந்தது. வ.உ.சி, சுப்ரமணிய சிவா ஆகியோரின் மேடைப்பேச்சுகள் திருநெல்வேலிபகுதியில் சுதந்திரஇயக்கத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

இதில் ஈர்க்கப்பட்ட வாஞ்சிநாதன் அரசு பணியில் இருந்து விலகி புரச்சிகர இயக்கங்களில் தொடர்ப்பைஏற்படுத்திக் கொண்டார். பாரத மாத சங்கத்தில் இணைத்து வெள்ளை அரசாங்கத்திற்கு எதிராக மக்கள்ஆதரவை திரட்டினார். அப்போது சுதேசி கப்பல் கம்பனியை நிறுவிய தியாகி வ.உ.சி, சுப்ரமணிய சிவா ஆகியோர் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியராக இருந்த ஆஷ் துரை உத்தரவின் பேரில் கைது செய்யப்பட்டனர். அத்தோடுசுதந்திர போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது கடும் அடக்கு முறைய ஆஷ் துரை கட்டவிழ்த்துவிட்டார். அந்தகொடுங்கோலனை கொள்வதன் மூலம் வெள்ளை அரசுக்கு பாடம் புகட்டவும் , இந்திய மக்களை தட்டியெழுப்பி சுதந்திர தாகத்தை ஊட்டி வெள்ளை அரசுக்கு எதிராக தீரம் மிக்கபோராட்டங்களை நடத்தவும் முடிவு செய்தனர்.

ஆஷ் துரையை சுட்டுக்கொல்ல சரியான தேர்வாக தியாகி வாஞ்சிநாதனை பாரத மாத சங்கத்தினர் தேர்வு செய்தனர். 1911ஜூன் 17 , அன்று காலை 10 .45 மணி . திருநெல்வேலியில் இருந்து மதுரை செல்லும் வழியில்உள்ள மணியாட்சி ரயில்நிலைய சந்திப்பில் தன் மனைவியுடன் கொடைக்கானலுக்குச் செல்ல ரயிலில் முதல்வகுப்பில் பாதுகாப்போடு அமர்ந்திருந்த திருநெல்வேலிஆட்சியர் ஆஷ் துரையை தனது கை துப்பாக்கியால் வாஞ்சிநாதன் சுட்டுக்கொன்றார். சுடும் போது பலரும் வாஞ்சிநாதனைபார்த்துவிட்டதால் தான் கைது செய்யப்பட்டால் ரகசியமாக இயங்கி வந்த தங்களதுஇயக்கத்தை வெள்ளையர்கள் நசுக்கி விடுவார்கள் உயர்ந்த நோக்கத்தில் அந்த தியாகி தன்னை தானே சுட்டு கொண்டு வீர மரணத்தை தழுவினார்.

 தான்ஏன் ஆஷ் துரையை சுட்டுகொன்றேன் என்று அதற்கான காரணத்தை எழுதிசட்டைப்பையில் வைத்திருந்தார். இவ்வாறு பல எண்ணற்ற வீரத் தியாகிகளின் ஒப்பற்ற தியாகத்தால் தான்சுதந்திர போராட்டங்கள் எழுச்சிபெற்றன.

வாஞ்சிநாதன் நினைவு நூற்றாண்டு நிறைவுபெரும் இந்த நாளில் தியாகி வாஞ்சிநாதனின் ஒப்பற்ற தியாகத்தை நினைவு கூறுவோம், அவர்கள் விட்ட பணியினை நாம் தொடர்வோம்.

தொடர்பிற்கு:
advkathiresan@gmail.com

இது ஒரு மீள் பதிவு|Published on: Jun 17, 2011 @ 19:15

Exit mobile version