மஸ்கெலியா பிலான்டேசன் நிறுவனத்திற்கு சொந்தமான டெவன் தோட்டத்தின் அழகிய டெவன் நீர் வீழ்ச்சிக்கு பக்கத்தில் அமைந்துள்ள டெவன் தோட்டத்திற்கு சொந்தமான காணியையே சில பணக்காரர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது தொழிலாளர்கள் தோட்ட நிர்வாகத்துடன் தொடர்பு கொண்டு வினவிய போது இது தொடர்பாக நாங்கள் ஏதும் அறியோம் என கூறுகின்றனர்
தோட்டமுகாமையாளர் அமன் பொலவிடம் வினவிய போது தான் இது தொடர்பாக கம்பனிக்கு அறிவித்திருப்பதாகவும் அவர்கள் இந்த காணி விற்பனை தொடர்பாக மேலதிக விசாரணை செய்வதாகவும் கூறினார். மக்களின் போராட்டம் தொடர்பக தான் கருத்து கூற இயலாது என்றும் தனியாருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ள மேற்படி காணி தோட்ட நீர்வாகத்திற்கு சொந்தமானது எனுவும் தெரிவித்தார்.
போராட்டத்திற்கு தலைமை தாங்கும் தொழிலாளர்களில் ஒருவரான சிவகுமார் கருத்து தெரிவிக்கையில் காடுகளை களனியாக்கி எமது மூதாதையர் பணத்தினை அள்ளித்தரும் பசுஞ்சோலையாய் மாற்றினார்கள் ஆனால் காணிகளை சுவீகரித்துள்ளவர்களில் ஒருவன் 22 ஏக்கர் காணி தனக்கு சொந்தம் என்றும் மற்றும் ஒருவன் 50 ஏக்கர் காணி தனக்கு சொந்தம் என்றும் கூறுகின்றனர்.
உழைப்பாளர்கள் நாங்கள் 8 அடி லயத்தில் சிறை வாழ்க்கை வாழ்கிறோம் எங்களுக்கம் காணி வேண்டும் எங்களுக்கும் காணிகளை பிரித்து தாருங்கள் என்று கூறினார்.தோட்டத்தின் மாதர் சங்க தலைவி நிர்மலாவிடம் வினவிய போது சிவனு லெச்சுமணன் மீட்டு தந்த இரத்தம் தோய்ந்த இந்த மண்ணை மீண்டும் சூரையாட விட முடியாத எங்களுக்கு நடப்பதற்கு கூட பாதை இல்லாமல் போகக் கூடிய நிலை உருவாகியிருப்பதாகவும் உல்லாச விடுதிகள் கட்டப்படடு வருவதனால் தங்களின் பிள்ளைகளின் எதிர்காலம் அச்சத்திற்கு இடமாகி இருப்பதாகவும் கூறினார்.
காணியில் உல்லாச விடுதி ஒன்ரை கட்டிக் கொண்டிருக்கம் பெயர் சொல்ல விரும்பாத பிரதேச தனவந்தர் ஒருவர் கூறும் போது தான் சட்ட ரீதியாகவே இந்த காணியை பெற்றக் கொண்டதாகவும் நீதி மன்றத்தில் தான் தீர்த்துக் கொள்வதாக கூறினார்.
உல்லாச பிரயாணிகளின் கண்கவர் பிரதேசமான இந்த இடத்தில் அழகான நீர் விழ்ச்சியும் பசுமையான இயற்கையும் ஊசியிலைக் காடுகளும் நாசம் செய்யப் பட்டு உல்லாச விடுதிகளை அமைத்து வரும் இந்த பணக்காரர்களுக்குபின்னால் பல அரசியல் சக்திகள் செயல்படுவதாக கூறப்படுகின்றது .
சிவனு லெச்சுமணன் பெற்றுக் கொடுத்த இடத்தை மக்களுக்கு திருப்பிக் கொடு டெவன் தோட்டத்து பொது மக்களுக்கு பாதகம் விளைவிக்காதே தனி நபர் ஒருவருக்கு 50 ஏக்கர் கொக்கப் பட்டுள்ளது தோட்டத் தொழிலாளர்களுக்கும் காணி பிரித்துக் கொடுஎன்னும் சுலோகங்களை ஏந்திய வாறு தொழிலாளர்கள் போராட்டத்தை முன்னெடுத்து செல்கின்றனர்.
எந்த வித அரசியல் தலையீடும் இல்லாமல் சுயமாக பேராடி வரும் மக்களுக்கமலையகத்தின் பல அமைப்புகளும் ஆதரவுகளை வழங்கிவருவது பாராட்டக் கூடிய விடயமாகும் மலையகத்தின் பிரபல தொழிற்சங்கங்கள் மேற்படி போராட்டத்தில் தலையிடாமல் இருப்பதன் காரணம் குறித்து மக்கள் தங்களின் அதிருப்தியையும் தெரிவித்தனர்.
மலையக வரலாற்றில் அந்த இடத்தில் போராட்டம் மூன்றாவது போராட்டம் எனவும்1977ல் சிவனுலெச்சுமணன் உயிர் தியாகம் செய்த காணி மீட்பு போராட்டததை தொடர்ந்து 2003 ஆம் ஆண்டு புதிய ஜனநாயக மார்சிய லெனினிச கட்சியின் தேசிய அமைப்பாளர் சட்டத்தரனி இ.தம்பைய்யாவின் தலைமையில் மலையகத்தின் சில முற்போக்கு சிந்தனையாளர்களின் ஒத்துழைப்புடன் மேல் கொத்மலை நீர்த் தேக்கத்திற்கு எதிரான மக்கள் இயக்கம் மேற்கொண்ட மாபெரும் கடையடைப்புப் போராட்டமும் மறியல் போராட்டத்தையும் தொடர்ந்து டெவன் தோட்டத்து பொது மக்கள் முன்னெடுக்கும் காணிமீட்பு போராட்டமும் அதே இடத்தில் நடைப்பெறுவது குறிப்பிடத்தக்கது.
டெவன் தோட்டத்து பொது மக்கள் முன்னெடுக்கும் காணிமீட்பு போராட்டத்தினை திசைத்திருப்ப சிலர் பொய்யான வாக்கறுதிகளை வழங்கி வருவதாகவும் போராட்டத்தை தங்களின் சுயநலனுக்காய் பயன்படுத்த சிலர் முனைவதாகவும் மக்கள் கூறுகின்றனர்.
டெவன் தோட்டத்து பொது மக்கள் முன்னெடுக்கும் காணிமீட்பு போராட்டம் மலையக பிரதேசத்தின் தேயிலைத் தோட்டங்களை சிறு முதலாளிகளுக்க பிரித்து கொடுக்க செய்திருக்கும் திட்டத்திற்கு எதிராய் ஆரம்பித்திருக்கும் முதலாவது போராட்டம் என்பதுடன் தேயிலை தோட்டத்து தொழிற்சாலைகளை உல்லாச விடுதிகளாக மாற்ற முனைந்து வரும் சதி திட்டங்களுக்கு எதிரான போராட்டமாகவும் காணப்படுகின்றது.போராட்ட கலாசாரமும் பண்பாடும் தொலைந்து போயிருக்கும் இந்தக் காலக் கட்டத்தில் டெவன் தோட்டத்து பொது மக்கள் முன்னெடுக்கும் காணிமீட்பு போராட்டம் வெற்றிப் பெற ஒத்துழைப்பு வழங்க வேண்டியது மலையகத்தை உண்மையாக நேசிக்கும் ஒவ்வொருவரினதும் கடமையாகும்.