ஆவணி இரண்டாம் நாள் இதற்குள் கடனை அடைப்பதற்கான காரணிகள் முன்வைக்கப்பட வேண்டும். இதனை சர்வதேச நாணய நிதியமும் வலியுறுத்தியுள்ளது. ஒபமாவிற்கும் றிப்பப்ளிக்கன் Speaker John Boehner ற்கும் பனிப் போர் மூண்டுள்ளது. ஒருவர் முன் வைக்கும் தீர்வுகளை மற்றவர் நிராகரிக்கின்றார்.
இறுதியாக ஒபமாவின் கனவுகளுக்கு எதிராக இரு கட்சிகளும் உடன்பாட்டிற்கு வந்துள்ளன. கடன் எல்லை 2.1ரில்லியன் டொலர்களால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
சேவைகள் குறைக்கப்படும். வரி அதிகரிப்பு இல்லை ஆகிய உறுதி மொழிகளுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஆய்வாளர்களின் கருத்துப்படி கடன் Debt ceiling அதிகரிப்பு அமெரிக்காவை மேலும் கடனாளியாக்கும். நிதி நிலைமையை மேலும் மோசமாக்கும். வோசிங்டன் போஸ்ட் பத்திரிகையைச் சேர்ந்த Ezra Kelin ன் கருத்துப்படி வருமான வரி அதிகரிப்புக்கு பதிலாக, வியாபார வரி, சுற்றுச் சூழல் வரி போன்ற அதிகரிக்கப்படலாம். இவ் வரிகளால் பாதிக்கப்படப்போவோர் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்வோரே.
Debt ceiling என்ற பதம் அடிக்கடி ஊடகங்களில் அடிபடுகின்றது. கடன் எல்லை தற்பொழுது கூ14.3 வசடைடழைn ஆகவுள்ளது. இதனை கொங்கிரசே தீர்மானிக்கின்றது. தற்சமயம் இவ்வெல்லையை சுமார் 2.4 ரில்லியனால் அதிகரிக்கப்பட்டுள்ளது. ரிப்பப்ளிக்கனும் டெமோகிரற்ஸ்ம் கருத்தளவில் ஒத்துக் கொள்கின்றன. மற்றைய விடயங்களில் இரு கட்சிகளும் போட்டி போட்டன.
தீர்வு காணப்படடிராவிடில் என்ன நடக்கும்?. ஊடகங்கள் கூறுவது போல் அமெரிக்கா ஒன்றும் கடலில் காணமால் போய் விடாது. அமெரிக்கா தனது வல்லரசு இடத்தை இழக்குமா? அதுவும் இல்லை. மற்ற பல முக்கிய நாடுகள் அமெரிக்காவின் நிலையிலேயே உள்ளது. அப்ப என்னதான் நடக்கும்
• சமூக கொடுப்பனவு காசோலைகளில் ஒபமா கையொப்பமிட தாமதமாகும். இதனால் பாதிக்கப்படப் போவது வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்கள். தங்களது அன்றாட உணவுக்கு திண்டாட்டம். வாடகை போன்ற பல பிரச்சினைகளை இவர்கள் சந்திப்பார்கள்.
• வட்டி வீதம் அதிகரிக்கும். இது மீண்டும் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்வேரையும், மத்திய தர மக்களையும் வங்குரோத்து நிலைக்கு தள்;ளும். பலர் வீட்டு கடன் கட்ட முடியாமல் வீட்டை வங்கியிடமிழப்பர். வங்கியும் லீட்டை விற்க வேண்டும். அதற்கு மக்கள் தயாராக விடின் வங்கி மீண்டும் அரசாங்கத்தை நாடும். இல்லையேல் பல பணக்கார முதலைகள் இவ் வீடுகளை குறைந்த விலைக்கு வாங்குவர்.
• அரசாங்க ஊழியர் வேலை இழப்பார்கள்
• அமெரிக்க வங்கிகளில் முதலீடு செய்தோர் தமது பணத்தை மீளப் பெறுவார்கள். அமெரிக்க நிதிப் பொருட்களின் தரமிறக்கப்படும்.
• டொலரின் பெறுமதி குறையும்.
கடனின் ஆரம்பம் எங்கு? இதனை ஆய்வு செய்வதற்கு முன்பு வெகு அண்மைக் காலங்களில் இக் கடன் அதிகரிப்பிற்கான காரணங்களை பார்க்கலாம். Bear Stearns என்ற முதலீட்டு வங்கிக்கு 29.5 பில்லியன் டாலர்களை அரசு வங்கியுள்ளது. இந்த நிறுவனம் விட்ட தவறுகளுக்காக அமெரிக்க அரசு கொடுத்த விலையே இது. இதைத் தவிர Bank of Americaவிற்கு 97.2 பில்லியனையும், மோட்டார் கார் நிறுவனங்களிற்கு 97.4 பில்லியனையும் American International Group என்ற காப்புறுதி நிறுவனத்திற்கு 112 பில்லியன்களையும ;City Group க்கு 235 பில்லியனையும், GEக்கு 139 பில்லியனையும் இந் நிறுவனங்களை காப்பாற்றுவதற்காக கொடுத்துள்ளது. இந் நிறுவனங்கள் இப் பணத்தை பெற்ற போது வழங்கிய உறுதிகளை காப்பாற்றவில்லை. இந் நிறுவனங்கள் பல இலட்சம் தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்துள்ளது. இவர்களுக்கான தற்போதைய சமூக கொடுப்பனவும் அரசிடமே உள்ளது. வீட்டு கடனை அடைக்க முடியாதவர்களுக்காக வங்கிகளுக்கு மேலும் 300 பில்லியனை வழங்கியுள்ளது. Troubled Asset Relief Program – TARPக்கு 700 பில்லியனும் வழங்கப்பட்டுள்ளது. இருந்தும் என்ன பயன்? எதுவும் நடக்கவில்லை. இவற்றை விட ஈராக் போருக்கான செலவு, இதில் காயமடைந்த, இறந்தவர்களுக்கான தொகை, லிபியப் போரில் அமெரிக்காவின் பங்கு போன்றனவற்றின் கணக்குகள் தெளிவாக முன்வைக்கப்படவில்லை. கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஊடகங்கள் ஈராக் போரில் பங்குபற்றிய வீரர்கள் வீடற்றவர்களாகவும், வேலையற்றும் உள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளன. இது வியட்நாம் போரின் பின்னரும் ஏற்பட்டது. உலகிலேயே அதிகளவு பணத்தை வரவு செலவு திட்டத்தில் பாதுகாப்புக்காக ஒதுக்கும் நாடு அமெரிக்காவே. இதில் பெருமளவு பணம் வெளிநாடுகளை ஆக்கிரமிக்கவும் அழிக்கவும் பயன்படுத்தப்படுகின்றது
ஒபமாவின் கனவான தேசியமயமாக்கப்பட் மருத்துவ சேவை என்பது கனவாகிப் போய்விட்டது. முன்னால் அமெரிக்க இராணுவ தலைமை அதிகாரியும், முன்னால் அமெரிக்க ஜனாதிபதியுமான Dwight D. Eisenhower ன் ஆட்சிக் காலத்தில் சமூக கொடுப்பனவுகளை விட வேறு எந்த அரச உதவியும் மக்களுக்கு கிடைக்கவில்லை. இவரது குடும்பம் ஜேர்மனியில் இருந்து அமெரிக்க வந்தது. இவர் அமெரிக்காவில் பிறந்தார். இவரது காலத்தில் அமெரிக்க கடன்கள் குறைக்கப்பட்டு சோவியத் ய+னியனுக்கு எதிராக புதிய அழுத்தங்கள் கொடுக்கப்பட்டன. இது போன்ற ஆட்சியையே இன்று அமெரிக்க ஆய்வாளர்கள் ஒபாமாவை வலியுறுத்துகின்றார்கள். இக் கடனுக்கு காரணமானவர்கள் Wall Street Companies. இவர்கள் இக் கடனை அடைப்பதற்கு என்ன பங்கு வகிக்கப் போகின்றார்கள். இதனைப் பற்றி எதுவுமே இந்த ஆய்வாளர்கள் கூறவில்லை. ஒபமா முன்வைத்த அதிக வரிகளால் பாதிக்கப்படப்போபவர்கள் இவர்களே. இதனால் இவர்கள் இந்த வரி அதிகரிப்பை எதிர்த்தார்கள்.
நியுயோர்க்கர் சஞ்சிகை குறிப்பிடுவது போல் Hedge fund சொந்தக்காரர்கள் வரி அதிகரிப்பை எதிர்க்கின்றார்கள். இவர்கள்தான் அதிகம் ரிப்பப்ளிக்கன் கட்சியில் ஆதிக்கம் செலுத்துபவர்கள்.
ஓவ்வொரு தனி மனிதனது கடன் வாங்கும்-கொடுக்கும் திறனை ஆய்வு செய்து புள்ளிகள் வழங்குவதை ஆங்கிலத்தில் Credit Rating எனக் கூறுவார்கள். நாடுகளின் Credit Rating ஐ ஆய்வு செய்யும் நிறுவனங்கள் உள்ளன. உலகின் மிக முக்கிய மூன்று நிறுவனங்களின் இரண்டு அமெரிக்காவில் உள்ளது. Standard & Poor’s (S&P), Moody’s ஆகியவையே அவை. மூன்றாவது Fitch Group. இது லண்டனை தலைமையகமாகக் கொண்டுள்ளது. AAA Rating என்பது தரத்தில் அதாவது மிகச் சிறந்த நாடுகளைக் குறிக்கும். இந்த புள்ளியை, அதாவது தரத்தைப் பெற்றுள்ள நாடுகள் மிகச் சிலவே அவை. Australia, Austria,Canada, Denmark,Finland,France,Germany,Hong Kong,Netherlands,Norway, Singapore,Sweden,Switzerland,United Kingdom,U.S. (India – BBB-, Sri Lanka – B+)
அமெரிக்காவின் கடனானது மொத்த தேசிய உற்பத்தியின் 96.3 வீதம் என சர்வதேச நாணய நிதியம் கூறியுள்ளது. மிக மோசமான 12 நாடுகளுள் அமெரிக்காவும் ஒன்று என சுட்டிக்காட்டியுள்ளது.
அப்படியிருந்தும் தற்சமயம் அமெரிக்காவிற்கு அதி கூடிய AAA Rating. இதிலிருந்து இந்த தர வரிசை கூட ஒரு அரசியல் தான் என்பது தெளிவாகின்றது.
அமெரிக்கா இப் பிரச்சினையை தீர்த்திருக்காவிடின் தரமிறக்கப்படும் என்பதே பலரது எதிர்பார்ப்பு. ஆனால் பல பொருளியல் வல்லுனர்கள் இதனை மறுக்கின்றனர். அமெரிக்கா தனது தரத்தையும் இடத்தையும் இழக்காது. அமெரிக்காவில் நடைபெறுவது ஒரு அரசியல் போட்டியே. ஓபமா இப் பிரச்சினைக்கு தனக்கு உடன்பாடில்லாத உடன்பாட்டிற்கு ஒத்துக் கொண்டது ஒரு வகையில் நல்லது. இவரை ஒரு வலது சாரியாக இது வெளிப்படுத்தும். றிப்பப்ளிக்கன்கள் இவரை ஒரு இடது சாரி சிந்தனையாளராகவே சித்தரிக்கின்றார்கள். அதே சமயம் இந்த உடன்பாடு றிப்பளிக்கன்களின் கை ஓங்க ஒபமா இடமளித்துள்ளார்.
எது எப்படியிருப்பினும் அமெரிக்கா தனது பொருளாதார பிரச்சினைகளை உடனடியாக தீர்க்காவிட்டால் மிக விரைவில் பல பிரச்சினைகளை சந்திக்கும். வேலையற்றோர் வீதம் ஒன்பதைத் தாண்டிவிட்டது. தங்களது அரசியல் ஒரு புறம் ஒதுக்கி வைத்து விட்டு மக்களைப் பற்றி சிந்திப்பது நல்லது.