இப்போது ஸ்பானியா, பிரான்ஸ், பெல்ஜியம், கிரேக்கம் போன்ற நாடுகள் போராட்டத்தை எதிர்கொள்ள நேரிடும் என அஞ்சுகின்றன. இஸ்லாமையும், குடியேற்றங்களையும் சுட்டிக்காட்டி அரசியல் நடத்தமுடியாத காலம் ஐரோப்பாவில் உருவாகலாம் என எதிர்வு கூறுகின்றனர்.
உறுதியான அரசியல் தலைமையற்ற இப் போராட்டங்கள் பெரும்பான்மை மக்களின் அதிகாரத்தை நிறுவிக்கொள்ளப் போதுமானதில்லை என்றாலும் உலகெங்கிலுமுள்ள ஒடுக்கப்பட்ட மக்களுக்கும், ஜனநாயக் முற்போக்கு சக்திகளுக்கும் புதிய உத்வேகத்தை வழங்கியிருக்கிறது. அர்ப்ணங்களுக்கு மத்தியில் போராடியவர்கள் தமக்கு இறுதியில் என்னவெல்லம் தேவை எனத் தெளிவின்றி இருந்தாலும் என்னவெல்லாம் தேவையற்றது என மிகத் தெளிவாக தெரிந்துவைத்திருந்தார்கள்.
இதுவரை அரபுலகச் சர்வாதிகாரிகளுக்கு நிபந்தனையின்றி ஆதரவு வழங்கிய மேற்கு நாடுகள் மக்களுக்கு அரசியல் கற்பித்திருக்கிறது. அரசியல் மேடைகளும், ஆயிரம் பக்க நூல்களுமின்றி ஏகாதிபத்தியங்கள் சுதாகரித்துக் கொள்ளும் முன்பே போர் முரசோடு முன்னெழுந்த மக்கள் கூட்டத்தை எப்படியெல்லாம் ஏமாற்றலாம் என அவர்கள் புதிய திட்டங்களை வகுத்துக்கொண்டிருக்கிறார்கள்.
இந்திய அரசை மட்டுமல்ல, சிவப்புச் சீனத்தையும், ஐரோப்பாவையும், ஐக்கிய நாடுகளையும், அமரிக்காவையும் அம்பலப்படுத்த வீட்டுக்கதவுகளைத் தட்டி விளக்கம் கூறவேண்டிய அவசியமில்லை.
மக்களுக்கு நண்பர்கள் யார், எதிரிகள் யார் என இனிமேல் கூட்டம் போட்டுக் கூக்குரலிடத் தேவையில்லை. அவர்களுக்கு இரண்டு முக்கிய விடயங்கள் தான் இன்றைய தேவை. முதலில் ஒன்றிணைந்து கொள்வதற்கான அடிப்படை . ஜனநாயக இடைவெளி ஒன்று உருவாகும் போது மட்டும்தான் அந்த இணைவு உருவாகும். இரண்டாவதாக உறுதியான அரசியல் தலைமை.
மக்கள் மீது இலங்கைப் பேரினவாத அரசு கட்டவிழ்த்துவிட்டுள்ள அழிப்பு யுத்ததிலிருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்ள அவர்கள் முனைவார்கள். இது வரலாற்று நியதி. குறைந்தபட்சம் அதற்கான முன்நகர்வுகளைக் கூட நிராகரிக்கும் இலங்கை – இந்திய நீட்சிகள், அழிக்கப்படும் போது சரணடைய வேண்டும் என்கிறார்கள்.
போராட்டங்களையும், “அரசியலையும்” ஒத்திவைத்துவிட்டு மறுசீரமைப்பும் அபிவிருத்தியும் செயற்படுத்தப்பட வேண்டும் என்கிறார்கள்.
13.10.11 இல் ஈ.என்டி.எலெப் என்ற கட்சியினால் இங்கிலாந்தில்
“இனப்படுகொலை நிகழந்து இரண்டு வருடங்களைக் கடந்து செல்லும் காலப்பகுதியில் மறுவாழ்வும் அபிவிருத்தியும் தான் பிரதானமானது. ஐந்து வருடங்களுக்கு போர்க்குற்றங்கள் குறித்துக் கூடப் பேச வேண்டாம்” என்று புலம் பெயர் தமிழர்களுக்கு அழைப்புவிடுக்கிறார்.
கொல்லப்படும் ஒடுக்கப்படும் தமிழ் மக்கள் எங்காவது எழுச்சி பெற்றுவிடலாம் என்ற பய உணர்வு இலங்கை இந்திய அரசுகளுக்கு மட்டுமல்ல அவர்களின் அடிமைகளுக்கும் காணப்படுகிறது என்பதை ஈ.என்.டி.எல்.எப் நடத்திய கூட்டத்தில் உரையாற்றிய பலரின் குரலாய் ஒலித்தது.
பிரதேசங்கள் சூறையாடப்படுவதிலிருந்தும், பட்டினி போடப்பட்டுக் கொல்லப்படுவதிலிருந்தும், அழிக்கப்படுவதிலிருந்தும் மக்கள் தம்மைத் தற்காத்துக்கொள்ள வேண்டும். இதற்கான ஜனநாயக இடைவெளியை உருவாக்க புலம் பெயர்ந்த தமிழர்கள் போராட வலுவுண்டு. அதிகாரத்திற்கு எதிராகப் போராடும் மக்களுடன் எம்மை இணைத்துக்கொள்வதற்கான அரசியல் குடையின் கீழ் எம்மை இணைத்துக்கொள்ளலாம். புலியெதிர்ப்பாளர்கள், ஆதவாளர்கள் என்ற குறுகிய எல்லைகளைக் கடந்து மக்கள் பற்றுள்ள அரசியல் குடையின் கீழ் எம்மை இணைத்துக்கொள்ளலாம்.
இதைவிடுத்து, இனப்படுகொலை நிகழ்த்த ராஜபக்ச அரசின் பின்புலத்தில் செயலாற்றிய இந்திய அரசிடம் சரணடையக் கோரிக்கைவிடுவது கோழைத்தனமும் பிழைப்புவதமுமே.
இந்திய அரசின் இனப்படுகொலைகளை எதிர்த்து தமிழ் நாட்டின் ஒவ்வோரு முலையிலிருந்தும் உருவாகும் சிந்தனை மாற்றத்தின் இயங்கியலை நிராகரித்து, அதற்கு எதிரான சரணடையும் கோழைத்தனமாக ஈ.என்.டி.எல்.எப் நடத்தும் டில்லி வரையான
இன்றைய அரசுகள் யாரையும் அழிப்பதற்குத் தயார் நிலையில் உள்ளன என்பது இயங்கியல் என்றும் அதனால் அவர்களிடம் சரணடைந்துவிடலாம் என்ற கருத்துப்பட ரவி சுந்தரலிங்கம் ஈ,என்.டி.எல்.எப் மேடையில் “போர்குணத்தோடு” கூறினார். இனிவரும் பதினைந்து ஆண்டுகள் போராட்டங்களுக்கான காலம் என்ற இயங்கியலை அமரிக்க உளவுத்துறை கூட ஒத்துக்கொண்டிருக்கின்றது.
இலங்கையில் தமிழ்ப் பேசும் மக்கள் மட்டுமல்ல அவர்களின் தற்காப்புப் போராட்டத்திற்கு ஆதரவாக சிங்கள மக்களும் ஏனைய தேசிய இனங்களும் போராடுவதற்கான புறச் சூழலே காணப்படுகிறது. இலங்கையில் ஜனநாயகச் சூழலை உருவாக்க இலங்கை அரசிற்கும் அதனை ஆதரிக்கும் இந்திய அரசிற்கும் அழுத்தம் வழங்கும் எதிர்ப்புப் போராடங்களை இலங்கைக்கு வெளியிலிருந்து உருவாக்குவதனூடாகவே மக்கள் தமது தற்காப்பு யுத்தத்தை ஆரம்பிப்பதற்கான இடைவெளியை உருவாக்க முடியும்.
80களின் ஆரம்பத்திலிருந்து இந்திய அரசு இலங்கையில் ஏற்படுத்திய அழிவுகளை சமூக அக்கறையுள்ள எந்த மனிதனும் மறந்துவிடவில்லை. சென்னையிலிருந்து டில்லிவரை சென்று இனப்படுகொலை நிழக்த்திய இந்திய அரசின் காலடியில் மண்டியிடுவது அழிவைத் தேடி நாம் யாத்திரை செய்வது போன்றதாகும். தவிர, வன்னியில் இலங்கை அரச பாசிசம் ஏற்படுத்திய அழிவுகளைத் தொடர்ந்து தமிழ் நாட்டில் உருவான இந்திய அரசிற்கு எதிரான போராட்டங்களைக்கூடக் கொச்சைப்படுத்தும் இவ்வாறான நிகழ்வுகள் நிறுத்தப்பட வேண்டும்.