Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கடாபி கவலைக்கிடம் : ரதன்

எகிப்தின் முபராக் இறங்கிய பின் புதிய இராணுவ அமைச்சு நாட்டை ஆள்கின்றது. முபராக்கின் வழியிலேயே இவர்களும் பயணிக்கின்றார்கள். நாட்டை அபிவிருத்தி செய்வதற்கோ அல்லது மக்களுக்கான பேச்சு, எழுத்து சுதந்திரங்களை வழங்குவதற்கோ, ஜனநாயகரீதியிலான தேர்தல்களை நடாத்துவதற்கோ விருப்பமெதுவுமின்றி செயல்படுகின்றார்கள்.

முபராக்கின் இறக்கத்திற்கு யார் காரணம் என ஒரு புறம் வாதிட்டுக்கொண்டிருக்கின்றார்கள். அமெரிக்காவின் சதி என்பது சிலரது வாதம். ஏகிப்திய சோசலிச வாதிகள் என்பது மற்றொரு தரப்பு. பசியிலும் பட்டினியிலும் வீதிக்கு வந்து போராடிய மக்களைப் பற்றி எவருக்கும் கவலை இல்லை. ரியுனிசயாவிலும் எகிப்திலும் போராடிய மக்களுக்கான விடிவுக்கான எந்த அறிகுறிகளும் இல்லை. இந் நிலையில் ஆபிரிக்க மத்திய கிழக்கு நாடுகளில் பல சர்வாதிகாரிகளுக்கு எதிராக போராட்டங்கள் தொடர்கின்றன.

முன்னால் நேட்டோவின் தலைமை அதிகாரி வெஸ்லி கிளார்க்கின் கருத்துப்படி பென்டகனுக்கு லிபியா, சூடான், சிரியா, லெபனான், சோமாலியா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளை கைப்பிடிக்க வேண்டும் என்ற திட்டமிருந்தது என்கின்றார். எனவே இந்த போராட்டங்களின் பின்ணனியில் அமெரிக்கா இருக்கலாம் என நம்பத்தோன்றுகின்றது. கடந்த சில நாட்களில் பல நாடுகளில் அரசுக்கெதிராக போராட்டங்கள் நடைபெற்றிருந்தாலும் லிபியாவின் பெயரே முன்னிலையில் உள்ளது. இதற்கான காரணம் கடாபி. 41 வருடங்களாக ஆட்சி செய்து வருகின்றார்

லிபியா ஆபிரிக்காவின் நான்காவது பெரிய நாடு. எகிப்துக்கும் சூடானுக்குமிடையில் மத்தியதரைக் கடலையண்டி உள்ளது. கி.மு 8000 ஆண்டில் இருந்து லிபியாவின் சரித்திரம் ஆரமபமாகின்றது. றோமன் லிபியா, அரேபிய முஸ்லீம்களின் ஆட்சி, ஒட்டமன் சாம்ராஜ்யம் என லிபியாவின் வரலாறு வளர்கின்றது. 1911 ல் இருந்து 1951 வரை இத்தாலியின் குடியேறிய நாடாக இருந்துள்ளது. ஆபிரிக்க இத்தாலி என லிபியாவை அழைப்பதுமுண்டு. இந்தக் கால கட்டத்தில் சுமார் ஒன்றரை லட்சம் இத்தாலியர் லிபியாவில் குடியேறியுள்ளனர். இது அப்போதைய லிபிய சனத்தொகையில் 20 வீதமாகும். லிபியாவில் அரேபியர் பெருமளவில் வாழ்கின்றனர்.Berbers, Greeks, Muslim Cretans, Maltese, Armenians ஆகிய ஆதி மக்களும் வாழ்கின்றனர்.

கடாபி 1942 யன் 09ல் பிறந்த கடாபி, 1969ல் தனது 27வது வயதில் லிபிய அரசன் Idris Al-Sanusi வெளியேற்றி விட்டு ஆட்சிப் பீடத்தை கைப்பற்றினார்.

அன்றில் இருந்து லிபிய மக்கள் தன்னை ஓர் மரியாதைக்குரிய தலைவராக மதிக்க வேண்டும் என்பதற்காக பல ஆவர்த்தனங்களை செய்தார். பேராசிரியர்கள் கடாபியைப் பற்றி புகழ்ந்து புத்தகம் எழுதினார்கள். கடாபி முஸ்லீம் மக்களின் மதத் தலைவர் இமாம் என தன்னை மக்கள் மேலும் கருத வேண்டும் என்பதற்காக முஸ்லீம் மதம் லிபியாவிலும் வெளிநாடுகளிலும் சொற்பொழிவாற்றினார். பல சமயங்களில் தான் கூடாரத்துக்குள் வாழ்வது போல் காட்டிக் கொண்டார்.

மறுபுறம் லெபானிய மதத் தலைவர் Mūsá aṣ-Ṣadr லிபியாவில் வைத்து கொலைசெய்ததாக இவர் மேல் குற்றச்சாட்டுக்களும் உள்ளன. கடாபியின் மகன்கள் லிபிய அரச அமைச்சரவையில் முக்கிய உறுப்பினர்கள். கடாபியின் மகன் Mutassim Al-Qaddafi கடாபியை கொலை செய்ய முயற்சித்தார். வெளிநாடுகளில் பின்னர் வாழ்ந்த இவர் கடாபியால் மன்னிக்கப்பட்டு இன்று அரசில் ஒரு முக்கிய உறுப்பினர். மாவேவின் சிகப்பு புத்தகம் போல் கடாபி பச்சை புத்தகத்தை ஏற்படுத்தினார்.

அரேபிய தேசியம் என்ற தேசியவாதத்தை வளர்த்தார். கிறிஸ்தவ அதிபரால் ஆட்சி செய்த சாட்டின் மீது போர் தொடுத்தார். இந்த ரொயோட்ட போருக்கான காரணமே மதம். இவர் பல சர்வாதிகாரிகளுடன் நட்பாக இருந்தார். இடி அமீனின் அபிமானி. இவரது மகளையும் இடி அமீன் திருமணம் செய்திருந்தார். பின்னர் கடாபியின் மகள் இடி அமீனை விவாகரத்து செய்து விட்டார்.

அமெனெஸ்ரி கடாபியின் லிபியா மீது பல கொலை குற்றங்களை சுமத்தியுள்ளது. 1970 களில் நேரடியாகவே பாலஸ்தீனிய இராணுவ நடவடிக்கைகளுக்கு உதவிகள் செய்தார்;. மிய+னிச் ஒலிம்பிக் கொலைகளுக்கு நிதி உதவிகள் வழங்கினார். பிலிப்பைன்ஸ்சில் பிரிவினைவாத்துக்கு உதவிகள் செய்தார். சிக்காகோ நகரில் நிறக் கலவரம் வர நிதி உதவிகள் செய்தார். இவை சில. புட்டியலிட்டால் பல.

லிபியா – வரலாற்றுக் குறிப்பக்கள்:

1951- சுதந்திரம
1957 – எண்ணெய் கண்டுபிடிப்பு
1969 – கடாபி ஜனாதிபதியாகின்றார்.
1986 – சித்தரைஅமெரிக்கா லிபியா மீது குண்டு மழை பெய்கின்றது. ஜேர்மனி நாட்டு டிஸ்கோவில் நடைபெற்ற கொலைகளை கண்டித்தே இந்தக் குணடு மழை. இதில் கடாபியின் வளர்ப்பு மகள் இறந்து விடுகின்றார்.
1988 – பான் ஆம் 103 விமானத்துள் குண்டுவைத்து 270 பேர் கொல்லப்படுகின்றனர். இதற்கு லிபியா தான் காரணம் என உலகம் குற்றஞ்சாட்டுகின்றது.

2003 – விமான குண்டு வெடிப்பில் உயிரிழந்த அனைவருக்கும் லிபியா நட்டஈடு வழங்குகின்றது. ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா 10மில்லியன் டொலர்கள் நட்ட ஈடாக வழங்கப்பட்டது. இதன் பின்னரும் லிபியா இக் கொலைகளுக்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்பதை வலியுறுத்தியது. மேற்குலக நாடுகளுடன் சுமுகமாக உறவைப் பேணவே இந்த நடிவக்கை எனத் தெரிவித்தனர்.

2004 – மேற்குலக நாடுகளுடன் தனது உறவை லிபியா புதுப்பிக்கின்றது. சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் வேண்டுகோளுக்கினங்க ஏற்கனவே தேசியமயமாக்கப்பட்டிருந்த பல அரச கூட்டுத்தாபனங்கள் தனியார்மயமாக்கப்படுகின்றன.

2009- அமெரிக்காவும் லிபியாவும் தூதர்களை பரிமாறிக் கொள்கின்றனர்.

லிபியாவின் பெரும் பகுதி பாலைவனங்களாக உள்ளன. இங்குள்ள பர்விக கிராமங்களில் உள்ள பலருக்கு பதவிகள் வழங்கியுள்ளாh கடாபி;. தனது படைகளுக்கு எதிராக எந்த வித கிளர்ச்சியும் ஏற்படமால் இருக்கவே இந்த நடவடிக்கை. லிபியாவின் பொருளாதாரமே எண்ணெய் ஏற்றுமதி வருமானத்திலேயே தங்கியுள்ளது. 41 வருடங்களாக சிறப்பாக காய்களை நகர்த்தி வந்த கடாபியின் கால்களுக்கு கட்டுப்போடும் நிலைமைக்கு வந்து விட்டது. இதற்கான காரணங்கள் கடாபியால் ஏற்படுத்தப்படாவிட்டாலும் புறச் சூழலுக்கு ஏற்ப தனது நாட்டை கடாபி கட்டியெழுப்ப தவறிவிட்டார்.

லிபியாவின் வேலையற்றோர் வீதம் 30. இது மிக மோசமான நிலை. உலகின் அதி கூடிய ஊழல் நாடுகளுள் லிபியா முண்ணனியில் உள்ளது.

2004க்குப் பின்னர் மிகவும் புத்திசாலித்தனமாக காய்களை நகர்த்திய கடாபி தன் மீது நடவடிக்கை எடுத்தவர்களையே தன் பக்கம் திருப்பினார். தன்னை சோசலிசவாதியாகவும் இமாமாகவும் காட்டிக் கொண்ட கடாபி, முதலாளித்துவ தலைவராக தன்னை மாற்றிக் கொண்டார். கடாபியின் மகன் சையிப் அமெரிக்கா வந்தபோது அவரை Condoleeza Rice வரவேற்றுள்ளார். ரொனி பிளேயர், புட்டின் லிபியா சென்றுள்ளனர்.

ரோனால்ட் ரீகன் கடாபியை “Mad dog of the Middle East” என திட்டினார். 9/11 க்கு பிறகு தனது நடவடிக்கைகளை மாற்றிக் கொண்டாh கடாபி. பாலஸ்தீனியரை தனது நாட்டிலிருந்து வெளியேற்றினார். மேற்கு நாடுகளுக்கு சாதகமாக செயல்பட்டார். அமெரிக்க ஜனாதிபதி G.Bush “ I pray to God to bless you and your country.And I hope we will meet.” என தெரிவித்தார். “விசர் நாய்” எனத் திட்டிய அதே அமெரிக்கா உனக்கும் உனது நாட்டிற்குமாக கடவுளை பிரார்த்திக்கின்றேன் என ஆசி வழங்குமளவிற்கு மாற்றிவிட்டார் கடாபி.   இன்று மக்கள் போராட்டத்தை தடுக்க முடியாமல் உள்ளார்.

ஒரு காலகட்டத்தில் ஆதரவாக இருந்த ஜ.நா லிபியாவிற்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்க முடிவு செய்துள்ளது. 23ந்திகதி வோல் ஸ்ரீற் பத்திரிகை கடாபியை மக்கள் தூக்கி எறிய ஜரோப்பாவும் அமெரிக்காவும் உதவி செய்ய வேண்டும் என எழுதியுள்ளது.

பாலஸ்தீன மக்கள் பசியுடன் வாடியபோதும் இஸ்ரேல் குண்டு மழை பொழிந்த போதும் கவனிக்காமல் இருந்த அமெரிக்க ஊடகங்கள் இன்று கடாபியை இறக்க குரல் கொடுக்கின்றன. தனது நண்பன் என புகழ்ந்து கடாபியை ஏற்றுக் கொண்ட அமெரிக்கா இன்று அதே கடாபியை தூக்கி எறிய தயங்கவில்லை.

கடாபி தனது கடைசிக் காலத்தில் உள்ளார்.

Exit mobile version