Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கூட்டு ஒப்பந்தம் மூலம் விற்கப்படும் மலையக தொழிலாளர் உரிமைகள் : மலையக சிவில் சமூகம் கண்டனம்

tea_basketஇலங்கை சனநாயக சோசலிச குடியரசின் மீயுயர் சட்டமான அரசியலமைப்பு ஒன்று கூடுதல், கூட்டாக சேர்தல், தொழிற்சங்கமொன்றை அமைத்தல,; அதில் சேர்ந்து செயற்படுதல் மற்றும் தொழில் செய்யும் உரிமைகளை அடிப்படை உரிமைகளாக உத்தரவாதப்படுத்தியுள்ளது. இதற்கப்பால் தொழிலாளர் நலன், தொழிலுரிமை பேணும் சட்டங்களும் நடைமுறையில் இருக்கின்றன. இலங்கை மிகவும் அடிப்படையான சர்வதேச தொழிலாளர் அமையத்தின் சமவாயங்களை (ஐடுழு-ஊழசந-ஊழnஎநவெழைளெ) ஏற்று நடைமுறைப்படுத்தி வருகின்றது. மேலும் மலையக தோட்டத்தொழிலாளர் சம்பந்தப்பட்ட சில சட்டங்களும் காணப்படுகின்றன. என்றாலும் மலையக தொழிலாளர்களின் வாழ்க்கை முறைமை பெரும்பாலும் கூட்டு ஒப்பந்தத்தினால் தீர்மானிக்கப்படுகின்றமை கவலைக்குரியது.

ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் மிக மோசமான முறையில் சுரண்டப்பட்டது போலவே இன்றும் மலையக தொழிலாளர் வர்க்கம் தொழில் தருணர் ஃ முதலாளிமார் சம்மேளனத்தாலும், கம்பனிகளாலும் சுரண்டப்படுகின்றது. இதற்கு சாதகமாக கூட்டு ஒப்பந்தத்தினை ஏற்படுத்திக் கொள்வதுடன் இதற்கு துணையாக தொழில்சங்கங்களும் செயற்படுகின்றன.

இலங்கையில் தொழில் பிணக்குச் சட்டம் உருவாக்க முன் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்;: இலங்கை தோட்ட முதலாளிமார் சம்மேளனத்துடன் ஒப்பந்தங்களில் ஈடுபட்டது என்பதுடன் இவை ளுநஎநn Pழiவெ யுபசநநஅநவெ மற்றும் வுhசைவநநn Pழiவெ யுபசநநஅநவெ என வழங்கப்பட்டன. தொழில் பிணக்குச் சட்டம் உருவாக்கப்பட்ட பின்பும் இவை நடைமுறையில் வலுகொண்டு காணப்பட்டன துயயெவாய நுளவயவநள னுநஎநடழிஅநவெள டீழயசன (துநுனுடீ) யனெ ளுவயவந Pடயவெயவழைளெ ஊழசிழசயவழைn ழக ஊநலடழn (ளுPஊஊ) எனும் இரு அரச கூட்டுத்தாபனங்கள் பெரும்பாலான பெருந்தோட்டங்களை பொறுப்பேற்ற பின்பும் இக்கூட்டு ஒப்பந்தங்கள் செயற்பாட்டில் இருந்து வந்துள்ளன.

ஆங்கிலேயரால் பெருந்தோட்டங்கள் உருவாக்கப்பட்டு நிர்வாகிக்கப்பட்ட பொழுது மக்களின் உட்கட்டமைப்பு மற்றும் அடிப்படைத் தேவைகள் கல்வி, சுகாதாரம், போன்ற சேவைகள் அனைத்துமே ஆங்கிலேய கம்பனிகளால் வழங்கப்பட்டதுடன் சில அடிப்படையானவற்றை அரசு ஒழுங்கு படுத்தி வந்துள்ளது இத்தோட்டத் தொழிலாளர்கள் உரோம (டச்சு) சட்டத்தின் கீழான சொத்துவத்தின்படியே பார்க்கப்பட்டனர். இதன்படி ‘ஒரு நிலத்தில் வாழும் அடிமைகள் நிலத்தோடு சேர்ந்தவர்கள் நிலம் விற்கப்படும் போது உழைக்கும் மக்களும்ஃஅடிமைகளும் விற்கப்படுவர்’ என்பதே உரோம சட்ட கோட்பாடு. இது பின்பு ஆங்கில சட்டக்கோட்பாடோடு சேர்ந்து அடிமைத்தனமாகவே இத் தொழிலாளர்கள் (தோட்டங்களில்) நடாத்தப்பட்டு வந்துள்ளதுடன் பெருந்தோட்டங்கள் கைமாறும் போது அதிலுள்ள வீடுகள், கட்டடங்கள் மக்கள் என அனைவரும் சேர்ந்தே விற்கப்பட்டு வந்துள்ளனர்.

1948ம் ஆண்டின் சுதந்திரத்துடன் ஆங்கிலேய ஆட்சி இல்லாதொழிந்தது அனைவரும் சுதந்திரமடைந்ததுடன் அடிமைத்தனம் இல்லாதொழிந்தது. பின்பு 1956ம் ஆண்டு தொழில் பினக்குச் சட்டம் உருவாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்ட பின்பு ஏற்கனவே இருந்த சட்டத்தின் ஏற்புடைமை இல்லாமலாக்கப்பட்டு தொழில் பிணக்கு சட்டத்தின் படி கூட்டு ஒப்பந்தங்கள் இருக்க வேண்டும் எனவும் தொழிலாளர் உரிமை, சேம நலன்கள், பாதுகாப்பு என்பன பற்றி கண்காணிக்கும் பொறுப்பினை அரசு ஏற்றுக் கொண்டது பிற்பாடு அரசு தோட்டங்களை பொறுப்பேற்ற பின்பு சில சேவைகளை வழங்கி வந்ததுடன் தோட்டங்கள் தனியார் கம்பனிகளுக்கு 99 வருட நீண்ட கால குத்தகைக்கு வழங்கப்பட்டப் பின்பு தோட்ட மக்களின் தொழில் உரிமை, சேம நலன் என்பவற்றிலும் வாழ்விலும் மிகப்பாரிய தாக்கம், பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் கம்பனிகளால் பராமரிக்கப்பட்டு வந்த தோட்டப்புற வைத்தியசாலைகள், கரப்பிணி மகப்பேற்று நிலையங்கள், சிறுவர் பராமரிப்பு நிலையங்கள், மற்றும் குடிநீர் வசதி, வீதி செப்பனிடல்ஃபாராமரிப்பு போன்றன தற்போது எவ்விதமான கவனிப்பும் இன்றி கம்பனிகளால் உதாசினப்படுத்தப்பட்டுள்ளது. அரசும் இவற்றில் அக்கறை கொள்வதில்லை இவை பற்றி தொழிற்சங்கங்கள் கவனம் செலுத்துவதில்லை.

கூட்டு ஒப்பந்தங்களில் தொழில் முறைமை, தொழில் நேரம,; ஒய்வுநேரம் பாதுகாப்பு, ஏனைய வசதிகள் பற்றியும் வாழ்க்கைச் செலவுக்கேற்ற சம்பளம், விலைவாசி உயர்வு, இலாபத்திற்கு ஏற்ப சம்பள அதிபரிப்பு முறைமைகள் போன்ற ஏனைய துறையினர் செய்து கொள்ளும் கூட்டு ஒப்பந்தத்தில் உள்ளது போன்ற எந்த ஒரு விடயமும் உள்ளடங்கப்படாமல் தொழிற்சங்கங்கள் தங்கள் சுயநல போக்கில் தொழிலாளர் வர்க்கத்தையும் தொழில் உரிமைகளையும் கூட்டு ஒப்பந்தத்தின் மூலம் விற்கின்றனர். இது மக்கள் நலனுக்கு குந்தகமானது என்பதாலும் அவர்களில் உரிமைகளை அப்பட்டமாக மீறுவதாலும் வன்மையாக மலையக சிவில் சமூமக் இதை வன்மையாக கண்டிக்கின்றது.

தொழிற்சங்கத் தலைவர்கள் அரசாங்க அமைச்சர்களாகவும், பிரதி அமைச்சர்களாகவும் அரசாங்க ஆதரவுக் கட்சியினராகவும் இருந்துக்கொண்டு தொழிலாளர்களுக்கு சட்டங்கள் மூலமும், அரசியலமைப்பு மூலமும், சர்வதேச சமவாயங்கள் மூலமும் வழங்கப்பட்ட உரிமைகளை மீறுவது மிக மோசமான காட்டிக்கொடுப்பு, சுரண்டல் என்பதுடன் இவை முதலாளிமார் சம்மேளனத்தினால் வழங்கப்படும் சில சலுகைகளுக்காக தொழிலாளர்களையும் அவர்களின் உரிமைகளையும் விற்பனை செய்வதாகும் என்பதை நாங்கள் கூறிக்கொள்கின்றோம்.

இந்த முறை ஏற்றுக் கொள்ள முடியாதது என்பதுடன் கூட்டு ஒப்பந்தங்கள் வினைத்திரனான பேரம் பேசுதலின் அடிப்படையில் இடம்பெற வேண்டும் என்பதுடன் பேரம் பேசுதல்;:

 தொழிலாளர் பிரச்சினைகள்

 அவர்களின் வாழ்க்கைச் செலவு

 உற்பத்தியும் வருமானமும்,

 இலாபம்

 அரசின் கொள்கைக்கு ஃவரவு செலவு திட்டத்திற்கு ஏற்ப சம்பளம் அதிகரிக்கும் முறைமை

 Increment, Bonus 

 பங்குதாதர்களான தொழிலாளர்களுக்கான இலாபப் பங்கீடு

 ஏனைய சலுகைகள்

போன்றன பற்றி ஆய்வொன்றினை நடாத்தி, மக்களிடம் கேட்டறிந்து ஓர் படிப்பினையைக் கொண்டு தொழில் சங்க பிரதிநிதிகள் ஃதலைவர்கள் பேரம்பேசுதலை மேற்கொள்ள வேண்டும். சலுகைகளுக்காக தொழிலாளர்களை கூட்டு ஒப்பந்தங்களால் விற்பனை செய்வதை ஒருக்காலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இதற்கு எதிராக தொழிலாளர்கள் போராட்டங்களை முன்னெடுக்கவும,; சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கவும் முன்வர வேண்டும் எனவும் இலங்கையில் நிலவி வரும் ஏனைய கூட்டு ஒப்பந்தங்களுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைந்த நன்மைகள் கொண்ட கூட்டு ஒப்பந்தமாக பெருந்தோட்ட மக்களின் கூட்டு ஒப்பந்தம் காணப்படுகின்றது எனும் அடிப்படையில் தொழில் ஆணையாளர் அதனை இரத்துச் செய்ய வேண்டும் எனவும் வழியுறுத்துகின்றது.

2013.04.20
இராகலை

செயலாளர்
மலையக சிவில் சமூகம்
Secretary
S. Mohanarajan LL.B (Hons) (Colombo),
DIE (Col), DAPS (U.K)
Attorney-at-Law, Notary Public, Commissioner for Oaths &
Registered Company Secretary.
072 400 7080

Exit mobile version