Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கல்லோயாவிலிருந்து வெலிவேரிய ஈறாக சுன்னாகம் வரை

யாழ்ப்பாணக் நன்னீர்க் கிணற்றில் எண்ணை
யாழ்ப்பாணக் நன்னீர்க் கிணற்றில் எண்ணை

இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் அந்த நாட்டின் மிகப்பெரும் பணக்காரரான தம்மிக்க பெரேரா யாருக்கு ஆதரவளிப்பார் என்று கேள்வியெழும்பினால் யார் வெற்றி பெறுகிறார்களோ அவரை ஆதரிப்பார் என்பதே பதில். வெலிவெரிய என்ற கொழும்பை அண்மித்த கிராமத்தில் தம்மிக்க பெரேராவின் ஹேலிஸ் நிறுவனம் அப்பிரதேச மக்களின் குடிநீரை மாசுபடுத்திவந்தது. அதற்கு எதிராக மக்கள் நட்த்திய ஆர்ப்பாட்டத்தில் இலங்கை பாசிச இராணுவம் தாறுமாறாகச் சுட்டத்தில் அப்பாவிப் பொதுமக்கள் பலியாகினர்.

ஆறாயிரம் அப்பாவிப் பொதுமக்கள் கலந்துகொண்ட ஆர்ப்பாட்டத்தில் எந்த முன்னறிவுப்புமின்றிப் புகுந்த போலிஸ் படை கண்ணீர்ப் புகை, தடியடிப் பிரயோகம் செய்து வன்முறையத் தூண்டிவிட்டது. அமைதியாக பெரணி நடத்திய மக்கள் மீது போலிசாரின் வன்முறைக்குப் பின்னர் இராணுவம் கண்மூடித்தனமாகச் துப்பாக்கிச் சூடு நடத்தியது.
சம்பவ இடத்திலேயே ஒரு மாணவன் கொல்லபட்ட காட்சி பதிவானது. அங்கிருந்த ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு அவர்களின் புகைப்படக் கருவிகள் சேதமாக்கப்பட்டன. அவர்கள் அங்கிருந்து அகற்றப்பட்டு, சாட்சியின்றிய மக்கள் மீதான பயங்கரவாதம் கட்டவிழ்த்துவிடப்பட்டது.

கிராமத்தவர்கள் அனைவருமே சிங்களவர்கள். அதிலும் பெரும்பாலனவர்கள் பௌத்தர்கள். வன்னியில் பயங்கரவாதத்தை அழித்து அப்பாவி மக்களை விடுவித்தோம் என்ற இலங்கை அரசின் பிரச்சாரத்தை நம்பிக்கொண்டிருந்தவர்கள்! நாட்டைப் பௌத்ததின் பெயரால் பயங்கரவாதத்திலிருந்து மீட்டு சுதந்திர பூமியாக்கிவிட்டோம் என்ற பேரினவாத பொய்களை அப்பாவித்தனமாக ஏற்றுக்கொண்டிருந்தவர்கள்!! வன்னியில் இலங்கை இராணுவம் நுளைந்து சிங்கள பௌத்த கொடியை நாட்டிய போது தெருக்களில் பால் சோறு வழங்கி மகிழந்தவர்களில் கம்பஹா மாவட்ட மக்களும் பங்கெடுத்தார்கள்.

ட்டவிரோதமான சுன்னாகம் மின்னுற்பத்தி

சம்பவத்தின் பின்னர் இலங்கைத் தொலைக்காட்சி ஒன்றில் தனது உணர்வுகளைக் கூறிய வெலிவெரிய சிங்கள விவசாயி ஒருவர் “எங்களது நாட்டில் போரை ஒழித்து அவர்கள் ஏதோ பெரிதாகச் சாத்த்துவிட்டார்கள் என்று எண்ணிக்கொண்டிருந்தோம். இப்போது தான் தெரிகிறது அவர்கள் அப்பாவிப் பொதுமக்களைத் தான் கொன்றார்கள் என்று. ஆர்ப்பாட்டம் நடத்திய எங்களையே இப்படிக் கொன்றார்கள் என்றால் வடக்கின் நிலைமையை ஒருவர் இலகுவாகக் கற்பனை செய்து பார்க்கலாம்” (If they treated us like this for engaging in a demonstration one can imagine the situation in the North. We thought they did something big by finishing the war in our country. Now it looks as if they just killed innocent people) என்று கூறினார்.

இனவாத அரசியல் நடத்தும் தமிழ் தலைமைகள் வழமை போல மௌனம் சாதித்தன. இலங்கை முழுவதும் இப் படுகொலைகளுக்கு எதிரான எழுச்சிகள் தோன்றும் என ஊடகங்கள் கூறின. இதற்கு எதிராகக் குரல்கொடுத்த சுமந்திரன் மட்டும் ஐ.நாவைப் பிடித்துவந்து பிரச்சனைக்கு நியாயம் கேட்பதாகக் கூறியதும், ஐக்கிய தேசியக் கட்சி உட்பட பல நிறுவனங்கள் சுமந்திரனுக்குப் பக்கப்பாட்டுப் பாடின. இறுதியில் நவி பிள்ளையின் கண்டனத்தோடு பிரச்சனை முடிவிற்கு வந்தது, இலங்கையில் எழுச்சி ஏற்படவுமில்லை, மக்களுக்கு நியாயம் கிடைக்கவுமில்லை.

அதனைவிட தமிழ் சிங்கள் அ உழைக்கும் மக்களிடையே தோன்ற ஆரம்பித்த ‘நல்லிணக்கத்தை’ சுமந்திரன் உருவியெடுத்து தனது அதிகார வர்க்கங்களிடையேயான நல்லிணக்கமாக மாற்றிச் சீரழித்தார்.

வெலிவேரியக் கொலைகள் நடைபெற்று ஒரு வருடங்களும் நான்கு மாதங்களும் கடந்து போய்விட்டன. கொலைகளின் பின்னணியில் செயற்பட்ட தம்மிக்க பெரேரா போக்குவரத்து அமைச்சின் செயலளாராகவும் இலங்கையின் பல்வேறு நிறுவனங்களின் தலைவராகவும் வாழ்க்கையைத் தொடர்கிறார். மக்கள் மீது துப்பாக்கிப் பிரையோகம் நடத்திய இராணுவமோ, அதனை ஏவிய பாசிஸ்ட் ராஜபக்சவோ, ஹேலிஸ் நிறுவனமோ தண்டிக்கப்படவில்லை.
ராஜபக்சவிற்கு எதிராக புதிய ஆட்சியை அமைக்கிறோம் எனக் கூறும் எதிர்கட்சி வாக்குப் பொறுக்கிகள் தமிழர் பிரச்சனையைப் பற்றிப் பேசவில்லை என்பது ஒருபுறமிருக்க வெலிவேரியப் படுகொலைகள் குறித்து மூச்சுக்கூட விடவில்லை.

மக்கள் குடியிருப்புக்களை நோக்கி சுன்னாகம் கழிவு எண்ணை

வெலிவேரிய மக்களை அணிதிரட்டவும் எமது வலிகளைப் பகிர்ந்துகொள்ளவும் கிடைத்த வாய்ப்பை ஐ.நாவிற்கு விற்பனை செய்து ஒரு வருடங்களின் பின்னர் யாழ்ப்பாணத்தில் வெலிவேரியவின் சூழல் ஏற்பட்டுள்ளது.
வெலிவேரியவில் குறுகிய நிலப்பரப்பில் நடைபெற்ற அதே அழிப்பு இன்று குடாநாடு முழுவதையும் நச்சாக்கி வருகிறது.
952 ஆம் ஆண்டு இலங்கையின் முதல் பிரதமரான டி,எஸ்.சேனாநாயக்கவினால் 7.2 மில்லியன் டொலர் செலவில் ஆரம்பித்து வைக்கப்பட்ட கல்லோயத் திட்டத்தின் பின்னணியில் கிழக்கு மாகாணத்தில் தமிழ்ப் பேசும் மக்களின் செறிவைச் சீர்குலைப்பதற்கான பேரினவாத நோக்கமே அடிப்படையாக அமைந்தது.

திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத்திற்கான முதல் பரீட்சாத்த முயற்சியாக இது கருதப்படலாம். பட்டிப்பளை ஆறு என்ற தமிழ்ப் பெயர் கல் ஓயா என்று சிங்களத்தில் மாற்றப்படிருந்தது.

150 குடும்பங்களைக் குடியேற்றும் நோக்கோடு, ஏறத்தாள நாற்பதாயிரம் ஏக்கர் நிலத்திற்கு நீர்ப்பாசனம் வழங்கும் வகையில் இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. தமிழர்கள், முஸ்லீம் தமிழர்கள், வேடர்கள், சிங்களவர் போன்ற இனக் கூறுகளைக் கொண்ட நிலமற்ற குடும்பங்கள் குடியேற்றப்பட்டன. குடியேற்றம் நிகழ்ந்த போது சிறீலங்கா சுதந்திரக் கட்சி ஆட்சியிலிருந்தது. சிங்கள மொழியை மட்டும் ஆட்சிமொழியாக மாற்றும் தனிச் சிங்களச் சட்டமூலம் சமர்பிக்கப்பட்ட ஜூன்.1956 இல் கல் ஒயா குடியேற்றங்கள் முற்றுப் பெற்றிருந்தன. 50 வீதமான சிங்களக் குடும்பங்களை கொண்டிருந்த இத்திட்டத்தில் குடியேற்றப்பட்ட தமிழ்ப் பேசும் சிறுபான்மையினர் மத்தியில் அதிர்ப்தி நிலவிவந்தது. வளமற்ற பகுதிகளில் அவர்கள் குடியேற்றப்பட்டிருந்தனர்.

கொழும்பில் தனிச் சிங்களச் சட்ட மசோதா சமர்ப்பிக்கப்பட்ட வேளையில் அதற்கு எதிராகப் போராடிய தமிழ்த் தேசிய வாதிகளை இலங்கை அரச குண்டர் படையினர் தாக்கிய சம்பவம் அதிர்வுகளை ஏற்படுத்தியிருந்தது.

ஜூன் மாதம் ஐந்தாம் திகதி 1956 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தச் சம்பவத்தின் பின்வந்த சில நாட்கள் தலைநகரிலிருந்த தமிழ்ப் பேசும் மக்களின் வியாபார நிறுவனங்கள் தாக்கியழிக்கப்பட்டன.

கல் ஓயாவில் இதன் எதிரொலியை காணக்கூடியதாக இருந்தது. குடியேற்றப்பட்ட தமிழ்- சிங்கள இனப் பிரிவுகளிடையே சிறிய வன் முறைகள் ஏற்பட்டன. 10ம் திகதி ஜூன் மாதம் கொழும்பு சிங்கள நாழிதழ்கள் சிங்கள யுவதி ஒருவர் பாலியல் வன் முறைக்கு உள்ளாக்கப்பட்டதாக செய்த் வெளியிட்டிருந்தன. 11ம் திகதியில் சிங்களக் குடியேற்ற வாசிகள் மத்தியில்ருந்த காடையர்கள் தமிழ்ப் பேசும் சிறுபான்மையினரைக் கோரமாகக் கொலைசெய்ய ஆரம்பித்தனர். காவல் துறையினர் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இரண்டு நாட்களுக்குள் 150 அப்பாவித் தமிழர்கள் அனாதைகளாகக் கொன்று குவிக்கப்பட்டனர்.

ஒரு புறத்தில் சிங்களப் பேரினவாதிகளும் தமிழ் அரசியல் வாதிகளும் தமது சமூகம் சார்ந்த வாக்குத் திறனை அதிகப்படுத்திக்கொள்ள மக்களின் உணர்வுகளைப் ப்யன்படுத்திக் கொள்ள, கல் ஓயா கொலைகள் சில அறிக்கைகளோடு மறைந்து போயின.

வெலிவேரிய மக்களுக்குக் கல்லோயாவைப்பற்றி தெரிந்திருக்க நியாயமில்லை. தவறித் தெரிந்திருந்தாலும் அதிகாரவர்க்க ஊடகங்களின் பேரினவாதப் பிதற்றல்களையே கேள்விப்பட்டிருப்பார்கள்.
அதன் பின்னர் நடைபெற்ற நூற்றுக்கணக்கான குடியேற்றத் திட்டங்கள் நீருக்கான யுத்தமாகவே அமைந்தது.
உற்பத்தியைத் தனியுடமையாக்குவது என்பது முதலாளித்துவம். இயற்கையின் செல்வமான நீரை தனியுடமையாக்குவதற்கான உலகளாவிய திட்டம் ஆபிரிக்கா முழுவதும் நீரை நாசப்படுத்தி வரண்ட பூமியாக்கியது. கடாபியின் நன்னீர்த் திட்டம் ஆபிரிக்காவரை விரிவடைந்த போதே அவர் மீதான யுத்தம் கட்டவிழ்த்து விடப்பட்டது. நேட்டோ நாடுகள் லிபியாவைக் குண்டுபோட்டுத் துளைத்த போது ஆபிரிக்காவிற்கன நீர்க் குழாய்களே முதலில் அழிக்கப்பட்டன.

உலக்த்திற்கே ஆயிரக்கணக்கான அருசி வகைகளை வழங்க்கிக்கொண்டிருந்த பங்களாதேஷின் நிர்வளம் அழிக்கப்பட்டு இன்று அந்த நாடு முழுவதையும் தன்னார்வ நிறுவனங்களே கட்டுப்படுத்துகின்றன. தன்னார்வ நிறுவனங்களிடம் பிச்சைகேட்கும் வறிய சமூகமாக அந்த நாடு மாற்றப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் அழிவின் விழிம்பைத் தொட்டுக்கொண்டிருக்கும் நீர் வளத்தை காப்பாற்றும் பொறுப்பு எமது ஒவ்வொருவர் கரங்களிலும் ஒப்ப்டைக்கப்பட்டுள்ளது.

சத்தமின்றி மின்னுற்பத்தி என்ற பெயரில் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட அழிப்பு இன்று எரியும் பிரச்சனையாகியுள்ளது. அதற்கு எதிராகக் குரலெழுப்பும் ஒவ்வொரு மனிதனையும் இலங்கை அரசும் மின்னுற்பத்தி நிறுவனமும் பயங்கரவாதிகள் என குற்றம் சுமத்துகின்றன. மின்னுற்பத்தில் நிலையத்தின் பின்னணியில் பிரித்தானிய காலனியாதிக்க அரசியல் இழையோடுவது தெரியவந்துள்ளது. நிர்ஜ் தேவா என்ற பிரித்தானிய ஆளும் கட்சியின் ஐரோப்பியப் பாராளுமன்ற உறுப்பினர் சுன்னாகம் மின்னுற்பத்தி நிறுவனத்தின் இயக்குனர் என்பது தற்செயலானதல்ல. மைக்ரோசொப்ட் நிறுவனர் பில்கேட்சின் தன்னார்வ நிறுவனம் இந்தியாவில் மருந்துகளைப் பரிசீலித்து மக்களைப் பலியாக்கி வருகிறது. இந்தியாவிற்கு பில்கேட்சின் தன்னார்வ நிறுவனத்தோடு இணைந்து சென்ற ஒரே ஒரு தெற்காசிய நபர் நிர்ஜ் தேவாவே.

யாழ்ப்பாணத்தின் நீரைப் பாதுகாக்கும் முதல் நடவடிக்கையாக நிர்ஜ் தேவாவிற்கு எதிரான போராட்டம் ஆரம்பிக்கப்பட வேண்டும் என சில புலம்பெயர் அமைப்புக்கள் முன்வந்துள்ளன. உலகின் முற்போக்கு ஜனநாயக சக்திகளின் இணைவோடு பல்வேறு தளங்களில் முன்னெடுக்கப்பட வேண்டும், தவறினால் அழிவு தவிர்க்க முடியாதாது.

தண்ணீர் கேட்டவர்கள் பயங்கரவாதிகளாக்கப்பட்டனர் : புலம்பெயர் தமிழர்களுக்குச் சவால்

திட்டமிட்டு அழிக்கப்படும் யாழ்ப்பாணம்: நீர் நஞ்சாக்கப்படுகின்றது

லிபியாவில் நேட்டோ படைகளின் இனப்படுகொலை – கடாபி கொல்லப்பட்டது எப்போது ? (பகுதி 3)

Exit mobile version