Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கற்றோர் சமூகத்தால் மலையகம் மீட்சி அடையும்? : நக்கீரர் இராகலை

upcountry_tamilகல்வியால் கற்றோர் சமூகத்தால் மலையகம் முன்னேறும், மீட்சியடையும் என்பது புத்திஜீவிகளின் கருத்து. இது எந்தளவுக்கு உண்மையானது? நடைமுறை சாத்தியமானது? எனும் சந்தேகத்தினையும், கேள்வியையும் ஓர் சம்பவம் ஏற்படுத்தியது. அதனை உங்களோடு பகிர்ந்துக் கொண்டு மலையக மீட்சி தொடர்பில் ஆக்கபூர்வமான கருத்துப் பரிமாற்றத்திற்காக இந்த ஆக்கத்தினை வரைகிறேன்.

நுவரெலியா மாவட்டம், இராகலை- சென்லெனாட்ஸ் தோட்டம் என்றால் பொதுவாக மலையகத்தில் அதிகமான ஆசிரியர் சமுகத்தினைக் கொண்ட ஓர் தோட்டம் என தெரியும் இங்கு ஐந்நூற்றுக்கும் அதிகமான ஆசிரியர்களும் வேறு பல உயர் தொழில் செய்வோரும் மற்றும் மூளைசார் தொழில், உடல் சார் தொழில் செய்வோரும் உள்ளனர்.
தீபாவளி நாளன்று எல்லோரையும் போலல்லாமல் நான் வீட்;டுக்கு பயணிக்கும் கொங்கிரீட் இடப்பட்ட பாதையின் இரு பக்கங்களிலும் நீர் தேங்கி நின்ற இடங்களுக்கு கல், மண் இட்டு நிரப்பியதுடன் பூக்கன்றுகளையும் நாட்டி, பக்கத்திலிருந்த கால்வாயில் நீர் தேங்கி நிற்காமல் குப்பைகளை அகற்றியவாறு வேலை செய்து கொண்டிருந்தேன். வழமையாக இதை செய்வதுண்டு.

அதே வீதியில் எனது வீட்டைக் கடந்து 25 மீற்றர் தூரத்தில் ஆரம்பக் காலம் தொட்டு நன்கு அகலமான, வாகனங்கள் திருப்பக் கூடிய விளையாடும் இடம் (மைதானம் அல்ல) இருந்தது. தற்போது அவ்கொங்கிரீட் இடப்பட்ட 8 அடி பாதையளவிற்கு சுருக்கப்பட்டு, நகரும் வேலினால் ஆக்கிரமிக்கப்பட்டு, வாகனங்களை திருப்ப முடியாமல், விளையாட முடியாமல் சிறிய இடமாக காணப்படுகிறது. எனது ஞாபகத்தில் நாங்கள் ஓடி விளையாடுவதும,; சைக்கிள் ஓட்டுவதும், கிரிக்கட் விளையாடுவதும் இந்த பரந்த இடத்தில் ஆனால் தற்போது அவ்விடம் சுருங்கிப்போயுள்ளது.

எவ்வாறாயினும் வேலியிலிருந்து 4 அடி தூரத்தில் கொங்கிரீட் வீதி செல்கிறது. அதனால் அந்த வீதியை அகலமாக்குவதற்காக ஃ உள்ள இடத்தையாவது பாதுகாத்துக் கொள்வதற்காக வீதியிலிருந்து 2 அடிக்கு வேலி பக்கமாக கல் நிரப்பி மண் இட சிறுவர்களுடன் முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தப் போது மேலே கூறிய கற்ற ஆசிரியர் சமுகத்தை சார்ந்த கணவனும,; மனைவியும், தாயும,; தமையனும் வந்து சண்டையிட்டு கற்களை தூக்கி எறிந்தனர்;, விவாதித்தனர்;:

“உங்கள் இடத்தில் வேலை செய்யுங்கள் எங்கள் இடத்தை ஒன்றும் செய்யாதீர்கள்.”

“எல்லோரும் இடத்தினை பிடித்துக் கொண்டிருக்கிறார்கள் நாங்கள் பிடித்தால் உமக்கென்ன?”

“இங்கே வாகனம் திருப்ப இடம் தர முடியாது”

என இடைமறித்தனர்.

நான் கூறினேன் “சுமார் 60 வருடங்களுக்கு மேல் இவ்விடம் வாகனம் திருப்பும், பொது தேவைக்காக பயன்படுத்தும் இடம் நீங்கள் 75மூ ஆக்கிரமித்துக்கொண்டுள்ளீரகள்; மிகுதி கொஞ்ச இடத்தினை பொது நோக்கத்திற்காக கொஞ்சம் விட்டுக்கொடுங்கள் இது உங்கள் வேலியிலிருந்து 2 அடி தூரத்தில் உள்ளது. வேலியை ஒன்றும் நாங்கள் செய்யவில்லை உங்களுக்கு இடைஞ்சல் ஏற்படுத்தவில்லை இதற்கு இடம் தாருங்கள் அதில் உமக்கு என்ன பிரச்சினை” என.
அதற்கு அவர்கள் கூறியது “வேலி தற்காலிகமானது கொங்கரீட் வீதிதான் எங்களுடைய உண்மையான வேலி, எல்லோரும் இடத்தை பிடிக்கும் போது நாங்களும் பிடித்துள்ளோம.; எங்கள் வீட்டுக்கு முன்னால் வாகனம் திருப்ப இடம் தர முடியாது” எனக்கூறி இடைமறித்தனர்.

இருந்த வீதியில் வேலி இட்டுக்கொண்டு இப்போது உள்ள இடத்தையும் காப்பாற்ற முடியாமல் இருக்கையில் ஏனையோர் எல்லோரும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர். வாக்கு வாதம் அதிகமாகியது.

“எஸ்டேட் ஆக்கள் இப்படித்தான் இதனால் தான் இங்கு வேண்டாம் வேறு இடத்தில் வீடு வாங்கலாம், தோட்டக்காட்டான் புத்தியை காட்டி விட்டார்கள்”; என அந்த கற்ற ஆசிரியை (மனைவி) எங்களுக்கு கேட்கும் படி கூறினார். நிற்க, அந்த ஆசிரியையின் கணவர் தோட்டத்தொழிலாளியின் பிள்ளை, தேயிலை தளிர் கிள்ளிய பணத்தில்தான் கற்று 3179 ஆசிரிய நியமனத்தில் நியமனம் பெற்றார். அவ்வாசிரியை பின்தங்கிய உடபுஸ்ஸல்லாவை அலகொல்லை தமிழ் வித்தியாலயத்தில்ஃ தோட்டத்தொழிலாளர்களின் பிள்ளைகள் கல்விகற்கும் பாடசாலையில் கற்பிக்கிறார். பொலிஸ் உதவியுடன் 2 அடி அகலத்திற்கு மண் நிரப்பப்பட்டது. வாகனங்களை ஓரளவு வேகமாக திருப்ப முடியுமாக இருக்கிறது என சாரதிகள் கூறினர்.

பொலிசார் இது நல்ல விடயம் பொது விடயம் தானே ஒத்துழைத்தால் என்ன என கேள்வி எழுப்பினர்.
வெட்கப்பட வேண்டியவர்கள் ஆவேசம் கொண்டனர். சட்டம் பற்றி பேசினர். நான் சிரித்துக்கொண்டே வந்து விட்டேன்.
இச்சம்பவம் எமக்கு சில கேள்விகளை தந்துவிட்டுச் சென்றுள்ளது.

1. கற்றோர் சமூகத்தால் மலையகம் மீட்சி அடையுமா?

2. கற்றோர் சமூகம் என்பது யாது?

3. ஆசிரியர்கள் சுயநலமாக செயற்படுவது மலையகத்தினை எவ்வாறு மீட்சியடையச் செய்யும்?

4. பொதுமக்கள் மௌனத்தின் விளைவு?

5. இவ்வாறு சிந்திக்கும், செயற்படும்; ஆசிரியர்கள் எவ்வாறு நல்ல மலையக சமுகத்தினை, பொது நோக்கம் கொண்ட மாணவர்களை உருவாக்குவர்?

6. தோட்டக்காட்டான் என அடையாளப்படுத்தும் இவர்களின் அடையாளம் என்ன?

7. அறியாமை, போதிய அறிவு இல்லாதவர்களை ஆசிரியர் தொழிலில் இணைத்தமை சரியா?

8. இதை மாற்ற நாம் என்ன செய்யலாம் ?;

9. மலையக மீட்சிக்கு நல்ல, பொது நோக்கம் கொண்ட சமுகத்தை உருவாக்கஃ கட்டியெழுப்ப நாம் என்ன செய்ய வேண்டும்?

10. எமது தார்மீகக் கட்டுப்பாடு என்ன? ……..
இன்னும் பல கேள்விகளை உங்கள் மனதிலும் ஏற்படுத்தலாம்.

 கற்றோர் சமுகத்துள் ஓர் அமைப்பு ரீதியான பொது நோக்கத்திலான செயற்பாடுகள் இன்மை
 கலை இலக்கிய ஆக்கப்படைப்புகள் இன்மை,
 பிழையான சிந்தனை செயற்பாடு பழக்கங்கள்
 சமூக சிந்தனை இன்மையும் சுயநலமும்
 கல்வியும் சம்பளமும் சலுகையும் மக்களின் உழைப்பால் கிடைப்பவை என்பதை அறியாமல்; மாயைக்குள் வீழ்ந்திருக்கும் அவலம்
 வாசிப்பும் தேடலும் இன்மை
 தான், தன் குடும்பம், தன் பிள்ளை என சுருங்கிய வட்டத்துள் வாழும் நிலைமை

இன்னும் பல்வேறு காரணங்களினால் மலையகம் 1960 – 1970 களிலிருந்த விடுதலை, முன்னேற்றம் நோக்கிய பயணம் தடைப்பட்டு மீண்டும் முடங்கி கிடக்கின்றது.
இதற்கு யார் பொறுப்பு? இந்த சம்பவம் எமக்கு எதை உணர்த்துகிறது?
மலையகம் மீட்சி அடையுமா?

“ஒக்கத் திருந்தி உலகோர் – நலம்
உற்றிடும் வண்ணம் உழைப்பவன் யோகி”

“ஊருக்கு ழைத்திடல் யோகம் – நலம்
ஓங்கிடுமாறு வருந்துதல் யாகம்”
-பாரதி-

Exit mobile version