நாட்டார் இலக்கியம் என்பது உழைக்கும் மக்களின் இலக்கியமாகவும் ஒடுக்கப்பட்டவர்களின் இலக்கியங்களாகவும் காணப்பட்டது வரலாற்று உண்மைகளாகும் இதற்கமைய புதிய மலையகம் அமைப்பினரும் தேசிய கலை இலக்கியப் பேரவையும் இணைந்து ஒடுக்கப்படும் மலையக மக்களின் இலக்கிய வெளிப்பாடுகளாக கொண்டுவந்துள்ள காலம் மாறுது இறுவெட்டில் முதலாவது பாடலான ‘இந்த மலை நாட்டினிலே உழகை;கும் மக்கள் நாங்க’ என்னும் பாடலின் வரிகள் மலையக மக்கள் ஐக்கியப்பட வேண்டிய காலம் வந்துள்ளது என்பதனையும் வெறும் சலுகைகள் அல்ல எமக்கும் இந்த நாட்டிலே உரிமையுண்டு என்பதனால்!
இந்த மலை நாட்டினிலே உழகைகும் மக்கள் நாங்க
உயர்வே இல்லாம வீழ்ந்து கிடக்கிறோங்க
பாட்டன் பூட்டன் காலம் தொட்டே இதே நிலைமை தாங்க
பாட்டாளி வர்க்கம் இணைந்து போராடுவோங்க தேயிலையும் ரப்பரும் எங்க ஒழைப்பு தாங்க
இந்த நாட்டின் பொருளாதாரத்தின்முதுகெலும்பு நாங்க
நம்ம வீட்டு அடுப்பில் எல்லாம் பூன தூங்குதுங்க இந்த பூமியையே புரட்டிப் போட எழுந்து வாங்க நீங்க
இங்கு உழைப்பவர்க்கே நிலங்கள் சொந்தம் எழுதி கேட்போம் வாங்க
என்று பாடப்பட்டுள்ளது இந்தவரிகளை கேட்கும் போது மலையக மக்கள் ஐக்கியப்பட வேண்டிய காலம் வந்துள்ளது என்பதனை மட்டும் அல்ல மலையக மக்களின் உரிமைகளை இது வரைக்கும் எவரும் பெற்று கொடுக்க முயற்சிக்கவே இல்லை முயற்சிக்கவும் மாட்டார்கள் எனவே மக்கள் விடியலை நோக்கி பயணிகக் ஒன்று சேர வேண்டும் என்பதனை அடையாளப்படுத்தி நிற்கின்றது
இரண்டாவது பாடலை கேட்கும் அணைவருக்கும் கண்களில் நீர் ஊற்றெடுக்க செய்யும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை
அம்மா வெளிநாட்டு வேல தேடி போனீங்களே எங்க மனசெல்லாம் நெனவாக நெறஞ்சனீங்களே.
என்னும் பாடல் வரிகள் மலையக கலாச்சாரப் பண்பாடுகள் மோசமாக சிதைவடைந்து போவதற்கு பிரதானமான காரணங்களாக பல இருந்தபோதும் மத்திய கிழக்கு நாடுகளில் பணிப் பெண்களாக வேலைக்கு போன பெண்களின் சிதைவடைந்து போன குடும்பங்கள் படும் துன்பங்களை எடுத்துக்காட்டுவதாக காணப்படுகின்றது பாடசாலை மாணவி ஒருவர் தனது ஆசிரியரை சந்தித்து உங்களின் இந்த பாடலை போட்டு காட்டியே எனது தாயின் வெளிநாட்டு பயணத்தினைத் தடுத்து நிறுத்தியுள்ளேன் என்று கூறியதாக ஆசிரியர் ஒருவர் தெரிவித்தார் இவர்களின் இந்த கடுமையான உழைப்பற்கு கிடைத்த முதலாவது விருது இதுவே என்று மகிழ்வதனைக் காணும் போது மக்கள் இலக்கியங்கள் மக்களை சென்றடைந்துள்ளமையை காணமுடிகின்றது
மூன்றாவது பாடல் காலத்தின் தேவை கருதி படைக்கப்பட்ட ஒரு பாடலாகும் சமய சாதி நிற கட்சி இன பேதங்களை சாதாரண மக்களின் மனங்களில் பதியச் செய்து பெரும் யுத்தங்களையும் சண்டைகளையும் ஏற்படுத்துபவர்கள் ஏற்படுத்தியவர்கள் ஒன்றாக சேர்நது ஒரே குடையின் கீழ் சல்லாபித்துக் கொண்டிருக்கின்றனர.; ஆனால் பாதிக்கப் பட்டவர்கள் தொழிலாளர்களும் விவசாயிகளுமே. பணக்கரர்கள் சொகுசாய் வாழ்வதற்காய் மூட்டி விடும் பிரிவினைவாதம் எமக்கு தேவையில்லை அவற்றை மறந்து ஏழைகள் நாங்கள் ஐக்கியப்படுவோம் என்னும் செய்தியினைத் தாங்கி வருகின்றது இந்தப் பாடல்.
தமிழன் என்னடா சிங்களவன் என்னடா
துணிந்து சொல்லுவோம் நாங்க தொழிலாளியடா
முருகன் கூட புத்தரோட வாழுராரடா கதிர்காமம் போய் பாரடா
பெரும்பான்மை சிறுபான்மைபெருத்த நோயடா தேசத்த எறிச்சத் தீயடா.
என்னும் பாடலை கேட்கும் பொழுது நாங்களும் எவ்வளவு மூடர்களாக இனவாதிகளாக வாழ்ந்துள்ளோம் என்பது வெட்கி தலைக் குனிய வைக்கின்றது
மலை நாடு முன்னேறுதுங்குரான் அட மினு மினு மினுக்கா ஜிலு ஜிலு ஜிலுக்கா ஜர்மன் அமேரிக்கா ஜப்பானுக் கணக்கா
டயகம அண்ணணுக்கு நாய் கடிச்சாலும் நாவல பிட்டிப் போயித்தான் நல்ல ஊசி போடனும்.
இந்த வரிகள் பல உண்மைகளை பேசியிருப்பது பாடலைக் கேட்கும் அனைவருக்கும் புலப்படும்.
இது நான்காவது பாடலாகும்.
ஐந்தாவது பாடல் தேயிலைத் தோட்ட தளிர்களே என்னும் பாடலும்-ஆறாவது பாடல் வருகுதடா தேர்தல் வருகுதடா வரும் திருடர்களைத் தெரிந்துக் கொள்ளடா என்னும் பாடலும் ஏழாவதுப்பாடல் எங்க நாடு போகுது மேல என்னும் பாடலும் காணப்படுகின்றது.
கடைசிப் பாடலாக மக்கள் சக்தி சேருகின்றது மாற்று வழித் தேடுகின்றது காலம் காலமாக சிந்திய கண்ணீறின்று ஓயுது என்னும் பாடல் நம்பிக்கையின் தேசிய கீதமாக காணப் படுகின்றது
மக்கள் இலக்கியங்கள் நச்சு இலக்கியங்களையும் நசிவுற்ற இலக்கியங்களையும் வேறோடு பிடுங்கி எறிந்து விடும் என்பதற்கு சான்றாக இந்த எட்டு பாடல்களும் காணப் படுகின்றது. மக்களுக்கு புரியாத இலக்கியங்களைப் படைத்து புலமை பேசும் பின்நவீன படைப்புக்களும் தனக்கு பெருமை சேர்த்துக் கொள்வதற்காக தான் எழுதியதை தானே வாசிக்காத பல படைப்பாளிகளின் படைப்புகளும் தனக்கு பிடிக்காதவர்களை வசைப்பாடுவதற்காய் படைக்கப் படும் மட்டரகமான படைப்புக்களும் தூக்கிப் பிடிக்கப் பட்டு புகழப் பட்டு காணப் படும் இந்தக் காலக் கட்டத்திலே முழுக்க முழுக்க பாமர மக்கள் அனுபவிப்பதற்காய் படைக்கப் பட்டுள்ள இந்த இலக்கியப் படைப்பு போற்றத் தக்கது.
இந்த படைப்பிற்காக பலரும் தங்களின் மேலான பங்களிப்பினை செய்துள்ள விதத்தைக் என்று கேள்விப் பட்ட பொழுது ஆச்சரியமாக இருந்தது. எந்த மக்களுக்காய் இவை படைக்கப் பட்டனவோ அந்த மக்களிடம் சென்று இந்த பாடல்களைப் பாடிக் காட்டி இதற்காய் நிதி சேர்த்துள்ளார்கள். கூட்டு உழைப்பாய் வெளி வந்துள்ள காலம் மாறுது பாடல்கள் மலையகத்தின் பட்டித் தொட்டி எங்கும் தற்பொழுது கேட்கத் துவங்கி விட்டது எனவே காலம் மாறுவது உறுதி.
மலையகத்தில் இருந்து வெளிவரும் இலக்கியப் படைப்புகள் மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் சிந்தனைக்கு சென்றிருந்தால் இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் விலாசம் அற்றவர்களாக வாழ வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டு இருக்காது என்பதன் காரணத்தினால் தான் இன்று காலம் மாறுது இறு வெட்டு அறிமுக நிகழ்வுகள் தோட்டங்களிளும் தொழிலாளர் குடியிருப்புக்களிளும் வெளியிடப் பட்டு வருகின்றது என்று புதிய மலையகம் அமைப்பினர் கூறுகின்றனர் காவத்தையில் முதலாவது இவ் இறு வெட்டு வெளியீட்டு விழாவின் போது 2011.11.13 ஆம் திகதி இதனை வெளியிட்டு வைத்த இலங்கையின் பிரபல இசையமைப்பளரான கருப்பைய்யப் பிள்ளைப் பிரபாகரன் தனது உரையின் போது தான் பல வெளியீட்டு நிகழ்வுகளுக்கு சென்றிருப்பதாகவும் அவை மிகப் பிரமாண்டமாக பெரும் பொருள் செலவில் ஆடம்பரமான வெளியீடுகளாகக் காணப்பட்ட போதும் அவற்றில்; மக்கள் வாழ்வியலைப் பேசும் எவையும் இல்லை என்றும் இன்று இங்கு மலையகத்தை நேசிப்பவர்கள் மிக சாதாரண நிகழ்வில் மிகப் பிரமண்டமான உள்ளடக்கத்தைக் கொண்ட வெளியீட்டைக் கொண்டு வந்துள்ளனர் எனக் கூறியது இங்கு சிந்திக்க வேண்டிய விடயமாகும்.
தேசியக் கலை இலக்கியப் பேரவையின் சப்ரகமுவக் கிளையும் புதிய மலையகம் அமைப்பும் இணைந்து தந்துள்ள பாடல் இருவெட்டு எல்லோராலும் கேட்கப் பட வேண்டும்;. காலம் மாறுது என்ற தலைப்பிறகேட்ப மலையகம் புதிய மாற்றத்திற்கான பாதையில் பயணிக் வேண்டிய சிந்தனையை ஏற்படுத்தம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை பெரும் கூட்டு உழைப்பில் வெளிவந்துள்ள இந்தப் படைப்பு வெற்றி பெற மக்களை நேசிப்பவர்களின் சார்பில் வாழ்த்துக்கள்.