சென்ற நவம்பரில் தனது மகன்மார் நெருங்கிய உறவினர் ஆகியோருக்கு முன்னுரிமை கொடுத்து காணியும் பொருளும் ஒதுக்கியதற்கு எதிராகக் பொங்கிய எதிர்ப்பு கருநாடக முதல்வர் பி எஸ் எருடுரப்பாவினது பதவியையே கிட்டத்தட்ட பறிக்கப் படும் அளவுக்கு வலுப் பெற்றது. அதனால் அவர் அரசியல் காய் நகர்த்தல் மூலமும் சாமர்தியத்தாலும் காணி ஒதுக்கீடுகளை செல்லுபடி அற்றதாக்கி, தன் மகன்மாரை தன் அலுவலக வதிவிடத்திலிருந்து வெளியேறச் செய்து தனது பதவியைத் தக்க வைத்தார். எதிர்ப் பரப்புரையின் உச்சக் கட்டத்தில் ஒழுக்க முறையின் உச்சம்வரை சென்றார்கள்.
Tehelka கர்நாடக முன்னைய காங்கிரஸ், ஜனதா முதல்வர்களால் உறவினருக்கு, பணியாளருக்கு, சாரதிகளுக்கு மற்றும் பெண்களுக்கும் கட்சியினருக்கும் திட்டமிட்டு வழங்கியவற்றை விபரமாக வெளியிட்டது.(நில மோசடி 2.0, 4 டிசெம்பர்) இந்த அறிக்கையின் நோக்கம் எருடுரப்பாவினது தவறுகளின் தாக்கத்தைக் குறைப்பதற்காக அல்ல, இது சமூகத்தில் ஊறிய ஒன்று இது களையப்பட வேண்டியது என்பதைக் காட்டுவதற்காகவே. பொதுக் காணிகளை சலுகையாக உறவினருக்கும், சட்ட விதிகளுக்கு அமைய நடக்கும் அலுவலர்களுக்கும், நீதிபதிகளுக்கும், பொலீஸ் அலுவலர்களுக்கும் ஏனையோருக்கும் வழங்க முதல்வர்களுக்கு உள்ள அதிகாரமானது, தற்கால ஜனநாயகத்தில் இடமில்லாத ஒன்று.
முகம்பார்த்தும் சீரற்றும் செயல்படும் ஒரு நிலப் பிரபுத்துவ அமைப்பமுறையானது ஜனநாயகத்துக்கு விழும் அடி. (இதில் சில ஒதுக்கீடுகள், அதற்கு ஆதாரம் கையில் இல்லாவிட்டாலும் பெரிய மனதுடன் கொடுப்பதாகக் காட்டும் அவரையே சென்றடையக் கூடிய வகையில் சில பொய் ஆவணங்கள் மூலம் மறைக்கப் பட்டிருக்கும்.)
இந்த அதிகாரத்தை அதன் அருவருப்புத்மையை மறைத்து உசிதப்படி வழங்கும் ஒதுக்கீடு என்று கூறி மாசு படிந்த கட்டளைத் தளபதி தீபக் கபூர் போன்றவாகளுக்கே சலுகையாக வழங்கப் பட்டதாகக் கூறப்படுகிறது.
அவருக்கு ஹூட்க அரசால் ஹரியானாவில் 500 சதுர யார் நிலத் துண்டு ஒன்று வழங்கப்பட்டு பின்பு சட்டப்படி ஐந்து ஆண்டுகள் முடியாததால் அவர் விற்கும் உரிமை மறுக்கப்பட்ட ஒரு வெட்கக் கேடான நிலை உருவானது. அந்தத் துண்டு அவரின் அதிகூடிய சேவைக்காக முன்னுரிமை கொடுத்து வழங்கப்பட்டது.
முறைமாறிக் காணியும் பொருட்களும் ஒதுக்கீடு செய்வதற்கு எதிரான அதன் பிரசாரம் சென்ற கிழமையும் தொடர்ந்தது. Tehelka தமிழ் நாட்டின் முதல்வர் மு கருணாநிதி பற்றியும் வெளிக்கொணரல் செய்தது. பல காணிகள் உள்ளடங்கிய அமைப்பை கட்டுப்படுத்தும் தமிழ் நாட்டின் வீட்டு வாரியத்திற்கு அரச உசிதப்படி வழங்கும் ஒதுக்கீடு ஒன்றுள்ளது. அதற்கமைய 15 வீதமான ஒதுக்கீடுகளை முதல்வரே சிபார்சு செய்யலாம். அரச உசிதப்படி வழங்கும் ஒதுக்கீட்டின் கீழ் தனிமையான, கைவிடப்பட்ட, விதவை ஆகிய பெண்கள், சமூக சேவையாளர்கள், உடல் ஊனமுற்றோர், பாதுகாப்பு சேவையிலுள்ளோர், சேவையிலிருந்து ஓய்வு பெற்றோர், அறிவியல் கலை இலக்கியம் பொருளாதாரம் பொது நிர்வாகம் விளையாட்டு ஆகிய துறைகளில் பிரபல்யம் பெற்றவர்கள், சுதந்திரப் போராளிகள், களங்கமற்ற அரச சேவையினர், பொதுச் சேவை சமாஜ ஊழியர் நடுவர் அரசுப் பணி பொறுப்பேற்று நடத்தும் அமைப்பு, தேசிய மயப்பட்ட வங்கி, சேமலாப நிதி நிறுவனம், ஊடகத் துறை, உள்ள10ராட்சி நகராட்சி ஆகிய அனைத்துத் துறைகளினதும் பணியாளர்கள் என மேல் கூறப்பட்ட அனைவரும் ஒதுக்கீட்டுக்கு தகைமை உடையவர்கள்.
இந்தப் பிரிவுகளில் சில பிரிவினர் உண்மைத் தகைமையாளர்களாகப் பட்டாலும், அடிப்படையில் இங்கு ஒரு கேள்வி பலரால் கேட்கப் படுகிறது. எதற்காக அரசு மற்றையவர்களை விடுத்து பணியாளர்களுக்கும் ஊடகவியலாளருக்கும் இந்த முக்கிய தேவையான நிலத்தை விநியோகிக்கும் அதிகாரத்தை வைத்துள்ளது? இதை நியாயப் படுத்துவதானால் நெருங்கிய தன்மையை மட்டும்தான் சொல்லலாமே அன்றி இந்த அரசியல் சலுகைமூலம் பயன் பெறுவோருக்கு முறையாக சொல்கூடிய காரணம் ஏதும் இல்லை. அனேகமாக இந்த ஒதுக்கீடு ஒருவருக்கு பல கோடிகளை எட்டும்.
இதை அரச உசிதப்படி வழங்கும் ஒதுக்கீடு விதிகளுக்கு அமைந்தது என்று ஒரு புறம் தள்ளி வைத்தாற்கூட, tehelka வின் அலசல் விசாரணையில் கருணாநிதியின் ஆட்சி சட்டத்தை மீறிப் பல துண்டுகள் ஒதுக்கியது தெரிய வந்துள்ளது. சமூக சேவையாளர் என்ற பிரிவினுள் பல அரச பணியாளர்களும் உறவினர்களும் காணித் துண்டுகளும் வீட்டு மாடிகளும் கொடுக்கப் பட்டுள்ளார்கள். சிலர் பாடசாலை படிப்பின் போது செய்ததுதான் அவர்கள் செய்த கடைசி சமூகசேவை. பலர் நாளாந்த பணிகளான இரத்த தானம் கண்சிகிச்சை முகாம் ஆகியவற்றிற்கு உதவியதாக சொல்கிறார்கள். பலர் தங்களுக்குத் தாங்களே சான்றிதழும் வழங்கி உள்ளார்கள். சிலர் லயன், ரோட்டறி கிப் போன்றவற்றிலிருந்து தெளிவற்ற கருத்த தெரிவிப்பு பெற்றிருக்கின்றனர். ஒருவருக்கு அல்லது அவரது துணைவருக்கு அல்லது வயதை எட்டாத அவரது குழந்தைக்கு நிலம் தமிழ் நாட்டிலோ அல்லது வேறு தலை நகரங்களிலோ இல்லாதிருந்தால்தான் காணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று விதி இருக்கையில் நடைமுறை ஒழுங்கில் அது மீறப்பட்டுள்ளமை கண்டறியப் பட்டுள்ளது.
அடுத்த துணிகர மானம்கெட்ட மீறல் காணிபெறக் கறை படியாத சேவைப் பதிவுத் தகைமை. ஆர்ரிஐ பணியாளர் வி கோபாலக்கிருஷ்னன் அப்படியான அரச சேவையாளர் பட்டியலை தேடியபோது, மேலதிகச் செயலாளர் எஸ் சொலமன் ராஜ் அப்படி ஒரு சான்றிதழ் வழங்கப் பட்டிருக்காமையால் அதற்கான பட்டியல் தயாரிக்ககும் தேவை எழாது என்றார். அத்துடன் அவர் உள்நாட்டு அலுவலகத்திடம் அப்படி ஒரு பட்டியல் இல்லை என்பதையும் தெளிவு படுத்தினார். கற்பனைப் பிரிவைச் சேர்ந்த இதன்கீழ் இன்றைய காவல் புலனாய்வுத் துறை ஐஜிபி யாக இருக்கும் 1986 தொகுதி ஐபிஎஸ் அலுவலர் ஜாபர் சோல்ட் போன்ற பல பொது சேவையாளர்கள் பெரும் பரப்புக் காணித் துண்டுகளை முக்கிய இடங்களில் பெற்றுள்ளார்கள். இவர்கள் மட்டுமல்ல இன்னும் நூற்றுக் கணக்கில் பலர். ஜனநாயக ரீதியான இக் கேள்விக்கு முதல்வர் பதில் சொல்ல நேரிடும்.
மூலம் : http://www.tehelka.com/story_main48.asp?filename=Ne111210Coverstory.asp
மொழியாக்கம் திரு. மாசிலாமணி