ஒன்றிணைந்த வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தின் தேர்தல் மாவட்டங்களில் வாக்களிப்பு 84%ஆக காணப்பட்ட 1977ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல்களில், ஆகக் கூடிய வாக்குகளுடன் (57%) அதிக எண்ணிக்கையிலான ஆசனங்களை தமிழ் ஐக்கிய விடுதலை முன்னணி (ரி.யு.எல்.எப் – தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னோடி) பெற்றெடுத்த சந்தர்ப்பத்தில், தமிழ் தேசியவாதம் என்பது உச்சத்தில் இருந்தது. இந்த பாரிய வெற்றியானது, ஏக எதிர்க்கட்சி என்ற நிலையையும், 1977ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைமை என்ற பதவிநிலையை ரி.யு.எல்.எப் பெறுவதற்கும் வழிவகுத்தது.
2013ஆம் ஆண்டு மாகாண சபைத் தேர்தல்களின் போதான ரி.என்.ஏ பிராசரத்தில், உள்ளக சுயநிர்ணய உரிமையை புகழ்ந்து பேசல் மற்றும் வடக்கு, கிழக்கினை மீளஇணைத்தல் என்பன தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டிருந்ததுடன், பிரபாகரனை கதாநாயகனாகவும் புகழ்ந்தனர். அச்ச%ட்டும் இரத்தத்தை உறையச் செய்யும் 1977ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் பிரசாரங்களுடன் ஒப்பிடும் போது இங்கு தமிழ் தேசியவாதம் என்பது குறைவானதாகவே இருந்தது.
இங்கு நாம், 1977, 2004 மற்றும் 2010ஆம் ஆண்டுகளில் பாராளுமன்ற தேர்தல்களில், மற்றும் 2012ஆம் ஆண்டு (கிழக்கு மாகாணத்தில்) மற்றும் 2013ஆம் ஆண்டு மாகாண சபைத் தேர்தல்களில் (வட மாகாணம்) ரி.யு.எல்.எப்-ரி.என்.ஏ பெற்ற வாக்குகளை ஒப்பீடு செய்வதுடன், வேறுபடுத்தி பார்க்கவும் முயற்சிக்கின்றோம். ஆயுத குழுக்களின் (அரசு மற்றும் அரசு சாரா) தலையீடு இல்லாத மிகவும் அமைதியான சந்தர்ப்பங்களில் நடைபெற்ற 1977ஆம் ஆண்டு மற்றும் 2012-13ஆண்டுத் தேர்தல் முடிவுகளை ஒப்பீடு செய்வதில் நாம் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளோம்.
1977ஆம் ஆண்டில், கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களின் ஒவ்வொரு தேர்தல் மாவட்டத்திலும் வாக்காளிப்பானது 80%இற்கு அதிகமானதாக இருந்தது: அம்பாறையில் 88%, மட்டக்களப்பில் 87%, திருகோணமலையில் மற்றும் வன்னியில் தலா 85%, யாழ்ப்பாணத்தில் 81%. 2004ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல்களிலும், கிழக்கு மாகாணத்தின் வாக்களிப்பு அதிகமானதாக (,80%) இருந்தது. இருப்பினும், வடக்கில் வாக்களிப்பு குறைந்திருந்தது (யாழ்ப்பாணத்தில் 47% மற்றும் வன்னியில் 67%). போர்நிறுத்த காலத்தின் போது நடைபெற்ற இந்த தேர்தலில், எல்.ரி.ரிஈயினர் ரி.என்.ஏயிற்கு பகிரங்கமாக ஆதரவு தெரிவித்திருந்தனர். 2010ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தல்களின் போது கிழக்கு மற்றும் வடக்கில் வாக்களிப்பு வீதம் வெகுவாக குறைந்தது:. அம்பாறையில் 61%, திருகோணமலையில் 58%, வன்னியில் 40%, யாழ்ப்பாணத்தில் 21%. 2012ஆம் ஆண்டு கிழக்கு மாகாண சபைத் தேர்தல்களிலும், 2013ஆம் ஆண்டு வடக்கு மாகாண சபைத் தேர்தல்களிலும் வாக்களிப்பு வீதமானது அதிகரித்தது. வன்னி 68%, அம்பாறை மற்றும் திருகோணமலையில் தலா 62%, யாழ்ப்பாணத்தில் 60% மற்றும் மட்டக்களப்பில் 59%. 1977ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் வாக்களிப்பு வீதமான 84% என்பது, 2004ஆம் ஆண்டில் 64%ஆகவும், 2010 ஆம் ஆண்டில் 42%ஆகவும் வீழ்ச்சி கண்டது. அதன்பின்னர் 2012-2013இல் மீண்டும் 62%ஆக வளர்ச்சி கண்டுள்ளது.
1977ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தல்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மொத்த செல்லுபடியான வாக்குகளில் 67%ஆன வாக்குகளை ரி.யு.எல்.எப் – ரி.என்.ஏ பெற்றுக் கொண்டது. 2012ஆம் ஆண்டு மாகாண சபைத் தேர்தல்களில் இந்த அளவு 51%ஆக வீழ்ச்சி கண்டது. 1981ஆம் ஆண்டிலிருந்து (71%), 2012ஆம் ஆண்டில் (73%) தமிழ் மக்கள் தொகையில் அதிகரிப்பு ஏற்பட்டிருந்த போதிலும் இந்த முடிவு வெளியானது. அதேவேளை, 1977ஆம் ஆண்டு அம்பாறை மாவட்டத்தில் அளிக்கப்பட்ட மொத்த செல்லுபடியான வாக்குகளில் 29% என்ற ரி.யு.எல்.எப்இன் பங்கானது, 2012ஆம் ஆண்டில் மாவட்டத்தில் தமிழ் மக்களின் தொகையானது பகுதியளவில் குறைந்ததுடன் (1981ஆம் ஆண்டு 20%, 2012ஆம் ஆண்டு 17%), மொத்த செல்லுபடியான வாக்குகள் 16%ஆக வீழ்ச்சி கண்டது. அத்துடன், மிகவும் முக்கியமாக ரி.என்.ஏக்கான முஸ்லீம் வாக்குகளின் இழப்பும் இதற்கான காரணங்களில் ஒன்றாகும் (1977ஆம் ஆண்டு முஸ்லீம் இனத்திற்கான அரசியல் கட்சி எதுவும் இல்லை என்பதனை கவனத்தில் கொள்ளல் வேண்டும்). திருகோணமலையில், ரி.யு.எல்.எப்-ரி.என்.ஏஇற்கு 1977ஆம் ஆண்டு அளிக்கப்பட்ட 27% என்ற வாக்குகளுடன் ஒப்பிடும் போது, 2012ஆம் ஆண்டில் 29%ஆக அதிகரித்துள்ளது. 1981ஆம் ஆண்டின் 34% என்ற தமிழ் மக்கள் தொகையுடன் ஒப்பிடும் போது, 2012ஆம் ஆண்டில் 32%ஆக வீழ்ச்சி கண்டுள்ள நிலையில் இந்த வாக்காளர் பதிவு இடம்பெற்றுள்ளது (2012ஆம் ஆண்டு ரி.என்.ஏஇற்கான பங்கு வாக்குகளுடன் ஒப்பிடும் போது மக்கள் தொகை அதிகமாக உள்ளது).
வடக்கில், யாழ் தேர்தல் மாவட்டத்தில் (யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி ஆகிய நிர்வாக மாவட்டங்களை உள்ளடக்கிய) 2013ஆம் அளிக்கப்பட்ட மொத்த செல்லுபடியான வாக்குகளில் 84%இனை ரி.யு.எல்.எப்-ரி.என்.ஏ தனதாக்கிக் கொண்டது (ஆகக் குறைந்த வாக்களிப்புக்கு மத்தியிலும்). இதற்கு மாறாக 1977ஆம் ஆண்டு அளிக்கப்பட்ட மொத்த செல்லுபடியான வாக்குகளில் 72%ஆக இந்த பங்கு காணப்பட்டது. இதற்கான காரணங்களில், 2013ஆம் ஆண்டில் 95%ஆக இருந்த தமிழ் மக்கள் தொகை 2013ஆம் ஆண்டில் 99%ஆக வளர்ச்சி கண்டமையும் ஒன்றாகும். அதேவேளை, 1977ஆம் ஆண்டின் 54% என்பதுடன் ஒப்பிடும் போது, 2013ஆம் ஆண்டில் வன்னி தேர்தல் மாவட்டத்தில் (மன்னார், முல்லைத்தீவு மற்றும் வவுனியா நிர்வாக மாவட்டங்களை ஒன்றிணைத்து) அளிக்கப்பட்ட மொத்த செல்லுபடியான வாக்குகளில் 68%இனை ரி.யு.எல்.எப்-ரி.என்.ஏ பெற்றுக் கொண்டது. 1981ஆம் ஆண்டின் 77% என்பதிலிருந்து 2012ஆம் ஆண்டில் 87% என்பதனை நோக்கியதாக தமிழ் மக்கள் தொகையின் வளர்ச்சியே இந்த வாக்களிப்பில் வளர்ச்சிக்கும் காரணமாக அமைந்திருந்தது.
ஒட்டுமொத்தமாக கிழக்கு மற்றும் வடக்கில், ரி.யு.எல்.எப்-ரி.என்.ஏ வாக்குகளின் பங்கானது, 1977ஆம் ஆண்டின் மொத்த செல்லுபடியான வாக்குகளில் 57%உடன் ஒப்பிடும் போது, 2013ஆம் ஆண்டில் மொத்த செல்லுபடியான வாக்குகளில் 50% என வீழ்ச்சி கண்ட போதிலும், 1981ஆம் ஆண்டு ஒன்றிணைந்த வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் நடத்தப்பட்ட சனத்தொகை கணக்கெடுப்பின் போது 69%ஆக இருந்த மக்கள் தொகையானது, 2012ஆம் ஆண்டு நடத்தப்பட்ட சனத்தொகை கணக்கெடுப்பின் போது 62%ஆக குறைவடைந்தது. 1977ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 2012ஆம் ஆண்டு மட்டக்களப்பில் மிகவும் குறைந்த 59% என்ற வாக்களிப்பே பதிவாகியிருந்தது: மிகவும் முக்கியமாக 1981ஆம் ஆண்டிற்கும் (734,474) 2012ஆம் ஆண்டிற்கும் (583,071) இடைப்பட்ட காலப்பகுதியில், நாட்டின் ஏனைய பகுதிகளுக்கும், வெளிநாடுகளுக்குமான பாரிய புலம்பெயர் நடவடிக்கையின் காரணமாக யாழ் மாவட்டத்தின் மக்கள் தொகையில் 20.6% வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. மொத்தத்தில், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் ரி.யு.எல்.எப்-ரி.என்.ஏ ஆதரவானது 1977 மற்றும் 2012-2013 இடைப்பட்ட காலப்பகுதியில் வீழ்ச்சி கண்டுள்ளது. திருகோணமலை மற்றும் அனைத்து வடமாகாண மாவட்டங்களிலும், 1977 மற்றும் 2012-2013 மத்தியில் அதன் ஆதரவு அதிகரித்துள்ளது.
ஒவ்வொரு முறை ஜனாதிபதி பேசும் போது, ‘நானே இந்த நாட்டில் உள்ள அனைத்து பிராந்தியங்களையும் சேர்ந்த அனைவருக்கும் ஜனாதிபதி’ எனக் குறிப்பிடுகின்றார். அது உண்மை என்பதுடன், அவ்வாறு குறிப்பிடுவதற்கான சட்டரீதியான அதிகாரம் அவரிடம் உள்ளது. கிழக்கு மற்றும் வடக்கில் ரி.என்.ஏஇன் பிரபல்யத்தன்மைக்கும், தமிழ் தேசியவாதத்திற்கும் அவர் பங்களிக்கின்றார். அதேவேளை, பிரபாகரனை துதிபாடும் மற்றும் எல்.ரி.ரி.ஈயினரை ‘கதாநாயகர்களாக’ ரி.என்.ஏ தலைவர்கள் குறிப்பிடும் சந்தர்ப்பங்களில், அவர்கள் ஜனாதிபதியின் புகழுக்கும், தெற்கு மற்றும் சிங்கள தேசியவாதத்திற்கும் பங்களிக்கின்றனர். கிழக்கு மற்றும் வடக்கில், ரி.என்.ஏஇன் பிரபலத் தன்மை அதிகரித்தல் என்பது, எதிர்காலத்தில் மிதமான தேசிய அரசாங்கத்துடன் அடங்கிப் போகலாம்.
எவ்வாறாயினும், தமிழ் தேசியவாதத்தின் மறுமலர்ச்சியானது, எல்.ரி.ரி.ஈ மீதான பச்சாதாபம் அல்லது ஆதரவு என தவறுதலாக புரிந்து கொள்ளப்படக் கூடாது. தேர்தலில் போட்டியிட்ட ஆனந்தி சசிதரன் (எழிலன் எனப்படும்) விருப்பு வாக்குகளில் இரண்டாவது இடத்தைப் பிடித்தார். எல்.ரி.ரி.ஈயில் அங்கம் வகித்தவர் என்பதே அவருக்கான பிரபல்யத்தை ஈட்டித் தந்தது. அவரது கணவர் (காணாமல் போயுள்ளார்) 2002ஆம் ஆண்டு முதல் எல்.ரி.ரி.ஈயின் மாவட்ட அரசியல் தலைவராக (ஆரம்பத்தில் வவுனியாவிலும், பின்னர் திருகோணமலையிலும்) இருந்தவர். முன்னாள் எல்.ரி.ரி.ஈ போராளி என்ற நிலையில் ஒப்பிட்டுப் பார்க்கும் போது, 50%ஆன அவரது விருப்பு வாக்குகள் கணவனை இழந்தவர் என்ற பரிதாபத்தின் காரணமாகவும் (வரலாற்று ரீதியாக தெற்காசிய அரசியல் மனப்பாங்கு) 25%ஆன வாக்குகள் எல்.ரி.ரி.ஈ மற்றும் அவரது கணவர் மீதான ஆதரவின் காரணமாகவும், எஞ்சிய 25%ஆன வாக்குகள் தேர்தலுக்கு முன்னர் அவரது அலுவலகத்தின் மீது முன்னெடுக்கப்பட்ட வன்முறைத் தாக்குதலினால் (இராணுவ புலனாய்வு பிரிவால் முன்னெடுக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படுகின்றது) ஏற்படுத்தப்பட்ட பரிதாபத்தின் காரணமாகவும் பெறப்பட்டது என எமது மதிப்பீடு தெரிவிக்கின்றது.
சிவில் யுத்தத்திற்குப் பின்னரான சுமார் ஐந்து வருடங்கள் என்ற காலப்பகுதியில் ஜனாதிபதி ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தின் ‘அபிவிருத்தியின் ஊடாக நல்லிணக்கம்’ என்ற மந்திரம் மீதான மக்களின் தெளிவான தீர்ப்பாக வட மாகாண சபைத் தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளன. 2010ஆம் ஆண்டு ஜனவரி மாத ஜனாதிபதித் தேர்தல், 2010ஆம் ஆண்டு ஏப்ரல் மாத பாராளுமன்றத் தேர்தல்கள், மற்றும் 2011ஆம் ஆண்டு உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் என்பவற்றின் மீள்அமுலாக்கலாக 2013ஆம் ஆண்டு மாகாண சபைத் தேர்தல்கள் அமைந்தன. சந்தேகமற்ற வகையில் ஜனாதிபதி ராஜபக்ஷவின் ஆட்சிமுறையானது, சுதந்திரத்திற்குப் பின்னரான காலப்பகுதியில் வன்னி பெருமாவட்ட பகுதியில் (கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு, மற்றும் வவுனியா) பெருமளவிலான பொது முதலீடுகளை செய்துள்ளது. இலங்கையின் தமிழ் சமுதாயத்தின் யாழ்ப்பாணத்தை பிரதானமாகக் கொண்டஃஆதிக்கம் கொண்ட அரசியலின் காரணமாக, இவ்வாறான பாரிய பொது முதலீடுகளை தமிழ் அரசியல் நிர்வாகம் எதுவுமே வடக்கின் வன்னிப் பகுதியில் முன்னெடுக்கவில்லை.
கிழக்கு (மே 2012) மற்றும் வடக்கில் (செப்ரம்பர் 2013) மாகாண சபைத் தேர்தல்கள், ‘சிறுபான்மையினர் இனி இல்லை’ என்ற புனைவினையும், இலங்கையின் சிறுபான்மை சமுதாயங்களுக்கு எதிராக ‘மக்கள் வம்சம்’ என சுய பிரகடனம் செய்து கொண்ட அடையாள பிரசாரங்களான ‘ஒரு நாடு ஒரு குரல்’ என்பவற்றை கேள்விக்குட்படுத்துவதாக அமைந்துள்ளன.
முத்துக்கிருஷ்ணா சர்வானந்தன், வடமாகாண, பருத்தித்துறை, பருத்திதுறை அபிவிருத்தி ஆய்வகத்தின் முதன்மை ஆய்வாளர்.http://pointpedro.org தொடர்பு : sarvi@pointpedro.org
இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில், 1977, 2004 மற்றும் 2010 பாராளுமன்றத் தேர்தல்கள் மற்றும் 2012 மற்றும் 2013 மாகாண சபைத் தேர்தல்கள்.
தேர்தல் மாவட்டம் | வருடம் |
மட்டக்களப்பு |
திகாமடுலைஃஅம்பாறை |
திருகோணமலை |
யாழ்ப்பாணம் |
வன்னி |
மொத்தம் |
பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்காளர்கள்
|
2012 / 2013 |
347099 |
441287 |
245363 |
495413 |
224064 |
1753226 |
2010 |
333644 |
420835 |
241133 |
721359 |
266975 |
1983946 |
|
2004 |
303928 |
379044 |
224307 |
644279 |
226604 |
1778162 |
|
1977 |
132900 |
154800 |
97400 |
408300 |
85000 |
878400 |
|
வாக்களிக்கப்பட்ட மொத்த செல்லுபடியான வாக்குகள் | 2012 / 2013 |
205936 |
274935 |
152663 |
299001 |
151573 |
1084108 |
2010 |
180618 |
256946 |
139742 |
148503 |
106977 |
832786 |
|
2004 |
241375 |
290361 |
182794 |
284026 |
140377 |
1138933 |
|
1977 |
115200 |
136800 |
83000 |
331500 |
72400 |
738900 |
|
ரி.என்.ஏ வாக்குகள் | 2012 / 2013 |
104682 |
44749 |
44396 |
250986 |
102609 |
547422 |
2010 |
70659 |
26895 |
33268 |
74373 |
42746 |
247941 |
|
2004 |
161011 |
55533 |
68955 |
257320 |
90835 |
633654 |
|
1977 |
77500 |
39700 |
22700 |
239100 |
39200 |
418200 |
|
மொத்தம் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களில், அளிக்கப்பட்ட வாக்குகளில், செல்லுபடியான வாக்குகளின் பங்கு |
2012 / 2013 |
59% |
62% |
62% |
60% |
68% |
62% |
2010 |
54% |
61% |
58% |
21% |
40% |
42% |
|
2004 |
84% |
81% |
85% |
47% |
67% |
64% |
|
1977 |
87% |
88% |
85% |
81% |
85% |
84% |
|
அளிக்கப்பட்ட மொத்த செல்லுபடியான வாக்குகளில் ரி.என்.ஏ வாக்குகளின் பங்கு | 2012 / 2013 |
51% |
16% |
29% |
84% |
68% |
50% |
2010 |
39% |
11% |
24% |
50% |
40% |
30% |
|
2004 |
67% |
19% |
38 % |
91% |
65% |
56% |
|
1977 |
67% |
29% |
27% |
72% |
54% |
57% |
|
மொத்த பதிவு செய்யப்பட்ட வாக்களார்களில், ரி.என்.ஏ வாக்குகளின் பங்கு | 2012 / 2013 |
30% |
10% |
18% |
51% |
46% |
31% |
2010 |
21% |
6% |
14% |
10% |
16% |
13% |
|
2004 |
53% |
15% |
31 % |
40 % |
40% |
36% |
|
1977 |
58% |
26% |
23% |
59% |
46% |
48% |
|
மாவட்டத்தில் தமிழ் மக்களின் எண்ணிக்கை இலங்கை 10 இந்திய தமிழர்கள் |
2012 |
73% |
17% |
32% |
99% |
88% |
62% |
2010 |
74% |
18% |
32% |
97% |
84% |
60% |
|
2004 |
74% |
18.5% |
32% |
98% |
85% |
62% |
|
1981 |
71% |
20% |
34% |
95% |
77% |
69% |
மூலம்: தேர்தல்கள் திணைக்களம், கொழும்பு.
2012 ரூ 2013 தரவு – http://www.slelections.gov.lk/2013PPC/nppc.html வடக்கில்; http://www.slelections.gov.lk/2012PPC/eppc.htm கிழக்கில்
2010 தரவு – http://www.slelections.gov.lk/parliamentary_elections/province.html
2004 தரவு – http://www.slelections.gov.lk/District2004/district2004.html
1977 தரவு – கே. எம். டீ சில்வா, உலகளாவிய பதிப்புரிமை 1931 – 1981: இலங்கை அனுபவம், தகவல் திணைக்களம், கொழும்பு ஜூலை 1981.
குறிப்புக்கள்:
(1) கிளிநொச்சி மற்றும் யாழ் நிர்வாக மாவட்டங்களை யாழ் தேர்தல் மாவட்டம் உள்ளடக்கியுள்ளது.
(2) மன்னார், முல்லைத்தீவு, மற்றும் வவுனியா நிர்வாக மாவட்டங்களை வன்னி தேர்தல் மாவட்டம் உள்ளடக்கியுள்ளது.
(3) திகாமடுலை தேர்தல் மாவட்டம், அம்பாறை நிர்வாக மாவட்டத்தை உள்ளடக்கியுள்ளது.
(4) 1977இல் தமிழ் தேசியக் கூட்டமைப்பானது (ரி.என்.ஏ) தமிழ் ஐக்கிய விடுதலை முன்னணியினால் (ரி.யு.எல்.எப்) மாற்றீடு செய்யப்பட்டிருந்தது.
(5) 2010ஆம் ஆண்டு ரி.என்.ஏ வாக்குகளில் ரி.யு.எல்.எப் (மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் மற்றும் வன்னி) மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் (ஏ.சி.ரி.சி) (யாழ்ப்பாணம் மாத்திரம்) வாக்குகளும் உள்ளடங்குகின்றன.
(6) சனத்தொகை தரவு – 2012ஆம் ஆண்டு சனத்தொகை கணக்கெடுப்பு: 2004 மற்றும் 2010 தரவு கணிப்பீடுகளில் இருந்து 2013 தரவுகள் பிரதிபலிக்கின்றன.
– 2001ஆம் ஆண்டு சனத்தொகை கணக்கெடுப்பானது, வடக்கு மற்றும் கிழக்கின் அனைத்து மாவட்டங்களிலும் முன்னெடுக்கப்படவில்லை (அம்பாறை தவிர)
– 1981ஆம் ஆண்டு தரவுகள், 1981ஆம் ஆண்டு சனத்தொகை கணக்கெடுப்பைச் சேர்ந்தவை.