அன்னிய நேரடி முதலீடு, டீசல் விலை உயர்வு போன்றவற்றுக்காக பிரதமர் மன்மோகன் சிங்கை பா.ஜ. மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான அருண் ஷோரி பாராட்டியுள்ளார்.
கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொள்வதற்காக மத்திய பிரதேச மாநிலம் போபாலுக்கு நேற்று வந்த அருண் ஷோரி கூறியதாவது: எண்ணெய் நிறுவனங்களின் நஷ்டத்தை தவிர்க்க டீசல் விலையை உயர்த்துவது இப்போது அவசியமாகிவிட்டது. மேலும், சில்லரை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை மத்திய அரசு அனுமதித்ததற்கு தேவையில்லாமல் எதிர்ப்பு எழுந்துள்ளது.
அன்னிய நேரடி முதலீட்டால் சில்லரை வர்த்தகர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள். நாட்டின் பொருளாதாரம் மேம்பட இதுபோன்ற சீர்திருத்த நடவடிக்கைகள் தேவை. பிரதமர் மன்மோகன் சிங் முதல் முறையாக இப்போதுதான் தனது பலத்தை காட்டியுள்ளார். இவ்வாறு அருண் ஷோரி கூறினார்.
ஐரோப்பாவில் பல்தேசிய நிறுவனங்கள் சில்லறை வணிகத்தை ஆக்கிரமித்து, அழித்து மீள முடியாத பொருளாதார நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளன. இதுவரை ஐரோப்பா சந்தித்திராத வறுமைச் சமூகம் ஒன்றை பல்தேசியக் கம்பனிகள் தோற்றுவித்துள்ளன. அதே பல் தேசிய நிறுவனங்கள் இப்போது இந்தியாவின் சில்லறை வணிகத்தை ஆக்கிரமிக்க இந்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஏற்கனவே வறிய நாடுகளில் ஒன்றாக வகைப்படுத்தப்பட்டுள்ள இந்தியாவின் எஞ்சியிருக்கும் மூலதனத்தையும் ஒட்டச் சுரண்டுவதற்கு, சட்டரீதியாகக் கொள்ளையடிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.மிகப்பெரிய சில்லரை விற்பனை அங்காடியான வால்மார்ட் கம்பெனிக்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் போராட்டங்கள் வலுத்து வருகின்றன
அமரிக்க ஜனாதிபதி ஒபாமா கொள்ளையடிப்பதற்கு அனுமதி வழங்குமாறு இந்திய அரசை மிரட்ட இந்திய அரசு தன்னை அமரிக்காவின் அடிமை எனப் பிரகடனம் செய்துகொண்டது.
இப்போது அன்னிய முதலீட்டை எதிர்த்து போலி வேடமிட்ட பாரதீய ஜனதா என்ற மதவெறிக் கட்சியும் அதனை ஆதரிக்க ஆரம்பித்துள்ளது. அத்தனை தேச விரோதிகளும் இணைந்து இந்தியாவை அன்னிய நாடுகளுக்கு விற்பனை செய்கிறார்கள்.