Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஏகாதிபத்தியத்தின் தந்திரத்தில் பலிக்கடா ஆக்கப்பட அப்பாவி இளைஞர்கள் A preplanned action on behalf of imperials :சுஜீவன் ஜெயபாலன்

ஜரோப்பாவை ஆட்டிப்படைக்கும் போருளாதாரச்சிக்கல் விரைவில் இங்கிலாந்தை தாக்கும் என கணிக்கப்பட்ட நிலையில் …ஏற்கனவே பாரிய நிதி நெருக்கடியில் சிக்கித்தவிப்பதாக கூறியபடி ஏழைகளின் வயிற்றில் (அடிக்கும்/அடிப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்) மாட்சிமை தாங்கிய மகாராணியின் அரசு தமது நடவடிக்கையின் காரணமாக ஏற்படபோகும்/ஏற்பட்டுகொண்டிருக்கும் பொதுமக்களின் போராட்டங்களை ஒடுக்குவதற்கான கருவியாக /முன்னோடியாக இதை பாவிக்கிறது..

இப்போராட்டத்தின் காரணமாக ஏகாதிபத்திய கொள்கைவகுப்பாளர்களுக்கு கிடைக்கும் அனுகூலங்கள்…

அ) போராட்டம் என்பது பயங்கரமானது..போராட்டம் என்பது வன்முறைமீது காதல் கொண்ட சமூகவேறுப்பாளர்களால்/பொதுமக்களின் சுமூக வாழ்வை(Social harmony) விரும்பாதவர்களின் கருவி
என்பதை நாசூக்காக பொதுமக்களின் உள்ளத்தில் பதியவைத்தல்..(கவனிக்க 90 களில் Tanker drivers போராட்டம் நடத்திய பொது அதை Tony Blair Emergency low மூலம் இராணுவத்தை கொண்டு ஒடுக்கியது [இதை ஏன் இங்கு குறிப்பிடுகிறேன் என்றால் தமக்கான ஊதிய அதிகரிப்பிற்கு போராடும் உரிமையை கூட இரும்புக்கரம் கொண்டு அடக்கிய ஏகாதிபத்தியம் வருங்காலத்தில் Greece பாணியில் லண்டன் தெருக்களில் மாற்றம் வேண்டி மக்கள் போராடுவதை ஏற்க்கப்போவதில்லை {ஏற்றால் அவர்களின் நிலை என்னாவது என்பது வேறு விடயம்}] ).

ஆ)தற்போது வரை லண்டனை எதோ A heaven of Free Expression என்ற கணக்கில் பீலா விடுகிறார்கள் ..அதை நிறுவும் பொருட்டு போராட்டங்களை இதுவரை மேன்கரங்கள் கொண்டே அடக்கினார்கள் ஆனால் தற்போது உலகில் நடைபெற்றுவரும் போராட்டங்களில் இருந்து பாடம் கற்றிருக்கும் ஆளும் வர்க்கம் இனி இங்கு வரப்போகும் போராட்டத்தை தங்களது தற்போதைய மேன்முகம் கொண்டு அடக்கமுடியாது/ மேன்முகம் இனியும் வேகாது என சிறிது காலத்திற்கு முன்னர் லண்டனில் நடைபெற்ற போராட்டங்களில் இருந்து நன்றாக பாடம் கற்றுகொண்ட ஆளும் வர்க்கம்..(கவனிக்க அண்மையில் நடந்த மாணவர் போராட்டத்தில் மாட்சிமை தாங்கிய பிரித்தானிய இளவரசர் பயணித்த வாகனம் தாக்குதலுக்கு உள்ளானது [அத்தாக்குதல் தடுக்கப்படிருக்க கூடியதாக இருந்தும் அவர்கள் அதை தடுக்கவில்லை {கவனிக்க அத்தாக்குதலால் சாள்ஸ் இற்கு ஏதும் ஏற்படாத போதும்…பொதுமக்களின் பார்வைக்கு போராட்டம் என்பது கொடுமையானது சமூக அமைதிக்கு குந்தகம் விளைவிப்பது என்ற கருத்தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தார்கள்}])

ஆ).

அ) எவ்வாறு சாள்ஸ் மிதான தாக்குதல் தடுக்கப்படாததன் (இங்கு சாள்ஸ் மீதான தாக்குதல் தடுக்கப்படாதது எனக்கு பெருங்கவலை அளிப்பதாக எண்ணத்தலைப்படக்கூடாது சொல்லப்போனால் தாக்குதல் நடத்தப்பட்ட சேதி கேள்விப்பட்டதும் உவகையின் உச்சத்திற்கு போனவன் நான்) மூலம் நியாய பூர்வமான போராத்தை கொச்சைப்படுத்தி மக்கள் மத்தியில் போராடும் உணர்வை ஏதோ சமூகவிரோத செயலாக எண்ணவைக்க முயன்றார்களோ..அதோபோல் இவ் வன்செயல்கள் மூலம் மக்கள் மத்தியிலுள்ள போராட்ட உணர்வை மளுங்கடித்தல்..சாத்தியப்படும் இதன்மூலம் கணிசமாணளவு பொது மக்களின் மனங்களை போராட்டங்களிற்கு எதிராக திருப்பமுடியும்..

அ)
1) இங்கு உண்மையாகவே மக்கள் மீது கரிசனை கொண்ட அரசாக இருந்திருந்தால் இவ்வன்செயல்களை கண்ணிமைக்கும் பொழுதுக்குள் அடக்கியிருக்க முடியும் (எத்தினையோ ஆயிரம் மைல்களுக்கு அப்பால் அமையவேண்டிய அரசை தீர்மானிப்பவர்களால்/ அரசை நிகழ்த்துபவர்களால் இப்பிரச்சினையை அடக்குவதா கடினம்?????) கவனிக்க இங்கும் மக்கள் மீது அரசுக்கு கவலை இல்லை அதோபோல் தம்மை தாங்கிபிடிக்கும் முதலாளித்துவத்திற்கும் சகல நிவாரணமும் உடனடியாக காப்புறுதி மூலம் நட்டஈடு முழுஅளவில் கிடைத்துவிடும்..கவனிக்க (ஏற்கனவே பொருளாதார சரிவால் ஏகாதிபத்தியத்தை தாங்கிபிடிக்கும் முதலாளித்துவத்திற்கு நட்டம் ஏற்பட்டு வரும் வகையில் அதை ஈடு செய்யும் வகையில் முழு நிவாரணத்தை வரிசெலுத்தும் சாதாரண மக்களின் பணத்தில் இருந்து வரி செலுத்தாத Topshop போன்ற முதலாளி வர்க்கத்திற்கு அள்ளிக்கொட்டப்படும்)

ஆக இவ்வன்செயல்கள் மூலம் போராட்டம்/மக்களின் தன்னெழுச்சி என்பது கட்டுப்படுத்த வேண்டியது என்ற கருத்துருவாக்கத்தை மக்கள் மனதில் இலகுவாக பதிய வைக்கப்படும் பின்னணியில் வருங்காலத்தில் போராட்டங்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவதற்கான ஆணை அரசால் பிறப்பிக்கப்படும் (இன்றைய நாள் வரை லண்டனில் Water Canon பாவிப்பது மற்றும் சாதாரண காவல்துறையினர் ஆயுதங்கள் பாவிப்பது கிடையாது ) அவ்வானை முலம் இலகுவில் மக்களின் எழுச்சி அடக்கப்பட்டு ஏகாதிபத்தியத்தின் உரிமை நிலைநாட்டப்படும்..

இ) அண்மையில் லிபியாவின் கிளர்ச்சியின் பொது சகல குட்டிக்குட்டி நாடுகள் எல்லாம் தமது மக்களை வெளியேற்றிய பின்னும் கடைசியாக மக்களை வெளியேற்றிய வல்லரசு எனும் அழியாப்புகழை சேகரித்து கொண்டது (குறிப்பிட்ட பிரச்சினையின்போது பங்களாதேஸ் அரசானது பல்லாயிரக்கணக்கான தமது மக்கள் லிபியாவில் தவித்த போது அவர்களை மீள அழைப்பதில் கவனத்தை செலுத்தாது உலக கிண்ண கிரிக்கட் போட்டியை கோலாகலமாக நடத்தியபடி மக்களின் கவனத்தை திசை திருப்பியது ..[கவனிக்க இங்கு காப்பிரேட் கிரிக்கட் மக்களின் மனதை/எழுச்சியை திசை திருப்ப பயன்படுத்தப்பட்டது உ+ம் இந்தியா போன்ற அழுகி நாறும் நாடுகள் கிரிக்கட்டை முன்னிறுத்துவதன் முலம் மக்களை அன்றாட பிரச்சினையில் இருந்து திசை திருப்பி அனைத்தின மக்களின் மீதும் பாரத மாதாவின் கிழிந்து போன சேலையை போர்க்க முடிகிறது])

அவ்வாறு இறுதியாக தமது நாட்டு மக்களை வெளியேற்றும் பொது பிரித்தானிய மகாராணியின் கைப்பொம்மையான தலைமை அமைச்சர் கேமரூன் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் இருந்தபோது (பக்ரேயின் இற்கு ஆயுதம் விற்றுகொண்டு இருந்தார்) தாராள்மைவாத கட்டிசியின் தலைவரும் உதவித்தலமை அமைச்சருமான நிக் கிலஹ் பனிச்சறுக்கல் விளையாட்டில் ஈடுபட்டபடி தான் கடமையிருப்பதை மறந்து விட்டதாக கூறியமையும் அதை வைத்து Nick Clegg ஏதோ தேசவிரோத குற்றச்செயல் புரிந்ததாக பத்திரிகைகள் தோற்றம் ஏற்படுத்தியமையும் குறிப்பிடத்தக்கது ..அதொபோலவே இன்றும் Cameron நாட்டில் இல்லாத சமயமே இவ்வன்முறைகளை பற்றவிட்டதும் குறிப்பிடத்தக்கது..இதன்மூலம் Nick Clegg கையாலாகாதவர் என்ற தோற்றத்தை ஏற்படுத்த முடியும் (கடந்த பாராளுமன்ற தேர்தலின்போதான கருத்துக்கணிப்புகளில் Nick Clegg இன் கட்சி முண்ணனி வகித்ததும் ஆனால் தேர்தலில் முன்றாம் இடத்திற்கு பின்னடைந்ததும் குறிப்பிடத்தக்கது).

இதன் மூலம் தாரன்மைவாத கட்சியின் மீதனா மக்களின் மதிப்பை குறையவைத்து அடுத்துவரும் தேர்தலில் தாரன்மைவாத கட்சியால் ஏற்படும் போட்டியை சமாளிக்கலாம்…இதேவேளை இவ் அசம்பாவிதங்கள் பற்றி கருத்து தெரிவித்த பலரும் இரும்புச்சீமாட்டி என பெயரெடுத்த Iron lady Margart Thatcher அதிகாரத்தில் இருந்திருப்பின் இவற்றை இரும்புக்கரம் கொண்டு அடக்கியிருப்பர் என சமூக வலைத்தளங்களில் கருத்துரையாடினர் (கவனிக்க Iron lady Margart Thatcher பழமைபேண் கட்சியினருக்கு ஒரு ஆதர்சநாயகியாகவும் அக்கலமே முதலாளித்துவத்தின் பொற்காலம் எனவும் குறிப்பிடுவர் …சுருக்கமாய் சொல்லப்போனால் பா.ஜ.க இன் இராமர் ஆட்சி மாரி)..

ஏற்கனவே தற்போதைய பொருளாதார மந்த நிலையாலும் அதனை சாட்டாகவைத்து அரசு மேற்கொள்ளும் பல்வேறு சீர்திருத்தங்களின் மூலமும் செல்வாக்கு இழந்து வரும் ஆளும் கட்சி தனது செல்வாக்கை இதன்மூலம் சீர்தூக்க முடியும்..

ஆக இவ் அசம்பாவிதங்களை வளர விட்டதன்மூலம் ஒரே கல்லில் பல மாங்காய்கள்..

Exit mobile version