தொண்ணுறுகளில் சோவியத் யூனியனின் அழிவிற்குப் பின்னர் புதிய உலக மாற்றங்களுக்கும் மக்களைக் கூறுப்போட்டு அழிப்பதற்கும் சாமுவேல் ஹன்டிங்டன் என்ற அமரிக்க அடிவருடி எவ்வாறு நச்சுக்கருத்துக்களை விதைத்தாரோ உலக கம்யூனிச முகாம்ற்கு எதிரான எழுத்துக்களின் அரிச்சுவடியை ஆரம்பித்தவர் ஜோர்ஜ் ஓர்வல்.
ஜோர்ஜ் ஓர்வல் குறித்து பிரித்தானிய பொலிசாருக்கும் பிரித்தானிய உளவு நிறுவனமான எம்.ஐ 5 இற்கும் இடையே ஒரு போராட்டமே நடந்திருக்கிறது. ஓர்வல் அதீ தீவிர புரட்சிகர கம்யூனிஸ்டாக தன்னைக் உலகிற்கு வெளிக்காட்டிக் கொண்டதே இதற்கான அடிப்படைக் காரணமாக அமைந்தது. பிரித்தானிய போலிஸ் இவர் கம்யூனிஸ்ட் என்று பிந்தொடர்ந்தது.பிரித்தானிய உளவு நிறுவனம் இவரைப் பாதுகாத்தது.
பிரித்தானியா அதிகாரத்திற்கு சேவை செய்வதற்காக தன்னைப் போலிஸ்படையில் இணைத்துக்கொண்ட ஓர்வெல், பர்மாவிற்கு அனுப்பப்படுகிறார். அங்கே போலிஸ் உத்தியோகத்தராகக் கடமையாற்றுகிறார்.
1927 ஆம் ஆண்டு பிரித்தானியாவிற்குத் திரும்பிய ஓர்வெல், அங்கு எழுத்தாளராகும் முடிவிற்கு வருகிறார். அங்கு வேறு தொழிகள் கிடைக்காமல் வறுமையில் வாடுகிறார். தனது வறுமை எவ்வாறு தன்னை தின்றது என்று தனது நூலில் அவரே பின்னதாகக் குறிப்பிடுகிறார்.
முன்னதாக மார்க்சியக் குழு ஒன்றுடன் இணைந்து இஸ்பானியாவில் நடைபெற்ற போராட்டத்தில் ஜோர்ஜ் ஓவல் கலந்துகொண்டு கழுத்தில் துப்பாக்கியால் சுடப்பட்டு காயமுற்றிருந்தார். இதனால் எம்.ஐ 5 இவரைக் கண்காணிப்பிற்கு உட்படுத்தியிருந்தது. இவரது வறுமையைப் பயன்படுத்திகொண்ட பிரித்தானிய உளவு நிறுவனம் இவரை உள்வாங்கிக்கொண்டது.
1942 ஆம் ஆண்டு ஓர்வல் பிபிசி இன் இந்திய சேவையில் ஊடகவியலாளராகப் பணியில் சேர்த்துக்கொள்ளப்பட்டார்.
பிரித்தானியப் போலிஸ் படையில் சிறப்புப் பிரிவைச் சேர்ந்த ஈவிங் என்ற உயர் அதிகாரி ஒர்வெலின் நடவடிக்கை குறித்து சந்தேகம் கொள்கிறார். ஓர்வெல் இந்திய கம்யூனிஸ்டுக்களின் கூட்டங்களுக்குச் சென்று வருவதாகவும் அவர் தீவிர கம்யூனிஸ்ட் பார்வையை கொண்டிருப்பதாகவும் ஒரு அறிக்கையை எம் ஐ 5 இற்குச் சமர்பிக்கிறார்.
அந்த அறிக்கை குறித்து ஓர்வெல் மீது எம்.ஐ 5 எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. எம்.ஐ 5 உளவு நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரியான ஒகில்வி என்பவர் அந்த அறிக்கைக்கு மறுப்புத் தெரிவிக்கிறார். அவர் பொலீஸ் அதிகாரிக்கு எந்தப்பதிலும் வழங்கவில்லை. 2005ம் ஆண்டு பிரித்தானிய ஆவணக் காப்பகத்தின் பகுதிகள் பொதுமக்கள் பார்வைக்காக முன்வைக்கப்பட்ட வேளையில் தான் ஓர்வல் யார் என்பது தெரியவருகிறது.
1949 ஆம் ஆண்டு ஓர்வெல் ஸ்டாலின் ஆதரவாளர்கள் என்று தான் கருதுபவர்களின் பட்டியல் ஒன்றை பிரித்தானிய உளவுத்துறையான எம் ஐ 5 இற்கு வழங்கியது வெளியான ஆவணங்களில் காணப்பட்ட தகவல்களில் ஒன்று. அந்த வேளையில் பிரித்தானியா பிரான்ஸ் போன்ற நாடுகளில் ஸ்டாலின்ஸ்டுக்கள் என்று சந்தேகிக்கப்படுபவர்கள் தேடித்தேடிக் கொலைசெய்யப்பட்டர்கள்.
இதற்கு ஒருவருடம் முன்னதாக ஓர்வெலின் மனைவிற்கு பிரித்தானிய உணவுத்துறை அமைச்சில் முக்கிய பதவி வழங்கப்ப்பட்டது.
ஜோர்ஜ் ஓர்வெலின் நாவல்கள் ஒடுக்கப்பட்ட மக்களின் ஜனநாயகம் குறித்த தவறான அபிப்பிராயங்களை திட்டமிட்டுப் பரப்பி சமூகத்தை எவ்வாறு நச்சூட்டியது என கைலாசபதி ஆய்வுக் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார்.
ஜோர்ஜ் ஓர்வல் தொடர்ந்தும் தன்னை ஒரு கம்யூனிஸ்டாகவும் இடதுசாரியாகவுமே உலகிற்கு அறிமுகப்படுத்தினார். அதெ வேளை காட்டிக்கொடுப்பாளனாக உளவு நிறுவனத்திற்கு வேலைபார்த்திருக்கிறர். கம்யூனிசத்திற்கு எதிரான அபிப்பிராயத்தை உருவாக்குவதில் உளவு நிறுவனத்தின் அடியாளாகத் தொழிற்பட்டிருக்கிறார்.
2005 ஆம் ஆண்டு பிரித்தானிய ஆவணங்கள் வெளிவரும் வரையில் ஓவெல் ஒரு கருத்தாளனாகவே கருதப்பட்டார். உளவாளி என்பது பின்னதாகவே தெரியவருகிறது. 55 வருடங்கள் மறைக்கப்பட்ட இதைப் போன்று ஆயிரம் தகவல்கள் மறைக்கப்படுகின்றன. உலகம் ஒரு சிலரின் தேவைக்காக இருளுக்குள் வைக்கப்பட்டிருக்கின்றது,