“சாவதா தேசத்துக்காக? இலை!அதற்காய்
வாழ்வதே வீர வழி”
சில்லையூர் செல்வராஜன்
Jack Layton
July 18, 1950 – August 22, 2011
இலங்கையில் தமிழ் மக்கள் இடது சாரிக் கட்சிகளுக்கு வாக்களித்தமை மிகமிகக் குறைவே. பொன். கந்தையா போன்ற ஒரு சிலரே தமிழ் பகுதிகளில் இருந்து பாராளுமன்றம் சென்றுள்ளனர். அப்படிப்பட்ட தமிழ் மக்களையே மாற்றி தேசிய ஜனநாயகக் கட்சிக்கு வாக்களிக்கச் செய்தவர் யக் லேற்றன் என்றால் மிகையாகாது.
எனது வாழ்க்கையில் இரண்டு மணித்தியாலங்கள் காத்திருந்து ஒரு தலைவருக்கு அஞ்சலி செலுத்தியது யக் லேற்றனுக்கே. நான் சிறுவனாக இருந்த பொழுது செல்வநாயகத்தின் உடல் வீரசிங்கம் மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்தது. அங்கு சென்று வந்த பலர் கூறிய கதைகளை கேட்டதுண்டு.
இங்கு நேதன் பிலிப் சதுரத்தின் வெளியி;ல் பலர் சுவர்களில் எழுதிய அஞ்சலிகள் லேற்றனின் பல சாதனைகளை வெளிப்படுத்துகின்றன. மக்கள் இவரை எவ்வளவு தூரம் நேசித்துள்ளார்கள் என்பதற்கு இவை சாட்சியங்கள். தமிழிலும் ஒருவர் எழுதியிருந்தார். இவ் வாசகங்களை பார்ப்பதற்கே பல இடங்களில் இருந்து மக்கள் வருகின்றார்கள்.
2011 தேர்தலுக்கு முன்பாக ஒரு கணிப்பு ஒன்றை பத்திரிகையொன்று நடாத்தியிருந்தது. நீங்கள் விரும்பும் தலைவர் யார்? என்பதே அது. பெரும்பாலான மக்கள் யக் லேற்றனையே விரும்பினார்கள். இன்று மக்கள் திரளாக செல்வதில் இருந்து இதனை காணலாம்.
கனடா போன்ற பணக்கார நாட்டில் ஒரு இடது சாரித் தலைவருக்கு கிடைத்த மிகப் பெரிய மரியாதை இது வாகும். வட அமெரிக்காவில் இதுவே முதல் தடவையாகும்.
மொன்றியல் பெரும்பாகத்தில் அமைந்துள்ள கட்சன் என்ற இடத்தில் 1950 யலை 18ம் நாள் பிறந்தார். இவரது தாயார் Doris Elizabeth Steeves . தந்தை றெபொட் லேற்றன் கொன்சவேற்றிவ் கட்சி பாராளுமன்ற உறுப்பினர். இவர் Brian Mulroney ன் அமைச்சரவையில் சுரங்க அமைச்சராக 1984-1986 வரை கடமையர்ற்றியுள்ளார். றொபெட்டின் தந்தையார் Gilbert Layton கியுபெக் மாநிலவையில் அமைச்சராக இருந்துள்ளார். Gilbert பெற்றோர்கள் பங்குதாரர்களாக இருந்த நிறுவனம் Layton Audio என்ற பெயரில் இன்றும் இயங்கிக் கொண்டிருக்கின்றது. Gilbert இரண்டாம் உலகப் போரில் கியுபெக்கின் மிகக் குறைந்த பங்களிப்பை எதிர்த்து தனது பதவியை இராஜினமாச் செய்தார்.
யக் லேற்றன் தனது அரசியல் விஞ்ஞான பாடநெறிக்கான பட்டப்படிப்பை மொன்றியலில் உள்ள McGill பல்கலைக் கழகத்தில் படித்தார். அதே அரசியல் விஞ்ஞானத்தில் கலாநிதிப் பட்டத்தை ரொரன்ரோவில் உள்ள யோர்க் பல்கலைக்கழகத்தில் பெற்றார். பின்னர் ரொரன்ரோவில் உள்ள Ryerson பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக கடமையாற்றினார். 1969ம் ஆண்டு தன்னுடன் உயர் கல்வி கற்ற Sally Holfrd ஐ மணந்தார். இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உண்டு. Mike, Sarah ஆகியவர்களே இவர்களது பிள்ளைகள். மைக் தற்சமயம் ரொரன்ரோ மாநகரக கவுன்சிலராகவுள்ளார். Sally உடனான யக்கின் திருமணம் 14 வருடங்களின் பின்னர் முடிவுக்கு வந்தது. யக்கும் ஒலிவியாவும் முதலில் ஒரு ஏலத்தில் 1985ம் ஆண்டு சந்தித்தனர். ஒலிவியாவின் தாய் யக்கை முதலில் ஏற்றுக் கொள்ளவில்லை. இவர்கள் இருவரும் யலை 9, 1988ல் திருமணம் செய்தனர். அப்பொழுது ஒலிவியா ரொரண்ரோ நகர கல்விச் சபை Trustee ஆக இருந்தார்.
யக் லேற்றன் கவுன்சிலராக இருந்த காலகட்டத்தில் பல போராட்டங்களில் ஈடுபட்டுள்ளார். Eaton Centre வேலை நிறுத்தத்தில் தொழிலாளர்களுக்காக போராடினார். தற்சமயம் Rogers Centre என அழைக்கப்படும் SkyDome கட்டப்படுவதை எதிர்த்தார்.
அதே போல் ரொரண்ரோவில் ஒலிம்பிக் போட்டி நடாத்தப்படுவதையும் எதிர்த்தார். யக் 1991ல் ரொரண்ரோ நகர மேயர் தேர்தலில் போட்டியிட்டார். இவரை எதிர்த்து June Rowlands போட்டியிட்டார். இவரது தேர்தல் தோல்விக்கு பிரதான காரணமாக இரு காரணங்கள் கூறப்பட்டன. முதலாவது அப்போதைய ஒன்ராரியோவின் தேசிய ஜனநாயக அரசிற்கு எதிராக கிளம்பிய விமர்சனங்களும் ஆதரவின்மையும், இரண்டாவது ரொரண்ரோவின் ஒலிம்பிக் Bid தோல்விக்கான காரணங்களில் யக்கின் பெயரும் பிரதானமாக இருந்தது. கிறீஸ் நாட்டின் வங்குரோத்து நிலைமைக்கு முன்வைக்கப்பட்ட காரணங்களுள், ஒலிம்பிக் போட்டி நடாத்தியமையும் காரணமாக முன்வைக்கப்பட்டுள்ளமை இங்கு நினைவுகூறவேண்டியுள்ளது.
1993ல் Rosedale தொகுதியில் போட்டியிட்டு தோல்விகண்டார். பின்னர் 1997 தேர்தலிலும் தோல்விகண்டார். 2003ல் தேசிய ஜனநாயகக் கட்சியின் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு முதல் சுற்று வாக்களிப்பிலேயே 53.3 வீத வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இத் தேர்தலில் தேசிய அளவில் பெரும் மதிப்புள்ளவரும், முன்னால் தேசிய ஜனநாயகக் கட்சி தலைவருமான Ed Broadbent தனது ஆதரவை இவருக்கு வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
பாராளுமன்ற உறுப்பினராகமால் தேசியளவில் ஒரு கட்சியை வழிநடாத்துவது மிகக் கடினமான காரியம். ஆனால் யக் தனது எதிர்ப்புத் தன்மையை வேவ்வேறு வடிவங்களில் வழங்கி பலரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்தார்.
2004ல் நடைபெற்ற தேர்தலில் தன்னை முன்னர் தோற்கடித்த வேட்பாளரையே தோற்கடித்து பாராளுமன்ற உறுப்பினரானார். இத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கட்சி வெறும் 19 இடங்களிலேயே வெற்றி பெற்றது. 2008ல் சற்று அதிகமாக 37 இடங்களில் வெற்றி பெற்றது. 2011 மே மாதம் 2ம் நாள் தேர்தலில் 103 இடங்களை கைப்பற்றி பிரதான எதிர்க்கட்சியாகியது. இத் தேர்தலில்; முதன் முதலாக இரண்டு கட்சிகளின் தலைவர்கள் கலாநிதிப் பட்டப்படிப்பை முடித்தவர்கள்.
லிபரல் கட்சியின் தலைவரும் (Michael Ignatieff), தேசிய ஜனநாயகக்கட்சியின் தலைவருமான யக் லேற்றனுமே அவர்களாவர்கள்.
லேற்றன் தனது காலத்தில் பல சாதனைகளை புரிந்துள்ளார். பெண்வன்முறைகளுக்கு எதிராக வெள்ளை துண்டு போராட்டத்தை ஆரம்பித்துவைத்தார். இன்று இது பல நாடுகளில் பின்பற்றப்படுகின்றது. 1989ல் ரொரண்ரோ மாநகரம் ஒரு பாலியலாளர் ஊர்வலத்தை நடாத்துவதற்கு பிரதான காரணியாக செயல்பட்டார். ரொரன்ரோ சுகாதார சபையின் தலைவராக இருந்த பொழுது முதன் முதலாக எயிட்ஸ்க்கான நிதி உதவி திட்டத்தை ஆரம்பித்து வைத்தார். ரொரண்ரோ மாநகரத்தில் துவிச்சக்கரவண்டி(சைக்கிள்) பாதைகள் போடப்படுவதற்காக போராடினார். இன்று அது சாத்தியப்பட்டுள்ளது. சுற்றுச் சூழல் பாதுகாக்கப்படவேண்டும் என போராடினார். ரொரண்ரோவின் முதல் காற்றாலை அமைக்க காரணமாயிருந்தார். வீடுகளற்றோருக்காக போராடினார். அவர்களின் மறுவாழ்வுத் திட்டத்துக்காக மூன்று அரசுகளுடனும்(மாநகர, மாநில, தேசிய) போராடினார். இவர்களைப் பற்றியThe Making and unmaking of a crisis என்ற நூலை எழுதினார்.2005ல் போல் மாற்றினின் லிபரல் அரசுக்கு ஆதரவைக் கொடுத்த பொழுது, அதற்கு பரிகாரமாக பல சமூக நல் வாழ்வுத்திட்டங்களை அரசைக் கொண்டு செய்வித்தார். போக்குவரத்து, affordable housing வேலை பெறுவதற்கான பயிற்சிகள், வெளிநாட்டு உதவிகள் போன்றவற்றை அரசைக் கொண்டு செய்வித்தார். மூன்றாம் உலக நாடுகளுக்கு உதவி செய்ய கனடாவை தூண்டினார். ஒடுக்கப்பட்ட இனங்களுக்காக போராடினார். பல தடவைகள் எமது பிரச்சினையை கனடிய பாராளுமன்றத்தில் வெளிப்படுத்தினார். ஈராக் போரில் பங்குபற்றிய அமெரிக்க வீரர்கள் தொடர்ந்து போரில் பங்கு பற்ற விருப்பின்றி கனடாவில் தஞ்சம் கோரியபோது அவர்கள் ஏற்றுக் கொள்ளப்படவேண்டும் எனக் குரல் கொடுத்து ஓரளவிற்கு வெற்றியும் பெற்றார்.இவரின் சாதனைகளில் சில இவை கடந்த பல சகாப்தங்களாக கியுபெக் பிரிவினைவாத கட்சிகளின் ஆதிக்கத்தில் இருந்தது. இதனை முறியடித்தார். கடந்த தேர்தலில் பிரிவினைவாதக் கட்சிகள் மிக மிக குறைவான ஆசனங்களையே பெற்றன.
பெண்களுக்கும், இளைஞர்களுக்கும் அதிக முக்கியத்துவம் அளித்தார். வெற்றி பெற்ற 103 பாராளுமன்ற உறுப்பினர்களில் 75 வீதமானோர் பெண்களும், இளைஞர்களுமேயாகும்.
அடிப்படையிலே போர் குணாம்சம் கொண்ட இவர் தந்தையின் ஒழுக்க நெறிகளை பின்பற்றினார். ஆனால் தந்தை ஒரு வலது சாரி அரசியலை ஏற்றுக் கொண்டவர். இவர் அதற்கு மாறாக இடது சாரி அரசியலை ஏற்றுக் கொண்டு வாழ்ந்தார். 1970 களில் கியுபெக் பிரிவினைவாதத்துக்கு எதிராக அப்போதைய கனடிய பிரதமர் ரூடோ மார்சல் சட்டத்தை கொண்டு வந்து பலரை சிறையிலடைத்தார். இந்த அடக்கு முறையை எதிர்த்தார். ஒரு போதும் இவர் பிரிவினைவாதத்துக்கு ஆதரவாக இருக்கவில்லை. ரூடோவும் கியுபெக் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. கனடாவின் நீண்ட காலம் பிரதமாரக இருந்த பலர் கியுபெக்கைச் சேர்ந்தவர்கள்.(Louis Stephen St-Laurent, Pierre Elliott (E.) Trudeau, Martin Brian Mulroney, Joseph-Jacques-Jean Chrétien, Sir Wilfrid Laurier, Abbott, Sir John Joseph Caldwell) இந் நிலை வேறு சிறுபான்மை இனத்தைக் கொண்ட நாடுகளில் காணப்படமுடியாது. யக் லேற்றனின் தந்தை இச் சம்பவத்தின் பின்னர் தான் மல்றோனியின் அரசில் அமைச்சராக செயல்பட்டார்.
அடிமட்டத்த தொண்டர்களுடன் தனது அரசியல் வாழ்வை ஆரம்பித்து படிப்படியாக முன்னேறினார். பல முதலாளிகளும் பெரிய நிறுவனங்களும் இவரை தங்களது எதிரியாகவே பார்த்தனர். அதுவே தனது சேவைக்கான வெற்றியாக கருதினார். மாநகர அரசியலின் போதும் சரி தேசிய அரசியலின் போதும் மக்களை சந்திப்பதை ஒரு போதும் தவிர்க்கவில்லை. இவரை எவரும் இலகுவாக அணுகி உரையாடமுடியும்.
இரு தடவைகள் இவர் பிரதமர்களை ஆட்சி செய்த பிரதமரல்லாத பிரதமராவார். போல் மாற்றினின் மற்றும் காப்பரின் சிறுபான்மை அரசுகளுக்கு ஆதரவு கொடுத்து அவர்களை தனது திட்டங்களுக்கு பணியச் செய்தார். இவ் விரு சிறுபான்மை அரசுகள் இவரின் கீழ் இயங்கின என்பதே உண்மை. காப்பர் சிறுபான்மை அரசு அமைத்த பொழுது வரவு செலவுத் திட்டத்துக்கு எதிராக நம்பீக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து அரசு கவிழும் நிலையில் இருந்தது. அப்போதைய லிபரல் கட்சித் தலைவர் டியோன் தனது பதவியை இராஜினாமாச் செய்து விட்டு புதிய தலைவருக்காக காத்திருந்தார்.
லிபரல் கட்சி இவருடன் ஒத்துழைத்திருந்தால் காப்பரின் ஆட்சி கவிழ்கப்பட்டிருக்கும். லேற்றனும் பிரதமாராயிருக்கலாம். ஆனால் எந்த எதிர்பார்ப்புமின்றி மக்களுக்கான சேவைக்காக போராடினார்.
இறக்கப் போகும் சமயத்திலும் மக்களுக்காக இவர் செய்தி அனுப்பியிருப்பது மிகவும் குறிப்பிடத்தக்கது. தனது இறப்பின் இறுதி நிமிடம் வரை மக்களைப்பற்றியே சிந்தித்த தலைவரை காண்பது அரிது.
இவர் Greg Farries அளித்த பேட்டியில் இருந்து முக்கியமான சில பகுதிகள் இவை. இப் பேட்டி ஒரு தலைவருக்கு இருக்க வேண்டிய முக்கிய நோக்கங்களை வெளிப்படுத்துகின்றன. இவையின்றி தலைவர்கள் அமைந்தால் என்ன நடக்கும் என்பதை நாமறிவோம்.
Greg Farries (MLW): A leader of a major political party in Canada is faced with numerous challenges, both within their party and from without. As leader of the NDP, what do you believe are some key qualities of good leadership?
Jack Leyton: நல்ல தலைவர் என்பவர் செயல்துறை பயன்நாட்டமுடைமையுடன் மூலக் கோட்பாட்டினை கொண்டவராகவும், ஒன்றுக்காக ஒன்றை விட்டுக் கொடுக்காதவராகவும் இருக்க வேண்டும். எனது நோக்கம் இவற்றுடன் ஒரு குழுவை கட்டியெழுப்பதல் ஆகும். After all, that’s the very idea of social democracy: citizens coming together, as a team with a vision, to get things done. That holds whether you’re leading a caucus or a country.
I continually re-learn three lessons about team-based leadership. First, it requires a great deal of active listening, constantly testing the team’s direction against a breadth of ideas and experiences. Second, you need to balance listening with a relentless commitment to action, continually re-earning trust that process drives results. Finally, leadership itself is a team project—the best part of my job is supporting exceptional leaders at work within our caucus, our party and in the wider community.
Greg Farries (MLW): Some might argue that western social democratic parties have gone through a significant evolution since the 1980s. As leader of the largest social democratic party in Canada, do you see a change in the policies and behaviour of left-wing parties? If so, what sorts of changes?
Jack Layton: Well, one clear change is the growing strength of those large corporate interests most threatened by social democracy. They’re consolidating control over cultural and political resources. Their think-tanks have excelled at framing regressive policies in compelling moral terms. Their political parties are feeling freer to slide further right.
All of this has some progressives wondering if they must shift to “the centre” to stay competitive. While I reject that idea, I won’t pass sweeping judgement on so-called Third Way governments. Governing is a difficult local balancing of principles and pragmatics. In practice, many of these Third Wayers have been much better for ordinary people than available alternatives. Others have clearly left their principles behind.
I can tell you that Canada’s NDP is proudly and firmly grounded in the principles of social democracy. This party knows what it stands for. You will see no movement towards a mushy middle ground. The NDP already reflects the mainstream on most of the issues people use to describe what Canada stands for. Our challenge is to continue articulating those policies in terms of their underlying values—fairness, safety, compassion, community—values that most Canadians share.
யக் லேற்றனின் மறைவு பல அரிசியல் தலைவர்களை உருவாக்காது. பல சமூகப் போராளிகளை உருவாக்கும்.. இன்றைய பொருளாதாரத்தைப் பற்றி யக் லேற்றனின் கூற்று இது ““They’re about dimes and dollars. A few dimes to you in tax cuts, many, many dollars to banks and oil companies.” இன்றைய உலக பொருளாதார நெருக்கடி மிகுந்த காலகட்டத்தில் இவரது இறப்பு ஈடு செய்ய முடியாது ஆனால் இவர் எடுத்து வைத்த அடிகள் நம்பிக்கையட்டுகின்றன.
“What we need to do is stand up for ourselves when we’re unfairly treated.”
Jack Layton
“அனைவருக்காகவும் கேட்கின்றேன்
யாரோ கேட்கிறார்கள்
நான் சொல்வதை
அவர்களுக்குத் தெரியாமல்
எனது பாடலின் பொருளானவர்களோ
பிறந்து கொண்டேயிருக்கின்றார்கள்
இவ்வுலகை நிரப்புகி;றார்கள்”
-பாப்லே நெருடா