ஓளங் சன் சூ கியின் மேடைப்பேச்சுக்கள் இன்று மிகவும் பிரசித்திப் பெற்ற பதிவுகளாக அச்சு, இலத்திரனியல் ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளன. 1998-89 ஆண்டு காலங்களில் இவரது மேடைப்பேச்சுக்களில் காணப்பட்ட வீரியத்தின் காரணமாகவே 1989 ஆம் ஆண்டில் இருந்து இவர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்தார்.
இவரது மிக முக்கியமான கட்டுரை ஒன்றிலே கீழே குறிப்பிட்ட விடயங்கள் இலங்கை நாட்டின் அரசியல் தலைமைகளுக்கும், மலையக அரசியல் தொழிற்சங்கத் தலைமைகளுக்கும் சாலப் பொருந்தும் வகையில் காணப்படுகின்றது.
ஒருவர் கெட்டொழிந்து போவதற்கு காரணம் அதிகாரம் அல்ல. அச்சமே காரணம். அதிகாரத்தை ஏகபோகமாக்கி மக்களை அரசாள்பவர்கள் எங்கே அந்த அதிகார அரக்கன் தம்மை விட்டுப் போய்விடுவானோ? என்று அஞ்சிக் கெடுக்கிறார்கள் என்று கூறுகின்றார்கள்.
சூ கீயின் கதிகள் தொடர்பான பதிவு ஆட்சியாளர்களின் நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனிக்க வழி வகுகின்றது.
கதி – 01 சந்த கதி “ கதி” இது ஆசையினால் தூண்டப்படுவது. இது லஞ்சத்தினால் நாட்டம் கொள்வதனால் அல்லது தன் அன்புக் குரியவர்களாக நேர்மை தவரி நடப்பதால் ஏற்படுவது.
கதி – 02 தோச “ கதி” தான் வெறுப்பவர்களுக்கு கேடு செய்வதற்காக தவறான வழிகளை கையால்வது
கதி – 03 மோக “ கதி” அறியாமையால் ஏற்படும் மன மாறாட்டம்
கதி – 04 பய “ கதி” அச்சம் இருக்கிறதே, சரியானது எது தவறானது எது என்று உயர்ந்துணரும் ஆற்றலை நொந்து, மெல்ல மெல்ல அழித்து விடும் இயல்புடையது. ஏனைய மூன்று கதிகளுக்கும் உயிர் நாடியாக இருப்பதுவும் இந்த பய கதி தான் என்று சூ கீ கூறுகின்றார்.
பேராசையினால் மட்டும் அன்றி தன் அன்புக்குரியவர்களின் நல் எண்ணத்தையும் இழக்கக் கூடும், என்ற அச்சத்தினால் அல்லது எதுவும் இன்றி தவிர்க்கும் நிலை ஏற்பட்டு விடுமோ என்ற பயத்தினால் கூட சந்த கதி நேரலாம். ஆகவே தன்னை மிஞ்சி விடுவார்களோ, தான் மதிப்பிழக்க நேரிடுமோ, தான் எந்த விதத்தில் துன்புறுத்தப்படுவேனோ என்ற அச்சம் தீய எண்ணத்தை தூண்டி விடும். அச்சம் என்னும் விலங்குப் பிடியைத் தகர்த்து உண்மையை நாடி செல்வதற்கு சுதந்திரம் அவசியம்.
அந்த சுதந்திரம் மட்டும் இல்லாவிட்டால் அறியாமையை அகற்றுவது சாத்தியமில்லை. அச்சத்திற்கும், ஊழலுக்கும் இடையில் இப்படியானதொரு நெருங்கிய சம்பந்தம் இருந்தால் எங்கெல்லாம் மக்கள் மத்தியில் அச்சம் ஆதிக்கம் செலுத்துகின்றதோ? அந்த சமுதாயங்களில் எல்லா வகையான ஊழலும் ஆழமாக வேறுன்றி விடுவதில் விந்தை எதுவும் இல்லை.
அதிகாரத்தை இழந்து விடுவோம் என்ற அச்சமே அடாவடித் தனங்களுக்கு காரணமாய் அமைந்தது என்பதற்கு நிகழ்கால அரசியல் செயற்பாடுகள் மலையக பிரதேசங்களிலும் சான்ராதாரமாய் காணப்படுகின்றது.
சூகி தனது கட்டுரையில்; மேலும் கீழ் கண்டவாறு பகிர்கின்றார்.
அடிப்படை மனித உரிமைகள் மறுக்கும் அரசியல் அமைப்பில் அச்சம் அரசோச்சும் என்பதனை சொல்லவும் வேண்டுமா? சிறைக்கைதியாகி விடுவோமோ? சித்திரவதைக்குள்ளாகுவோமோ? இறந்து விடுவோமோ நண்பர்களை, குடும்பத்தை, உடைமைகளை அல்லது வாழ்வூதியத்தை இழந்து விடுவோமோ? வறுமை நம்மை பீடிக்குமோ? தன்னந்தனியாக விடப் படுவோமோ? தோல்வியை ஏற்க நேரிடுமோ? இப்படியே அச்சப்படுவதற்கு எத்தனையோ காரணங்கள் உண்டு பலவகை அச்சங்களுக்கு மத்தியில் தன்மானத்தையும், மனிதனுக்குரிய பெருந் தன்மையையும் அவன் பாதுகாத்துக் கொள்வது தினசரி மனிதன் மேற்கொள்ளும் துணிகரச் செயல்களால் தான் இந்த செயல்களை அதிகம் பொருட்படுத்தாமல் அவற்றை அசட்டை செய்து பயனற்றவை, முட்டாள் தனமானவை, என்று கண்டிக்கத் தூண்டுவதுவும் ஒருவகை அச்சம் தான். பொது அறிவோ? மெய்யறிவோ?
ஏதோ ஒரு முகமூடியினை மாட்டிக் கொண்டு உருமாறி நிற்கும் நயவஞ்சகமான அச்சம் இதுவொன்று தான் சொல்ல வேண்டும், என்னும் கருத்தானது சாதாரண மக்களை சிந்திக்கத்தூண்டும் கருத்தாக காரணப்படுகின்றது.
குங்குமப்பொட்டாலும், தாலி கையிற்றாலும் கலாச்சார குடும்ப அழகியலுக்குள் புதைந்து போயுள்ள பெண்கள், மேலே கூறப்பட்ட எல்லாவிதமான அடக்கு முறைகளுக்கும் உள்ளாகுகின்றார்கள், என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை. ஆனாலும் சூ கீ தனது கருத்துக்களை மேடையிலும் எழுத்திலும் மாத்திரம் பதியாமல் தனது இயல் வாழ்;க்கையிலும் முன்னெடுத்ததன் மூலமாகவே மியன் மார் நாட்டின் ராணுவ ஆட்சியாளர்களுக்கு எதிராக போராட கூடிய வழிமை ஏற்பட்டது எனலாம்.
எமது காலக்கட்டத்தில் பெண்கள் மாத்திரம் அல்ல ஆண்கள் கூட தங்களின் பதவியும் சிறு சிறு சுக போகங்களும் பரிபோய் விடும் என்ற அச்சத்தினால் சமூகத்தை ஆண்டாண்டு காலமாக ஏமாற்றி வாழும் ஏகபோக தலைமைகளுக்கு அடிமைகளாக வாழ்தல் துயராகும். மலையக பிரதேசத்தில் பெற்றோர்களின் கடின உழைப்பாலும், வறுமையோடு இரத்தம் சிந்தி தேடிய உழைப்பின் வெகுமதியான பலர் கல்வி கற்று பதவிகளுக்கு வந்துள்ளார்கள். இவ்வாறு பதவிக்கு வந்த அதிபர், ஆசிரியர்கள், உத்தியோகத்தர்கள் பதவிக்கு வந்ததன் பின் படு மோசமாக அரசியல் பலம் கொண்டவர்களின் கால்களுக்கு கீழ் வீழ்ந்து கிடப்பது சாபமாகும். குறிப்பிட்ட ஒரு அதிபர் அவரது சொந்த முயற்சியாலும,; பெற்றோரின் தியாகத்தாலும் உயர் பதவி அடைந்த பின் குறித்த ஒரு அரசியல் தலைவரின் பாதணிகளுக்கு பாலிஷ் போட்டு கொடுக்க தயாராக இருப்பதாக பகிரங்கமாக கூறியுள்ளார்.
தனது தந்தையின் பாதணிகளுக்கு பாலிஷ் போட்டுக் கொடுக்காத குறித்த பாடசாலை அதிபருக்கு வெட்கம் என்று ஒன்று இருந்தால் இவ்வாறு கதைப்பது சிறுமையானதன்றோ.
இவர்களோடு ஒப்பிடுகையில் ஓளங் சன் சு கீ என்னும் ஆசிய பெண்மணியின் நெஞ்சுரமும், நேர் கொண்ட கருத்துக்களும் மகளிர் தினத்தின் போது மீட்டுப் பார்த்தல் தகும். காலத்தால் மறையாத இவரின் மேடைப் பேச்சுக்களும், கட்டுரைகளும் போராட்ட குணாம்சமும் எம்மாந்தருக்கு மட்டும் அல்ல. எம் ஆடவருக்கும் முன்மாதிரியாய் காணப்படுகின்றது என்றால் மிகையாகாது.