Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

“ஐக்கிய இலங்கையில் எங்கள் ஆட்சி ஆயுபவன் சொல்லும் ஒற்றையாட்சி”:S.G.ராகவன்(கனடா)

சந்திரகுமார்-டக்ளஸ் மோதல் : EPDP இல் வெடிப்பு? என்ற செய்திக்கு ஒரு எதிர்வினை.

-கட்டுரையில் கூறப்பட்டுள்ள சம்பவங்கள் எஸ்.ஜீ.ராகவனின் தனிப்பட்ட கருத்துக்கள், இனியொரு அதற்குப் பொறுப்பல்ல. கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் அரசியல் வாழ்வோடு தொடர்புடையவையாயினும்  ஆதாரங்களற்றவை. உண்மையாயின் பாரதூரமானவை-

தோ(…)ழர் டக்கஃளுஸ் தேவானந்தா ஈழப் போராட்டத்தை தலைமையேற்று நடத்திய ஆளுமை மிக்கவர். மக்கள் விடுதலைப் படையின் தளகர்த்தாவாகச் செயல் பட்டவர். நீண்டதும் தீர்க்கதரிசனும் உள்ள பாதையில் பயணிப்பவர்.

ஈழப் போராட்டத்தை காலத்தின் தேவை கருதி கைவிட்டபின் மத்தியில் கூட்டாச்சி மாநிலத்தில் சுயாட்சி என்ற அவரது சித்தாந்தை நோக்கிய பயணிப்பில் இடறி வி(ழாமலும்)ழுந்தாலும் தனது பயணத்தை தொடர்பவர். ஆயுபோவன் சொல்லியே ஆயுளை போக்கலாம் அடிவிவிழாமலும் எம்மை பாதுகாக்கலாம் என தோன்றும் பெரிய சிந்தனைகள் எல்லாம் அவர் லெபனானில் பெற்ற பெரிய பெரிய பயிற்சிகளில் கிடைத்த அரசியல் ராணுவ ராஜதந்திர அறிவு ஆகும்.

அவருடைய மன உறுதியும் ராஜதந்திரமும் இன்னும் பல கண்டு பிடிக்கமுடியாத அறிவியல் குணாதிசயங்களும் சேர்ந்து தமிழர்களை அறிவார்ந்த சமூகமாக மாற்ற அவர்களின் மண்டையை பிளந்தேனும் அறிவூட்ட அவர் செய்த முயற்சிகள் எத்தனை.
அவரின் சாதனைகள் கீழே:

-1980 களின் முதல் கூற்றில் இலங்கை அரச மட்டங்களுடனும் புலனாய்வு மையங்களுடன் தொடர்புகளை பேணுதல்.

-புலிகள் அமைப்பில் ஊடுருவி அவர்களை அழிக்க இலங்கை அரசு விடுத்த வேண்டுகோளை நிராகரித்தல்.
புலிகள் ஒரு குழுவாத இயக்கம் என்றும் அவர்கள் பெரிய அளவில் வளர்ச்சி அடைய மாட்டார்கள் என்றும் அவர்கள் ஈழப் போராட்டத்தை வென்று எடுக்க மாட்டார்கள் என இலங்கை அரசுக்கு நம்பிக்கை ஊட்டியமை.

-EPRLF ஒரு மக்கள் இயக்கம் எனவும் அவ்வியக்கமே பெருமளவு மக்களை அணிதிரட்டக் கூடியவர்கள் என இலங்கை அரசை நம்ப வைத்தது.

-அந்த நம்பிக்கையின் அடிப்படையில் இலங்கை அரசின் ஆசிர் வாதத்துடன் சிறையுடைப்பு நாடகப் பாணியில் தப்பிய தோழர் EPRLF இன் ராணுவ பொறுப்பை பெற்றுக் கொண்டது.
மிகக் கிரமமாக போராளிகளின் இந்திய இலங்கை பின்தள தள நிலைமைகளை இலங்கை அரசுக்கு அறிவித்தது.

-ஏனைய இயக்கங்களை வேவு பார்த்தமை.

-இந்திய இலங்கை பகுதிகளினூடு வேதரானியத்தில் இருந்தும் மாதகலில் இருந்தும் பயணிக்கும் போராளிகளின் வள்ளங்களை வரிசைகிரமமாக இலங்கை கட ற்படைக்கு போட்டுக் கொடுத்தமை.

-காரைநகர் கடற் படைத்தள தாக்குதலை முன் கூட்டியே இலங்கை கடற் படைக்கு அறிவித்து விட்டு யாழ் நகரின் வீதிகளில் வீதி உலாவந்தமை. (காரைநகரில் சண்டை நடக்கும் போது அவருக்கு கோட்டை ராணுவ முகாமுக்கு அருகில் உள்ள யாழ் நகரில் நிறைய வேலை இருந்திருக்கும்).

-உதவி கேட்டு அலறிய போராளிகளிடம் உதவி வரும் ஆனால் வராது என்ற பாணியில்……. பதிலிறுத்து சின்னவனின் வீரமரணம் உட்பட முகாம் தாக்குதலின் தோல்வி உறுதி செய்யப் பட்டது வரை சும்மா உட்கார்ந்து இருந்து இறுதி வரை போராடாது இருந்து சாதனை தளபதியாக இருந்தமை.

-டெலோ, LTTE மோதலை ஏற்ட்படுத்தும் வேலைத் திட்டத்தில் ஒரு படியாக LTTE முகாம்கள் மீது துப்பாக்கி பிரயோகம் செய்தமை. துப்பாக்கி பிரயோகம் செய்தவர்களை புலிகள் தேடி வந்த போது டெலோ அமைப்பே இவ்வழியாக ஓடியதாக குறிப்பிடுவது.

-இது சம்பந்தமாக கேள்வி எழுப்பிய EPRLF உறுப்பினர்களை பாசிச அமைப்புகள் அழிக்கப் பட்டு EPRLF போன்ற மக்கள் அமைப்புகள் மேல் எழ வேண்டுமெனில் இதுவே வழி என சக தோழர்களுக்கு போதனை செய்தது.

-ஸ்ரீசபாரத்தினம் பதுங்கி இருந்து கொண்டு உதவி கேட்டு தேவானந்தாவை தொடர்பு கொண்ட போது அவர் பதுங்கி இருக்கும் இடத்தை கேட்டுக் கொண்டு அவர் இருக்கும் இடத்தை புலிகளின் காதுகளுக்கு எட்டும் வைகையில் செய்தது.

-யாருமே சிந்திக்க முடியாத வீரதீரச் செயலை தேவானந்தா சூளை மேட்டில் நிகழ்த்தியபோது சக தோழர்களை என்ன சொல்லி சமாளிச்சிருப்பார்?. இந்திய விஸ்தரிப்பு வாததத்திற்கு விழுந்த அடி எனச் சொல்லி இருப்பார்.

(போராளிகளுக்கு தமிழ் நாட்டு மக்களின் ஆதரவு கிடைக்கக் கூடாது என்ற இலங்கை அரசின் தூண்டுதலே காரணம் என்பது பின்னாளில் எல்லோராலும் உணரப் பட்டது)

-இந்த விடயங்கள் எல்லாம் அற்புதன் போன்றோர்களால் அறியப் பட்டு தேவானந்தாவின் இலங்கை அரச விசுவாசம் கேள்விக்கு உள்ளாக்கப் பட்டபோது அற்புதன் வேள்விக்கு உள்ளாக்கப்பட்டு இலங்கையின் இறைமைக்கு ஆபத்து வரும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தோழ் கொடுத்த உத்தம தோழர் அவர்.

இன்று பாருங்கள் அவர் நினைத்தவை எல்லாம் நடக்கின்றது தானே தோழர் உலக பெரிய தீர்க்கதரிசி அல்லவா? புலிகளினதும் ஏனைய குழுக்களின் வலிகளில் இருந்து எம்மக்களை காப்பாற்றிய உத்தமர் அல்லவா எமது தோழர்.

இன்று பாருங்கள் சிங்கள மக்களுடன் சேர்ந்து வாழ்வதால் எவ்வளவு அபிவிருத்திகளை நாம் காண்கிறோம்.நாம் அடைந்த அபிவிருத்திகள் அளப் “பாரியதாக” இருக்கும் போது ஊர்காவல் துறை சம்பவம் ஒரு கேடா? (பிரதமர் கேட்கிறார்)

83 இனக் கலவரம் பற்றி பேசி சந்திரகுமார் தோழர் தேவானந்தாவின் உறவை முறிக்க முனையக் கூடாது. பிரச்சனைகளை கிளறி மீண்டும் போராட்டம் வெடித்தால் தேவானந்தா மீண்டும் வெலிகடை சிறை போய் மீள்பிறவி எடுத்து மீண்டும் பழையது போல் செய்து இலங்கையின் இறைமையை காக்க முடியுமா?

தம்பி சந்திரகுமார் அற்புதனுடன் ஓடியவர் இன்னுமா? திருந்தவில்லை?

“ஐக்கிய இலங்கையில் எங்கள் ஆட்சி ஆயுபவன் சொல்லும் ஒற்றையாட்சி”

இதுவே எங்கள் கொள்கை. இதனை விடவும் இறங்குமா எங்கள் வேட்டி?

Exit mobile version